என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trichy Siva MP"

    • வக்பு மசோதா கொண்டு வரப்பட்ட நோக்கம் தவறானது, தீங்கானது.
    • அரசியலமைப்புச் சட்டத்த்துக்கும், மதச் சார்பின்மைக்கும் எதிரானது.

    வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இன்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்று வருகிறது.

    விவாதத்தின்போது திமுக எம்.பி. திருச்சி சிவா மசோதாவை எதிர்த்து கடுமையாக பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

    வக்பு மசோதா கொண்டு வரப்பட்ட நோக்கம் தவறானது, தீங்கானது. அரசியலமைப்பு சட்டத்த்துக்கும், மதச்சார்பின்மைக்கும் எதிரானது. வக்பு நிர்வாகத்தையே கைப்பற்றுவதற்குத்தான் இந்த திருத்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

    அரசியல், சட்ட ரீதியாக தவறான வக்பு மசோதாவை நாங்கள் ஒட்டுமொத்தமாக எதிர்க்கிறோம். மத்திய பாஜக அரசு குறிப்பிட்ட ஒரு மதத்தை குறிவைத்து சட்டத்தை இயற்றுவது ஏன்?. நாட்டில் உள்ள இஸ்லாமியர்கள் சுதந்திரத்தின்போது இது எங்கள் நாடு, இங்கேதான் இருப்போம் என்று தெரிவித்தனர்.

    அனைவருக்குமான வளர்ச்சி என்று கூறும் பாஜக அரசு இஸ்லாமியர்களுக்கு மட்டும் வேறு கொள்கையை கடைபிடிக்கிறது. பாஜக அரசின் செயலால் அந்நியப்படுத்தப்படும் இஸ்லாமியர்கள் பாதுகாப்பற்றவர்களாக உணருகிறார்கள்.

    கண்கள் இருந்தும் மக்கள் படும் துயரங்களை ஆளுங்கட்சியினர் பார்ப்பதில்லை. ஆளுங்கட்சியினருக்கு காதுகள் இருக்கலாம், ஆனால் எதிர்க்கட்சியினரின் பேச்சை கேட்பதே இல்லை. வக்பு வாரியத்தின் நிர்வாகத்தை மேம்படுத்துவதற்காக சட்டத் திருத்தம் எனக் கூறுவது உண்மைக்கு புறம்பானது.

    இவ்வாறு திருச்சி சிவா எதிர்ப்பு தெரிவித்தார்.

    • தனி நபரை விட கட்சி தான் முக்கியம். ஆகவே பலவற்றை பெரிது படுத்தியது இல்லை.
    • ஊரில் இல்லாத நேரத்தில் நடந்த சம்பவத்தால் வீட்டிலிருந்த வயதானவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.

    திருச்சி:

    பக்ரைன் நாட்டிலிருந்து சொந்த ஊர் திரும்பிய திருச்சி சிவா எம்.பி. இன்று எஸ்.பி.ஐ. காலனி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பாராளுமன்ற குழு அனுப்பிய 178 நாடுகள் பங்கேற்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக பக்ரைன் நாட்டிற்கு சென்று விட்டு இன்று திரும்பி இருக்கிறேன். நடந்த செய்திகளை ஊடகங்கள் வாயிலாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தெரிந்து கொண்டேன். இப்போதைக்கு நான் எதையும் பேசும் மனநிலையில் இல்லை. நான் அடிப்படையில் முழுமையான அழுத்தமான கட்சிக்காரன்.

    தனி நபரை விட கட்சி தான் முக்கியம். ஆகவே பலவற்றை நான் பெரிது படுத்தியது இல்லை. யாரிடமும் புகார் சொன்னதும் இல்லை. தனி மனிதனை விட இயக்கம்தான் முக்கியம் என வளர்ந்தவன், இருப்பவன்.

    நடந்த சம்பவங்கள் மிகுந்த மன வேதனை அளிக்கிறது. நான் ஊரில் இல்லாத நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தால் என் வீட்டிலிருந்த வயதானவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்திருக்கிறார்கள். அவர்களிடம் நான் பேச வேண்டி இருக்கிறது.

    மீண்டும் உங்களிடம் பேசுகிறேன். களைப்பில் இருக்கிறேன். மனச்சோர்வில் இருக்கிறேன். நான் எப்போதும் மனச்சோர்வு என்ற வார்த்தையை பயன்படுத்தியது இல்லை. வயதானவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கும்போது சொல்லத் தோன்றுகிறது. மாலையில் விரிவாக பேசுகிறேன். வேறு எந்த கேள்விகளுக்கும் நான் பதிலளிக்க விரும்பவில்லை. தயவுசெய்து எனது வேண்டுகோளை ஏற்றுக்கொள்ளுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து வீட்டிற்குள் சென்ற அவர் போர்டிகோவில் நின்றிருந்த கார் சேதப்படுத்தப்பட்டதையும், காம்பவுண்டு சுவர் முகப்பு விளக்குகள் உடைந்து கிடப்பதையும் பார்த்தார்.

    • திருமணத்திற்கும், சொத்திற்கும், வாரிசுகளுக்கும் என தனி, தனியாக ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு முறை உண்டு.
    • பொது சிவில் சட்டத்திற்கு நாங்கள் எல்லா வகையிலும் எதிர்த்து நிற்போம்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில தி.மு.க. சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா பொது கூட்டம் வில்லியனூரில் நடந்தது.

    பொதுகூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி, புதுவை சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா, தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கென்னடி, செந்தில்குமார், சம்பத் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் திருச்சி சிவா எம்.பி. பேசியதாவது:-

    ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு சட்டம் உண்டு. திருமணத்திற்கும், சொத்திற்கும், வாரிசுகளுக்கும் என தனி, தனியாக ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு முறை உண்டு.

    ஆனால் இது எல்லாவற்றையும் ஒன்றாக மாற்றி பொதுசிவில் சட்டம் என மாற்றினால் அதில் குழப்பம் வரும். சிறுபான்மையினரை பாதுகாக்க வேண்டும் என்பது எங்களது கடமைகளில் முக்கியமான ஒன்று.

    அதனால் தான் யார் இது தொடர்பாக மனு கொடுத்தாலும் டெல்லியில் தி.மு.க. இருக்கும் வரை யாரும் அஞ்ச வேண்டாம். கவலை கொள்ள வேண்டாம் என கூறுவேன்.

    பொது சிவில் சட்டத்திற்கு நாங்கள் எல்லா வகையிலும் எதிர்த்து நிற்போம். எங்களை விட வேகமாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளார். பொது சிவில் சட்டம் வரக்கூடாது என்பதற்கான எல்லா முயற்சிகளையம் எடுக்க வேண்டும் என எங்களிடம் கூறியுள்ளார்.

    பொது சிவில் சட்டத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். 8 மாதத்தில் வரவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மட்டும் நீங்கள் கவனம் செலுத்துங்கள். நாம் எல்லாரும் ஒன்றாக வாழ வேண்டும் என்றால் எல்லாரையும் ஒன்றாக நடத்துகின்ற அரசாங்கம் வர வேண்டும்

    இவ்வாறு திருச்சி சிவா எம்.பி. பேசினார்.

    இதன்பின்னர் திருச்சி சிவா எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவில் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் கடந்த சில காலமாகவே அதிகார மையங்களை வைத்து பா.ஜனதா அச்சுறுத்தும் போக்கு நடைபெற்று வருகிறது.

    தற்போது தமிழகத்தில் ஆரம்பித்திருக்கிறது. தமிழகத்தில் நடைபெற்று வரும் சோதனையின் காரணமாக எந்த வகையிலும் தி.மு.க.வுக்கு பின்னடைவு கிடையாது. நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் பணி எளிதாகும்.

    அதன் மூலம் தி.மு.க. வெற்றி நிச்சயமாக கிடைக்கும். மக்கள் அனைத்தையும் உணர்ந்துள்ளனர். மத்திய அரசு சோதனை செய்வதற்கான நோக்கங்களையும், காரணங்களையும் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து நாங்கள் எந்த வகையிலும் அச்சமடையவில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • நிலைக்குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உறுப்பினராக இடம்பெற்றுள்ளார்.
    • சோனியா காந்தியின் பெயர் நாடாளுமன்றக் குழுவில் இடம்பெற வில்லை.

    புதுடெல்லி:

    பல்வேறு துறைகள் சார்ந்த பாராளுமன்ற நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநிலங்களவை செயலகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது. அதன்படி அமைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற நிலைக்குழுக்கள் மற்றும் தலைவர்களின் விவரங்கள் வருமாறு:-

    நிதி-பா.ஜ.க. எம்.பி. பர்த்ருஹரி மஹதாப்

    வெளியுறவு-காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்

    பாதுகாப்பு-முன்னாள் மத்திய மந்திரி ராதாமோகன் சிங்

    உள்துறை-பா.ஜ.க. எம்.பி. ராதா மோகன் தாஸ் அகர்வால்

    பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு-தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுனில் தத்தரே எரிசக்தி-சிவசேனை எம்.பி. ஸ்ரீரங் பர்னே

    போக்குவரத்து, சுற்றுலா மற்றும் கலாசாரம்-ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. சஞ்சய் ஜா.

    வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள்-தெலுங்குதேசம் கட்சி எம்.பி. மாகுந்த்த ஸ்ரீநி வாசுலு ரெட்டி

    வேளாண், கால் நடை பராமரிப்பு மற்றும் உணவு பதப்படுத்துதல்-காங்கிரஸ் எம்.பி. சரண்ஜித் சிங் சன்னி

    கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ்-காங்கிரஸ் எம்.பி.சப்தகிரி உலாகா.

    தொழில் நிறுவனங்கள்-தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா

    நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம்-தி.மு.க. எம்.பி. கனிமொழி

    நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் உருக்கு-முன்னாள் மத்திய மந்திரி அனுராக்சிங் தாக்கூர்

    நீர் வளங்கள்-பா.ஜ.க. எம்.பி. ராஜீவ் பிரதாப் ரூடி

    தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பம்-பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்த் துபே.

    இதில், ராதா மோகன் சிங் தலைமையிலான பாதுகாப்புத் துறை சார்ந்த பாராளுமன்ற நிலைக்குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உறுப்பினராக இடம்பெற்றுள்ளார்.

    நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் சோனியா காந்தியின் பெயர் எந்தவொரு நாடாளுமன்றக் குழுவிலும் இடம்பெற வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
    • புத்தகங்கள் எல்லோருடைய கரங்களிலும் - அவற்றின் கருத்துக்கள் அனைவரின் உள்ளங்களிலும் தவழட்டும்! வெல்லட்டும்!

    சென்னை, கலைவாணர் அரங்கில் எம்.பி. திருச்சி சிவா எழுதிய 5 நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

    இந்நிகழ்ச்சியில், துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு, கவிஞர் வைரமுத்து, நடிகர் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். 

    நூல் வெளியீட்டு விழா குறித்து துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறப்பட்டுள்ளதாவது:-

    கழகக் கொள்கைப் பரப்புச் செயலாளர் - தி.மு.கழகத்தின் மாநிலங்களவைக் குழுத்தலைவர் அண்ணன் திருச்சி சிவா அவர்கள் எழுதியுள்ள 5 நூல்களை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டு வாழ்த்திய நிகழ்வில் கலைவாணர் அரங்கில் இன்று பங்கேற்றோம்.

    நம் கழகத்தலைவர் அவர்கள் திமுக இளைஞரணியை தொடங்கிய போது, அதன் வளர்ச்சிக்கு முன்வரிசையில் நின்று உழைத்தவர் அண்ணன் சிவா அவர்கள்.

    இளைஞரணி பயிற்சி பாசறைக் கூட்டம் உட்பட, தான் ஏறுகின்ற மேடைகள் தோறும் திராவிட இயக்கக் கொள்கைகளை ஓர் ஆசிரியரைப் போல அடுத்தடுத்த தலைமுறைக்கும் பாடமெடுக்கும் ஆற்றலுக்குச் சொந்தக்காரர்.

    தனது மேடைப்பேச்சு - 'மிசா' சிறைவாசம் - முரசொலிக் கட்டுரைகள் - பேட்டிகள் - வாட்ஸ் அப் வழி கருத்துக்கள் ஆகியவற்றை புத்தகங்களாகக் கொண்டு வந்திருக்கும் அண்ணன் சிவாவை வாழ்த்தியும், இச்சிறப்புக்குரிய நிகழ்வுக்கு வந்தோரை வரவேற்றும் உரையாற்றினோம்.

    அண்ணன் சிவா எழுதியுள்ள இப்புத்தகங்கள் எல்லோருடைய கரங்களிலும் - அவற்றின் கருத்துக்கள் அனைவரின் உள்ளங்களிலும் தவழட்டும்! வெல்லட்டும்!

    இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது.
    • நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ம் தேதி 2025-26 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து பிப்ரவரி 13-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. மேலும், குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது. இந்த நிலையில், இரு அவைகளும் இன்று (மார்ச் 10-ம் தேதி) வரை ஒத்திவைக்கப்பட்டன.

    அந்த வகையில், பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடர் ஏப்ரல் 4-ம் தேதியோடு நிறைவு பெறுகிறது. இந்த அமர்வில் பல்வேறு மசோதாக்கள் மற்றும் நிலைக்குழு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட உள்ளன.

    இந்த நிலையில், இன்றைய பட்ஜெட் கூட்டத் தொடரின் போது தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தி தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா நோட்டீஸ் அளித்துள்ளார். 

    ×