என் மலர்
நீங்கள் தேடியது "Turmeric"
- பொங்கல் பொருட்களை ஒரே இடத்தில் வாங்கி சென்றிடும் வகையில் அங்காடி நிர்வாக குழு சார்பில் “பொங்கல் சிறப்பு சந்தை” அமைக்கப்பட்டு உள்ளது.
- கடந்த 2 நாட்களாக ரூ.500-க்கு விற்கப்பட்ட 15 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு கரும்பு இன்று ரூ.300 முதல் ரூ.350 வரை விற்கப்படுகிறது.
போரூர்:
சென்னை கோயம்பேடு மார்கெட் பின்புறம் உள்ள "ஏ" சாலையில் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து உள்ளிட்ட பொங்கல் பொருட்களை ஒரே இடத்தில் வாங்கி சென்றிடும் வகையில் அங்காடி நிர்வாக குழு சார்பில் "பொங்கல் சிறப்பு சந்தை" அமைக்கப்பட்டு உள்ளது.
இங்கு இன்று அதிகாலையில் ஏராளமான வாகனங்களில் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர். அவர்கள் கரும்பு, மஞ்சள் கொத்து உள்ளிட்ட பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆர்வமாக வாங்கி சென்றனர்.
இதனால் கோயம்பேடு சிறப்பு சந்தையில் இன்று பொங்கல் பொருட்கள் விற்பனை களை கட்டியது. தொடர்ந்து பொதுமக்கள் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்து கொண்டே இருந்தனர். இதனால் கோயம்பேடு மார்க்கெட்டை ஒட்டியுள்ள சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தினகரன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு போக்கு வரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
சிறப்பு சந்தைக்கு மதுரை, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து நேற்று 150 லாரி களில் கரும்பு விற்பனைக்கு குவிந்த நிலையில், இன்று மேலும் 200-க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு கட்டுகள் குவிந்ததால் கரும்பு விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. கடந்த 2 நாட்களாக ரூ.500-க்கு விற்கப்பட்ட 15 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு கரும்பு இன்று ரூ.300 முதல் ரூ.350 வரை விற்கப்படுகிறது. கும்மிடிப் பூண்டி பகுதியில் இருந்து 150-க்கும் மேற்பட்ட வாக னங்களில் மஞ்சள் கொத்து கள் குவிந்ததால் நேற்று ரூ.80 வரை விற்கப்பட்ட மஞ்சள் கொத்து கட்டு இன்று ரூ.50 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.
மிச்சாங் புயல் மழை மற்றும் வெள்ள பாதிப்பின் காரணமாக இஞ்சி கொத்துகளின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் கும்பகோணம் பகுதியில் இருந்து மிகவும் குறைந்த அளவிலான இஞ்சி கொத்துகள் மட்டுமே கோயம்பேடு சிறப்பு சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது இதையடுத்து நேற்று ஒரு கட்டு இஞ்சி கொத்து ரூ100-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று அதன் விலை 2 மடங்காக அதிகரித்து ரூ.200 வரை விற்கப்பட்டு வருகிறது.
- தீக்காயங்களுக்கு தேன் சிறந்த நிவாரணமாகும்.
- முடி உதிர்வு பிரச்சினைக்கு நெல்லிக்காய் சிறந்த தீர்வாகும்.
இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் அழகு பராமரிப்புப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு தற்போது அதிகரித்துள்ளது. நவீனத்துவத்தை விரும்பும் இளம்பெண்களும் அழகு மற்றும் ஆரோக்கியத்தை பொறுத்தவரை இயற்கையான பொருட்களையே தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த வகையில் பல தலைமுறைகளாக நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய இயற்கையான அழகு பராமரிப்பு பொருட்களும், அவற்றை உபயோகிக்கும் முறைகளும் இதோ...

வேப்பிலை:
முகப்பரு பிரச்சினையால் சிரமப்படுபவர்கள் ஒரு கைப்பிடி வேப்பிலையை தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதை ஆறவைத்து மிதமான சூட்டுக்கு கொண்டு வரவும். அந்த தண்ணீரில் பஞ்சை தோய்த்து முகம் முழுவதும் மென்மையாக அழுத்தி பூச வேண்டும். இவ்வாறு தொடர்ச்சியாக செய்துவந்தால் நாளடைவில் முகப்பருக்கள் நீங்கும்.
வறண்ட சருமம் கொண்டவர்கள் வேப்பிலை பொடியுடன் திராட்சை விதை எண்ணெய் கலந்து முகத்தில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த தண்ணீரில் முகத்தைக் கழுவவும். இதன்மூலம் சருமத்தின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும்.
பொடுகு மற்றும் பேன் தொல்லையால் அவதிப்படுபவர்கள், வேப்ப எண்ணெய்யை தலை முழுவதும் பூசி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்கவும்.

தேன்:
தீக்காயங்களுக்கு தேன் சிறந்த நிவாரணமாகும். தீப்புண்களில் தேனை தொடர்ச்சியாக பூசிவந்தால் காயம் விரைவாக ஆறுவதோடு, காயத்தால் ஏற்படும் வடுவும் மறையும்.
சிறிதளவு தேனோடு, காய்ச்சிய பாலேடு, சந்தனம், கடலைமாவு, ரோஜா எண்ணெய் கலந்து முகம் மற்றும் கழுத்தில் பூசவும். 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும், இந்த 'ஃபேஸ் பேக்' முகத்தில் இருக்கும் அழுக்குகளை நீக்கி பொலிவாக்கும்.

நெல்லிக்காய்:
முடி உதிர்வு பிரச்சினையால் சிரமப்படுபவர்களுக்கு நெல்லிக்காய் சிறந்த தீர்வாகும். 2 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடி அல்லது நெல்லிக்காய் சாறுடன், சமஅளவு எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இதை தலையில் பூசி சிறிதுநேரம் கழித்து குளிக்கவும்.
காய்ந்த நெல்லிக்காய், புங்கங்கொட்டை, சீயக்காய் இவை மூன்றையும் தேவையான அளவு எடுத்து ஓர் இரும்பு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அடுப்பை அணைத்து அந்த கலவையை இரவு முழுவதும் அப்படியே வைக்க வேண்டும். அடுத்த நாள் காலையில் அந்த சாற்றை வடிகட்டி தலைக்கு தேய்த்து குளிக்கலாம்.

மஞ்சள்:
ஸ்டிரெச் மார்க்குகள் இருப்பவர்கள் சிறிதளவு மஞ்சள் தூளுடன், கடலைமாவு மற்றும் தயிர் கலந்து அந்த பகுதியில் பூச வேண்டும். இவ்வாறு தினமும் செய்துவந்தால் நாளடைவில் ஸ்டிரெச் மார்க்குகள் சருமத்தின் நிறத்திலேயே மாற ஆரம்பிக்கும்.
சிறிதளவு மஞ்சள்தூளுடன் அரிசிமாவு, தக்காளிச்சாறு, காய்ச்சாத பால் கலந்து முகத்தில் பூச வேண்டும். இது நன்றாக உலர்ந்தவுடன் முகத்தை சுத்தப் படுத்த வேண்டும். இவ்வாறு செய்துவந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.
பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு சிரமப்படுபவர்கள் சிறிதளவு மஞ்சள் தூளுடன், கடலைமாவு மற்றும் தயிர் கலந்து அந்த பகுதியில் பூசவும். இவ்வாறு தினமும் செய்துவந்தால் நாளடைவில் ஸ்டிரெச் சருமத்தின் நிறத்திலேயே மாற ஆரம்பிக்கும்.
சிறிதளவு மஞ்சள் தூளுடன் அரிசிமாவு, தக்காளிச்சாறு, காய்ச்சாத பால் கலந்து முகத்தில் பூசவும். இது நன்றாக உலர்ந்தவுடன் முகத்தை சுத்தப்படுத்தவும். இவ்வாறு செய்துவந்தால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.
பாதங்களில் வெடிப்பு ஏற்பட்டு சிரமப்படுபவர்கள் சிறிதளவு மஞ்சள் தூளுடன், தேங்காய் எண்ணெய் மற்றும் விளக்கெண்ணெய் கலந்து பாதங்களில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் பாதங்களைக் கழுவ வேண்டும்.
- பார்வதி அன்னையின் கோவத்திற்கு ஆளாகலாம்.
- பிரதோச தினத்தன்று சில பொருட்களை சாப்பிடக்கூடாது.
பிரதோஷ காலங்களில் சிவனை வணங்குவதால் நல்ல பலன் பெற முடியும். பிரதோஷ நாளில் காலையில் இருந்து விரதம் இருந்து பிரதோஷ வேளையான மாலையில், சிவன் கோவிலுக்குச் செல்ல வேண்டும். நந்திதேவருக்கு நடைபெறும் அபிஷேக ஆராதனையைக் கண்ணார தரிசித்துப் பிரார்த்தனை செய்தால் இல்லத்தில் சுபிட்சம் உண்டாகும்.
பலர் பிரதோஷ தினத்தில் விரதமிருந்து, பிரதோஷ தரிசனம் கண்ட பின்னர் தங்களின் விரதத்தை முடிப்பது உண்டு.
பிரதோஷ தினத்தில் சில விஷயங்களை நாம் செய்யக்கூடாது. அவற்றை பார்ப்போம்.

பெண்கள் சிவலிங்கத்தை தொடக்கூடாது
பிரதோஷ விரதத்தன்று பெண்கள் சிவலிங்கத்தை தொடக்கூடாது. பார்வதி அன்னையின் கோவத்திற்கு ஆளாகலாம் என்பதால் பிரதோஷ நாளில் பெண்கள் சிவலிங்கத்தை தொடக் கூடாது.
மஞ்சள் கூடாது
பிரதோச தினத்தன்று சிவபெருமானுக்கு மஞ்சள் படைக்கக் கூடாது. சிவலிங்கம் ஆண்மையின் அடையாளம். அதனால் சிவலிங்கத்துக்கு மஞ்சள் பூசக்கூடாது. அதற்குப் பதிலாக லிங்கத்தின் மீது சந்தனம், விபூதி, கங்கை நீர், பால் ஆகியவற்றை பூசலாம்.
இவற்றையெல்லாம் படைக்கக் கூடாது
சிவலிங்கத்திற்கு தேங்காய் தண்ணீர், சங்கு தண்ணீர், சங்கு புஷ்பம், லவங்க இலை, குங்குமம் ஆகியனவற்றை படைக்கக் கூடாது. இவற்றைப் படைத்தால் சிவபெருமான் கோபமடைவார்.
பிரதோசத்தன்று இதை சாப்பிட கூடாது
பிரதோச தினத்தன்று சில பொருட்களை சாப்பிடக்கூடாது. பெண்கள் பூண்டு, வெங்காயம், கத்தரிக்காய், கீரை வகைகள் சாப்பிடக் கூடாது. இறைச்சி தவிர்க்க வேண்டும். நிச்சயமாக மது அருந்தக் கூடாது.
- அப்படி நாம் குனிந்து செல்லும்போது அந்த வாசற்படியை நம் கால்களால் மிதிக்காமல் உள்ளே செல்ல வேண்டும்.
- வெளியில் சென்று விட்டு வருபவர்கள் கை, கால்களை கழுவாமல் வாசற்படியில் நுழையக்கூடாது.
நம் வீடு என்பது நாம் வாழும் கோவில் போன்றது. நாம் கோவிலாக கருதப்படும் அந்த வீட்டில், முன் வாசல் அதாவது நில வாசற்படியானது, நல்ல சக்திகளை உள்ளே ஈர்த்து, கெட்ட சக்திகளை திருப்பி அனுப்ப வேண்டுமென்றால், நாம் அதனை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும். எப்படி வைத்துக் கொள்ளக் கூடாது என்பதை பற்றிதான் இன்று தெரிந்து கொள்ளபோகின்றோம்.
நம் வீட்டுத் தலைவாசல் பகுதி என்பது அந்தக் காலங்களில், வீட்டின் உள்ளே செல்பவர்கள் தலை குனிந்து செல்லும் அளவிற்கு தாழ்வாக தான் அமைந்திருக்கும். நம் வீட்டு வாசற்படியில் மகாலட்சுமியும், அஷ்டலக்ஷ்மியும் குடி கொண்டிருப்பதாலும், கும்ப தேவதைகள் வாசலில் இரண்டு பக்கமும் அமர்ந்திருப்பதாலும், அவர்களை நாம் வணங்கும் வகையில், தலையை குனிந்து செல்வதற்காகவே அப்படிப்பட்ட அமைப்பு அந்த காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அப்படி நாம் குனிந்து செல்லும்போது அந்த வாசற்படியை நம் கால்களால் மிதிக்காமல் உள்ளே செல்ல வேண்டும்.

காலையில் பெண்கள் எழுந்தவுடன் நில வாசற்படியை தண்ணீர் ஊற்றி கழுவ வேண்டும். முடியாதவர்கள் ஈரத்துணியால் துடைத்து சுத்தம் செய்து மஞ்சள் தேய்த்து பொட்டு வைக்க வேண்டும். நம் வீட்டு வாசல் படியின் முன்னால் ஒரு கண்ணாடிக் குடுவையில் நீரூற்றி அதில் மலர்களை நிரப்பி வைப்பது நல்லது. அந்தக் குடுவையில் உள்ள மலர்கள் நம் வீட்டிற்குள் நல்ல சக்தியை ஈர்க்கும் தன்மையைக் கொண்டது. கண்ணாடி குடுவையில் உள்ள நீரையும் மலரையும் தினமும் மாற்ற வேண்டும். மாவிலைத் தோரணம் விசேஷ நாட்களில் மட்டும் தான் கட்ட வேண்டும் என்ற அவசியமில்லை. விசேஷம் அல்லாத நாட்களில் கூட 11 மாவிலைகளை நம் வீட்டு வாசலில் தோரணமாக தொங்கவிடுவது நல்லது. அது துர் சக்திகளை நம் வீட்டின் உள்ளே அண்டவிடாது.
அடுத்ததாக லட்சுமி புகைப்படத்தை நம் வீட்டு வாசலில் மாட்டி வைப்பது சிறந்தது. அப்படி நம் வீட்டு வாசலில் லட்சுமி புகைப்படம் இருக்குமேயானால் காலணிகளை வாசலின் வெளியே விட்டு வர வேண்டும். கும்ப கலச படத்தினை நம் வீட்டு வாசலில் வைத்திருந்தோமேயானால் நோய் நொடிகள் நம் வீட்டை அண்டாது. ஸ்வஸ்திக் அடையாளம் அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்தை தேடித்தரும். நம் வீட்டு வாசல் கதவில் குலதெய்வம் குடியிருக்கும் என்பதும் ஒரு ஐதிகம். இதனால் சத்தம் போடாமல் கதவினை திறப்பதும் கதவினை அடைப்பதும் நல்லது. நாம் இடும் சத்தம் குலதெய்வத்திற்கு இடையூறாக இருக்கும்.

நில வாசற்படியில் செய்யக்கூடாதவை கிரகலஷ்மி வாசற்படியில் வாசம் செய்கின்றாள் என்பதனால் அதில் நாம் சில விஷயங்களை செய்யக்கூடாது. நில வாசற்படியில் நின்று கொண்டு தும்புவது, தலை வைத்து படுப்பது, வாசற்படியின் மேல் அமர்வது, வாசலில் அமர்ந்து கொண்டு மற்றவர்களை பற்றிய குற்றம் குறைகளை பேசுவது, நகம் கடிப்பது, இப்படித் தவறான விஷயங்களை அந்த இடத்தில் நாம் செய்யக்கூடாது. இது துர் தேவதைகளை நாமே உள்ளே அழைப்பதற்கு சமமாகும்.
மாலைகள், தோரணங்கள் கட்டுவதற்காக அடிக்கப்படும் ஆணியானது, வாசற்படியின் மேல் அடிக்காமல் அதில் இருந்து தள்ளி சுவற்றில் அடிப்பது நல்லது. வெளியில் சென்று விட்டு வருபவர்கள் கை, கால்களை கழுவாமல் வாசற்படியில் நுழையக்கூடாது. இந்த பழக்கமானது, நம் கால்களில் மிதித்து வரும் கிருமிகள் நம் வீட்டின் உள்ளே அண்டாமல் இருக்க கடைப்பிடிக்கப்பட்டது. குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை வாழும் நம் வீடானது நோய் நொடி அண்டாமல் இருக்க இதனை நம் முன்னோர்கள் செய்து வந்தனர். இந்த காலத்தில் இது சாத்தியம் இல்லை என்றாலும் இதுவே சிறந்தது. இப்படி நம்மால் கடைபிடிக்கப்படும் சின்ன சின்ன வழிமுறைகள் நம் வீட்டை புனிதமான கோவிலாக மாற்றும்.
- துலாம் மாத தேய்பிறையில் சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் மிக சிறப்பானது.
- மற்ற சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷத்தை விட மும்மடங்கு பலன்களை தரும் என்பது ஐதீகம்.
தஞ்சாவூர்:
ஐப்பசி மாதத்தை துலா மாதம் என்பதால் துலாம் மாத தேய்பிறையில் சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் மிக சிறப்பானது.
மற்ற சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷத்தை விட மும்மடங்கு பலன்களை தரும் என்பது ஐதீகம்.
அதன்படி நேற்று ஐப்பசி மாத சனி பிரதோ ஷம் என்பதால் தஞ்சை பெரிய கோவிலில்உள்ள மகா நந்திக்கு மஞ்சள், பால், சந்தனம், தயிர், விபூதி உள்ளிட்ட மங்கல பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெ ற்றது.
தொடர்ந்துநந்தி, பெருவுடையார், பெரி யநாயகி அம்மன் ஆகியோ ருக்கு தீபாராதனைகாண்பி க்கப்பட்டது. இதில் ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- டர்மெரிக் மீடியா மற்றும் ஆஹா தமிழ் புதிய திரைப்படத்தை தயாரிக்கவுள்ளது.
- இப்படத்தின் தலைப்பு மற்றும் நடிகர்கள் குறித்த விபரம் விரைவில் அறிவிக்கப்படும்.
20 ஆண்டுகளுக்கு மேலாக திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தயாரிப்பு நிறுவனமான டர்மெரிக் மீடியா மற்றும் பிரபல தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் ஓடிடி தளமான ஆஹா தமிழ் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தைத் தயாரிக்கவுள்ளனர்.
இந்த திரைப்படம் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'வெண்கடல்' சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள 'கைதிகள்' சிறுகதையைத் தழுவி உருவாக்கப்படுகிறது. இயக்குனர் ரஃபீக் இஸ்மாயில் இந்தப் படத்தை இயக்குகிறார்.

சிறந்த இலக்கியப் படைப்புகள் வெற்றிகரமான திரைப்படங்களாகவும் ரசனைக்கு ஏற்றவாறு அமைய வேண்டும் என்பதற்காக எழுத்தாளர் ஜெயமோகனின் மூலக்கதைக்கு ஈடுகொடுக்கக்கூடிய மிகச்சிறந்த திரைக்கதையாக வடிவமைப்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் தலைப்பு, நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- பாளை அரசு அருங்காட்சியகத்தில் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
- தொடர்ந்து காபிதூள் மற்றும் பல்வேறு பொருட்கள் மூலம் மாணவ-மாணவிகள் வரைந்த ஏராளமான ஓவியங்கள் அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.
நெல்லை:
பாளை அரசு அருங்காட்சியகத்தில் மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
விநாயகர் சதூர்த்தியை யொட்டி மஞ்சள்,குங்குமம் கொண்டு விநாயகர் ஓவியம் வரையும் போட்டி மற்றும் கண்காட்சி நடைபெற்றது.
அதனை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
போட்டியில் மாணவி ஸ்ரீநிதி என்பவர் கின்னஸ் சாதனை முயற்சியாக மஞ்சள், குங்குமம் மூலம் 108 விநாயகர் ஓவியங்களை வரைந்தார்.
தொடர்ந்து காபிதூள் மற்றும் பல்வேறு பொருட்கள் மூலம் மாணவ-மாணவிகள் வரைந்த ஏராளமான ஓவியங்கள் அருங்காட்சி யகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அதனை ஏராளமான பொதுமக்கள் பார்த்து சென்றனர்.
இதற்கான ஏற்பாடுகளை அருங்காட்சியக காப்பாட்சியர் சிவசத்தியவள்ளி செய்திருந்தார்.
- அந்தியூர் பேரூராட்சியில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்வது மற்றும் மஞ்சள் பையை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
- இப்பேரணியானது அந்தியூர், பர்கூர் சாலை, பஸ் நிலையம், அத்தாணி சாலை, சிங்கார வீதி, தேர் வீதி வழியாக மீண்டும் அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தில் வந்து நிறைவடைந்தது.
அந்தியூர்:
அந்தியூர் பேரூராட்சியில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்வது மற்றும் மஞ்சள் பையை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.
அந்தியூர் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வகுமார் தலைமையில், பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள் மாதேஷ், துணைத்தலைவர் பழனிசாமி ஆகியோர் முன்னிலையில் பேரணி கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.
இப்பேரணியானது அந்தியூர், பர்கூர் சாலை, பஸ் நிலையம், அத்தாணி சாலை, சிங்கார வீதி, தேர் வீதி வழியாக மீண்டும் அந்தியூர் பேரூராட்சி அலுவலகத்தில் வந்து நிறைவடைந்தது.
இந்நிகழ்ச்சியில் அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் திருமாவளவன், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் குணசேகரன், துப்புரவு மேற்பார்வையாளர் ஈஸ்வரமூர்த்தி, சாந்து முகமது, கவுன்சிலர்கள், அலுவலகப்பணியாளர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம் த.பா.கோவிந்தராஜ், அல்ட்ரா தொண்டு நிறுவனர் தண்டாயு தபாணி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.