search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Turtles"

    • ஏவுகணை சோதனை நிறுத்தி வைப்பதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு அறிவித்துள்ளது.
    • ஆமைகள் அதிக அளவில் கூடு கட்டும் பருவம் ஜனவரி முதல் மார்ச் வரையாகும்.

    ஒடிஷா கடற்கரையில் உள்ள வீலர் தீவில் ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் அதிக அளவில் கூடு கட்டும் பருவம் ஜனவரி முதல் மார்ச் வரையாகும்.

    இந்த கடல் ஆமை உயிரினங்களை காப்பாற்றும் விதமாக ஏவுகணை சோதனை நிறுத்தி வைப்பதாக இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு அறிவித்துள்ளது.

    ஏவுகணை சோதனைகளின் பிரகாசமான ஒளி, அதிகமான ஒலிகள் ஆமைகளை பாதிப்பதால் தற்காலிகமாக இது நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

    • கோட்டக்குப்பம் அருகே அரிய வகை ஆமைகளை கடத்திய கடலூர் வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • பையில் விலை உயர்ந்த 46 அரிய வகை ஆமைகள் இருந்தது தெரியவந்தது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் மதுவிலக்கு சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொது சந்தேகத்துக்கிடமான வகையில் 2 மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிப ர்களை நிறுத்தி அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அதில் பையில் விலை உயர்ந்த 46 அரிய வகை ஆமைகள் இருந்தது தெரியவந்தது. இது குறித்து திண்டிவனம் வன சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வன சரக அலுவலர் அஸ்வினி, வனவர் பாலசுந்தரம் மற்றும் அதிகாரிகளிடம் 2 வாலிபர்களையும் கோட்டகுப்பம் போலீசார் ஒப்படைத்தனர்.

    அவர்களை திண்டிவனம் வனசாரக அலுவலகத்திற்கு கொண்டு வந்து விசாரணை செய்ததில், அவர்கள் கடலூர், அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த நாகேந்திரன் (வயது 29), கார்த்திக் (24) என்பது தெரிய வந்தது. அவர்களிடமிருந்த 46 அரிய வகை ஆமைகள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆமைகளை கடத்தில் 2 வாலிபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படு த்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • மாணவ- மாணவிகள் ஆசியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    • கடல் ஆமைகள், பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த உறுதிமொழி ஏற்பு.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வனச்சரகத்தின் மூலம் ஆற்காட்டுதுறை மீனவர் கிராமத்தில், வனச்சரக அலுவலர் அயூப் கான் தலைமையில், கடல் ஆமை விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில்முனைவர் சிவகணேசன் கடலாமை முக்கியத்துவம் குறித்து மீனவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

    நிகழ்ச்சியில் மீன்வளத்துறை ஆய்வாளர், நடேசன் ராஜா கடலோர காவல்துறை குழும போலீசார், ஆற்காட்டுதுறை கிராம பஞ்சாயத்தார்கள், முனைவர் அறிவு கிராம மீனவர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் ஆசியர்கள் மற்றும் வனத்துறையினர்கள் கலந்து கொண்டனர்.

    கடல் ஆமைகள், பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்று கொண்டார்.

    முடிவில் வனவர் ராமதாஸ் நன்றி கூறினர்.

    ×