என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tuticorin"

    • தூத்துக்குடி சுனாமி காலனியை சேர்ந்தவர் கணேசன் மீனவர்
    • இவருக்கு சமீபகாலமாக உடல்நலம் குறைவு ஏற்பட்டுள்ளது

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சுனாமி காலனியை சேர்ந்தவர் கணேசன் (வயது 58). மீனவர். இவருக்கு திரும ணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளது.

    இவருக்கு சமீபகாலமாக உடல்நலம் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார். இந்நிலையில் நேற்று இரவு கணேசன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தெர்மல் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எம்.பி.யாக இருந்தவர்களுக்கு கோட்டாவில் டெல்லியில் வீடு ஒதுக்கி உள்ளது
    • அவதூறு பரப்புவதின் மூலம் பெண்கள் அரசியலில் ஈடுபடுவதை தடுக்க நினைக்கின்றனர்.

    தூத்துக்குடி:

    பா.ஜ.க. மாநில துணை தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான சசிகலா புஷ்பா தூத்துக்குடியில் நிருபர் களிடம் கூறியதாவது:-

    டெல்லியில் வீடு

    எம்.பி.யாக இருந்தவர்களுக்கு கோட்டாவில் டெல்லியில் வீடு ஒதுக்கி உள்ளது. அதனை 3 மாதத்திற்கு ஒருமுறை புதுப்பித்தல் செய்வது வழக்கம். அனைத்து எம்.பி.களுக்கும் இதுதான் நடைமுறை.

    அந்த அடிப்படையில் எனக்கும் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 4 மாதமாக கட்சிப் பணி அதிகமாக இருந்த காரணத்தால் நான் டெல்லி செல்லவில்லை.

    இந்நிலையில் வீட்டை காலி செய்ய டெல்லியின் நோட்டீஸ் ஒட்டப்பட்டது. டெல்லியில் எனக்கு சொந்த வீடும் உள்ளது. அரசு வீட்டை காலி செய்தால் அந்தப் பொருட்களை நான் அங்கு எடுத்துச் செல்வேன்.

    ஆனால் இதனை வைத்து என்னைப்பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறாக பரப்பி உள்ளனர். அதில் ஒன்றிய அரசு என்ற வார்த்தை உள்ளது. இதனை சமீபகாலமாக யார் பயன்படுத்தி வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

    வழக்கு

    எனவே தவறான தகவல் பரப்பியவர் மீது தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். இது தொடர்பாக வழக்கு தொடர உள்ளேன். இப்படி அவதூறு பரப்புவதின் மூலம் பெண்கள் அரசியலில் ஈடுபடுவதை தடுக்க நினைக்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது மாவட்ட துணைத் தலைவர் வக்கீல் வாரியார், பொதுச் செயலாளர் உமரி சத்தியசீலன், மண்டல தலைவர்கள் மாதவன், சிவகணேசன், மண்டல பார்வையாளர் சின்னத் தம்பி மற்றும் காளிராஜா, கலைச்செல்வன், செல்வி, சுமித்ரா, புனிதா, சிலம்பு உட்பட பலர் உடனிருந்தனர். 

    • தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 434 தனிநபர் கழிப்பிடங்கள் அமைக்க மானிய நிதி அளிக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
    • மாநில உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு சொத்து வரி விதிப்பில் முன்னேற்றம் காண்பிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சியின் கூட்டம் மாநகர கூட்டரங்கில் மேயர் ஜெகன்பெரியசாமி தலைமையில இன்று நடைபெற்றது. கமிஷனர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் முன்னிலை வகித்தனர்.

    தீர்மானங்கள்

    கூட்டத்தில் சிவந்தாகுளத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டுதல், முத்தம்மாள் காலனியில் புதிய ரேஷன் கடை கட்டுதல், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 434 தனிநபர் கழிப்பிடங்கள் அமைக்க மான்ய நிதி அளிக்க தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

    உள்ளாட்சி அமைப்பு திட்டப் பணிகளுக்கு மானியம் பெறுவதற்கு மாநில உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு சொத்து வரி விதிப்பில் முன்னேற்றம் காண்பிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.

    எனவே சொத்துவரி, காலிமனை வரி சீராய்வு செய்வதற்கு மாநகராட்சி பகுதிகளில் கட்டப்படும் குடியிருப்பு பகுதிகளுக்கு அவற்றின் அமைவிடம், கட்டுமானத்தின் தன்மை அடிப்படையில் பரப்பளவிற்கு ஏற்றவாறு 4 வகைகளாக பிரித்து சொத்து வரி சீராய்வு செய்ய வேண்டும்.

    அதன்அடிப்படையில் கடந்த ஏப்ரல் 12-ந் தேதி தீர்மானத்தின்படி, தூத்துக்குடி மாநகராட்சியில் 1-4-2022 முதல் காலிமனை வரி உயர்வு செய்து பொது சீராய்வு மேற்கொள்ள மண்டலங்கள் வாரியாக புதிய வரியும், பொது சீராய்வு மேற்கொள்ள அனுமதி கோருதல்,

    உள்ளாட்சி அமைப்பு களில் நிர்வாகத்தை வலுப்ப டுத்தவும், பொதுமக்களின் பங்கேற்பு வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்தவும் மாநகராட்சி சட்டப்பிரிவுகளின்படி வார்டு குழு மற்றும் பகுதிசபா அமைக்கவும் அதற்கு வார்டு கவுன்சிலர் தலைவராகவும் வாக்குரிமை பெற்ற பகுதி வாசிகள் பகுதிசபா குழு உறுப்பினர்களாகவும் மாநகராட்சி அனுமதி பெற்று நியமித்திடவும் இந்தக் குழு மூன்று மாதத்திற்கு ஒருமுறை கூட்டப்படவும் அதற்கான அஜெண்டா தயாரிக்கவும் கவுன்சிலர் கூட்டம் நடத்த தவறினால் ஆணையாளர் கூட்டத்தை நடத்தவும் அரசாணையில் உத்தரவிடப்பட்டுள்ளது.

    எனவே வார்டு குழு மற்றும் பகுதிசபா 60 வார்டுகளிலும் அமைக்க அரசாணை மற்றும் அரசிதழ் அறிக்கையினை மாமன்றத்தில் சமர்ப்பித்தல் உட்பட பல தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டது,

    கலந்து கொண்டவர்கள்

    கூட்டத்தில் மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்னலட்சுமி கோட்டுராஜா, நிர்மல்ராஜ், குழு தலைவர்கள் ராமகிரு ஷ்ணன், கீதாமுருகேசன், சுரே ஷ்குமார், அதிர்ஷ்டமணி, கவுன்சிலர்கள் டாக்டர் சோமசுந்தரி, ரெங்கசாமி, விஜயகுமார், சுயம்பு, பச்சிராஜ், முத்துவேல், ராஜதுரை, வெற்றிச்செல்வன், ஜெயலட்சுமி சுடலைமணி, மந்திரமூர்த்தி உட்பட அனைத்து கவுன்சிலர்களும், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி, அதிகாரிகள் ரூபன்சுரேஷ், பொன்னையா, சரவணன், காந்திமதி, பிரின்ஸ், சேகர், ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


    • தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரில் பிரத்தியங்கிராதேவி, காலபைரவர் சித்தர் பீடம் அமைந்துள்ளது.
    • வராஹி அம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுக்க அம்மனுக்கு தீபாராதனை உள்ளிட்ட வழிபாடுகள் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்றது

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரில் பிரத்தியங்கிராதேவி, காலபைரவர் சித்தர் பீடம் அமைந்துள்ளது.

    இங்கு ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, மஹா காலபைரவர், குருமகாலிங்கேஸ்வரர், சனீஸ்வரர், வீரணார், ஆஞ்சநேயர், விநாயகர் உள்ளிட்ட சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

    ஸ்ரீசித்தர் பீடத்தில் கூடுதல் ஆன்மிக சிறப்பாக வாழ்வில் பிரச்சினைகள் யாவற்றையும் தலைமுறைக்கும் போக்கி கேட்ட வரம் அருளும் வராஹி அம்மன் சிலை ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சாக்தஸ்ரீ'' சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் சிறப்பு யாக வழிபாடுகள் நடத்தப்பட்டு அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

    அதனைத்தொடர்ந்து, வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. பின்னர் வராஹி அம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுக்க அம்மனுக்கு தீபாராதனை உள்ளிட்ட வழிபாடுகள் சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் நடைபெற்றது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். வழிபாடுகள் முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வாராஹி அம்மனை செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகள் மற்றும் அமாவாசை, பவுர்ணமி, பஞ்சமி திதி நாட்களில் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது என்பது ஐதீகம்.






    • தூத்துக்குடி புதுகிராமம் பகுதியில் உள்ள ஒரு வீட்டு மாடியில் வாலிபர்கள் சிலர் ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • ஒருவர் தப்பி ஓட, மீதி 3 பேர் தப்பிச் செல்ல முடியாததால் கையில் அரிவாளுடன் போலீசாரை தாக்குவதற்காக பாய்ந்து வந்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதுகிராமம் பகுதியில் உள்ள ஒரு வீட்டு மாடியில் வாலிபர்கள் சிலர் ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து தென்பாகம் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். திடீரென போலீசாரை கண்டதும் அதிர்ச்சி அடைந்த வாலிபர்கள் தப்பி ஓட முயற்சித்தனர்.

    இதில் ஒருவர் தப்பி ஓட, மீதி 3 பேர் தப்பிச் செல்ல முடியாததால் கையில் அரிவாளுடன் போலீசாரை தாக்குவதற்காக பாய்ந்து வந்தனர். உடனடியாக சுதாரித்துக் கொண்ட போலீசார் லாவகமாக அவர்களை மடக்கி பிடித்து அவர்களிடமிருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்து கைது செய்தனர்.

    தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி சண்முகபுரத்தைச் சேர்ந்த கணேஷ் (வயது 28), முத்தையாபுரத்தை சேர்ந்த ரத்தினகுமார் ஹரீஷ் (29), மற்றும் லோகேஸ்வரன் என்பது தெரிய வந்தது. அவர்கள் எதற்காக ஆயுதங்களுடன் வீட்டு மாடியில் பதுங்கி இருந்தனர் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தப்பி ஓடிய மேல சண்முகபுரத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • மர்மநபர்கள் வடிகால்களில் குப்பைகள் கொட்டுவதும், ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது
    • பிரதான சாலையில் இருந்த வடிகால்கள் சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்டது.

    தூத்துக்குடி:-

    தூத்துக்குடி மாநகரில் மழைநீர், கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணிகள் இரவு பகலாக நடந்து வருகிறது,

    இந்நிலையில் சில இடங்களில் மர்மநபர்கள் வடிகால்களில் குப்பைகள் கொட்டுவதும், ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.

    இதனால் பல இடங்களில் தண்ணீர் செல்வதில் தடைகள் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து மாநகரின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அலுவலர்கள் நேரடியாக சென்று பார்வையிட்டு வடிகால் ஆக்கிர–மிப்பாளர்கள் மீதும், குப்பைகள் கொட்டுபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    குறிப்பாக தூத்துக்குடி மாநகர தெற்கு பகுதியில் ஊராட்சியாக இருந்தபோது போடப்பட்ட வடிகால்கள் மூலம் மழைநீர்,கழிவுநீர் சாலையில் தேங்காமல் சென்று வந்தது, ஆனால் தற்போது அந்த வடிகால்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பினாலும், மணல் கொட்டி மூடியும் வைத்துள்ளனர். பல இடங்களில் குப்பைகளும் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது. இதனால் சிறு மழை பெய்தாலும் தெருக்களில் தண்ணீர் தேங்கி விடுகிறது. பிரதான சாலையில் இருந்த வடிகால்கள் சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்டது. அதன்பின் புதிதாக வடிகால் அமைக்காததாலும் தூத்துக்குடி- திருச்செந்தூர் பிரதான சாலை மழை நீர் முழுமையாக தேங்கி வாகனங்கள் செல்ல முடியாமல் ஆறுகளாக மாறிவிடுகிறது.

    இதனால் மக்கள் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். இது குறித்து உரிய கவனம் செலுத்தி ஆக்கிரமிப்புகளை அகற்றி புதிய வடிகால்களையும் உடனடியாக அமைக்க மாநகர மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் ஆணையாளர் சாருஸ்ரீ ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


    • முடிவைதானேந்தலை சேர்ந்த கணேசன் தனது மோட்டார் சைக்கிளில் மனைவி விமலாவை அழைத்து கொண்டு நேற்று இரவு கடைக்கு சென்றார்
    • நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த கார் அவர்கள் மீது மோதியது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே உள்ள முடிவைதானேந்தல் கீழத்தெருவை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி விமலா (வயது42).

    கார் மோதி விபத்து

    கணேசன் தனது மோட்டார் சைக்கிளில் மனைவி விமலாவை அழைத்து கொண்டு நேற்று இரவு கடைக்கு சென்றார்.

    அவர்கள் வாகைக்குளம் அருகே உள்ள வர்த்தக ரெட்டிபட்டியில் சென்ற போது நெல்லையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த கார் அவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். தகவலறிந்ததும் புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி, சப்-இன்ஸ்பெக்டர் முத்து வீரப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை விமலா பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வ.உ.சி. துறைமுகம் செல்லும் ரவுண்டானாவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினால் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது
    • திருச்செந்தூர் சாலையில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியிலிருந்து வரும் ரெயில்வே மேம்பாலம் வழி அடைக்கப்பட்டுள்ளது

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் செல்லும் ரவுண்டானாவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினால் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    பாலத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் சாலை பணிகள் முடிக்கப்பட்டு மத்தியில் ராட்சத காண்கிரிட் தூண்கள் பொறுத்தும் பணி நேற்று தொடங்கியது.

    தொடர்ந்து வருகிற 11-ந் தேதி வரை பணிகள் நடைபெற உள்ளது. இதனால் திருச்செந்தூர் சாலையில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியிலிருந்து வரும் ரெயில்வே மேம்பாலம் வழி அடைக்கப்பட்டுள்ளது.

    அனைத்து வாகனங்களும் மாற்று வழியாக பீச் ரோடு ரோச் பூங்கா வழியாக துறைமுகசபை விருந்தினர் விடுதி இணைப்புச்சாலை வழியாக திருச்செந்தூர் சென்று வருகிறது.

    மதுரையில் இருந்து வரும் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலை வழியாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் மற்றும் திருச்செந்தூர் செல்லும் கனரக மற்றும் இலகு ரக வாகனங்கள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பாலத்தின் தெற்கு பகுதியில் உள்ள சர்வீஸ் ரோட்டின் வழியாக செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதுபோல திருச்செந்தூரில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் பாலத்தின் தெற்கு பகுதியில் ஏற்கனவே உள்ள சாலையை பயன்படுத்தி கொள்ளலாம்.

    இந்நிலையில் பாலம் பணி நடைபெறக்கூடிய பகுதிகளில் சரியான அறிவிப்பு பலகைகளோ, போக்குவரத்து காவலர்களோ இல்லாமல் இருப்பதால் எதிரெதிரே வரும் வாகனங்களால் மிகப்பெரிய ஆபத்து நடக்கக்கூடும் சூழல் காணப்படுகிறது. மேலும் பாலம் பணி நடைபெறும் பகுதியில் மின்விளக்குகளே இல்லை என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    எனவே பாலம் வேலை நடைபெறும் உப்பாற்று ஓடை ரவுண்டானா பகுதியில் விபத்துகளை தவிர்க்கும் வகையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பிரதிநிதி கள் கூட்டம் கலைஞர் அரங்கில் அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
    • இந்தி கட்டாயம் என்று சொல்லி வேலை வாய்ப்பை ஒன்றிய அரசு தடுக்கிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பிரதிநிதி கள் கூட்டம் கலைஞர் அரங்கில் அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.

    மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் பேசியதாவது:-

    இந்தி திணிப்பை ஒன்றிய அரசு செய்து வருவதை தடுக்கும் விதமாக ஒன்றியம், நகரம், பேரூர், பகுதி, கிளைக்கழகம் வரை கூட்டங்கள் நடத்தி அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இந்தி கட்டாயம் என்று கூறுவதை நாம் எதிர்க்கின்றோம். படிப்ப வர்கள் படிக்கட்டும். அதற்கு ஆட்சேபனை இல்லை.

    அண்ணாமலைக்கு பதிலடி

    தமிழர்கள் உலகம் முழுவதும் பணி செய்து வளர்ச்சி அடைந்துள்ளனர். அதை தடுக்கும் விதமாக இந்தி கட்டாயம் என்று சொல்லி வேலை வாய்ப்பை ஒன்றிய அரசு தடுக்கிறது.

    ஒவ்வொரு மாநிலத்திற்கு தாய் மொழி என்றிருக்கிறது. அதே போல் இங்கு துணை மொழியாக ஆங்கிலம் இருக்கிறது. இந்தி, ஆங்கிலம் போன்ற எழுத்து தேர்வுகள் மூலம் தேர்ச்சி பெற்று அரசு பணிக்கு செல்லுகின்றவர்கள் இந்தி மட்டும் தான் என்றால் தமிழர்கள் பாதிக்கப்ப டுவார்கள். அதைத் தான் நாம் எதிர்க்கின்றோம்.

    முதல்-அமைச்சர் ஸ்டாலின் உத்தரவுப்படி இந்தி திணிப்பை ஏன் தி.மு.க. எதிர்க்கிறது என்ற விளக்க நோட்டீஸை வீடுகள் தோறும் கொண்டு சேர்க்க வேண்டும்.

    அனுமதியின்றி போராட்டம் நடத்தினால் அது அண்ணாமலை யல்ல யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவது வழக்கமான ஒன்றுதான். இதில் அரசியல் செய்து குளிர்காய நினைக்கும் பாரதிய ஜனதாவுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.

    முதல்-அமைச்சரை குறை சொல்ல யாருக்கும் அருகதை கிடையாது. 2024 தேர்தலில் பி.ஜே.பி.க்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு பேசினார்.

    பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி பேசியதாவது:-

    பொய் பிரசாரம்

    முதல்-அமைச்சரின் சாதனைகளை பொறுத்து கொள்ள முடியாத பா.ஜ.க. பொய் பிரச்சாரங்களை பரப்பி கொண்டு என்ன செய்கின்றோம் என்று தெரியாமல் பேசி வருகி ன்றன. அதிலும் அண்ணாமலை அதிகமாக பேசி வருகிறார்.

    பல இணைய தள வாட்ஸ்-அப்களில் நம் தலைவரையும், கழகத்தையும் குறை கூறி வருகி ன்றன. அதற்கு அனைவரும் உடனடியாக பதிலடி கொடுக்க வேண்டும். ஒன்றரை ஆண்டுகால ஆட்சியில் யாரும் குறை சொல்ல முடியாத படி இந்தியாவிற்கே வழிகாட்டும் வகையில் ஆட்சி செய்து வருகிறார் முதல்வர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக தி.மு.க. தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கும், துணை பொதுச்செய லாளராக கனிமொழி எம்.பி. தேர்வு செய்யப்பட்டதற்கும், தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவிப்பது, தமிழகம் முழுவதும் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டங்கள் மற்றும் அதுகுறித்த துண்டு பிரசுரங்கள் அச்சிட்டு வீடுகள் தோறும் வழங்க தலைமை கழகம் நமக்கு அறிவுறுத்தி யுள்ளது. இப்பணியை சிறப்பாக செய்வது உள்பட 6 தீர்மா னங்கள் நிறைவேற்ற ப்பட்டன.

    கூட்டத்தில் மாநில மீனவரணி துணைச் செயலா ளர் புளோரன்ஸ், துணை மேயர் ஜெனிட்டா, மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், ஏஞ்சலா, பொரு ளாளர் ரவீந்திரன், மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் நிர்மல்ராஜ், கலைச்செல்வி, மாநகர துணைச்செயலாளர்கள் கனகராஜ், பிரமிளா, மாவட்ட அணி நிர்வாகிகள் கஸ்தூரிதங்கம், உமாதேவி, மதியழகன், ஜெபசிங், அபிராமி நாதன், அந்தோணிகண்ணன், பிரதீப், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி, ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, ராஜா, வசந்தம் ஜெயக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், சேர்மபாண்டியன், ராஜ்குமார், இசக்கிராஜா, சுந்தரவேல், ஒன்றிய செயலா ளர்கள் காசிவிஸ்வநாதன், முருகேசன், ராதாகிருஷ்ணன், சின்னமாரித்து, செல்வராஜ், அன்புராஜ், ராமசுப்பு, மூம்முர்த்தி, நவநீதிகண்ணன், சின்னபாண்டியன், சுப்பிரமணியன், பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், ஜெயக்குமார், மேகநாதன், ராம கிருஷ்ணன், சுரேஷ் குமார், மாநகர அணி நிர்வாகிகள் அருண்குமார், ஜெயக்கனி, டேனி, அருண்சுந்தர், சங்கர நாராயணன், முன்னாள் கவுன்சிலர்கள் செந்தில் குமார், செல்வகுமார், கருணா, ரவி, பிரபாகர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இந்தி திணிப்புக்கு எதிராக தி.மு.க. சார்பில் கண்டன பொதுகூட்டம், தெருமுனை பிரச்சாரம் நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது
    • பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் இந்தி திணிப்புக்கு எதிரான துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது

    தூத்துக்குடி:

    முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசின் கட்டாய இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பில் கண்டன பொதுகூட்டம், தெருமுனை பிரச்சாரம் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோரின் ஆலோசனை படி 29-வது வார்டுக்கு உட்பட்ட பழைய பஸ்நிலையம், பாளையங்கோட்டை ரோடு, மீனாட்சிபுரம் உள்பட பல பகுதிகளில் வீதிவீதியாக நடந்து சென்று தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் கலைச்செல்வி திலகராஜ், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் இந்தி திணிப்புக்கு எதிரான துண்டு பிரசுரங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் வட்டச்செயலாளர் கதிரேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல் 14-வது வார்டுக்குட்பட்ட வி.எம்.எஸ்.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தூத்துக்குடி மாநகராட்சி பணிக்குழு தலைவர் கீதாமுருகேசன் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் இந்தி திணிப்புக்கு எதிரான துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

    • மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது
    • நாளை மற்றும் 7-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்படுகிறது.

    தூத்துக்குடி:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தூத்துக்குடி மத்திய மாவட்ட செய லாளர் ஜவகர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் நாளை மறுநாள் ( 7-ந் தேதி) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தூத்துக்குடி மத்திய மாவட்ட பகுதிகளில் நாளை மற்றும் 7-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்படுகிறது. நாளை புதுக்கோட்டை யில் மத்திய மாவட்டம் சார்பில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாப்படு கிறது. தொடர்ந்து மருத்துவ முகாம் மற்றும் மரக்கன்றுகள் நடப்படுகிறது. இதேபோல் கந்தவேல்புரத்தில் சிறுவர், சிறுமிகளுக்கான விளை யாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு ஏழை, எளி யோருக்கு நலத்திட்ட உதவி கள் வழங்கப்படும்.

    கமல்ஹாசன் பிறந்த நாளான 7-ந் தேதி கிருஷ்ணராஜபுரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி கொடியேற்றப்பட்டு பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்படும்.

    இதேபோல் மூன்றாம் மைல் பகுதியில் கேக் வெட்டி இனிப்புகள் வழங்குதல், லயன்ஸ் டவுன் பகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், 1-ம் கேட் காந்தி சிலை அருகே இனிப்புகள் வழங்குதல், தாளமுத்து நகரில் கேக் வெட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்குதல், வ.உ.சி. மார்க்கெட் அருகில் கேக் வெட்டி இனிப்புகள் வழங்கப்படுகிறது.

    எனவே மத்திய மாவட்ட மக்கள் நீதிமய்யம் கட்சி சார்பாக கட்சி தலைவர் கமல்ஹாசன் பிறந்தாளையொட்டி நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • முத்தையாபுரத்தை சேர்ந்த செல்வக்குமார் - பவதாரினி என்ற தம்பதியின் மகள் தியாஷிகா
    • 100 நாடுகளின் தேசிய கொடிகளை சரியாக அடையாளம் கண்டு இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பாக பதக்கம் பெற்றார்

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் முனியசாமி கோவில் தெருவைச் சேர்ந்த செல்வக்குமார், இவரது மனைவி பவதாரினி இவர்களது மகள் தியாஷிகா (வயது 2 ½). 21 நிமிடங்களில் 100 நாடுகளின் தேசிய கொடிகளை சரியாக அடையாளம் கண்டு இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பாக பதக்கம் மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளார்.

    பதக்கம் மற்றும் சான்றிதழுடன் அவரது பெற்றோர் தூத்துக்குடி எஸ்.பி. பாலாஜி சரவணன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது குழந்தை தியாஷிகாவை பாராட்டி மென்மேலும் சாதனைகள் புரிய எஸ்.பி. பாலாஜி சரவணன் வாழ்த்தினார்.

    ×