என் மலர்
நீங்கள் தேடியது "U19 Womens T20 World Cup"
- 19 வயதிற்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 சாம்பியன் பட்டத்தை இந்தியா வென்றது.
- சாம்பியன் பட்டம் வென்ற யு 19 இந்திய மகளிர் அணிக்கு உ.பி. முதல் மந்திரி வாழ்த்து தெரிவித்தார்.
புதுடெல்லி:
19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலக கோப்பை தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது. இத்தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
இறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 17.1 ஓவரில் 68 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அடுத்து களமிறங்கிய இந்திய அணி 14 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து வெற்றி பெற்றது. இதன்மூலம், இங்கிலாந்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 19 வயதிற்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 சாம்பியன் பட்டத்தை இந்தியா வென்றது.
சாம்பியன் பட்டம் வென்ற இந்தியாவுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஐசிசி டி20 உலக கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற யு-19 இந்திய மகளிர் அணிக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட்டை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள். இந்த திறமையான இளம் பெண்கள் சிறந்த செயல்திறனை வெளிப்படுத்தினர். இந்த சாம்பியன்கள் நமது இளைஞர்களுக்கு, குறிப்பாக சிறுமிகளுக்கு ஒரு உத்வேகம். இந்த வரலாற்று வெற்றி இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது என பதிவிட்டுள்ளார்.
- ஜூனியர் டி20 உலக கோப்பையை இந்திய பெண்கள் அணி முதல் முறையாக வென்று வரலாறு படைத்தது.
- சாம்பியன் பட்டம் வென்ற இந்திய பெண்கள் அணிக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்செப்ஸ்ட்ரூம்:
பெண்களுக்கான முதலாவது ஜூனியர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) கடந்த 14-ம் தேதி தென் ஆப்பிரிக்காவில் தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் சூப்பர்சிக்ஸ் சுற்று முடிவில் இந்தியாவும், இங்கிலாந்தும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.
இரு அணிகளுக்கு இடையிலான இறுதி ஆட்டம் போட்செப்ஸ்ட்ரூமில் நேற்று நடந்தது. டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் ஷபாலி வர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட் செய்த இங்கிலாந்து 17.1 ஓவரில் 68 ரன்னில் சுருண்டது. சுலப இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 14 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 69 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று உலக கோப்பையை உச்சிமுகர்ந்தது.
இந்தியாவின் திதாஸ் சாது ஆட்ட நாயகி விருதையும், இங்கிலாந்து கேப்டன் கிரேஸ் ஸ்கிரிவென்ஸ் தொடர் நாயகி விருதையும் (மொத்தம் 293 ரன் மற்றும் 9 விக்கெட்) பெற்றனர்.
பெண்கள் கிரிக்கெட்டில் இந்திய இளம் படை அறிமுக உலக கோப்பை தொடரிலேயே பட்டம் வென்று சாதித்துள்ளது. அவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.
இந்நிலையில், உலக கோப்பையை கைப்பற்றி தேசத்துக்கு மகத்தான பெருமை சேர்த்துள்ள இந்திய பெண்கள் அணிக்கு இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா வாழ்த்து தெரிவித்தார். ஒட்டுமொத்த வீராங்கனைகள் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ.5 கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும் என அறிவித்தார். மேலும், வெற்றியைக் கொண்டாடும் வகையில் வரும் 1-ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்தியா, நியூசிலாந்து இடையிலான கடைசி டி20 போட்டியை நேரில் பார்க்க ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய ஜூனியர் அணிக்கு அழைப்பும் விடுத்துள்ளார்.
- 2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மலேசியாவில் நடந்து வருகிறது.
- இதில் இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.
கோலாலம்பூர்:
இரண்டாவது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்குட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வருகிறது.
இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசுடன் மோதியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் நிக்கி பிரசாத் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 13.2 ஓவரில் வெறும் 44 ரன்களில் சுருண்டது.
இந்தியா சார்பில் பருனிகா சிசோடியா 3 விக்கெட்டும், ஜோஷிதா மற்றும் ஆயுஷி சுக்லா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 45 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய இந்தியா 4.2 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 47 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி அடுத்த லீக் ஆட்டத்தில் வரும் 21ம் தேதி மலேசியாவை எதிர்கொள்கிறது.
- மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 13 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
- இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இரண்டாவது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்குட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வருகிறது.
இதில் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை நைஜீரியா அணி எதிர்கொண்டது. மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 13 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த நைஜீரியா அணி 13 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் அடித்தது.
இதனையடுத்து 66 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணி 13 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்களை மட்டுமே எடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்தை வீழ்த்தி நைஜீரியா அணி தனது முதல் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. இதன்மூலம் சி பிரிவில் முதலிடம் பிடித்து நைஜீரியா அணி அசத்தியுள்ளது.
- வெறும் 2.5 ஓவரில் இந்திய அணி மலேசியாவை வீழ்த்தியது.
- போட்டியின் ஆட்ட நாயகியாக வைஷ்ணவி சர்மா தேர்வு செய்யப்பட்டார்.
கோலாலம்பூர்:
ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் மலேசியாவுடன் இன்று மோதியது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மலேசியா, இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை விரைவில் பறிகொடுத்தது. அந்த அணியில் ஒரு வீராங்கனை கூட இரட்டை இலக்கத்தை தொடவில்லை.
இறுதியில், மலேசியா அணி 14.3 ஓவரில் 31 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் வைஷ்ணவி சர்மா ஹாட்ரிக் விக்கெட்டுடன் சேர்த்து 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
அடுத்து ஆடிய இந்திய அணி 2.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 32 ரன் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
5 விக்கெட் வீழ்த்திய வைஷ்ணவி சர்மா ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
- முதலில் ஆடிய வங்கதேசம் 64 ரன்கள் மட்டுமே எடுத்தது.
- அடுத்து ஆடிய இந்தியா 7.1 ஓவரில் 66 ரன்கள் எடுத்து வென்றது.
கோலாலம்பூர்:
ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சூப்பர் 6 சுற்றில் முதல் ஆட்டத்தில் வங்கதேசத்துடன் இன்று மோதியது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 64 ரன்கள் மட்டுமே எடுத்தது. கேப்டன் சுமையா அக்தர் 21 ரன்னும், ஜன்னத்துல் மவுமா 14 ரன்னும் எடுத்தனர்.
இந்தியா சார்பில் வைஷ்ணவி சர்மா 3 விக்கெட் கைப்பற்றினார்.
அடுத்து ஆடிய இந்திய அணி 7.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 66 ரன் எடுத்து வெற்றி பெற்றது. திரிஷா 31 பந்தில் 40 ரன் விளாசினார்.
இதன்மூலம் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகி விருதை வைஷ்ணவி வென்றார்.
- முதலில் ஆடிய இந்தியா 208 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய ஸ்காட்லாந்து 58 ரன்களில் ஆல் அவுட்டானது.
கோலாலம்பூர்:
ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சூப்பர் 6 சுற்றிn 2வது ஆட்டத்தில் ஸ்காட்லாந்துடன் இன்று மோதியது. டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 209 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனை கமாலினி அரை சதம் கடந்து 51 ரன்னில் அவுட்டானார்.
மற்றொரு தொடக்க வீராங்கனை கோங்கடி திரிஷா அதிரடியில் மிரட்டினார். இவர் 59 பந்துகளில் 4 சிக்சர், 13 பவுண்டரி உள்பா 110 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 147 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஸ்காட்லாந்து களமிறங்கியது. இந்திய வீராங்கனைகள் துல்லியமாக பந்துவீசி அசத்தினர்.
இறுதியில் ஸ்காட்லாந்து அணி 14 ஓவரில் 58 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்தியா 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் ஆயுஷி சுக்லா 4 விக்கெட்டும், வைஷ்ணவி சர்மா, கோங்கடி திரிஷா தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகி விருதை கோங்கடி திரிஷா வென்றார்.
- போட்டியில் பங்கேற்கும் 16 அணிகள் 4 குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
- முதல்முறையாக உலகக் கோப்பையில் இந்தோனேசியா, ருவாண்டா ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.
19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான, முதல் டி20 உலகக்கோப்பை தொடரின் அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி அடுத்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி முதல் ஜனவரி 29 ஆம் தேதி வரை, தென் ஆப்பிரிக்காவில் போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்தியா உட்பட 16 அணிகள் பங்கேற்கும் தொடரில், 41 போட்டிகள் நடைபெற உள்ளன. முதல்முறையாக உலகக் கோப்பையில் இந்தோனேசியா, ருவாண்டா ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.
போட்டியில் பங்கேற்கும் அணிகள் 4 குரூப்களாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் சுற்று, சூப்பர் 6, அரையிறுதி என மூன்று சுற்றுகளாக உலகக்கோப்பை நடைபெறுகிறது. போட்செஃப்ஸ்ட்ரூம், பெனோனி ஆகிய இரு மைதானங்களில் மட்டும் போட்டிகள் நடைபெற உள்ளன.
குரூப் 'டி' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய மகளிர் அணி, தென்னாப்பிரிக்கா, ஸ்காட்லாந்து மற்றும் யூ.ஏ.இ. ஆகிய அணிகளுடன் குரூப் சுற்றில் மோதுகின்றன.