என் மலர்
நீங்கள் தேடியது "UGC NET exam"
- வெளிப்படை தன்மையில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்.
- முறைகேடு தொடர்பாக விசாரிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்படும்.
நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
மாணவர்களன் நலன்களை பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது என்பதை அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறேன்.
வெளிப்படை தன்மையில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள மாட்டோம்.
பீகாரில் நீட் வினாத்தாள் கசிந்த ஒரு சம்பவம், அந்த தேர்வை எழுதிய லட்சக் கணக்கான மாணவர்களை பாதிக்கக் கூடாது.
முறைகேடு தொடர்பாக விசாரிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்படும்.
யூஜிசி- நெட் தேர்வைப்போல் நீட் தேர்வை ரத்து செய்யும் எண்ணம் இல்லை. நீட் விவகாரத்தை அரசியாக்க வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிபிஐ அதிகாரிகள் குழு ஒன்று நெட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து குறித்து விசாரிப்பதற்காக சென்றது.
- அதிகாரிகளை கிராம மக்கள் சரமாரியாக தாக்கினர்.
யுஜிசி-நெட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படும் விவகாரத்தை சிபிஐ விசாரிக்கும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, வழக்கு பதிவு செய்து சிபிஐ விசாரணையை தொடங்கியது.
பீகார் மாநிலத்தில் உள்ள நவாடா மாவட்டத்தில் சிபிஐ அதிகாரிகள் குழு ஒன்று நெட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து குறித்து விசாரிப்பதற்காக சென்றது.
அப்போது காசியாதீக் என்ற கிராமத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்காக நுழைந்தபோது அங்குள்ள கிராம மக்கள் அதிகாரிகள் வந்த வாகனத்தை சூழ்ந்து கொண்டனர். பிறகு வாகனத்தில் இருந்த அதிகாரிகளை கிராம மக்கள் சரமாரியாக தாக்கினர். இதையடுத்து அங்கிருந்து வெளியேறிய சி.பி.ஐ. அதிகாரிகள் அங்கு நடந்த சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறும்போது, நெட் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர் ஒருவரிடமிருந்து செல்போனை சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகவும், இதனால் கோபமடைந்த அந்த நபரின் குடும்பத்தார் அதிகாரிகளை தாக்கியதாகவும் தெரிவித்தனர். வீடியோ காட்சிகளின் அடிப்படையில் அடையாளம் கண்டுபிடித்து 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கிராம மக்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
- தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) இரு முறை கணினி வழியில் நடத்தப்படும்.
- நெட் தேர்வை ரத்து செய்து மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டது.
நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) சார்பில் இந்த தேர்வு ஆண்டுக்கு (ஜூன், டிசம்பர்) இரு முறை கணினி வழியில் நடத்தப்படும்.
அதன்படி, இந்தாண்டு ஜூன் பருவத்துக்கான முதல்கட்ட நெட் தேர்வு நாடு முழுவதும் 317 நகரங்களில் 1,205 மையங்களில் கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்டது. இந்த தேர்வை எழுத மொத்தம் 11,21,225 பட்டதாரிகள் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களில் 9,08,580 பேர் தேர்வை எழுதினார்கள்.
தொடர்ந்து விடைத்தாள்களை திருத்தி தேர்வு முடிவுகளை துரிதமாக வெளியிட தேசிய தேர்வு முகமை திட்டமிட்டு இருந்த நிலையில், தேர்வை ரத்து செய்து மத்திய கல்வி அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டது.
இந்நிலையில், யுஜிசி நெட் தேர்வு நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டதுள்ளது.
அதன்படி, வரும் ஆகஸ்ட் 21ம் தேதி முதல் செப்டம்பர் 4ம் தேதி வரை UGC NET தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேர்வு காலை 9 மணி முதல் 12 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரையும் 2 பிரிவுகளாக தேர்வு நடைபெறவுள்ளது.
வினாத்தாள் கசிவு புகாரைத் தொடர்ந்து, கடந்த மாதம் நடந்த UGC NET தேர்வு ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், புதிய தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்ய வேண்டும் என மாணவர் அணிச் செயலாளர் எழிலரசன் அறிக்கை.
- தமிழர்களின் பண்பாட்டையும் அவர்களின் உணர்வுகளையும் அவமதிக்கும் செயலாகும்.
பொங்கல் பண்டிகையன்று யுஜிசி-நெட் தேர்வு நடைபெறுவதற்கு திமுக மாணவர் அணி கண்டனம் தெரிவித்துள்ளது.
தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்ய வேண்டும் என மாணவர் அணிச் செயலாளர் எழிலரசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஒன்றிய பாஜக அரசின் கீழ் இயக்கும் தேர்வு முகமை (NATIONAL TESTING AGENCY) அறிவித்துள்ள 'யுஜிசி நெட் தேர்வு அட்டவணையில் தமிழர்களின் பண்பாட்டுத் திருவிழாவான பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களைக் குறிவைத்து 2025, ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் 30 பாடங்களுக்கானத் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் தமிழர்களின் பண்பாட்டையும் அவர்களின் உணர்வுகளையும் அவமதிக்கும் செயலாகும்.
மத்திய பாஜக அரசு சார்பில் நடத்தப்படும் பல்வேறு தேர்வுகள் பொங்கல் பண்டிகை விடுமுறை நாள்களில் அறிவிக்கப்படுவது தொடர் கதையாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட பட்டயக் கணக்காளர் (Chartered Accountant) தேர்வு கூட பொங்கல் விடுமுறை நாட்களில் அறிவிக்கப்பட்டது. பிறகு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த அறிவிப்பையும் பார்க்க வேண்டியுள்ளது.
தமிழர்களின் ஒற்றுமைக்கும், கொண்டாட்டத்துக்கும் அனுகூலமாக விளங்கும் பெருவிழா பொங்கள். "நாம் காணும் பொங்கள் விழா, உலகெங்கிலும் பிறந்து மொழி பயின்று வாழும் மனித குலத்துக்கே பொதுவான விழா! ஆம்! பசிக்கின்ற நம் வயிறு படைத்துள்ள மனித இனம் முழுவதுக்கும் சொந்தமான உலகப்பெருவிழா!" என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் போற்றப்படும் உலகப் பெருவிழாவினை மத்திய பாஜக அரசு தொடர்ச்சியாக அவமரியாதை செய்வதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும், அறிவிக்கப்பட்ட 'யுஜிசி- நெட்' தேர்வு அட்டவணையை உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும். இல்லையெனில் திராவிட மாடல் முதல்வர் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர், இளந்தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைகளைப் பெற்று திமுக மாணவர் அணி சார்பில் தமிழ்நாடெங்கும் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஆந்திரா மற்றும் தெலுங்கான மாநிலங்களில் மகர சங்கராந்தி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.
- பொங்கல் விடுமுறையில் யுஜிசி-நெட் தேர்வை நடத்தினால், ஏராளமான தேர்வர்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும்.
சென்னை:
தைப்பொங்கல் அன்று நடத்தப்படும் யுஜிசி நெட் தேர்வை வேறொரு நாளுக்கு மாற்றி அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
இந்த ஆண்டு தமிழ்நாட்டின் மிக முக்கியமான பண்டிகையான பொங்கல் பண்டிகை ஜனவரி 14 அன்று கொண்டாடப்படுகிறது என்றும் இந்தப் பண்டிகை தமிழ்நாட்டின் மிக முக்கியமான பண்டிகை என்றும், தமிழ்ச் சமுதாயத்தின் அனைத்துக் தரப்பினராலும் அறுவடைத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது என்றும் தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறை அமைச்சர் 23.12.2024 அன்று மத்திய கல்வி அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டிய முதலமைச்சர் ஒவ்வொரு ஆண்டும் இந்தப் பண்டிகை ஜனவரி 13 முதல் ஜனவரி 16 வரை நான்கு நாட்கள் கொண்டாடப்படுவதாகவும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பொங்கல் பண்டிகையை அனைத்து தமிழ்ச் சமூகத்தினரும் நான்கு நாட்கள் உற்சாகமாக கொண்டாடுவர் என்றும் எனவே, இந்தப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2025 ஜனவரி 14 முதல் 17 வரை அரசு விடுமுறை நாட்களாக தமிழ்நாடு அரசால் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் அறுவடைத் திருவிழாவாக கொண்டாடப்படும் பொங்கல், ஒரு பண்டிகையாக மட்டுமல்லாது ஏறக்குறைய 3000 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் காட்டுவதாகவும், இந்தப் பொங்கல் பண்டிகையையப் போலவே, ஆந்திரா மற்றும் தெலுங்கான மாநிலங்களில் மகர சங்கராந்தி பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது என்றும் தனது கடிதத்தில் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே, திட்டமிட்டபடி பொங்கல் விடுமுறையில் யுஜிசி-நெட் தேர்வை நடத்தினால், ஏராளமான தேர்வர்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் இதே காரணத்திற்காக ஜனவரி 2025இல் நடைபெறவிருந்த பட்டயக் கணக்காளர்கள் தேர்வு ஏற்கனவே மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, யுஜிசி-நெட் தேர்வுகள் மற்றும் பிற தேர்வுகளை வேறொரு பொருத்தமான நாட்களில் மாற்றியமைக்க தேவை உள்ளது என்று தாம் கருதுவதாகவும். அறுவடைத் திருவிழா கொண்டாடப்படும் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களின் மாணவர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் தேர்வுகளுக்கு எளிதில் வர இயலும் என்றும் முந்தைய ஆண்டுகளில் பொங்கல் பண்டிகை காலங்களில் தேசிய தேர்வு முகமை யுஜிசி-நெட் தேர்வை நடத்தவில்லை என்று தரவுகள் காட்டுகிறது என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே, இத்தகைய சூழ்நிலையில், யுஜிசி-நெட் தேர்வுகள் மற்றும் பிற தேர்வுகளை ஜனவரி 13 முதல் 16 வரையிலான நாட்களில் நடத்துவதைத் தவிர்த்து பொருத்தமான வேறு நாட்களுக்கு மாற்றியமைக்குமாறும் இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சர் தலையிட்டு தமிழ்நாட்டில் மற்றும் மாநிலங்களில் அறுவடைத் திருவிழா கொண்டாடப்படும் காலங்களில் யுஜிசி-நெட் தேர்வுகள் நடத்தும் திட்டத்தை மாற்றியமைக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
- யுஜிசி நடத்தும் நெட் தேர்வு ஒத்திவைக்கப்பு.
- ஜனவரி 16 ஆம் தேதி நடைபெறும் தேர்வில் மாற்றமில்லை.
பொங்கல் தினத்தன்று நடைபெற இருந்த யு.ஜி.சி. நெட் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்து இருக்கிறது. அதன்படி ஜனவரி 15 ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.
ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை அடுத்து தேர்வு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. இந்த தேதியில் நடைபெற இருந்த தேர்வு எப்போது நடத்தப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும்.
ஜனவரி 15 ஆம் தேதி நடைபெற இருந்த யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு இருக்கும் நிலையில், ஜனவரி 16 ஆம் தேதி நடைபெற இருக்கும் தேர்வு அதே தேதியில் மாற்றமின்றி நடைபெறும்.
- தேசிய தேர்வு முகமையினால் யுஜிசி நெட் தேர்வு கலை மற்றும் அறிவியல் என 85 பாடங்களுக்கு நடத்தப்படுகிறது.
- பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் தேர்வு நடத்த தமிழ்நாட்டில் எதிர்ப்பு கிளம்பியது.
பொங்கல் பண்டிகையால் ஒத்திவைக்கப்பட்ட யுஜிசி நெட் தேர்வுக்கான மாற்றுத் தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
தேசிய தேர்வு முகமையினால் (NTA) யுஜிசி நெட் தேர்வு கலை மற்றும் அறிவியல் என 85 பாடங்களுக்கு நடத்தப்படுகிறது. கல்லூரி உதவி பேராசிரியர், ஜேஆர்ஃப் மற்றும் பிஎச்.டி சேர்க்கை ஆகியவற்றிக்கான தகுதி தேர்வாக ஆண்டிற்கு இரண்டு முறை இத்தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் டிசம்பர் மாதத்திற்கு அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் டிசம்பர் 11-ம் தேதி வரை பெறப்பட்டது.
இதற்கான தேர்வுகள் ஜனவரி 3-ம் தேதி முதல் தொடங்கி ஜனவரி 16-ம் தேதி வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 2025 ஜனவரியில் தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை (ஜன.14, 15, 16) வரை கொண்டாடப்படுகிறது. அதில் ஜனவரி 15 (மாட்டுப் பொங்கல்) மற்றும் ஜனவரி 16 (காணும் பொங்கல்) கொண்டாடப்படும் தினங்களில் பல்வேறு பாடங்களுக்கு தேர்வு நடத்த திட்டமிட்டு இருந்தது.
பொங்கல் பண்டிகை விடுமுறை நாட்களில் தேர்வு நடத்த தமிழ்நாட்டில் எதிர்ப்பு கிளம்பியது. யுஜிசி-நெட் தேர்வு தேதிகளை மாற்றக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதனையடுத்து, இன்று (ஜன.15) நடைபெறவிருந்த நெட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது.
இந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான மாற்று தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி, வரும் 21 மற்றும் 27 ஆகிய தேதிகளில் யுஜிசி நெட் தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.