என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UGC"

    • யுஜிசி நடத்தும் நெட் தேர்வு ஒத்திவைக்கப்பு.
    • ஜனவரி 16 ஆம் தேதி நடைபெறும் தேர்வில் மாற்றமில்லை.

    பொங்கல் தினத்தன்று நடைபெற இருந்த யு.ஜி.சி. நெட் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்து இருக்கிறது. அதன்படி ஜனவரி 15 ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது.

    ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை அடுத்து தேர்வு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. இந்த தேதியில் நடைபெற இருந்த தேர்வு எப்போது நடத்தப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும்.

    ஜனவரி 15 ஆம் தேதி நடைபெற இருந்த யுஜிசி நெட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு இருக்கும் நிலையில், ஜனவரி 16 ஆம் தேதி நடைபெற இருக்கும் தேர்வு அதே தேதியில் மாற்றமின்றி நடைபெறும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இதே விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் போது மீண்டும் கவர்னரின் புதிய அறிவுறுத்தல் விதிமுறைகளுக்கு எதிரானது.
    • புதிய தகவல்களையும் கருத்தில் கொண்டு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்கும் விவகாரத்தில் கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது.

    அண்ணா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தரை நியமிப்பதற்காக தேடுதல் குழுவில் யு.ஜி.சி. உறுப்பினரையும் சேர்க்க வேண்டும் என்று கவர்னர் வலியுறுத்தி வருகிறார்.

    இது விதிகளுக்கு எதிரானது என கூறி தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் பட்டியலிடப்பட்டிருந்த நிலையில், வேறு காரணங்களுக்காக வழக்கின் விசாரணை நடைபெறவில்லை.

    இந்த நிலையில் இதே விவகாரத்தில் தமிழக அரசு சார்பாக சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணை வேந்தர்களின் பதவிக்காலம் கடந்த ஆகஸ்டு மற்றும் நவம்பர் மாதங்களில் முடிவுக்கு வந்துள்ளது.

    பாரதிதாசன் மற்றும் பெரியார் பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களின் பணி நீட்டிப்பு காலமும் வரும் பிப்ரவரி மற்றும் மே மாதங்களுடன் நிறைவுக்கு வருகிறது.

    இந்த பணியிடங்களை நிரப்புவதற்காக தமிழக அரசு தேடுதல் குழுவை அமைத்துள்ள சூழலில், ஏற்கனவே செய்தது போலவே பல்கலைக்கழக மானிய குழுவின் உறுப்பினரை இந்த குழுவில்சேர்க்க வேண்டும் என்று கவர்னர் ரவி மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.

    ஏற்கனவே இதே விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் போது மீண்டும் கவர்னரின் புதிய அறிவுறுத்தல் விதிமுறைகளுக்கு எதிரானது.

    எனவே இந்த விவகாரத்தில் மூல வழக்கை விசாரிக்கும் போது, இந்த புதிய தகவல்களையும் கருத்தில் கொண்டு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • யுஜிசி புதிய வரைவு விதிகளை திரும்ப பெறுமாறு மத்திய கல்வித்துறை அமைச்சருக்கு கடிதம்.
    • தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்துடன் இணைத்துள்ளார்.

    யுஜிசி புதிய வரைவு விதிகளை திரும்ப பெறுமாறு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம், கற்றல் முறை தொடர்பான எஜிசி வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

    யுஜிசி வரைவு நெறிமுறைகளுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதத்துடன் இணைத்துள்ளார்.

    அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு (UGC) வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தமது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தும் வகையில் இக்கடிதத்தை எழுதுவதாகவும், வரைவு நெறிமுறைகளில் உள்ள பல விதிகள் மாநிலங்களின் கல்விமுறை மற்றும் கல்விக் கொள்கைகளுக்கு முரணாக உள்ளன என்பதைத் தாம் குறிப்பிட விரும்புவதாகவும் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், வரைவு யுஜிசி (இளங்கலை பட்டம் மற்றும் முதுகலை பட்டம் வழங்குவதற்கான குறைந்தபட்ச தரநிலைகள்) – நெறிமுறைகள் 2024 தொடர்பான கவலைக்குரிய சில முக்கிய விதிகள் குறித்து பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

    i. இளநிலை மற்றும் முதுநிலை மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு நடத்துதல்

    பொது நுழைவுத் தேர்வுகளுக்கான முன்மொழிவு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பல்வேறு கவலைகளை எழுப்புகிறது எனக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் , மாநில மற்றும் தேசிய கல்வி வாரியங்களால் வலுவான இறுதித் தேர்வுகள் மூலம் மாணவர்களின் கல்வித்திறன் ஏற்கெனவே முறையாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என்றும் ஆதலால் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்துவது என்பது தேவையற்றதும், சுமையாகவும் அமைந்துவிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    நுழைவுத் தேர்வுகள் மாணவர்களிடையே கவலையை ஏற்படுத்துவதுடன் நிதிச்சுமையையும் ஏற்படுத்தி சமூக-பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், நுழைவுத் தேர்வுகள் கட்டாயமாக்கப்பட்டால், பள்ளிகள் நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சியில் கவனம் செலுத்தக்கூடும், இது பள்ளிக்கல்வியின் செயல்பாட்டிற்கு இடையூறு ஏற்படுத்தும். தமிழ்நாட்டின் உயர்கல்வி சேர்க்கை விகிதம் (GER 47%) ஏற்கெனவே நாட்டிலேயே முதன்மையாக உள்ளது எனவே, நுழைவுத் தேர்வுகள் நிச்சயமாக பின்தங்கிய மாணவர்களின் உயர்கல்விக்கான சேர்க்கையைக் குறைத்துவிடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    · நாட்டிலுள்ள மாறுபட்ட கல்வி முறைகள் மற்றும் அமைப்புகளைக் கருத்தில்கொண்டு நாடு முழுவதும் ஒரே விதமான நுழைவுத் தேர்வு என்பது நடைமுறைக்கு ஒவ்வாது என்பதுடன், இது மாநில சுயாட்சியை குறைத்து மதிப்பிடும் வகையில் அமைந்துள்ளது.

    · மாணவர்கள் தங்கள் மேல்நிலைப்பள்ளி பாடப்பிரிவைப் பொருட்படுத்தாமல் எந்தவொரு பட்டப்படிப்பையும் தொடர அனுமதிக்கும் முறை என்பது போதுமான அடிப்படை பாட அறிவு இல்லாமல் உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்குத் தேவையற்ற கல்வி அழுத்தத்தை உருவாக்கும். எனவே, மேற்கூறிய காரணங்களுக்காக, இளங்கலை, முதுகலை சேர்க்கைகள் தனி நுழைவுத் தேர்வைவிட பள்ளி இறுதித் தேர்ச்சி மற்றும் இளங்கலை மதிப்பெண்களின் அடிப்படையில் இருக்க வேண்டும்.

    ii. 4 வருட (கலை/அறிவியல்) பட்டம் பெற்றவர்கள் M.Tech./M.E. பட்டப்படிப்பில் சேர்க்கை பெறத் தகுதி

    4 ஆண்டு கலை/அறிவியல் இளங்கலை பட்டம் பெற்ற மாணவர்களை M.Tech., அல்லது M.E., படிப்புகளைத் தொடர அனுமதிப்பது கவலையளிக்கிறது. அடிப்படை பொறியியல் குறித்த அடித்தளம் இல்லாமல், மாணவர்கள் முதுகலை பொறியியல் படிப்புகளில் சிரமப்படலாம், மேலும் இதுபோன்ற புதிய ஏற்பாட்டிற்கான தேவையைக் குறித்து கவனமாக மறு ஆய்வு செய்யவேண்டும்.

    iii. பல நுழைவு மற்றும் பல வெளியேறும் அமைப்பு

    Multiple Entrance Multiple Exit (MEME) என்பதும் பல சிக்கல்களை எழுப்புகிறது, குறிப்பாக:

    · கற்றல் தொடர்ச்சியில் சீர்குலைவு: தற்போதைய அமைப்பு கற்றலின் ஓட்டத்தை உறுதி செய்கிறது, அதனை MEME சீர்குலைக்கிறது.

    · செயல்படுத்தலில் உள்ள சவால்கள்: பாடத்திட்டத்தில் அவ்வப்போது புதுப்பிப்புகள் ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நுழையும் மாணவர்களுக்கு கடினமாக்கும்.

    · இடைநிற்றலை இயல்பாக்குதல்: MEME முறை இடைநிற்றலை சட்டப்பூர்வமாக்குவதுடன், உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்கும் முயற்சிகளை குறைக்கும்.

    · கல்வி அமைப்பில் நிலையற்ற தன்மை: MEME மாதிரி கல்வி திட்டமிடல் மற்றும் வள ஒதுக்கீட்டை சிக்கலாக்குவதன் மூலம் கல்வி நிறுவனங்களை சீர்குலைக்கக்கூடும்.

    3) வரைவு யுஜிசி (பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை நியமித்தல் மற்றும் பதவி உயர்வு பெறுவதற்கான குறைந்தபட்ச தகுதிகள் மற்றும் உயர்கல்வியின் தரங்களை பராமரிப்பதற்கான நடவடிக்கைகள்) நெறிமுறைகள்-2025ஐப் பொருத்தவரை, பின்வருபவை ஏற்புடையதாக இல்லை:-

    i. கல்வியாளர்கள் அல்லாதவர்களை துணைவேந்தர்களாக நியமித்தல்

    (பிரிவு 10.1) துணைவேந்தர்களை நியமிப்பதற்கான முன்மொழியப்பட்ட அளவுகோல்கள், தொழில்துறை, பொது நிர்வாகம் அல்லது பொதுக் கொள்கையில் அனுபவம் வாய்ந்த நபர்களை உள்ளடக்கியது மிகுந்த கவலைகளை எழுப்புகிறது.

    கல்வித்துறைக்கு வெளியே தலைமைப் பதவிகளில் அனுபவம் மிக்கவர்களாக இருப்பினும், துணைவேந்தர் பதவிக்கு ஆழ்ந்த கல்வி நிபுணத்துவம் மற்றும் உயர் கல்வி முறை பற்றிய புரிதல் தேவைப்படுகிறது.

    தற்போது முன்மொழியப்பட்டுள்ள அளவுகோல்கள் பல்கலைக்கழகங்களை திறம்பட வழிநடத்த தேவையான கல்வி மற்றும் நிர்வாக அனுபவம் இல்லாத நபர்களை நியமிக்க வழிவகுக்கும் என்று அஞ்சுகிறோம். கல்வி மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தில் அனுபவம் கொண்ட நபர்களுக்கு முன்னுரிமை அளிக்க அளவுகோல்களை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

    ii. துணைவேந்தர் தேடல் குழுவில் மாநில அரசை நீக்குதல் (பிரிவு 10.1.iv)

    மாநில பல்கலைக்கழகங்களின் உள்கட்டமைபை மாநில அரசுகள் முழுமையாக ஏற்படுத்தியுள்ளன. இப்பல்கலைக்கழகங்கள் மாநில அரசுகளால் முழுமையாக நிதியுதவி அளிக்கப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன. மாநிலத்தின் உண்மையான விருப்பங்கள், உள்ளூர் மாணவர்களின் கல்வித் தேவைகள், மாநில கொள்கைகள் ஆகியவை உரிய முறையில் பின்பற்றி உறுதி செய்வதற்கு, துணைவேந்தர்களை தேர்வு செய்யும் நடைமுறையில் மாநில அரசின் பங்கேற்பு மிகவும் முக்கியமானது.

    iii. மாறுபட்ட பாடப்பிரிவு ஆசிரியர்கள் (Cross Disciplinary Teachers) (பிரிவு 3.2 மற்றும் 3.3). இளங்கலை அல்லது முதுகலை தகுதியிலிருந்து வேறுபட்ட ஒரு துறையில் பி.எச்.டி பெற்ற ஒரு விண்ணப்பதாரர் அல்லது அவர்களின் கல்வி பின்னணியிலிருந்து வேறுபட்ட பாடத்தில் NET/SET தேர்ச்சி பெற்ற ஒருவர் அந்தத் துறையில் கற்பிக்கத் தகுதியுடையவர் என்று வரைவு விதிமுறைகள் முன்மொழிகின்றன. சரியான அடிப்படை பாடப்பிரிவு அறிவு இல்லாமல் பாடங்களை கற்பிக்க தனி நபர்களை அனுமதிப்பது மாணவர்களுக்கு, குறிப்பாக இளங்கலை மற்றும் முதுகலை மட்டங்களில் கற்றல் விளைவுகளுக்கு எதிர்மறையாக அமைந்துவிடும்.

    வரைவு விதிமுறைகளில் இதுபோன்ற பல விதிகள் மாநில பல்கலைக்கழகங்களின் கல்வி ஒருமைப்பாடு, தன்னாட்சி மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு கடுமையான சவால்களை ஏற்படுத்தக்கூடும் என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, கல்வி அமைச்சகம் விவாதத்தில் உள்ள வரைவு மசோதாக்களை திரும்பப் பெறவும், இந்தியாவில் உள்ள மாறுபட்ட உயர்கல்வி தேவைகளுடன் சிறப்பாக ஒத்துப்போகும் வகையில் வரைவு விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று தமது கடிதத்தில் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

    எனவே, வரைவு நெறிமுறைகள் திரும்பப்பெறப்பட்டு, மாநிலங்களின், குறிப்பாக தமிழ்நாட்டின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் மாற்றியமைக்கப்படுவதை உறுதி செய்வதற்கு மாண்புமிகு ஒன்றிய கல்வி அமைச்சர் அவர்களின் ஆதரவை தாம் எதிர்பார்ப்பதாகவும், இந்த வரைவு விதிமுறைகளை எதிர்த்தும், துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பான விதிமுறைகள் உட்பட மேற்கண்ட இரண்டு வரைவு விதிமுறைகளையும் உடனடியாக திரும்பப் பெறுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தியும் 09.01.2025 அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அத்தீர்மானத்தின் நகல் ஒன்றினையும் ஒன்றிய கல்வி அமைச்சர் அவர்களின் கனிவான பரிசீலனைக்காகவும், சாதகமான நடவடிக்கைக்காகவும் அனுப்பி வைத்துள்ளதாகவும் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு சமீபத்தில் வெளியிட்ட வரைவு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி தீர்மானம்.
    • மாநில சட்டமன்றங்களில் இதற்கான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.

    பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம், கற்றல் முறை தொடர்பான யுஜிசி வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கடிதம் மூலம் வலியுறுத்தினார்.

    இதைதொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு சமீபத்தில் வெளியிட்ட வரைவு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதைப் போன்று, டெல்லி, இமாச்சல் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்காளம் மற்றும் தெலங்கானா மாநில சட்டமன்றங்களிலும் நிறைவேற்றிட வேண்டுமென்று கோரி அம்மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமனத்தில் மாநில அரசுகளின் பங்கைக் கட்டுப்படுத்தும் வகையிலும், பல்கலைக்கழகங்களில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வுகளை அறிமுகப்படுத்துவது உள்ளிட்ட நிர்வாக நடைமுறைகளைக் கட்டுப்படுத்தும் வகையிலும் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகள் குறித்து மாநில முதலமைச்சர்களின் கவனத்திற்குக் கொண்டுவருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் இந்த வரைவு நெறிமுறைகளை உடனடியாகத் திரும்பப் பெறவேண்டுமென்று ஒன்றிய அரசை வலியுறுத்தி ஏற்கெனவே தமிழ்நாடு சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதை குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் அவர்கள், அனைத்து மாநிலங்களும் இதேபோன்ற நிலைப்பாட்டை எடுப்பது அவசியம் என தான் உறுதியாக நம்புவதாகக் குறிப்பிட்டு, தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய இந்தத் தீர்மானத்தைப் போன்று தங்களது மாநில சட்டமன்றங்களிலும் இதுதொடர்பாக தீர்மானத்தை நிறைவேற்றிட வேண்டுமென்று டெல்லி, இமாச்சல் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்காளம் மற்றும் தெலங்கானா முதலமைச்சர்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

    பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் மாநில அரசுகளின் உரிமைகளைத் தெளிவாக மீறும் செயல் என்றும், இது நமது பல்கலைக்கழகங்களின் சுயாட்சியில் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் சுட்டிக்காட்டியுள்ள தமிழ்நாடு முதலமைச்சர், அதிகாரத்தை மையப்படுத்தி, நமது நாட்டின் கூட்டாட்சித் தத்துவத்திற்கு பாதிப்பினை ஏற்படுத்தும் ஒன்றிய அரசின் இந்த முயற்சிகளுக்கு எதிராக நாம் ஒற்றுமையாக நிற்பது மிகவும் முக்கியம் என அம்மாநில முதலமைச்சர்களை தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

    எனவே, தனது இந்தக் கோரிக்கையை மேற்குறிப்பிட்ட மாநில முதலமைச்சர்களும் பரிசீலித்து, தங்களது மாநில சட்டமன்றங்களில் இதற்கான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும்.

    இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    • பா.ஜ.க. ஆட்சி நடக்காத மாநிலங்களின் முதல்-மந்திரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
    • பா.ம.க.வும் அதைத்தான் வலியுறுத்தி வருகிறது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

    துணை வேந்தர்கள் நியமனம் குறித்த பல்கலைக்கழக மானியக்குழுவின் (யு.ஜி.சி.) வரைவு விதிகள் தொடர்பான விவகாரத்தில் மாநில உரிமைகளை காக்கவேண்டும் என்பதற்காக பா.ஜ.க. ஆட்சி நடக்காத மாநிலங்களின் முதல்-மந்திரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது நல்ல முயற்சிதான். பா.ம.க.வும் அதைத்தான் வலியுறுத்தி வருகிறது.

    அதேவேளையில், சமூகநீதியை காப்பதற்காக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தும் விவகாரத்தில் தமிழக அரசின் உரிமைகளை அப்பட்டமாக தாரை வார்த்துக்கொண்டிருக்கிறாரே, அந்த விவகாரத்தில் மாநில அரசின் உரிமைகளை எவ்வாறு காப்பது என்பது குறித்து இதுவரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடித்துள்ள பீகார், கர்நாடகம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களின் முதல்-மந்திரிகளுக்கு கடிதம் எழுதியாவது கேட்டறிவாரா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்? மாநில உரிமைகளை காப்பதில் யு.ஜி.சி. விதிகளில் ஒரு வேடம், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பில் இன்னொரு வேடமா? எப்போது கலையும் இந்த இரட்டை வேடம்?

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • யுஜிசி புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

    பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) சமீபத்தில் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது.

    அதில் துணை வேந்தர்களை நியமனம் செய்ய கவர்னருக்கே அதிகாரம் உண்டு என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த புதிய விதிமுறைகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதனையடுத்து யுஜிசி புதிய வரைவு விதிகளை திரும்ப பெறுமாறு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

    பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம், கற்றல் முறை தொடர்பான எஜிசி வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்கடிதத்தில் வலியுறுத்தினார்.

    யுஜிசி வரைவு நெறிமுறைகளுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அக்கடிதத்துடன் இணைத்து அனுப்பியிருந்தார்.

    இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு சமீபத்தில் வெளியிட்ட வரைவு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியதைப் போன்று, டெல்லி, இமாச்சல் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், ஜார்கண்ட், கர்நாடகா, கேரளா, பஞ்சாப், மேற்கு வங்காளம் மற்றும் தெலங்கானா மாநில சட்டமன்றங்களிலும் நிறைவேற்றிட வேண்டுமென்று கோரி அம்மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.

    தமிழக முதல்வர் கடிதம் எழுதியதை தொடர்ந்து, இன்று கேரளா சட்டமன்றத்தில் யுஜிசி புதிய வரைவு விதிகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    அப்போது சட்டமன்றத்தில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், "நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் அந்தந்த மாநில சட்டமன்றங்களால் இயற்றப்பட்ட சட்டங்களுக்கு இணங்க செயல்படுகின்றன,. மாநில அரசுகளிடம் முறையான ஆலோசனையின்றி மத்திய விதிமுறைகளைத் திணிக்கும் எந்தவொரு நடவடிக்கையும் இந்தியாவின் கூட்டாட்சி தத்துவத்திற்குக் குந்தகம் விளைவிக்கும்" என்று தெரிவித்தார்.

    • யுஜிசி புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
    • தமிழகத்தை தொடர்ந்து யுஜிசியின் புதிய விதிகளுக்கு எதிராக கேரளா தீர்மானம் நிறைவேற்றியது.

    தமிழக முதலமைச்சரின் வழியில் கேரள அரசும் யுஜிசி வரைவறிக்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. மாநில உரிமைகளைக் காக்க நாம் ஓரணியில் திரண்டு நிற்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று தெரிவித்து தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், "மக்களாட்சியையும் மாநிலங்களின் கல்வி சுயாட்சியையும் சிதைக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசிற்கு எதிராக ஒன்றாக நின்று போராட வேண்டிய நேரமிது. மாநில அரசு இதுவரை உருவாக்கி வளர்த்து வைத்துள்ள பல்கலைக்கழகங்களை எல்லாம் பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு (UGC) வாயிலாகக் கைப்பற்றி, நமது கல்வி வளர்ச்சியைத் தடுக்க முயல்கிறது மோடி அரசு.

    'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு உருவாக்கிய பல்கலைக்கழகங்கள் மீது மாநில அரசுக்கே எந்த உரிமையையும் கிடையாது' எனக் கூறுவது சர்வாதிகார ஆணவம் அன்றி வேறென்ன? மாநில அரசுகளை மிரட்டிப்பார்க்கும் ஆதிக்க நடவடிக்கை இது.

    கல்வி சார்ந்த உரிமைகள் அரசியலமைப்பின் ஒத்திசைவுப் பட்டியலில் (Concurrent) உள்ள போது மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல், தன்னிச்சையாக UGC அறிவிப்பை வெளியிட்டிருப்பது, அதன் அதிகார வரம்பை மீறிய அத்துமீறல் நடவடிக்கை. கல்வி சார்ந்த வழிகாட்டிகளை வழங்கக் கூடிய UGC ஒன்றிய அரசின் கைப்பாவையாக மாறியிருக்கிறது.

    ஒன்றிய அரசின் UGC விதிகளை ஏற்காவிட்டால், மாணவர்கள் கஷ்டப்பட்டுப் படித்து வாங்கும் பட்டங்கள் செல்லாது; யூஜிசி திட்டங்களில் பங்கேற்க முடியாது; பல்கலைக்கழகங்களின் சட்ட அங்கீகாரம் செல்லாது என்றெல்லாம் யூஜிசி அறிவித்திருப்பது நேரடியாய் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி மீது தொடுக்கப்பட்ட போர்.

    மோடி அரசின் உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட வேண்டும் என மிரட்டியபோது முந்தைய அதிமுக அரசு கையெழுத்திட்டது. அதன் விளைவுகளை இப்பொழுது சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

    தேசியக் கல்விக்கொள்கையில் கையெழுத்திடாவிட்டால் நிதி தர மாட்டோம் என விதிகளை வகுக்கிறார்கள்.

    இந்த மிரட்டல் உருட்டல்களுக்கெல்லாம் ஒருநாளும் திராவிட மாடல் அரசு அஞ்சாது! பழைய வரலாறுகளைப் புரட்டிப் பார்ப்பவர்களுக்கு இது தெரியும்.

    துணை வேந்தர் நியமனத்தில் மாநில அரசின் உரிமையை மறுப்பதோடு கல்வியாளர் அல்லாதவர்களைத் துணை வேந்தர்களாக நியமிக்கலாம் என்றும் தனது அடிப்படை கல்வித் தகுதியிலிருந்து மாறுபட்ட பாடத்தில் முனைவர் பட்டமோ அல்லது NET/ SET தகுதி பெற்றவர்களோ பேராசியர்கள் ஆகலாம் என யூஜிசி வரைவறிக்கை தெரிவித்திருப்பது கல்வித் துறையைச் சீரழித்து மாணவர்களின் கல்விக் கனவைப் பாழாக்கிவிடும். இதன் ஆபத்தை உணர்ந்துதான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த வரைவறிக்கைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார். ஒன்றிய கல்வித்துறை அமைச்சருக்குக் கடிதமும் எழுதினார்.

    ஒன்றிய பாஜக அரசின் இந்த செயல் தமிழ்நாட்டின் கல்வி மீது தொடுத்திருக்கும் தாக்குதல் மட்டுமல்ல, தனித்துவமான இந்திய மாநிலங்கள் அனைத்தின் மீதான தாக்குதல். அதனால்தான் நமது முதலமைச்சர், "பாஜக அல்லாத மாநில முதல்வர்கள் தமிழகத்துடன் இணைந்து இந்த அடக்குமுறை நடவடிக்கைகளை நிராகரித்து சட்டமன்றத்தில் தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும். மாநிலங்கள் ஒன்றிணைந்து, நமது கல்வி நிறுவனங்களின் மீதான மாநில உரிமையை மீட்டெடுக்க வேண்டும்" என்று கடிதம் வாயிலாக கேட்டுக்கொண்டார். அதன்படியே இன்று கேரள அரசும் UGC வரைவறிக்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. அனைத்து மாநிலங்களும் மாநில உரிமைகளை காக்க ஓரணியில் திரண்டு நிற்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

    விஷ செடியையும், விஷம செயலையும் முளையிலேயே கிள்ளி எறிதல் அவசியம். அப்படியே மோடி அரசிற்கு உட்பட்ட UGC-யின் இந்த சர்வாதிகார செயலையும் நாம் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

    மாநில அரசுகளின் அதிகாரத்தை நீக்கி கூட்டாட்சிக்குக் குழி பறிக்கும் UGC வெளியிட்ட வரைவு அறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இதனைத் திரும்பப் பெறும் வரை திராவிட மாடல் அரசும், தமிழ்நாட்டு மக்களும் தங்களது எதிர்ப்பில் இருந்து ஒரு நொடியும் பின் வாங்க மாட்டார்கள்.மாநில உரிமைகளைப் பறிக்க நினைக்கும் மோடி அரசிற்கு எதிராக ஒன்றுபடுவோம். மீட்டெடுப்போம் நமது கல்வி உரிமையை... நிலைநாட்டுவோம் மாநில சுயாட்சியை" என்று அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்

    • அன்று மொழிப்போரில் ஈடுபட்டு இந்தி பேசாத மாநில மொழிகளை காப்பாற்றினோம்.
    • இன்று கல்வி உரிமை போரில் ஈடுபட்டு எல்லா மாநில கல்வி உரிமைகளையும் காக்க போராட்டம்.

    மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க பொதுக்கூட்டம் சென்னை பல்லாவரத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரை நிகழ்த்தியபோது கூறியதாவது:-

    * விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கோரிக்கையை ஏற்று தாளமுத்து, நடராசன் சிலைகள் நிறுவப்படும்.

    * வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்தியை திணிக்கலாமா, சமஸ்கிருதத்தை திணிக்கலாமா என மத்திய அரசு முயற்சி செய்தி கொண்டிருக்கிறது.

    * அன்னைத் தமிழை அழிக்க அந்நிய இந்தி திணிக்கப்படுகிறது.

    * 1967-ல் திமுக ஆட்சி அமைந்த பின்னர்தான் தமிழ்நாட்டை இருமொழி கொள்கை கொண்ட மாநிலமாக பாதுகாத்தோம்.

    * அதற்கு சிக்கலை உருவாக்கத்தான் மும்மொழி கொள்கையை கொண்டு வர பார்க்கிறார்கள்.

    * தேசிய கல்வி கொள்கையை கொண்டு வருவது இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்கும் அடிப்படையில்தான்.

    * பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மூலமாக திணிக்க நினைக்கிறார்கள்.

    * மாநில அரசு நிதியால், தமிழக மக்கள் உழைப்பால் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழங்களுக்கு துணைவேந்தர்களை மட்டும் ஆளுநர் நியமிப்பாரா?. பேராசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கும் எங்களுக்கு துணைவேந்தரை நியமிக்க தெரியாதா?

    * மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் ஏன் வேந்தராக இருக்கக் கூடாது?.

    * தற்போது யுஜிசி வரைவு விதிமுறைகளை கொண்டு வந்துள்ளனர். அதை திரும்பப்பெற வேண்டும் என நாட்டிலேயே முதல்முறையாக நாம்தான் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தோம். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என இந்தியா கூட்டணியில் உள்ள ஆளும் கட்சி முதல்வர்களுக்கு கடிதம் எழுதினேன். தற்போது கேரள மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    * பல்கலைக்கழகங்களை உருவாக்கிவது மாநிலங்கள். அதை நிர்வகிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு வேண்டாமா? எதைச் செய்ய வேண்டுமோ அதை செய்யலாமல், எதை செய்யக் கூடாதோ அதை மத்திய அரசு செய்து கொண்டிருக்கிறது.

    * தமிழகத்திற்கு தர வேண்டிய பேரிடர் நிவாரண நிதியை தர மறுக்கிறார்கள்.

    * பள்ளி கல்வித்துறைக்கு தர வேண்டிய நிதியை தர மறுக்கிறார்கள். புதிய சிறப்பு திட்டங்களை அறிவிக்க மறுக்கிறார்கள்.

    * பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயரே இல்லை. இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். இதையெல்லாம் செய்திருக்கனும். செய்யவில்லை.

    * ஆனால் இந்தியை திணிப்பாங்க. சமஸ்கிருத பெயரை புகுத்துவார்கள். மாநில உரிமைகளில் தலையிடுவார்கள். குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வருவார்கள். நம் குழந்தைகளை பழி வாங்குவார்கள். அதற்காக நீட் நடத்துவாங்க. புதிய கல்விக்கொள்கையை புகுத்துவாங்க. இதுதான் மத்திய அரசின் எதேச்சதிகாரம்.

    * ஒற்றை மதம்தான் இந்தியாவில் இருக்க வேண்டும் என பாஜக நினைக்கிறது. ஒற்றை மொழிதான் இருக்க வேண்டும் என நினைக்கிறது.

    * சமஸ்கிருதத்தை நேரடியாக கொண்டு வந்தால் கடுமையான எதிர்ப்பு வரும் என்பதால், இந்தியை முதலில் கையில் எடுப்பார்கள். அதை அரியணையில் அமர்த்திவிட்டு, சமஸ்கிருதத்தை கையில் எடுப்பார்கள். முதலில் இந்தி, அதன்பின் சமஸ்கிருதம். இதுதான் பாஜக-வின் கொள்கை.

    * அன்று மாணவர்களும், இளைஞர்களும் இணைந்து தமிழை காத்தார்கள். பல்கலைக்கழகங்களை மாநில அரசிடம் இருந்து பறிக்கும் ஆபத்தை முறியடிக்க மாணவர் அணி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து டெல்லியில் மாபெரும் போராட்டம் நடைபெறும்.

    * அன்று மொழிப்போரில் ஈடுபட்டு இந்தி பேசாத மாநில மொழிகளை காப்பாற்றினோம். இன்று கல்வி உரிமை போரில் ஈடுபட்டு எல்லா மாநில கல்வி உரிமைகளையும் காக்க திமுக மாணவரணியினர் முன்கள வீரர்களாக டெல்லியில் திகழ்வார்கள்.

    இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.

    • தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த குரலாக சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை முதலமைச்சரே முன்மொழிந்து தீர்மானத்தை நிறைவேற்றினார்.
    • டி.ஆர்.பாலு தலைமையில் இருக்கக்கூடிய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கக்கூடிய போராட்டமாக இது இருக்கும்.

    யுஜிசி விதிகளுக்கு எதிராக டெல்லியில் நாளை திமுக சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்பார் என திமுக மாணவரணிச் செயலாளர் எழிலரசன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து எழிலரசன் செய்தியாள்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    மத்திய பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து மாநில உரிமைகளை பறிப்பதிலும், குறிப்பாக காவிமயமாக்குவதற்காக கல்வியை ஒட்டுமொத்தமாக அவர்கள் கட்டுப்பாட்டை கொண்டு செல்கிற முயற்சிகளில், தொடர்ந்து செய்துக்கொண்டிருக்கின்ற நடவடிக்கைகளில் ஒன்றாக தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ கொண்டு வந்தார்கள்.

    அந்த அறிக்கையில் வழங்கப்பட்டதை போல இனி யுஜிசி என்று ஒன்று இருக்காது. இன்று யுஜிசி மூலம் கல்வியை மொத்தமாக அபகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பல்கலைக்கழக நிதி நெல்கைக் குழு என்பதனை இன்றைக்கு பல்கலைக்கழகங்களை விழுகுகின்ற குழுவாக மாறுகின்ற வகையில் மாநில உரிமைகளை பறிப்பதற்கும், கல்வி உரிமையை பறிப்பதற்கும், சமூக நீதிக்கு எதிராகவும் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாகவும், பல வரைவு நெறிவு முறைகளை வெளியிட்டிருக்கிறது.

    அதை எப்போதும் போல பிற மாநிலங்கள் கவனித்துக் கொண்டிருந்தாலும் அதனை விரைவாக எதிர்க்கக்கூடிய மாநிலமாக சமூக நீதியின் மண்ணாக விளங்கக்கூடிய தமிழ்நாட்டில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டபேரவையில் கண்டித்தும் அதை நிறைவேற்றக் கூடாது என்றும், தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த குரலாக சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை அவரே முன்மொழிந்து தீர்மானத்தை நிறைவேற்றினார்.

    இதைதொடர்ந்து திமுக மாணவர் அணியும், பிற மாநில அமைப்புகளின் மாணவர் அணியும் கூட்டமைப்பை கொண்டு ஒரு மாபெரும் போராட்டம் சென்னையின் நடந்தது.

    ஒரு மாதம் ஆன நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் நாளை காலை 10 மணிக்கு மாபெரும் அறப்போராட்டத்தை நடத்த இருக்கிறோம்.

    டி.ஆர்.பாலு தலைமையில் இருக்கக்கூடிய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கக்கூடிய போராட்டமாக இது இருக்கும்.

    இந்த போராட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், டிஎம்சி சார்பாக சுதீப், திருமாவளவன் ஆகியோர் பங்கேற்று உரையாற்ற இருக்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக சட்டசபையில் தமிழ்நாடு அரசு தனி தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றியது.
    • ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு மற்றும் யுஜிசியை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கோஷம் எழுப்பினர்.

    புதுடெல்லி:

    பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் கவர்னருக்கு அதிகாரம் அளிக்க வகை செய்யும் நோக்கில் வரைவு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) வெளியிட்டது. இதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

    இதை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தமிழ்நாடு அரசு தனி தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றியது. இது குறித்து மத்திய கல்வித்துறை மந்திரிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.

    மேலும், பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு நெறிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், டெல்லியில் தி.மு.க. மாணவரணி சார்பில் பிப்ரவரி 6-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.



    அதன்படி, டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று தி.மு.க. மற்றும் கூட்டணி எம்.பி.க்கள் யுஜிசி வரைவு நெறிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

    ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு மற்றும் யுஜிசியை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


    • பல மொழிகள் ஒன்றிணைந்தது தான் இந்தியா எனும் தேசம்.
    • யுஜிசி மூலமாக மாநிலங்களின் உரிமையை பறிக்க முயற்சி.

    புதுடெல்லி:

    புதிய யுஜிசி வரைவு விதிகளை திரும்பப் பெறக்கோரி டெல்லியில் தி.மு.க. மாணவரணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்களும் பங்கேற்றனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது:-

    மாநிலங்கள் இணைந்தது தான் இந்தியா என இந்திய அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. மாநிலங்களின் கலாச்சாரத்திற்கும், மொழிகளுக்கும் மதிப்பு அளிக்கப்பட வேண்டும். பல மொழிகள் ஒன்றிணைந்தது தான் இந்தியா எனும் தேசம்.

    யுஜிசி மூலமாக மாநிலங்களின் உரிமையை பறிக்க முயற்சி. கல்வியை ஆர்எஸ்எஸ் மயமாக்க மத்திய அரசு முயன்று வருகிறது.

    இதுபோன்ற பல போராட்டங்கள் நடக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏனெனில் அரசியலமைப்பை தகர்க்க முடியாது என்பதை ஆர்.எஸ்.எஸ். புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் நமது மாநிலங்களைத் தகர்க முடியாது.

    அவர்கள் நமது கலாச்சாரங்கள், நமது மரபுகள் மற்றும் நமது வரலாறுகளைத் தாக்க முடியாது என்றார்.



    முன்னதாக, ஆர்ப்பாட்டத்தில் பேசிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மத்திய அரசின் யுஜிசி வரைவு விதிகளை குப்பைத் தொட்டியில் தூக்கி எறிய வேண்டும் என்று ஆவேசமாக பேசினார். 

    • மத்திய அரசு மற்றும் யுஜிசியை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கோஷம் எழுப்பினர்.
    • ஆர்ப்பாட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று தி.மு.க. மற்றும் கூட்டணி எம்.பி.க்கள் யுஜிசி வரைவு நெறிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

    ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு மற்றும் யுஜிசியை கண்டித்து தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்நிலையில், டெல்லியில் இன்று யுஜிசி விதிக்கு எதிராக முழங்கிய திமுகவின் குரல் நாடு முழுவதும் எதிரொலிக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    டெல்லியில் எங்கள் திமுக மாணவரணி, எம்.பி.க்கள் மற்றும் இந்தியா தொகுதியின் உறுப்பினர்கள், என் அன்பான சகோதரர்கள் ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ், தலைநகரில் மாணவர்களின் குரல்களைப் பெருக்கி, கல்வியின் எதிர்காலத்தைப் பாதுகாத்ததற்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.

    ஆர்எஸ்எஸ்-பிஜேபி-யின் நிகழ்ச்சி நிரல் தெளிவாக உள்ளது: ஒரு தனித்துவமான அடையாளத்தை திணிப்பதற்காக பல்வேறு வரலாறுகள், மரபுகள் மற்றும் மொழிகளை அழிப்பது. எனது சகோதரர் ராகுல் காந்தி சரியாகச் சொன்னது போல், யுஜிசி வரைவு வெறும் கல்வி நடவடிக்கை மட்டுமல்ல; இது தமிழ்நாட்டின் வளமான பாரம்பரியத்தின் மீதான தாக்குதல் மற்றும் இந்தியாவின் கூட்டாட்சியின் சாராம்சம்.

    நீட் முதல் சி.ஏ.ஏ முதல் என்.ஆர்.சி. வேளாண்மை சட்டங்கள் வரை, நமது அரசியலமைப்பு மற்றும் பன்முகத்தன்மையை நிலைநிறுத்துவதற்கான ஒவ்வொரு போராட்டத்திற்கும் திமுக தலைமை தாங்கியுள்ளது. இன்று, புது தில்லியில் எங்கள் குரல் இந்தியா முழுவதும் எதிரொலிக்கும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×