என் மலர்
நீங்கள் தேடியது "unidentified"
- அடையாளம் தெரியாத ஆண் பிணங்கள் கிடந்தன.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் பஸ் நிலையத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீதேவிக்கு தகவல் கிடைத்தது. அவர் அங்கு சென்று விசாரித்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி அருகே பெத்துலுப்பட்டி விலக்கு பகுதியில் ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக வி.சொக்கலிங்காபுரம் கிராம நிர்வாக நிர்வாக அதிகாரி சகாயராஜ் ஜீவனுக்கு தகவல் கிடைத்தது. அவர் நேரில் சென்று விசாரித்தபோது இறந்து கிடந்த நபர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.அவர் கொடுத்த புகாரின்பேரில் சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காவிரி ஆற்றில் சுமார் 30 முதல் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரது உடல் மிதப்பதாக வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- வேலூர் போலீசார் அடையாளம் தெரியாத ஆண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வெங்கரை அருகே உள்ள கருக்கம்பாளையம் பகுதி காவிரி ஆற்றில் சுமார் 30 முதல் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரது உடல் மிதப்பதாக வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற வேலூர் போலீசார் அடையாளம் தெரியாத ஆண் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இறந்த அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இறந்து கிடந்த நபர் நீல நிறத்தில் ஜீன்ஸ் பேண்ட், மஞ்சள் நிறத்திலான சட்டை அணிந்திருந்தார். அவரது கையில் மஞ்சள் நிற கயிறும், வலது கையில் பச்சை, வெள்ளை கலந்த நிறத்திலான மோதிரம் அணிந்திருந்தார்.
- வெள்ளோடு மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே இரவு நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சம்பாள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
- இதுதொடர்பாக வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
பெருந்துறை:
பெருந்துறை அடுத்துள்ள வெள்ளோடு, லட்சுமிபுரம் காலனி பகுதியை சேர்ந்தவர் குருவன். இவரது மனைவி சம்பாள் (வயது 60).
சவம்பத்தன்று சம்பாள் வெள்ளோடு மேட்டுப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே இரவு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று சம்பாள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
இதில் தலை மற்றும் உடலில் அடிபட்ட அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சம்பாள் பரிதாபமாக இறந்தார்.
இதுதொடர்பாக வெள்ளோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.