search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Union Office"

    • யூனியன் அலுவலகம் கட்டப்பட்டு 40 ஆண்டு களுக்கு மேல் ஆகி உள்ள நிலையில் முறையான பராமரிப்பு பணிகள் எதுவும் நடைபெறவில்லை.
    • மேற்கூரை சேதமடைந்து காணப்படுவ தால் அதிகாரிகள் அச்சத்து டன் அமர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் மயி லாடும்பாறை கிராமத்தில் கடமலை-மயிலை ஒன்றிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகம் கட்டப்பட்டு40 ஆண்டு களுக்கு மேல் ஆகி உள்ள நிலையில் முறையான பராமரிப்பு பணிகள் எதுவும் நடைபெறவில்லை.

    அதனால் அலுவலக கட்டிடம் அதிக அளவில் சேதமடைந்து காணப்படு கிறது. மேலும் மழை பெய்யும் நேரங்களில் கட்டி டத்தின் சில அறைகளுக்குள் மேற்கூரை வழியாக நீர்க்கசிவு ஏற்படுகிறது. அதனால் ஆவணங்கள் மழை நீரில் நனைந்து விடும் அபாயம் உள்ளது.

    மேலும் மேற்கூரை சேதமடைந்து காணப்படுவ தால் அதிகாரிகள் அச்சத்து டன் அமர்ந்து பணியாற்றி வருகின்றனர். அதேபோல அலுவலக கட்டிடத்தில் குறைந்த அறைகள் மட்டுமே உள்ளது. இதனால் பணியாளர்கள் இட நெருக்கடிக்கு மத்தியில் அமர்ந்து பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது.

    எனவே ஒன்றிய அலுவலகத்தை இடித்து விட்டு புதிய அலுவலகம் கட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதை எடுத்து கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு ஒன்றிய அலுவலக வளாகத்திலேயே புதிய அலுவலகம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் தற்போது வரை பணிகள் தொடங்க ப்பட வில்லை. மாவட்ட அதிகாரி கள் உரிய நடவ டிக்கை எடுத்து புதிய ஒன்றிய அலுவலகம் கட்டும் பணி களை விரை வில் தொடங்க வேண்டும் என பொது மக்கள் கோரி க்கை விடுத்து ள்ளனர்.

    • கலைஞர் நூற்றுக்கு நூறு என்ற அடிப்படையில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்க விழா நடைபெற்றது.
    • ஒவ்வொரு வட்டாரங்களிலும் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் முதல்-அமைச்சரின் கனவு திட்டமான பசுமை தமிழ்நாடு திட்டத்தின் ஒரு பகுதியாகவும், கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டும் தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை (கூட்டமைப்பு) சார்பில் கலைஞர் நூற்றுக்கு நூறு என்ற அடிப்படையில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்க விழா நடைபெற்றது.

    தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டு அறக்கட்டளை (கூட்டமைப்பு) மாநில தலைவரும், தூத்துக்குடி மாவட்ட கிரீன் கமிட்டி உறுப்பினருமான தாமோதரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா முன்னிலை வகித்தார். ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஹெலன் மரக்கன்று நடும் பணியை தொடங்கி வைத்தார்.

    விழாவில் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சந்திரகலா, வேளாண்மை அலுவலர்கள் ரோகித் ராஜ் , ஆனந்தன் , பொறியாளர் தளவாய் , கூட்டுடன்காடு ஊராட்சி மன்றத் தலைவர் மாங்கனி அரிபாலகிருஷணன், ஊராட்சி வார்டு உறுப்பினர் இந்திராகாந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகி கள் மடத்தூர் சத்யா, பாலமுருகன், பனையூர் வில்சன், சங்கீதா, சந்தன மாரி, கனகராஜ், மீளவிட்டான் ராமலட்சுமி, உமாதேவி ஆகியோர் மரக் கன்றுகள் நடும் பணியை மேற்கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய சேர்மன் வசுமதி அம்பாசங்கர் ஏற்பாட்டின்படி, வட்டார வளர்ச்சி அலுவலக காசாளர் முருகன் மேற்கொண்டார்.

    நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஹெலன் பேசுகையில், கலைஞரின் நூற்றாண்டு விழாவினையொட்டி , 2023-ம் ஆண்டை கலைஞர் நூற்றாண்டு விழாவாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் கொண்டாடி ஒவ்வொரு வட்டாரங்களிலும் 10 ஆயிரம் மரக்கன்றுகள் வீதம் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எனவே தூத்துக்குடி ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சிகளிலும் மரக்கன்றுகள் நடும் பணிக்கு தேவையான முழு ஒத்துழைப்பு

    வழங்கப்படும் என்று கூறினார்.

    • கிராம குடிநீர் மற்றும் சுகாதார மேலாண்மை உறுப்பினர்களுக்கான குடிநீர் மேலாண்மை பயிற்சி முகாம் கயத்தாறு யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது
    • கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தண்ணீர் தரம் பாதுகாப்பு, வேதியியல் பாக்டீரியாக்கள் சம்மந்தப்பட்ட ரசாயனங்கள் குறித்து பயிற்சி மற்றும் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

    கயத்தாறு:

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மற்றும் தகவல் தொடர்பு மற்றும் திறன்மேம்பாட்டு பிரிவு மூலம் ஜல்ஜீவன் மிஷின் சார்பில் கிராம குடிநீர் மற்றும் சுகாதார மேலாண்மை உறுப்பினர்களுக்கான குடிநீர் மேலாண்மை பயிற்சி முகாம் கயத்தாறு யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமை வட்டார வளர்ச்சி ஆனையாளர் பாண்டியராஜன் தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி கிராம ஊராட்சி அலுவலர் ஐகோர்ட்ராஜா, தூத்துக்குடி மாவட்ட கிராம குடிநீர் திட்ட நிர்வாக பொறியாளர் ராஜா, உதவி நிர்வாக பொறியாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் யூனியன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மேலாளர்கள் சுப்பையா, சிங்கராஜ், இளநிலை பகுப்பாய்வின் வினோத்குமார், 45ப ஞ்சாயத்து செயலாளர்கள். மகளிர் குழு பற்றாளர்கள் என 200 மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தண்ணீர் தரம் பாதுகாப்பு, தண்ணீர் சேகரிப்பு, சுத்தமான குடிநீர் மற்றும் வேதியியல் பாக்டீரியாக்கள் சம்மந்தப்பட்ட ரசாயனங்கள் குறித்து பயிற்சி மற்றும் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பயிற்சியாளர்கள் வெங்கட்ராமன், வசந்தி, விமலா, பூர்ணிமா செய்திருந்தனர். விஜய்முத்து, முகுந்தன், முத்தமிழ் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

    • புதிய யூனியன் அலுவலக அமைவிடத்தில் தூய்மைப் பணிகள் தொடங்கப்பட்டது.
    • ஜே.சி.பி. எந்திரம் கொண்டு தூய்மை படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

    திருமங்கலம்

    திருமங்கலம் யூனியன் அலுவலகம் தற்போது ரெயில்வேபீடர் ரோட்டில் செயல்பட்டு வருகிறது. திருமங்கலம் தாலுகா அலுவலகத்தின் பின்புறம் உள்ள இந்த அலுவலகம் கடும் இட நெருக்கடியில் இயங்கி வருகிறது.

    திருமங்கலம் ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிகளுக்கான இடம் தேர்வு செய்யப்பட்ட போது யூனியன் அலுவல கத்தின் முன்புற பகுதிகள் எடுத்துக்கொள்ளப்படும் என பொதுபணி துறையினர் தெரிவித்தனர். இதை தொடர்ந்து திருமங்கலம் யூனியன் நிர்வாகம் அலுவலகம் கட்டுவதற்கு புதிய இடத்தினை தேர்வு செய்யும் பணிகளை தொடங்கியது.

    அதில் கப்பலூர் அருகே உச்சப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் போதுமான நிலம் இருந்தது தெரிய வந்தது. இந்த இடத்தில் ஏற்கனவே அரசு கலைக் கல்லூரி மற்றும் திருமங்கலம் ஆர்.டி.ஓ. அலுவலகம் அமைந்துள்ளது. ஆர்.டி.ஓ. அலுவலகத்தின் அருகே 75 சென்ட் இடத்தில் புதிய யூனியன் அலுவலகம் அமைக்கலாம் என மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்தது.

    அதன்படி அந்த இடமானது திருமங்கலம் பி.டி.ஓ. பெயருக்கு பெயர் மாற்றம் செயப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த இடத்தை வருவாய் துறையினர் அளந்து கொடுத்தனர்.

    இதனை தொடர்ந்து புதிய யூனியன் அலுவலகம் அமைய உள்ள இடத்தை தூய்மை செய்யும் பணிகளை அதிகாரிகள் தொடங்கி உள்ளனர். ஜே.சி.பி. எந்திரம் கொண்டு தூய்மை படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை ஒன்றிய அதிகாரிகள், தலைவர், கவுன்சிலர் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். சீர் செய்த பின்பு கற்கள் ஊன்றி கம்பிவேலி போடப்பட்டு நிதி ஒதுக்கீடு வந்தவுடன் கட்டிடப் பணிகள் தொடங்கப்்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நாங்குநேரி யூனியன் அலுவலகத்திற்கு தமிழ்நாடு அரசு சிறப்பு திட்டத்தின் மூலம் ரூ.3 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
    • இந்நிலையில் அந்த புதிய கட்டிட பணியை சபாநாயகர் அப்பாவு நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    நெல்லை:

    நாங்குநேரி யூனியன் அலுவலகத்திற்கு தமிழ்நாடு அரசு சிறப்பு திட்டத்தின் மூலம் ரூ.3 கோடியே 92 லட்சம் மதிப்பீட்டில் புதிய அலுவலகம் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

    இதையடுத்து அங்கு புதிய அலுவலகம் கட்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அந்த புதிய கட்டிட பணியை சபாநாயகர் அப்பாவு நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் வேலையை விரைவாக முடிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

    தொடர்ந்து நாங்குநேரி யூனியனில் இயங்கி வரும் நாங்குநேரி வட்டார மகளிர் திட்ட குழு உறுப்பினர்களிடம் அவர்களின் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, குறை களையும் கோரிக்கை களையும் கேட்டறிந்தார். அப்போது மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஷ், நாங்குநேரி யூனியன் சேர்மன் சவுமியா ஆரோக்கிய எட்வின், ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், நாங்குநேரி வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர குமார், பொறியாளர்கள் சபரி காந்த், மீனாட்சி, மேலாளர்கள் மலர், முருகப்பெருமாள், மகளிர் திட்ட குழு கலா மற்றும் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

    • தினமும் ஏராளமான பொதுமக்கள் பல்வேறு தேவைகளுக்கு யூனியன் அலுவலகம் வந்து செல்கின்றனர்.
    • யூனியன் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டுமே கழிவறை உள்ளது.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் யூனியன் 32 கிராம பஞ்சாயத்துக்களை யும், 23 ஒன்றிய கவுன்சிலர்களையும் உள்ளடக்கியது. இந்த யூனியனுக்கான அலுவலகம் நெல்லை-தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் ஆலங்குளம் மத்திய பகுதி யில் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராள மான பொதுமக்கள், கட்டிட ஒப்பந்ததாரார்கள் உள்ளிட்டோர் பல்வேறு தேவைகளுக்கு வந்து செல்கின்றனர்.

    இதுதவிர மாதந்தோறும் இந்த யூனியன் அலுவல கத்தில் ஊராட்சி செயலர்கள் கூட்டம், கவுன்சிலர்கள் கூட்டம், பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டம் நடைபெற்று வரு கிறது. அவ்வாறு வருபவர்களுக்கு கழிவறை வசதிகள் இல்லை என்று புகார்கள் வந்துள்ளது.

    யூனியன் அலுவலக வளாகத்தில் அங்கு பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு மட்டுமே கழிவறை உள்ளது. பொதுமக்கள் உள்ளிட்டோ ருக்கு பொதுவான கழிப்பறைகள் எதுவும் இல்லை.

    இதனால் பெண்கள், வயதானவர்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்ற னர் என்று சமூக ஆர்வ லர்கள் புகார் கூறுகின்றனர்.

    மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் கோரிக்கை விடுத்தாலும், அதனை அவர்கள் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருப்பதாக சமூக ஆர்வலர்கள் அதி ருப்தி தெரிவிக்கின்றனர்.

    • சிக்கலை தலைமையிடமாக கொண்டு யூனியன் அலுவலகம் அமைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
    • இளைஞர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்களை குறிவைத்து சட்ட விரோதமாக மது விற்பனை நடந்து வருகிறது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சிக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சிக்கல் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியை சுற்றி பல கிராமங்கள் இருப்பதால் முக்கிய பகுதியாக இருந்து வருகிறது.

    கடந்த 2012 அ.தி.மு.க. ஆட்சியின் போது அப்போதைய முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் 110 விதியின் கீழ் சிக்கலை தலைமையிடமாக கொண்டு யூனியன் அலுவலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

    இதேபோன்று கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் கடலாடி ஒன்றியத்தில் இருந்து சிக்கல் ஊராட்சியை தலைமையிட மாக கொண்டு யூனியன் அலுவலகம் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை அதற்கான பணிகள் நடக்கவில்லை.

    சிக்கல் ஒன்றிய மேம்பாட்டு குழு தலைவர் மிசா சைபுதீன், செயலாளர் பச்சம்மாள், பொருளாளர் ஆறுமுகம் தலைமையில் கிராம மக்கள் சிக்கல் ஊராட்சியை தலைமையிட மாக கொண்டு யூனியன் அலுவலகம் அமைக்க கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.


    கலெக்டரிடம் மனு கொடுத்த பெண்கள்.

    ராமநாதபுரம் பட்டணம் காத்தான் பகுதி-1 குடியிருப்போர் நலச்சங்கத்தை சேர்்ந்த பெண்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    பட்டணம் காத்தான் பகுதி 1-ல் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.இந்த பகுதியில் இளை ஞர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்களை குறி வைத்து சட்ட விரோதமாக மது விற்பனை நடந்து வருகிறது. இதனால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது.

    மேலும் பெண்கள், பள்ளிக்கு செல்லும் மாணவிகள் மாலை நேரங்களில் வீட்டுக்கு வருவதில் அச்சுறுத்தல் உள்ளது. சட்டவிரோமாக மது விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • ஆழ்துளை கிணறுகளை பராமரித்திடுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    ஈரோடு:

    ஈரோடு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2022-23 ஆம் ஆண்டிற்கான ஆண்டுத் தணிக்கையில் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் அலுவலக நடைமுறை கோப்புகள் மற்றும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வில் நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு ட்பட்ட 15 கிராம ஊராட்சி களில் செயல்படு த்தப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய பொதுநிதி திட்டம், 15-வது நிதிக்குழு மான்ய திட்டம்,

    சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுநிதி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் மற்றும்

    பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம் உள்ளி ட்ட திட்டங்களின் கோப்பு கள் மற்றும் அலுவலக நடைமுறை மற்றும் பகிர்மானம் உள்ளிட்ட பதிவேடுகளை பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அலுவலக பதிவறை மற்றும் கணினி பிரிவில் ஆய்வு மேற்கொண்டு நிலுவைக் கோப்புகளை உடனடியாக முடித்திடவும் மற்றும் தற்போது கோடை காலம் தொடங்கி யுள்ளதால் பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் கிடைத்தி டும் வகையில் ஆழ்துளை கிணறுகளை முழுமையாக பராமரித்திடு மாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை சுற்றியுள்ள சுற்றுப்புற ங்களை தூய்மை யாக வைத்திருக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஜெகதீசன், நம்பியூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பெருமாள், சுபா, உட்படதுறை சார்ந்த பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்த னர்.

    • அம்பை வட்டார அளவில் நடைபெற்ற பேரவை கூட்டத்திற்கு யூனியன் சேர்மன் பரணி சேகர் தலைமை தாங்கினார்.
    • அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் சுகாதாரம் தொடர்பாக செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், பள்ளிகள், சுகாதார மையங்களை மேம்படுத்துவது குறித்தும், அவற்றை சீர் செய்வதில் உள்ள இடர்பாடுகள் குறித்தும், எதிர்கால சுகாதார திட்டங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடினர்.

    கல்லிடைக்குறிச்சி:

    அம்பை வட்டார அளவில் நடைபெற்ற பேரவை கூட்டத்திற்கு யூனியன் சேர்மன் பரணி சேகர் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயா செல்வி, ஒன்றிய கவுன்சிலர் கஸ்தூரி, இசக்கியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அம்பாசமுத்திரம் வட்டாரத்தில் சுகாதாரம் தொடர்பாக செய்ய வேண்டிய பணிகள் குறித்தும், பள்ளிகள், சுகாதார மையங்களை மேம்படுத்துவது குறித்தும், அவற்றை சீர் செய்வதில் உள்ள இடர்பாடுகள் குறித்தும், எதிர்கால சுகாதார திட்டங்கள் குறித்தும் விரிவாக கலந்துரையாடினர்.

    இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் அயன் சிங்கம்பட்டி முத்துகிருஷ்ணன், வெள்ளங்குளி முருகன், கோடாரங்குளம் தங்கம், அயன்தீருவாலீஸ்வரம் வள்ளி, வாகைக்குளம் சுப்புலெட்சுமி நந்தகுமார், மருத்துவர்கள் பிரவின் குமார், பழனிசெந்தில் குமார், ஸ்டான்லி பொன்ராஜ், நிலோபர், ஜெபிஷா ரெஜி, ஈஸ்வரி, சுகாதார ஆய்வாளர்கள் கணேசன், திருப்பதி, ரவிச்சந்திரன், கணேஷ் குமார், கணபதி ராமன், ஆனந்த் பொன்சிங், பாஸ்கர், சுகாதார செவிலியர்கள், ஆய்வக நட்பனர்கள், மஸ்தூர் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அபிராமத்தை தலைமையிடமாக கொண்டு யூனியன் அலுவலகம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னனர்.
    • சுமார் ஒரு லட்சத்திற்க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறோம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் செயல்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

    அபிராமம்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகமான ஊராட்சிகளை கொண்ட யூனியனாக கமுதி ஊராட்சி ஒன்றியம் உள்ளது. இது அபிராமம் பேரூராட்சி மற்றும் 53 ஊராட்சிகளை உள்ளடக்கிய பகுதியாகும்.

    பரமக்குடி ஒன்றியத்தில் சில ஊராட்சிகள், முது குளத்தூர் ஒன்றியத்தில் சில ஊராட்சிகள், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியத்தில் சில ஊராட்சிகளை சேர்த்து அபிராமத்தை தலைமை யிடமாக கொண்டு யூனியன் அலுவலகம் அமைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது.

    இதுகுறித்து அபிரா மத்தை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், அபிராமம் மற்றும் அதை சுற்றிலும் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. சுமார் ஒரு லட்சத்திற்க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறோம். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களும் செயல்பட்டு வருகிறது.

    அபிராமத்தில் இருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் செல்ல கமுதி, பரமக்குடி, முதுகுளத்தூர் ஆகிய 3 ஊர்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அரசின் நலத்திட்டங்கள் பெறவும், அடிப்படை வசதிகளை பெறவும் சிரமப்பட வேண்டியதுள்ளது.

    இதனை தவிர்க்க அபிராமத்தை தலைமை யிடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக பல்வேறு கட்ட அகிம்சை வழி போராட்டங்களை நடத்த தயராக உள்ளோம்.

    மத்திய-மாநில அரசின் நிதி மற்றும் நலத்திட்டங்கள் இந்த கிராமங்களுக்கு கிடைப்பதில்லை. இதனால் அபிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மிகவும் பின்தங்கிய பகுதியாக இன்று வரை உள்ளது என்றனர்.

    • திருமங்கலத்தில் யூனியன் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
    • ரேசனில் தரம் குறைந்த அரிசி வழங்குவதாக புகார் தெரிவித்தனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மதிப்பனூர் கிராமத்தில் சில மாதங்களாக நியாய விலை கடையில் வழங்கப்படும் அரிசி தரமற்றதாகவும், குப்பைகள் கலந்து வழங்குவதால் ஏழை, எளிய மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து பலமுறை வட்ட வழங்கல் அதிகாரியிடம் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதை கண்டித்து திருமங்கலம் ஊராட்சி யூனியன் அலுவ லகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் தங்கள் பகுதிக்கு 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிகள் வழங்கப்படவில்லை என்றும் குற்றச்சாட்டினர். அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தரமான அரிசி வழங்கியதாகவும், தற்போது மட்டமான அரிசி வழங்குவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

    • 100 நாள் வேலையில் பாரபட்சம் யூனியன் அலுவலகத்தில் பெண்கள் முற்றுகையிட்டனர்.
    • ஆத்திரமடைந்த சாரம் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள்ஒலக்கூர் ஊராட்சிஒன்றிய அலுவலகத்தின் வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சாரம் கிராமத்தில் கடந்த ஒருமாத காலமாக 100 நாள் வேலை திட்டத்தில் பலருக்கு வேலை வழங்கப்படவில்லை எனக்கூறப்படுகிறது. அதாவது 800 பேர் உள்ள சாரம் கிராமத்தில் 140 பேருக்கு மட்டுமே வேலை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் 150க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்களும் வசித்து வருகின்றனர் அவர்க ளுக்கும் நூறுநாள் வேலை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறாது.

    ஆத்திரமடைந்த சாரம் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள்ஒலக்கூர் ஊராட்சிஒன்றிய அலுவலகத்தின் வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து ஒலக்கூர் ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம் பேச்சுவார்த்தைக்கு பிறகு உடனடியாக அனைவருக்கும் வேலை வழங்கப்படும் என சேர்மன் உறுதி அளித்த பெயரில்பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர் நூறுநாள் வேலை கேட்டு நூற்றுக்க னக்கான பெண்கள் போராட்டத்தில் நடத்தி வருவது அப்பகுதியில் பரபரப்பான சூழலை உருவாக்கியுள்ளது.

    ×