search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கயத்தாறு யூனியன் அலுவலகத்தில் குடிநீர் மேலாண்மை பயிற்சி முகாம்
    X

    குடிநீர் மேலாண்மை பயிற்சி முகாம் நடந்தபோது எடுத்த படம்.

    கயத்தாறு யூனியன் அலுவலகத்தில் குடிநீர் மேலாண்மை பயிற்சி முகாம்

    • கிராம குடிநீர் மற்றும் சுகாதார மேலாண்மை உறுப்பினர்களுக்கான குடிநீர் மேலாண்மை பயிற்சி முகாம் கயத்தாறு யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது
    • கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தண்ணீர் தரம் பாதுகாப்பு, வேதியியல் பாக்டீரியாக்கள் சம்மந்தப்பட்ட ரசாயனங்கள் குறித்து பயிற்சி மற்றும் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

    கயத்தாறு:

    தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மற்றும் தகவல் தொடர்பு மற்றும் திறன்மேம்பாட்டு பிரிவு மூலம் ஜல்ஜீவன் மிஷின் சார்பில் கிராம குடிநீர் மற்றும் சுகாதார மேலாண்மை உறுப்பினர்களுக்கான குடிநீர் மேலாண்மை பயிற்சி முகாம் கயத்தாறு யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமை வட்டார வளர்ச்சி ஆனையாளர் பாண்டியராஜன் தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி கிராம ஊராட்சி அலுவலர் ஐகோர்ட்ராஜா, தூத்துக்குடி மாவட்ட கிராம குடிநீர் திட்ட நிர்வாக பொறியாளர் ராஜா, உதவி நிர்வாக பொறியாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் யூனியன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மேலாளர்கள் சுப்பையா, சிங்கராஜ், இளநிலை பகுப்பாய்வின் வினோத்குமார், 45ப ஞ்சாயத்து செயலாளர்கள். மகளிர் குழு பற்றாளர்கள் என 200 மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதில் கயத்தாறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தண்ணீர் தரம் பாதுகாப்பு, தண்ணீர் சேகரிப்பு, சுத்தமான குடிநீர் மற்றும் வேதியியல் பாக்டீரியாக்கள் சம்மந்தப்பட்ட ரசாயனங்கள் குறித்து பயிற்சி மற்றும் செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பயிற்சியாளர்கள் வெங்கட்ராமன், வசந்தி, விமலா, பூர்ணிமா செய்திருந்தனர். விஜய்முத்து, முகுந்தன், முத்தமிழ் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

    Next Story
    ×