என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "UPI"

    • பேடிஎம் நிறுவனர் மற்றும் சிஇஓ ஆன விஜய் சேகர் ஷர்மாவுடன் அதானி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அதானி குழும வட்டாரங்கள் தெரிவித்தன.
    • ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளால் கடுமையான நிதி நெருக்கடியில் பேடிஎம் சிக்கியுள்ளது

    இந்திய பெரும் பணக்காரர்களில் முதன்மையானவராக அதானியின், அதானி குழுமம் யுபிஐ ஆன்லைன் பண பரிவர்த்தனை மற்றும் டிஜிட்டல் வணிகம் ஆகியவற்றை உள்ளடக்கிய பின்டெக் துறையில் கால்பதிக்க உள்ளதாக தகவல் வெளியானது. சூட்டோடு சூடாக யுபிஐ பரிவர்தனைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பேடிஎம் செயலி நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்க அதானி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

     

    நேற்று (மே 28) அகமதாபாத்தில் உள்ள தனது அலுவலகத்தில் வைத்து பேடிஎம் நிறுவனர் மற்றும் சிஇஓ ஆன விஜய் சேகர் ஷர்மாவுடன் அதானி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அதானி குழும வட்டாரங்கள் தெரிவித்தன.

    ஒன் 97 நிறுவனத்தின் சுமார் ரூ. 4,218 கோடி மதிப்புடைய 19% சதவீத பங்குகள் சேகர் சர்மா வசம் உள்ளது. ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடுகளால் கடுமையான நிதி நெருக்கடியில் பேடிஎம் சிக்கியுள்ளதால் அதை சாதகமாக பயன்படுத்தி இந்தியாவில் பேடிஎம் உருவாக்கி வைத்துள்ள வலுவான கட்டமைப்பை பின்டெக் துறையில் நுழைவதற்கான கச்சிதமான வழியாக அதானி குழுமம் கருதுகிறது.

     

    ஒன் 97 பங்குகளை அதானி வாங்கும் பட்சத்தில் இந்தியாவில் பின்டெக் துறையில் வலுவாக காலூன்றியுள்ள கூகுள் பே, வால்மார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான ஃபோன் பே மற்றும் அம்பானியின் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் ஆகியவற்றுக்கு போட்டியாக அதானி குழுமம் உருவெடுக்கக்கூடும்.

     

    இதற்கிடையில், பங்குகளை விற்க எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று தெளிவுபடுத்த விரும்புவதாக பேடிஎம் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. எது எப்படியாக இருந்தாலும் பின்டெக் துறையின் மீது அதானி காட்டத் தொடங்கியிருக்கும் இந்த ஆர்வம் வரும் காலங்களில் இந்தியாவில் பின்டெக் துறையில் பெரும் மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்பது வெளிச்சம். 

    • கூகுள் பே, போன் பே போன்றவற்றில் மூலம் பணம் செலுத்தி பேருந்துகளில் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம்.
    • நடத்துனர்களுக்குப் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

    அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் பயணச்சீட்டு வழங்கப்பட்டு வருகிறது.

    தற்போது குறிப்பிட்ட பேருந்துகளில் அரசு விரைவு போக்குவரத்து கழகப் பேருந்துகளில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூகுள் பே, போன் பே போன்றவற்றில் மூலம் பணம் செலுத்தி பேருந்துகளில் பயணச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம்.

    இந்நிலையில், பயணிகளிடம் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நடத்துனர்களுக்குப் பரிசு வழங்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில், "அரசு பேருந்துகளில், ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமான மின்னணு பணப் பரிவர்த்தனை எண்ணிக்கை மூலம் பயணிகளுக்குப் பயண சீட்டு வழங்கும் நடத்துனர்களுக்குப் பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கடந்த 2023-24 நிதியாண்டில் ₹1,087 கோடி தொடர்புடைய 13.42 லட்சம் மோசடிகள் பதிவாகியுள்ளது
    • 22-23 நிதியாண்டில், 573 கோடி ரூபாய் மதிப்பிலான 7.25 லட்சம் மோசடி சம்பவங்கள் நடந்துள்ளன.

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்கி நடைபெறுகிறது. இன்றைய தினம் மக்களவையில் பல்வேறு கேள்விகளுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.

    அப்போது ஆன்லைன் யுபிஐ பணப் பரிவர்த்தனை குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், நடப்பு நிதியாண்டில் கடந்த செப்டம்பர் வரை UPI பணப் பரிவர்த்தனையில், 6.32 லட்சம் மோசடிகள் பதிவாகி உள்ளதாகத் தெரிவித்தார்.

    அறிக்கைபடி, மோசடிகளில் தொடர்புடைய தொகையின் மதிப்பு ₹458 கோடி ஆகும். கடந்த 2023-24 நிதியாண்டில் ₹1,087 கோடி தொடர்புடைய 13.42 லட்சம் மோசடிகள் பதிவாகியுள்ளது.

    இந்த ஆண்டில் செப்டம்பர் வரையில் மட்டுமே கணக்கிடப்பட்டுள்ள நிலையில் கடந்த வருடத்தை விட 85 சதவீதம் மோசடிகள் அதிகம் பதிவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. முன்னதாக 22-23 நிதியாண்டில், 573 கோடி ரூபாய் மதிப்பிலான 7.25 லட்சம் மோசடி சம்பவங்கள் நடந்துள்ளன. 

     

    UPI பரிவர்த்தனை மோசடிகள் உட்பட, பணம் செலுத்துதல் தொடர்பான மோசடிகளைத் தடுக்க, அரசு, ரிசர்வ் வங்கி மற்றும் நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) ஆகியவற்றால் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

    இவற்றில், வாடிக்கையாளர்களின் மொபைல் எண் சரிபார்ப்பு, தினசரி பரிவர்த்தனை வரம்பு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் உள்ளன. மேலும், NPCI மூலம் மோசடிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    மோசடிகளைத் தடுப்பது தொடர்பாக எஸ்எம்எஸ், ரேடியோ பிரச்சாரம், விழிப்புணர்வு பிரச்சாரங்களை வங்கிகள் மேற்கொண்டு வருகின்றன.

    • கடலோர காவல்படை கப்பல்கள் இயங்கும் வீடியோக்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை வாட்சப் மூலம் பகிர்ந்துள்ளார்.
    • இவ்வாறு கடந்த 7 மாதங்களில் மொத்தம் ரூ.42,000 யுபிஐ மூலம் பெற்றுள்ளார்.

    குஜராத்தில் இந்திய கடலோர காவற்படை குறித்த தகவல்களைப் பாகிஸ்தான் உளவாளிக்குத் தினமும் ரூ.200 க்கு விற்ற நபரை குஜராத் பயங்கரவாத தடுப்புப் படையினர் (ATS) கைது செய்துள்ளனர்.

    குஜராத்தின் கடலோர நகரமான துவாரகாவில் பணிபுரிந்து வந்த திபேஷ் கோஹில் என்ற நபர், பாகிஸ்தான் கடற்படை அதிகாரி அசிமாவுக்கு பேஸ்புக்கில் பரீட்சயமாகியுள்ளார்.

    துவாரகாவில் உள்ள ஓகா பகுதியிலிருந்து முக்கியமான புகைப்படங்களை கோஹில் பாகிஸ்தானுக்குச் சேகரித்து அனுப்பியதாக ATS தெரிவித்துள்ளது.

    பாகிஸ்தானில் உள்ள உளவாளிக்கு கோஹில் அனுப்பியதில் பெரும்பாலான தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இந்திய கடலோர காவல்படை பற்றியது என்று ATS தெரிவித்துள்ளது.

    ஓகா துறைமுகத்தில் உள்ள கடலோர காவல்படை கப்பல்கள் இயங்கும் வீடியோக்கள் உள்ளிட்ட முக்கிய தகவல்களை கோஹில் வாட்சப் மூலம் பாகிஸ்தானுக்கு பகிர்ந்துள்ளார்.

    இதுகுறித்து பேசிய குஜராத் ஏடிஎஸ் அதிகாரி கே சித்தார்த், ஓகாவைச் சேர்ந்த ஒருவர் கடலோரக் காவல்படை பற்றிய விவரங்களை வாட்ஸ்அப் மூலம் பாகிஸ்தானின் கடற்படை அல்லது ஐஎஸ்ஐ (இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ்) முகவருடன் பகிர்ந்து கொண்டதாக எங்களுக்கு உளவுத்துறை மூலம் தகவல் கிடைத்தது.

     

    இதுதொடர்பான விசாரணையில் ஓகாவில் வசிக்கும் திபேஷ் கோஹிலை கைது செய்தோம். தீபேஷ், பாகிஸ்தானில் தொடர்பிலிருந்தவர் என்று உறுதிப்படுத்தியுள்ளோம். சொந்தமாக வங்கிக்கணக்கு இல்லாத தீபேஷ் தனது நண்பர் கணக்கில் ஒவ்வொரு நாளும் ரூ.200 வீதம் அனுப்பப்பட்ட பணத்தைப் பெற்றதாகவும் அவர் தெரிவித்தார்.

    இவ்வாறு கடந்த 7 மாதங்களில் மொத்தம் ரூ.42,000 யுபிஐ மூலம் பெற்றுள்ளார். தீபேஷ் மீது கிரிமினல் சதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக செயல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    • யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் டிஜிட்டல் பண பரிவர்த்தனை பரவலாக மேற்கொள்ளப்படுகிறது.
    • அனைத்து வங்கி நிறுவனங்களும் இதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்

    இந்தியாவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு நாடு முழுவதும் கூகுள் பே, போன் பே உள்ளிட்டவற்றின் மூலம் யுபிஐ [யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ்] டிஜிட்டல் பண பரிவர்த்தனை பரவலாக மேற்கொள்ளப்படுகிறது.

    நகரங்களில் அன்றாட வாழ்வின் அங்கமாகவே யுபிஐ பரிவர்த்தனைகள் மாறிவருகின்றன. இந்நிலையில் நாளை [பிப்ரவரி 1] முதல் பலரின் யுபிஐ ஐடி முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    பிப்ரவரி 1ஆம் தேதி முதல் [@,#, * உள்ளிட்ட] சிறப்பு எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட யுபிஐ ஐடிகள் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகள் ஏற்கப்படாது என நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா[NPCI] அறிக்கை வெளியிட்டுள்ளது.

    எண்ணெழுத்து [0-9] மற்றும் எழுத்துக்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஐடிகள் மட்டுமே செயல்படும் என கூறப்பட்டுள்ளது. சிறப்பு எழுத்துக்கள் உள்ள ஐடிகள் பிளாக் செய்யப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


     

    யுபிஐ பரிவர்த்தனை ஐடிகளை உருவாக்கும் செயல்முறையை தரப்படுத்துவதையும், பாதுகாப்பை மேம்படுவதும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து வங்கி நிறுவனங்களும் இதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று NPCI அறிவுறுத்தியுள்ளது.

    என்பிசிஐ தரவுகளின்படி, டிசம்பர் 2024 இல் 16.73 பில்லியன் யுபிஐ பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. இது நவம்பரின் பதிவான 15.48 பில்லியன் பரிவர்த்தனைகளைவிட விட 8% அதிகமாகும். 

    இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் இருந்து கார்டு மூலம் பேமண்ட் ஏற்க தடை விதித்து உள்ளது. ரிசர்வ் வங்கி விதிமுறையை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

    பேமண்ட் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் இந்திய வாடிக்கையாளர்களின் கார்டு விவரங்களை தங்களின் சர்வர்களில் சேமிக்கக் கூடாது என மத்திய ரிசர்வ் வங்கி 2020 ஆண்டு வாக்கில் உத்தரவிட்டு அதற்கான கால அவகாசத்தை வழங்கி இருந்தது. 

    இந்த நிலையில், கார்டு ஸ்டோரேஜ் மற்றும் டோக்கென் வழங்கும் விவகாரம் குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட பரிந்துரைகளை ஏற்கும் நோக்கில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு மூலம் பணம் ஏற்றுக் கொள்வதை நிறுத்தி விட்டது. இது ஆப்பிள் அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களில் புது சாதனங்கள் மற்றும் சேவைகளை வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும். 

    இதுமட்டுமின்றி இன்-ஆப் பர்சேஸ்களுக்கு பணம் செலுத்துவோர் ரொக்கம் தவிர்த்து யு.பி.ஐ. அல்லது நெட் பேங்கிங் மூலம் பணம் செலுத்துவதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. 

    “ஜூன் 1 ஆம் தேதி முதல் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் ஆப்பிள் ஆப் ஸ்டோர் சந்தா மற்றும் ஆப்பிள் சேவைகளுக்கு பணம் செலுத்த முடியாது,” என ஆப்பிள் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இதோடு இந்திய வாடிக்கையாளர்களின் கார்டு விவரங்கள் இனி ஆப்பிள் சர்வர்களில் சேமிக்கப்படாது என்றும் அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது. 
    • இந்தியாவில் செப்டம்பர் மாதம் யுபிஐ மூலம் 678 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.
    • யுபிஐ சேவை வசதி 2016ல் அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனால் தொடங்கப்பட்டது

    புதுடெல்லி:

    யு.பி.ஐ. என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம், ஸ்மார்ட்போன் பயனாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். 2016ம் ஆண்டு இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. கூகுள் பே, பேடிஎம் போன்ற செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

    தேசிய பணப்பரிவர்த்தனை நிறுவனம் - நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (என்.பி.சி.ஐ.) வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த செப்டம்பர் மாதத்தில் 678 கோடி பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு டிஜிட்டல் பரிவர்த்தனை வசதி (ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை வசதி - யுபிஐ), தொடங்கப்பட்டதிலிருந்து கடந்த செப்டம்பர் மாதத்தில், ரூ.11 லட்சம் கோடி மதிப்பிலான பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.

    2022-ம் நிதி ஆண்டில், யுபிஐ 4600 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தியது. அதாவது அதன் மதிப்பு ரூ.84.17 டிரில்லியனுக்கும் அதிகமாகும்.

    இந்தியாவில் முதன்முறையாக யுபிஐ சேவை வசதி, 2016ம் ஆண்டு ஏப்ரல் 11 அன்று அப்போதைய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனால் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • மாநிலம் முழுவதும் ஒரு கிராம பஞ்சாயத்தில் குறைந்தபட்சம் 2 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
    • ரேஷன் கடைகளில் UPI வசதி மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகமாகிறது என அமைச்சர் பெரியசாமி தெரிவித்தார்.

    சென்னை:

    கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    மாநிலம் முழுவதும் ஒரு கிராம பஞ்சாயத்தில் குறைந்தபட்சம் 2 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    அரிசி, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை எவர்சில்வர் கொள்கலன்களில் வைத்து விநியோகம் செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தேர்ந்தெடுக்கப்பட்ட சில நியாயவிலைக் கடைகளில் UPI வசதி மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு படிப்படியாக மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நியாயவிலைக் கடைகளை, மாதிரி நியாயவிலைக் கடைகளாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இது புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதற்கும் செய்வதற்கும் மக்களின் கூட்டு முயற்சியைக் குறிக்கிறது.
    • கொரோனா தொற்று காலங்களின்போது, டிஜிட்டல் பரிமாற்றங்கள் உதவியாக இருந்தன.

    இந்தியாவில் ஜூலை மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் 600 கோடிக்கு பரிவர்த்தனை நடந்து சாதனை படைத்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். மேலும், இது புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதற்கும் செய்வதற்கும் மக்களின் கூட்டு முயற்சியைக் குறிக்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், "ஜூலை மாதத்தில் யுபிஐ மூலம் 600 கோடிக்கு பரிவர்த்தனை நடந்துள்ளது, இது 2016-ம் ஆண்டுக்கு பிறகு மிக அதிகம்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.

    இவரது பதிவுக்கு பதிலளித்த பிரதமர் மேடி, " இது ஒரு சிறந்த சாதனை. புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதற்கும், பொருளாதாரத்தை தூய்மைப்படுத்துவதற்கும் இந்திய மக்களின் கூட்டு முயற்சியை இது குறிக்கிறது. குறிப்பாக, கொரோனா தொற்று காலங்களின்போது, டிஜிட்டல் பரிமாற்றங்கள் உதவியாக இருந்தன" என்று குறிப்பிட்டார்.

    • பிசினஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் இந்த சலுகையை பெற முடியாது.
    • இந்த சலுகை குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

    வாட்ஸ்அப்பில் யுபிஐ பேமண்ட் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இதனை ஊக்குவிக்கும் விதமாக அந்நிறுவனம் அவ்வபோது சலுகைகளை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் யுபிஐ மூலம் மூன்று பேருக்கு தலா ஒரு ரூபாய் அனுப்பினால் ரூ.105 வரை கேஷ்பேக் பெறும் வண்ணம் புதிய சலுகை ஒன்றை அந்நிறுவனம் வழங்கி உள்ளது.

    வாட்ஸ்அப் நிறுவனத்தின் இந்த அசத்தலான கேஷ்பேக் சலுகையை பெறுவது எப்படி என்பது குறித்து தற்போது பார்க்கலாம். இந்த சலுகை குறிப்பிட்ட பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. உங்களுக்கு இந்த சலுகை கிடைக்குமா என்பதை தெரிந்து கொள்ள முதலில் வாட்ஸ்அப் செயலியை ஓபன் செய்ய வேண்டும். அதில் பணம் அனுப்பும் ஸ்கிரீனில் கிஃப்ட் ஐகான் இருந்தால் நீங்கள் இந்த சலுகையை பெறமுடியும். இல்லாவிட்டால் இந்த சலுகையை பெறும் வாய்ப்பு உங்களுக்கு வழங்கப்பட வில்லை என்று அர்த்தம்.


    * முதலில் உங்கள் போனில் புது வெர்ஷன் வாட்ஸ்அப் செயலி இருக்கிறதா என்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். அது இருந்தால் மட்டுமே இந்த சலுகையை பெற முடியுமாம்.

    * செயலியை குறைந்தபட்சம் 30 நாட்களாவது பயன்படுத்தியிருந்தால் மட்டுமே இந்த ஆஃபர் கிடைக்கும்.

    * பிசினஸ் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் இந்த சலுகையை பெற முடியாது.

    * வாட்ஸ்அப் செட்டிங்ஸில் உள்ள பேமண்ட் ஆப்ஷனை பயன்படுத்தி, பேமண்ட் அக்கவுண்டை செட் அப் செய்ய வேண்டும்.

    * பின்னர் அதில் உங்களது வங்கிக் கணக்கை இணைக்க வேண்டும்.

    * அது நிறைவடைந்த உடன் குறைந்தபட்சம் 1 ரூபாயை உங்களது வாட்ஸ்அப்பில் உள்ள மூன்று காண்டாக்ட்டுகளுக்கு அனுப்ப வேண்டும். அவர்களும் பேமண்ட் அக்கவுண்டை செட் அப் செய்திருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திவிட்டு பணம் அனுப்பவும்.

    * அப்படி அவர்கள் பேமண்ட் அக்கவுண்டை செட் அப் செய்யவில்லை என்றால், அதனை செய்த பின்னரே உங்களால் பணம் அனுப்ப முடியும்.

    * மூன்று பேருக்கும் பணம் அனுப்பிய பின்னர், ஒவ்வொரு பரிவர்தனைக்கும் 35 ரூபாய் வரையிலான கேஷ்பேக் கிடைக்கும். இதன்மூலம் ரூ.105 வரை பெற முடியும்.

    • யுபிஐ பேமன்ட்களில் இனிமேல் கிரெடிட் கார்டுகளையும் இணைக்கும் வசதி கொண்டுவரப்பட உள்ளது.
    • முதலில் ரூபே கிரெடிட் கார்டுகளுக்கு மட்டும் யுபிஐயில் இணைக்கும் வசதி வழங்கப்படுமாம்.

    யுபிஐ பேமன்ட்களின் செயல்பாடுகளில் முக்கிய முன்னேற்றமாக, கிரெடிட் கார்டுகளையும் யுபிஐ செயலிகளில் இணைக்கும் வசதி விரைவில் நடைமுறைக்கு வர உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது முன்னதாக யுபிஐ பேமன்ட்களில் டெபிட்கார்டுகளை மட்டும் இணைக்கும் வசதி இருந்தது. இனிமேல் கிரெடிட் கார்டுகளையும் இணைக்கும் வசதி கொண்டுவரப்பட உள்ளது.

    முதலில் ரூபே கிரெடிட் கார்டுகளுக்கு மட்டும் யுபிஐயில் இணைக்கும் வசதி வழங்கப்படும் எனவும் அதன்பின் மாஸ்டர் கார்டு, விசா போன்ற கிரெடிட் கார்டுகளுக்கு அந்த வசதி நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுவரை பயனர்கள் டெபிட் கார்டுகளை மட்டும்தான் இணைத்திருக்க முடியுமாம்.


    ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அது முடிந்த பின் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திதாஸ் தாஸ் நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: பயனர்களின் சேமிப்பு கணக்குகளுக்கு வழங்கப்படும் டெபிட் கார்டுகள் அல்லது நடப்பு கணக்குகளை யுபிஐ பேமன்டில் இணைத்துக்கொள்ளும் வசதி தற்போது இருந்து வருகிறது.

    இனிமேல் கிரெடிட் கார்டுகளையும் பயனர்கள் யுபிஐ செயலியில் இணைத்துக் கொள்ளும் வசதி கொண்டு வரப்பட உள்ளது. முதலில் ரூபே கிரெடிட் கார்டுகளுக்கும் பின்னர் படிப்படியாக மாஸ்டர் கார்டு, விசா போன்ற மற்ற கிரெடிட் கார்டுகளுக்கும் அந்த வசதி நீட்டிக்கப்படும்" என அவர் தெரிவித்தார்.

    சியோமி நிறுவனம் இந்தியாவில் Mi பே சேவையை அறிமுகம் செய்துள்ளது. புதிய மொபைல் பேமென்ட் சேவை யு.பி.ஐ. மூலம் இயங்குகிறது. #MiPay



    சியோமி நிறுவனம் Mi பே சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. Mi பே சேவை ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி மூலம் இயங்குகிறது. இதனை பயன்படுத்த போன், கான்டாக்ட் மற்றும் எஸ்.எம்.எஸ். உள்ளிட்டவற்றை இயக்குவதற்கான அனுமதியினை வழங்கினால் மட்டுமே இயக்க முடியும்.

    பயனர்கள் தங்களது யு.பி.ஐ. முகவரி மற்றும் வங்கி அக்கவுண்ட்டிற்கு நேரடியாக பணம் அனுப்பும் வசதியை வழங்குகிறது. Mi பே சேவையை பயன்படுத்தும் அனைத்தும் பயனர்களின் அனைத்து விவரங்களும் உள்நாட்டு சர்வெர்களிலேயே சேமிக்கப்படுவதாக சியோமி அறிவித்துள்ளது.

    Mi பே சேவை காண்டாக்ட், எஸ்.எம்.எஸ்., ஸ்கேனர் செயலிகளினுள் MIUI தளத்தின் ஆப் வால்ட்டில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் மிக எளிமையாக பணப்பரிமாற்றம் செய்ய முடியும். இத்துடன் மற்ற மொபைல் பேமென்ட் சேவைகளை போன்று மொபைல் போன் பில் / ரீசார்ஜ், டி.டி.ஹெச். ரீசார்ஜ், மின்சேவை கட்டணம் மற்றும் பல்வேறு சேவைகளுக்கு பணம் செலுத்தலாம்.



    பயனர்களின் முழு தகவல்களும் இந்தியா சார்ந்து இயங்கும் கிளவுட் சேவையில் என்க்ரிப்ட் செய்யப்பட்ட வடிவில் சேமித்து வைக்கப்படுவதாக சியோமி தெரிவித்துள்ளது. செயலியை சோதனை செய்தபின் Mi பே செயலியை MIUI 10 பீட்டாவில் அறஇமுகம் செய்து, தற்சமயம் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது.

    சியோமியின் Mi பே செயலி வரும் வாரங்களில் அனைவருக்கும் கிடைக்கும் என்றும், Mi ஆப் ஸ்டோரில் பயனர்கள் இதனை டவுன்லோடு செய்து கொள்ளலாம். Mi பே செயலியை கொண்டு பணப்பரிமாற்றம் செய்யும் போது பயனர்கள் அதிகபட்சம் 100 ரெட்மி நோட் 7 போன்களையும், 50 Mi எல்.இ.டி. டி.வி. 4ஏ ப்ரோ 32 இன்ச் மாடல்களை வெல்ல முடியும்.
    ×