என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Users"
- நாங்கள் அனுப்பும் செயலி மூலமாக முதலீடு செய்தால் போதும், விரைவில் லட்சாதிபதிகளாவும், கோடிசுவர்களாகவும் மாறி விடலாம் என ஆசைவார்த்தை கூறி நம்ப வைக்கிறார்கள்.
- வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புகளின் எண்களுக்கு முன்னால் பிளஸ் குறியீடு வரும்.
சென்னை:
நாடு முழுவதும் செல்போன் பயன்படுத்துவோர்களில் 40 கோடி பேர் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த வாட்ஸ் அப் செயலி வழியாக பல்வேறு தகவல்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில் செல்போன் திரையை அனுப்பி வைக்கும் புதிய வசதி வாட்ஸ் அப்பில் உள்ளது. இதனை பயன்படுத்தி மோசடி பேர்வழிகள் கோடிக்கணக்கில் பணம் சுருட்டி இருப்பது அம்பலமாகி உள்ளது. வெளிநாடுகளில் இருந்து பேசி வாட்ஸ் அப் பயனாளர்களை மயக்கும் இந்த கும்பல் குறுகிய காலத்தில் நீங்கள் பணக்காரர்கள் ஆகிவிடலாம், நாங்கள் அனுப்பும் செயலி மூலமாக முதலீடு செய்தால் போதும், விரைவில் லட்சாதிபதிகளாவும், கோடிசுவர்களாகவும் மாறி விடலாம் என ஆசைவார்த்தை கூறி நம்ப வைக்கிறார்கள்.
இந்த நிலையில் மோசடி கும்பல் வாட்ஸ் அப் திரைககளையும் விட்டு வைக்கவில்லை. பொதுமக்களிடம் இருந்து வாட்ஸ் அப் திரைகளை அனுப்ப சொல்லி, அதில் உள்ள ரகசிய தகவல்களை மோசடி கும்பல் திருடிய சம்பவம் தற்போது வெளியாகி உள்ளது. சம்பந்தப்பட்ட நபர்களிடம் வாட்ஸ் அப்பில் பேசி அரசு அதிகாரிகள் போல் தங்களை காட்டிக்கொண்டு உயர் பதவிகளில் இருப்பவர்கள் போல் பேசி இந்த மோசடி ஆசாமிகள் பணத்தை வாரி சுருட்டி உள்ளனர்.
வியட்நாம், கென்யா, எத்தியோப்பியா, மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்து மோசடி ஆசாமிகள் நாடு முழுவதும் 10 ஆயிரம் கோடி அளவுக்கு பணத்தை சுருட்டி இருக்கிறார்கள். கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரையில் ரூ. 10 ஆயிரத்து 319 கோடி அளவுக்கு வாட்ஸ் அப் பயன்படுவோரிடம் இருந்து வெளிநாட்டு மோசடி கும்பல் பணத்தை சுருட்டி இருக்கிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் காவல் துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டு செயல்பாட்டு மையம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. எனவே வாட்ஸ் அப்பயன்படுத்துவோர்கள் எந்த எந்த விஷயங்களை செய்யக்கூடாது என தெரிவித்துள்ளார்கள்.
வெளிநாடுகளில் இருந்து வரும் அழைப்புகளின் எண்களுக்கு முன்னால் பிளஸ் குறியீடு வரும். அதன் பிறகு 84, 63, 24 என்பது போன்ற எண்களில் இருந்து மோசடி அழைப்புகள் வருகின்றன. இதுபோன்ற அழைப்புகள் வந்தால் பொது மக்கள் ஏற்றுக்கொள்ளாமல் நிராகரிக்க வேண்டும் என மத்திய அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. நீண்ட நேரம் வாட்ஸ்- அப்பை பயன்படுத்துவோர்களை குறி வைத்து இந்த மோசடி அரங்கேறி இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- சமீபத்தில் அதன் லோகோவான பறவை சின்னத்தை "X" என மாற்றினார்
- வருவாயை பெருக்க எடுத்து வரும் முயற்சிகள் பலனளிக்க தொடங்கலாம் என தெரிகிறது
அமெரிக்காவை சேர்ந்த உலகின் நம்பர் 1 கோடீசுவரரான எலான் மஸ்க், சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார். அதனை அவர் "எக்ஸ்" என பெயர் மாற்றமும் செய்திருக்கிறார்.
முகநூல் நிறுவனத்தினரின் "திரெட்ஸ்" எனும் புதிய சமூக வலைதளமும் X-க்கு போட்டியாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.
சமீப காலங்களில் எக்ஸின் வருவாய் குறைந்திருப்பதாக செய்திகள் வரத் தொடங்கின. கடன் சுமையினாலும், 50% விளம்பர வருவாய் குறைந்திருப்பதனாலும், அதன் வருவாய் மிகவும் பின்னடைந்திருப்பதாக மஸ்க் இம்மாதம் அதிகாரபூர்வமாக அறிவித்தார். வருவாயை அதிகரிக்கும் முயற்சிகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
விலைக்கு வாங்கியதிலிருந்தே தனது நிறுவனத்தை மேம்படுத்த பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் மஸ்க், பல பணியாளர்களை நீக்கினார். விளம்பர துறையில் வல்லுனரான லிண்டா எக்கேரினோ என்பவரை தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்தார்.
சமீபத்தில் அதன் லோகோவான பறவை சின்னத்தை "X" என மாற்றினார். மேலும், "இது தற்காலிகமான லோகோதான். இதுவும் விரைவில் மாற்றப்படலாம்" எனவும் அறிவித்தார்.
இந்நிலையில், X-ன் மாதாந்திர பயனர் இதுவரை இல்லாத அளவிற்கு உயர்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். தற்போது அதன் பயனர்களின் எண்ணிக்கை சுமார் 5.4 கோடி (540 மில்லியன்) என உறுதிப்படுத்தும் விதமாக சில புள்ளி விவரங்களையும், விளக்கப்படங்களையும் பதிவிட்டிருக்கிறார். வருவாயை பெருக்க மஸ்க் எடுத்து வரும் முயற்சிகள் பலனளிக்க தொடங்கலாம் என தெரிகிறது.
மே 2022-ல் டுவிட்டருக்கு சுமார் 2.3 கோடி (229 மில்லியன்) பயனாளிகள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 14- வது தவணை ஊக்கத்தொகை பெற ஆன்லைனில் விவசாயிகளின் விபரங்களை பதிவு செய்யும் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது
- அஞ்சல் நிலையங்களை அணுகி வங்கி கணக்கு துவங்கி 14-வது தவணையை சரியாக பெற்று பயன் பெறலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது :-
மத்திய அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2000 வீதம் ஆண்டுக்கு ரூ.6000 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இதுவரை 13 தவணை வழங்கப்பட்டுள்ளது.
14- வது தவணை ஊக்கத்தொகை பெற ஆன்லைனில் விவசாயிகளின் விபரங்களை பதிவு செய்யும் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எனவே இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் இன்றுக்கு ள் பதிவு செய்ய வேண்டும். இதை செய்தால் தான் 14-வது தவணை ஊக்கத்தொகை வழங்கப்படும். இதே போல வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள் தங்களது வங்கியை தொடர்பு கொண்டு ஆதார் எண்ணை இணைக்கலாம். அல்லது அருகில் உள்ள அஞ்சல் நிலையங்களை அணுகி வங்கி கணக்கு துவங்கி 14-வது தவணையை சரியாக பெற்று பயன் பெறலாம்.
முதல் வழிமுறையாக ஆதார் எண்ணுடன் மொபைல் போன் எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் pmkisan.gov.in என்ற இணையத்தில் தங்களது ஆதார் எண் விபரங்களை உள்ளீடு செய்து ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல் மூலம் சரிபார்க்கலாம்.
ஆதார் எண்ணுடன் மொபைல் போன் எண் இணைக்காதவர்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலம் திட்ட வலை தளத்தில ஆதார் எண் விபரங்களை உள்ளீடு செய்து விரல் ரேகையை பதிவு செய்து சரிபார்க்கலாம்.
இ.கே.ஒய்சி பதிவு செய்திடாத விவசாயிகள் விபரங்கள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களில் உள்ளது. மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண்மை மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி தெரிந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்