என் மலர்
நீங்கள் தேடியது "Vaigai Dam"
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 32.05 அடியாக உள்ளது.
- சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 70.39 அடியாக உள்ளது.
கூடலூர்:
முல்லைப்பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதி மற்றும் தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மழைப்பொழிவு இல்லாமல் இருந்தது. மேலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்ததால் அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்று விட்டது.
இந்த நிலையில் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இதேபோல் தேனி மாவட்டத்திலும் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது. மேலும் வருசநாடு, பெரியகுளம், முருகமலை, தேவதானப்பட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அடிக்கடி காட்டுத்தீ பற்றி எரிந்து அரிய வகை மூலிகைகள், மரங்கள் எரிந்து நாசமானது.
காட்டுத்தீயை அணைக்க வனத்துறையினர் போராடினர். இருந்தபோதும் தொடர்ந்து பற்றி எரிந்ததால் விவசாயிகள் அச்சம் அடைந்தனர். இந்த நிலையில் தற்போது பெய்துள்ள மழையால் காட்டுத்தீ முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வனப்பகுதியில் ஈரப்பதம் காணப்படுகிறது. இதனால் வன விலங்குகள் வெளியேறும் அபாயம் நீங்கி உள்ளது.
நீர் வரத்தின்றி காணப்பட்ட முல்லைப்பெரியாறு அணைக்கு 54 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 322 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 114.10 அடியாக உள்ளது. 1576 மி.கன அடி. நீர் இருப்பு உள்ளது.
இதேபோல் வைகை அணைக்கும் நீர்வரத்து தொடங்கி உள்ளது. இன்று காலை 177 கன அடி நீர் வந்த நிலையில் மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 422 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 3531 மி.கன அடி. நீர் இருப்பு உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 32.05 அடியாக உள்ளது. 5 கன அடி நீர் வருகிறது. 45 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 70.39 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சண்முகாநதி அணையின் நீர்மட்டம் 30.70 அடியாக உள்ளது. வரத்து 11 கன அடி. திறப்பு இல்லை.
ஆண்டிபட்டி 4.8, வீரபாண்டி 4.6, பெரியகுளம் 12, மஞ்சளாறு 7, சோத்துப்பாறை 9, வைைக அணை 8.2, போடி 2.8, உத்தமபாளையம் 5.6, கூடலூர் 2.6, பெரியாறு அணை 1.2, தேக்கடி 11.8, சண்முகாநதி 6.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
- நேற்று 1569 கனஅடிநீர் திறக்கப்பட்டது. இன்றுகாலை முதல் 200 கனஅடி அதிகரித்து வெளியேற்றப்படுகிறது.
- 132 கனஅடிநீர் வருகிற நிலையில் 40 கனஅடிநீர் பாசனத்திற்கும் மற்றவை உபரியாகவும் திறக்கப்படுகிறது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. மேலும் தேனி, மதுரை மாவட்ட குடிநீர் ஆதாரமாக உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. 71 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 70.44 அடி நீர்மட்டம் உள்ளது.
அணையிலிருந்து மதுைர மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1769 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. நேற்று 1569 கனஅடிநீர் திறக்கப்பட்டது. இன்றுகாலை முதல் 200 கனஅடி அதிகரித்து வெளியேற்றப்படுகிறது.
முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 135.60 அடியாக உள்ளது. 673 கனஅடிநீர் வருகிறது. 511 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணை நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 132 கனஅடிநீர் வருகிற நிலையில் 40 கனஅடிநீர் பாசனத்திற்கும் மற்றவை உபரியாகவும் திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 126.31 அடி, 3 கனஅடிநீர் வரும் நிலையில் திறப்பு இல்லை.
- முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 134.85 அடியாக உள்ளது.
- கரையோரமுள்ள திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் மொத்த கொள்ளளவு 71 அடியாகும். கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதனால் அணையில் இருந்து பாசனத்துக்கும் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது அணை மீண்டும் 70 அடியை கடந்துள்ளது.
இதனால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். நீர்வரத்தைப் பொறுத்து கூடுதல் தண்ணீர் அணையில் திறக்கப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 70.01 அடியாக உள்ளது.
நேற்று 1938 கன அடி நீர் வந்த நிலையில் இன்று காலை 2320 கன அடி நீர்வரத்து உள்ளது. நேற்று அணையில் இருந்து 1269 கன அடி நீர் திறக்கப்பட்டது. தற்போது நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் 2320 கன அடி நீர் முழுவதுமாக வெளியேற்றப்படுகிறது.
இதனால் கரையோரமுள்ள திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஆற்றைக் கடப்பதோ, துணி துவைப்பதோ, ஆடு, மாடுகளை குளிப்பாட்டுவதோ கூடாது என எச்சரித்துள்ளனர்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 134.85 அடியாக உள்ளது. அணைக்கு 1333 கன அடி நீர் வருகிறது. 511 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடியாக உள்ளது. அணைக்கு 120 கன அடி நீர் வருகிறது. அதில் 40 கன அடி நீர் பாசனத்துக்கும், 80 கன அடி நீர் உபரியாகவும் திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.67 அடியாக உள்ளது. அணைக்கு 226 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் பாசனத்திற்கும், 196 கன அடி நீர் உபரியாகவும் திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை 4, போடி 2.4, ஆண்டிபட்டி 2.8 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
- அணைக்கு வரும் மழை நீரின்வரத்து வேகமாக அதிகரிப்பு.
- வைகை ஆற்றில் இறங்க பொதுமக்கள் முயற்சிக்க வேண்டாம் என அறிவுறுத்தல்
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் தேனி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான குளம், கண்மாய் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி விட்டன. 71 அடி உயரம் கொண்ட வைகை அணை இந்த ஆண்டில் 2வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது.
பலத்த மழை காரணமாக நேற்று இரவு 7 மணியில் இருந்து அணைக்கு வரும் நீரின் வரத்து வேகமாக அதிகரித்தது. இதையடுத்து அணையில் இருந்து முதல்கட்டமாக 5,399 கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டது. இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு இரவு 8,900 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதனால் தேனி, திண்டுக்கல்,மதுரை,சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைகை அணையில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவு மேலும் அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் வைகை ஆற்றில் இறங்கவோ அல்லது கடக்கவோ பொதுமக்கள் முயற்சிக்க வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்ககை ஆகிய 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- ஆற்றை கடக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என எச்சரித்துள்ளனர்.
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் கனமழை நீடித்து வருவதால் பெரும்பாலான அணைகள் நிரம்பிவிட்டன. மூலவைகையாறு, முல்லைபெரியாறு, வராகநதி உள்பட அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. வைகை அணையின் மொத்த கொள்ளளவு 71 அடியாகும். வழக்கமாக 69 அடிவரை தண்ணீர் தேக்கப்படும். இந்த ஆண்டு 70 அடியில் நிலைநிறுத்தி பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் 69 அடியாக நீர்மட்டம் குறைந்தது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் 70.01 அடியாக மீண்டும் உயர்ந்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் திறக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை நிலவரப்படி 5,150 கனஅடிநீர் வருகிறது. அந்த நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.
இதனால் தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்ககை ஆகிய 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆற்றை கடக்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ கூடாது என எச்சரித்துள்ளனர். மேலும் மழை காலம் என்பதால் விவசாய நிலங்களுக்கு செல்பவர்களும் பாதுகாப்பாக இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
கேரளாவில் பெய்து வரும் மழையால் முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து 1109 கனஅடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டமும் 137.05 அடியாக உள்ளது. 511 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 158 கனஅடி நீர் வருகிறது. அது அப்படியே உபரியாக திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.87 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 344 கனஅடிநீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.
பெரியாறு 15.2, தேக்கடி 1, கூடலூர் 3.6, சண்முகாநதிஅணை 7,2, உத்தமபாளையம் 2, போடி 28.6, வைகை அணை 54, சோத்துப்பாறை 64, மஞ்சளாறு 6, பெரியகுளம் 35, வீரபாண்டி 17.2, அரண்மனைப்புதூர் 59, ஆண்டிபட்டி 83.8 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது.
- முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து 1109 கனஅடியாக உள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் கனமழையால் பெரும்பாலான அணைகள் நிரம்பிவிட்டன. மூலவைகையாறு, முல்லைபெரியாறு, வராகநதி உள்பட அனைத்து ஆறுகளிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. வைகை அணையின் மொத்த கொள்ளளவு 71 அடியாகும். வழக்கமாக 69 அடிவரை தண்ணீர் தேக்கப்படும். இந்த ஆண்டு 70 அடியில் நிலைநிறுத்தி பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால் 69 அடியாக நீர்மட்டம் குறைந்தது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அணையின் நீர்மட்டம் 70.01 அடியாக மீண்டும் உயர்ந்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் 10 ஆயிரம் கன அடியாக திறக்கப்பட்டது. நேற்று 5150 கனஅடியாக நீர் திறப்பு குறைக்கப்பட்டது.
நேற்று மாலை முதல் மழைப்பொழிவு குறைந்ததால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு மேலும் குறைக்கப்பட்டு 1866 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. அணைக்கு 36.25 கன அடி நீர் வருகிறது.
முல்லைபெரியாறு அணைக்கு நீர்வரத்து 1109 கனஅடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் 137.25 அடியாக உள்ளது. 511 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. 190 கனஅடி நீர் வருகிறது. அது அப்படியே உபரியாக திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.67 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 252 கனஅடிநீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.
தேக்கடி 6.4, போடி 6.4, வைகை அணை 4, சோத்துப்பாறை 5, மஞ்சளாறு 6, பெரியகுளம் 3.2, வீரபாண்டி 3.6, அரண்மனைப்புதூர் 1, ஆண்டிபட்டி 4.2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
- மழை குறைந்துள்ள நிலையில் அணைக்கு நீர்வரத்தும் 1476 கனஅடியாக சரிந்துள்ளது.
- பெரியாறு 21.2, தேக்கடி 7 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
கூடலூர்:
பருவமழை கைகொடுத்த நிலையில் வைகை அணை நீர்மட்டம் 70.01 அடியை எட்டியது. இதனைதொடர்ந்து அணையை பொதுப்பணித்துறையினர் கண்காணித்து வருகின்றனர். நீர்வரத்தை பொறுத்து உபரிநீர் வைகையாற்றில் திறக்கப்பட்டு வருகிறது. மழை குறைந்துள்ள நிலையில் அணைக்கு நீர்வரத்தும் 1476 கனஅடியாக சரிந்துள்ளது. இருந்தபோதும் நீர்மட்டம் 70.01 அடியிலேயே நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1269 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 137.95 அடியாக உள்ளது. 1543 கனஅடிநீர் வருகிறது. நேற்று 511 கனஅடிநீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை நீர்திறப்பு 667 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. அணைக்கு 179 கனஅடிநீர் வருகிறது. 40 கனஅடிநீர் பாசனத்திற்கும், 139 கனஅடிநீர் உபரியாகவும் திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.48 அடியாக உள்ளது. 110 கனஅடிநீர் வருகிறது. 30 கனஅடிநீர் பாசனத்திற்கும், 80 கனஅடி நீர் உபரியாகவும் திறக்கப்படுகிறது.
பெரியாறு 21.2, தேக்கடி 7 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
- வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.
- தற்போது மழை ஓய்ந்ததால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
கூடலூர்:
வடகிழக்கு பருவமழை கைகொடுத்ததால் முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. வைகை அணை அதன் முழுகொள்ளளவை எட்டி கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது மழை ஓய்ந்ததால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 138.30 அடியாக உள்ளது. 814 கனஅடிநீர் வருகிறது. 511 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
வைகை அணையின் நீர்மட்டம் 69.52 அடியாக உள்ளது. 929 கனஅடிநீர் வருகிறது. 1569 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 132 கனஅடிநீர் அப்படியே திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.38 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 52 கனஅடிநீர் அப்படியே திறக்கப்படுகிறது.மழை எங்கும் இல்லை.
- இன்று காலை நிலவரப்படி வைகை அணை நீர்மட்டம் 68.83 அடியாக உள்ளது.
- தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் என எதிர்பார்த்த நிலையில் தேனி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவே நிலவி வருகிறது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக முழு கொள்ளளவை எட்டியது.
அணையின் நீர்மட்டம் 70 அடிக்கு மேல் சென்றபோது தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட பாசனத்திற்காக கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. சுமார் 10 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றப்பட்ட நிலையில் அதன்பிறகு மழை நின்றதால் நீர்வரத்தும் படிப்படியாக குறைந்தது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் என எதிர்பார்த்த நிலையில் தேனி மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவே நிலவி வருகிறது.
இன்று காலை நிலவரப்படி வைகை அணை நீர்மட்டம் 68.83 அடியாக உள்ளது. வரத்து 682 கன அடி. திறப்பு 1819 கன அடி. இருப்பு 5529 மி.கன அடி. இதேபோல் முல்லைப்பெரியாறு அணைக்கும் நீர்வரத்து குறைந்து வருவதால் அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. தற்போது அணையின் நீர்மட்டம் 138.30 அடியாக உள்ளது. வரத்து 522 கன அடி. திறப்பு 511 கன அடி. இருப்பு 6698 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி. வரத்து 100 கன அடி.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.35 அடி. வரத்து 42 கன அடி. இந்த 2 அணைகளும் முழு கொள்ளளவை எட்டி இருப்பதால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது.
- தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர் வரத்து 639 கன அடியாக குறைந்துள்ளது.
- இன்று காலை முதல் 1719 கன அடி நீர் திறக்கப் படுகிறது.மேலும் நீர் மட்டம் 67.67 அடியாக சரிந்துள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணை கடந்த சில மாதங்களுக்கு முன்பு முழு கொள்ளளவை எட்டியது. அதனைத் தொடர்ந்து பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டபோதும், அணையின் நீர் மட்டம் 70 அடியிலேயே நிலை நிறுத்தப்பட்டது.
தற்போது மழை முற்றிலும் ஓய்ந்த நிலையில் அணைக்கு நீர் வரத்து 639 கன அடியாக குறைந்துள்ளது.
இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. நேற்று 1819 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 1719 கன அடி நீர் திறக்கப்படுகிறது.மேலும் நீர் மட்டம் 67.67 அடியாக சரிந்துள்ளது.
முல்லைப்பெரியாறு அணை நீர் மட்டம் 138.20 அடியாக உள்ளது. 388 கன அடி நீர் வருகிறது. 511 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 54.60 அடியாக உள்ளது. 65 கன அடி நீர் வருகிறது. 40 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 126.31 அடியாக உள்ளது. 34 கன அடி நீர் வருகிறது. 30 கன அடி நீர் திறக்கப்படுகிறது.
- முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 138.05 அடியாக உள்ளது. 257 கனஅடிநீர் வருகிறது. 511 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
- மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.45 அடியாக உள்ளது. 100 கனஅடிநீர் வருகிறது. 40 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
கூடலூர்:
வடகிழக்கு பருவமழையின்போது தேனி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் அணைகளின் நீர்மட்டமும் உயர்ந்தது. அதனைதொடர்ந்து பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் நீர்மட்டம் குறைய தொடங்கியது. இந்த நிலையில் நேற்று மாலை சாரலாக தொடங்கி விடியவிடிய பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
போடியில் பெய்த மழையால் கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. மேலும் வைகை அணைக்கும் தண்ணீர் வரத்து 685 கனஅடியாக உயர்ந்தது. அணையின் நீர்மட்டம் 66.86 அடியாக உள்ளது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்திற்காக 1719 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 138.05 அடியாக உள்ளது. 257 கனஅடிநீர் வருகிறது. 511 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.45 அடியாக உள்ளது. 100 கனஅடிநீர் வருகிறது. 40 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.31 அடியாக உள்ளது. 34 கனஅடிநீர் வருகிறது. 30 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
சோத்துப்பாறை 0.5, போடி 16.2, வீரபாண்டி 43, அரண்மனைப்புதூர் 21.4, ஆண்டிபட்டி 25.2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
- முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 138.30 அடியாக உள்ளது. வரத்து 974 கன அடி. திறப்பு 511 கன அடி. இருப்பு 6698 மி.கன. அடி.
- வைகை அணை நீர்மட்டம் 66.54 அடி. வரத்து 1217 கன அடி. திறப்பு 1719 கன அடி. இருப்பு 4978 மி.கன அடி.
கூடலூர்:
தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழையின்றி கடுமையான வெப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் 2 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் தொடங்கி சாரல் மழையாக பல இடங்களில் இடைவிடாமல் பெய்த நிலையில் இரவில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக கொட்டி தீர்த்தது.
குறிப்பாக போடி, பெரியகுளம், தேவதான ப்பட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய சாரல் மழை பெய்தது. இதனால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே சோத்துப்பாறை அணை நிரம்பி உள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வராக நதியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 138.30 அடியாக உள்ளது. வரத்து 974 கன அடி. திறப்பு 511 கன அடி. இருப்பு 6698 மி.கன. அடி. வைகை அணை நீர்மட்டம் 66.54 அடி. வரத்து 1217 கன அடி. திறப்பு 1719 கன அடி. இருப்பு 4978 மி.கன அடி.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.80 அடி. வரத்து 182 கன அடி. திறப்பு 40 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.94 அடி. வரத்து 469 கன அடி. திறப்பு 30 கன அடி.
தேக்கடி 17, போடி 62.6, வைகை அணை 5.4, சோத்துப்பாறை 72, மஞ்சளாறு 70, பெரியகுளம் 4, வீரபாண்டி 12.4, அரண்மனைபுதூர் 11.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.
மாவட்டத்தில் இன்று காலையிலும் பரவலாக சாரல் மழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக கலெக்டர் முரளிதரன் அறிவித்துள்ளார்.