என் மலர்
நீங்கள் தேடியது "Valparai"
- ஜாஸ்மின் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை பார்த்து வந்தார்.
- ஜாஸ்மின் குடித்த தண்ணீர் பாட்டிலில் தண்ணீருக்கு பதிலாக பூச்சி கொல்லி மருந்தினை ஊற்றி வைத்துள்ளனர்.
வால்பாறை
கோவை மாவட்டம் வால்பாறை சோலையார் 3-வது டிவிசனை சேர்ந்தவர் மதுஅருமராஜ்குமார் (வயது68).
இவர் அங்குள்ள தனியார் தேயிலை எஸ்டேட்டில் துணை மேலாளராக வேலை பார்த்து ஒய்வு பெற்றவர்.
இவரது மனைவி ஜாஸ்மின்(வயது67). இவர் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் டாக்டராக வேலை பார்த்து வந்தார். இதற்காக அவருக்கு அங்கு ஒரு வீடும் கொடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஜாஸ்மின் பணி ஒய்வு பெற்றார். இதையடுத்து அவர் ஆஸ்பத்திரி நிர்வாகம் கொடுத்த வீட்டினை காலி செய்ய முடிவு செய்தார்.
அதன்படி சம்பவத்தன்று தனது கணவருடன் வீட்டில் இருந்து பொருட்கள் அனைத்தையும் ஒதுங்க வைத்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு தாகம் ஏற்படவே அங்கு பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்து குடித்தார்.தண்ணீர் குடித்த சிறிது நேரத்தில் அவர் வலியால் அலறி துடித்தார். இதை பார்த்த அவரது கணவர் அதிர்ச்சியானர். உடனடியாக மனைவியை மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர் ஜாஸ்மின் ஏற்கனவே இறந்து விட்டதா க தெரிவித்தார். இதை கேட்டு அவர் கதறி அழுதார். இதுகுறித்து வால்பாறை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து ஜாஸ்மின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், ஜாஸ்மின் குடித்த தண்ணீர் பாட்டிலில் தண்ணீருக்கு பதிலாக பூச்சி கொல்லி மருந்தினை ஊற்றி வைத்து ள்ளனர். அது விஷம் என தெரியாமல் அவர் குடித்தில் உயிரிழந்தது தெரியவந்தது. தொடர்ந்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து வால்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- என்.சி.எப். அமைப்பினர் மூலம் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
- பாதுகாக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த புதுத்தோட்டம் மற்றும் வறட்டுப்பாறை எஸ்டேட் பகுதிகளில் சிங்கவால் குரங்குகள் அதிகளவில் உள்ளன.
இவை புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதி சாலைகளில் அதிகளவில் காணப்படுகின்றன. சிங்கவால் குரங்குகள் வாகனங்களில் அடிபடக் கூடாது என்பதற்காக அப்பகுதியில் என்.சி.எப். அமைப்பினர் மூலம் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்கள் பகல் நேரங்களில் சாலையில் வாகனங்கள் மெதுவாக செல்ல அறிவுறுத்தும் வகையில் பதாகைகளை ஏந்தி நிற்கின்றனர். இருப்பினும் அதிகளவில் வாகனங்கள் வரும்போது சாலையை கடக்கும் குரங்குகள் வாகனங்களில் அடிபட்டு உயிரிழந்து வருகின்றன.
வறட்டுப்பாறை எஸ்டேட் சாலையில் வாக னத்தில் அடிபட்டு சிங்கவால் குரங்கு நேற்று உயிரிழந்தது. அழிந்து வரும் இந்த அரியவகை சிங்கவால் குரங்குகளை பாதுகாக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- சாதிக் செல்போன் கடை நடத்தி வருகிறார்
- 7 செல்போன்கள் திருட்டு போனது.
கோவை:
கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்தவர் அஹ்மத் சாதிக் (வயது 27). இவர் அந்த பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு வந்து பார்த்தபோது கடையின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. கடையில் இருந்த 7 செல்போன்கள் திருட்டு போனது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து அவர் வால்பாறை போலீசில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் அப்பகுதியில் சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த 2 சிறுவர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் வால்பாறையை சேர்ந்த 13, 14 வயதுடைய சிறுவர்கள் என்பதும், 2 பேரும் கடையில் செல்போன்கள் திருடியதையும் ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து அவர்களிடம் இருந்து 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் 2 சிறுவர்களையும் வால்பாறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். பின்னர் 2 சிறுவர்களும் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
- இரவு 9 மணிக்கு சேலத்தில் பஸ் புறப்படும்.
- இரவு 11:00 திருப்பூரில் இருந்து வால்பாறைக்கு பஸ் இயங்கும்.
திருப்பூர் :
அரசு போக்குவரத்து கழக சார்பில், சேலம் - வால்பாறை இடையே பஸ் இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. இரவு, 9 மணிக்கு சேலத்தில் புறப்படும் பஸ், நள்ளிரவு திருப்பூர் வந்தடைத்து பின்னர் நள்ளிரவு திருப்பூரில் இருந்து புறப்பட்டு அதிகாலை, 4:20 மணிக்கு வால்பாறை சென்று சேருகிறது.
தற்போது, இரவு, 11:00 திருப்பூரில் இருந்து வால்பாறைக்கு (பொள்ளாச்சி வழி) கடைசி பஸ் இயங்கி வந்த நிலையில், இரவு, 12:15 க்கு பொள்ளாச்சி, வால்பாறைக்கான கடைசி பஸ் இந்த பஸ் இனி இயங்கும். மறுநாள் மதியம், 12:30 மணிக்கு வால்பாறையில் புறப்பட்டு, பொள்ளாச்சி, திருப்பூர் வந்து, இரவு, 7:00 மணிக்கு சேலம் செல்லும். இந்த புதிய பஸ் சேவை மூலம் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- வால்பாறையில் சின்னக்கல்லாறு நீர்வீழ்ச்சி, நல்லமுடி பூஞ்சோலை காட்சி முனை, சோலையாறு அணை, பாலாஜி கோவில், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன.
- போலீசார் சார்பில் நாய்களின் சாகச நிகழ்ச்சி மற்றும் குன்னூர் டீ போர்டு மூலம் சுற்றுலா பயணிகளுக்கு டீ தயாரிப்பு போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
கோவை:
கோவை மாவட்டம் வால்பாறையில் சின்னக்கல்லாறு நீர்வீழ்ச்சி, நல்லமுடி பூஞ்சோலை காட்சி முனை, சோலையாறு அணை, பாலாஜி கோவில், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. தினந்தோறும் ஏராளமானோர் வந்து சுற்றுலா தலங்களை பார்த்து ரசித்து செல்கின்றனர்.
கோடை காலங்களில் வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தமிழக முதல்-அமைச்சரின் வழிகாட்டுதல்படி நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 28-ந் தேதி வரை 3 நாட்கள் கோடை விழா நடைபெறவுள்ளது.
கோடை விழாவின்போது தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் பார்த்து பயனடையும் வகையில் அரசு துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. இதுதவிர மலர் கண்காட்சியும் இடம்பெறுகிறது.
கலை பண்பாட்டு துறை, பள்ளிகல்வித்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் பரத நாட்டியம், யோகா, நடனம், செண்டைமேளம், நையாண்டி மேளம், கரகம், காவடியாட்டம், படுகர் நடனம், மாரியம்மன் முருகன் வள்ளி கும்மி பாடல், துடும்பாட்டம், பழங்குடியின வாத்தியம், பொய்க்கால் குதிரை, ஜிக்காட்டம், டிரம்ப்ஸ் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
போலீசார் சார்பில் நாய்களின் சாகச நிகழ்ச்சி மற்றும் குன்னூர் டீ போர்டு மூலம் சுற்றுலா பயணிகளுக்கு டீ தயாரிப்பு போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. மேலும் மகிழ்ச்சிக்கு காரணம் சொந்த பந்தமா? சொத்து பத்தா?, மனிதன் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தது? அந்த காலமா? இந்த காலமா?, பெற்றோர்களை பேணிக்காப்பவர்கள் மகள்களா? மகன்களா? ஆகிய தலைப்புகளில் 27-ந் தேதி அன்று பட்டிமன்றம் நடைபெறவுள்ளது.
இந்த கோடை விழா மற்றும் மலர் கண்காட்சியின் நிறைவு விழாவில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்குகிறார். விழாவில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
இந்த தகவலை கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.
- 17 வயது மாணவி தனியார் கல்லூரியில் பேஷன் டிசைனிங் படித்து வருகிறார்.
- மாணவிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
வால்பாறை,
வால்பாறை அருகே முத்துகுட்டி எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பேஷன் டிசைனிங் படித்து வருகிறார். இந்நிலையில் மாணவிக்கு டி.பார்ம் படிப்பதற்கு விருப்பம் இருந்து வந்துள்ளது. ஆனால் மாணவிக்கு அவர் விரும்பிய பாட பிரிவு கிடைக்கவில்லை. இதனால் வாழ்கையில் விரக்கி அடைந்த மாணவி வீட்டில் இருந்த மீன் வளர்ப்பு உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டார். சிறிது நேரத்தில் மாணவி மயக்கம் அடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மாணவியை மீட்டு வால்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு மாணவிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து வால்பாறை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சுற்றுவட்டார பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளது.
- வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக அவ்வப்போது சாரல் மழையும், சில நேரங்களில் கனமழையும் பெய்து வருகிறது.
கடந்த சில நாட்களாகவே வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. நேற்று மாலை வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான ஆழியார், சின்னக்கல்லார், முடிஸ் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இரவிலும் மழை கொட்டி தீர்த்ததால் பல பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
இரவு தொடங்கிய மழை இன்று காலை வரை விடிய, விடிய பெய்து கொண்டே இருந்தது. இன்று காலையிலும் மழை பெய்து வருகிறது.
தொடர் கனமழைக்கு வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் 23-வது மற்றும் 24-வது கொண்டை ஊசி வளைவுக்கு இடையே உள்ள பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டது. அத்துடன் மரம் ஒன்றும் முறிந்து விழுந்தது.

இதனால் அந்த பகுதியில் வால்பாறையில் இருந்து பொள்ளாச்சிக்கும், பொள்ளாச்சியில் இருந்து வால்பாறைக்கும் செல்லும் வாகனங்கள் சாலையின் இருபுறமும் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர். மேலும் பொக்லைன் எந்திரம் மூலம் சாலையில் கிடந்த கற்கள் அகற்றப்பட்டன.
காலை 8.30 மணிக்கு பிறகு பணிகள் அனைத்தும் முடிந்ததும் வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றன.
வால்பாறை அண்ணா நகர் பகுதியில் முருகன் என்பவரின் வீட்டின் தடுப்புச்சுவர் இடிந்து மண்சரிவு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
முடிஸ் மற்றும் முருகாளி எஸ்டேட் பகுதியில் மரம் விழுந்தது. இதனை அப்பகுதி மக்களை அகற்றி போக்குவரத்தை சீர்செய்தனர்.
தொடர் மழை காரணமாக வால்பாறையில் உள்ள கூழாங்கல் ஆறு, நடுமலையாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து, ஆற்றில் இறங்கி குளிக்கவோ, ஆற்றில் இறங்கவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
வால்பாறை சுற்றுவட்டாரத்தில் அதிகபட்சமாக சின்னக்கல்லார் பகுதியில் 23 செ.மீ மழை பதிவாகி உள்ளது. வால்பாறையில் தொடரும் மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- தொடர்ந்து சில நாட்களாக நீலகிரி மற்றும் சுற்று வட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
- பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மற்றும் சுற்று வட்ட மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே நீலகிரி மாவட்டத்தில் கனமழை கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் கனமழை நீடித்து வரும் நிலையில் அம்மாவட்டத்தில் உள்ள உதகை, கூடலூர், குந்தா, பந்தலூர் ஆகிய 4 தாலுக்காக்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- தொடர்ந்து சில நாட்களாக நீலகிரி மற்றும் சுற்று வட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
- பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மற்றும் சுற்று வட்ட மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே நீலகிரி மாவட்டத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது.
கனமழை காரணமாக நீலகிரியின் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுக்காக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் இன்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- இதனால் மின்தடையும் நிலவி வருகிறது.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதிகாலையில் கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவை தொடர்ந்து வால்பாறையிலும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தொடர் கனமழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று காலை விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. நேற்று காலை முதலே வால்பாறையில் கனமழை பெய்து வருவதை அடுத்து பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் மீது மரங்கள் சரிந்து விழுந்தன. இதனால் மின்தடையும் நிலவி வருகிறது.
இந்த நிலையில், நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில் சுவர் இடிந்து விழுந்து சிக்கி இருவர் உயிரிழந்தனர்.
- உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் நிவாரணம்.
- வால்பாறை, பொள்ளாச்சியில் மழைக்கு 3 பேர் பலி.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை வட்டம், சோலையார் அணை, இடதுகரை பகுதியில் மழுக்குப்பாறை செக்போஸ்ட்டிலிருந்து பன்னிமேடு செல்லும் பொதுப்பணித் துறைச் சாலையின் அருகில் உள்ள வீட்டின் அருகே இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் மண்சரிவு ஏற்பட்டதில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ராஜேஸ்வரி (வயது 57) மற்றும் தனப்பிரியா (வயது 15) ஆகிய இருவரும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், திப்பம்பட்டி கிராமத்தில் தனியருக்குச் சொந்தமான ஓட்டுவீட்டின் மேற்குப்பக்கச் சுவர் இன்று இரவு பெய்த மழையினால் அதிகாலை சுமார் 3 மணியளவில் இடிந்து மேற்குப்பக்க ஓட்டு வீட்டின்மீது விழுந்ததில் வீட்டினுள் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த ஹரிஹரசுதன் (வயது 21) என்பவர் உயிரிழந்தார் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
- வால்பாறையில் தேயிலை தோட்டத்தில் காட்டு யானைகள் உலா வந்தன.
- யானைகள் நடமாடும் பகுதிகளில் தொழிலாளர்கள் விறகு சேகரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வால்பாறை:
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள சோலையாறு அணை, கல்லாறு நீர்வீழ்ச்சி, நல்லமுடி காட்சிமுனை, பிர்லா நீர்வீழ்ச்சி, கூழாங்கல் ஆறு உள்ளிட்ட சுற்றுலாதலங்களை காண ஏராளமான சுற்றுலாபயணிகள் தினமும் வந்து செல்கின்றனர்.
ஆனைமலை புலிகள் காப்பக பகுதிக்குள் அமைந்துள்ள வால்பாறை மலைப்பகுதியில் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. வனப்பகுதியில் பசுமை நிறைந்து காணப்படுவதால் மானாம்பள்ளி, வால்பாறை ஆகிய இரு வனச்சரகங்களிலும் யானைகள் பல்வேறு எஸ்டேட்களில் கூட்டம், கூட்டமாக முகாமிட்டுள்ளன.
குறிப்பாக குரங்கு முடி, வில்லோனி, பன்னிமேடு, அய்யர்பாடி உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளில் யானைகள் முகாமிட்டுள்ளன. பகல் நேரத்தில் தேயிலை தோட்டங்களிலும், இரவு நேரத்தில் தொழிலாளர் குடியிருப்பு பகுதிகளிலும் யானைகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. பகல் நேரத்தில் தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் அச்சத்துடனேயே ஈடுபட்டுள்ளனர்.
தென்மேற்கு பருவமழைக்கு பின் வால்பாறையில் பசுமை திரும்பியுள்ளதால் தேயிலை எஸ்டேட்களில் யானைகள் முகாமிட்டுள்ளன. யானைகளுக்கு தேவையான உணவு மற்றும் குடிநீர் திருப்திரகமாக இருப்பதால் யானைகள் இங்கு வருகின்றன.
மனித விலங்கு மோதலை தடுக்க யானைகள் நடமாடும் பகுதிகளில் தொழிலாளர்கள் விறகு சேகரிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வால்பாறையில் எஸ்டேட் தொழிலார் குடியிருப்பு பகுதிகளில் யானைகள் விரும்பி உட்கொள்ளும் வாழை, பலா, கொய்யா மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன. யானைகளுக்கு எவ்வித சிரமமும் இன்றி உணவு கிடைப்பதால் குடியிருப்பு பகுதியிலேயே முகாமிட்டுள்ளன.
யானைகளுக்கு பிடித்தமான தோட்டப்பயிர்களை குடியிருப்பு பகுதிகளில் பயிரிட வேண்டாம் என்று வனத்துறையினர் பலமுறை நோட்டீஸ் கொடுத்தும் அதை எஸ்டேட் நிர்வாகங்கள் கண்டுகொள்ளவில்லை. அதனால் தான் எஸ்டேட் பகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.