search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Varun Chakaravarthy"

    • இந்தியா, இங்கிலாந்துக்கு இடையேயான ஒருநாள் தொடர் நாளை மறுநாள் தொடங்குகிறது.
    • இந்திய அணிக்கான ஒருநாள் தொடரில் வருண் சக்கரவர்த்தி இணைந்துள்ளார்.

    மும்பை:

    இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் முடிந்த நிலையில், அடுத்து ஒருநாள் தொடரில் இரு அணிகளும் மோதவுள்ளன.

    டி20 தொடரில் சிறப்பான பந்துவீச்சின் மூலம் இந்திய அணிக்கான ஒருநாள் தொடரில் வருண் சக்கரவர்த்தி இணைந்துள்ளார். அவர் ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் சேர்க்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், இங்கிலாந்தின் முன்னாள் வீரரான கெவின் பீட்டர்சன் கூறுகையில், ஒரு நாள் போட்டிகளில் வருண் சக்கரவர்த்திக்கு எதிராக இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ஆட்டம் சிறப்பாக இருக்கும். ஏனெனில் அவர்கள் அதிக நேரம் செலவிட முடியும். இது ஒரு நீண்ட வடிவம், ஒவ்வொரு பந்தும் ஒரு நிகழ்வு அல்ல. ஆனால் இது ஒரு சிறந்த முடிவு என நான் நினைக்கிறேன்.

    இங்கிலாந்தின் பார்வையில் இது ஒரு ஏமாற்றமான தொடர். நான்காவது டி20 போட்டியில் துபேவுக்கு பதிலாக மாற்றீடு சரியாக செய்யப்பட்டிருந்தால் இங்கிலாந்து அங்கு வெற்றி பெற்றிருக்கும் என நினைக்கிறேன். வான்கடே போட்டியில் 2-2 என்ற கணக்கு வந்திருக்கும். ஆனால் அது நடக்கவில்லை என தெரிவித்தார்.

    • 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
    • இந்தியா - இங்கிலாந்து தொடரின் நாயகனாக வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டார்.

    இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இந்த தொடரின் ஆட்டநாயகனாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டார்.

    இந்நிலையில் சிறப்பாக செயல்பட்ட வருண் சக்கரவர்த்தியை சாம்பியன் டிராபிக்கான இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த டி20 தொடரில் வருண் சக்கரவர்த்தி அபாரமாக செயல்பட்டுள்ளார். தற்போது இந்திய அணி ஒரு தற்காலிக அணியைத்தான் தேர்வு செய்து அனுப்பியுள்ளது. எனவே யாரையாவது ஒருவரை நீக்கிவிட்டு வருண் சக்கரவர்த்தியை சேர்க்க வேண்டும்.

    என்று அஸ்வின் கூறினார்.

    ×