என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vasudevanallur"

    • உலக குருதி கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குருதி கொடையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
    • சிறந்த வட்டார மருத்துவமனைக்கான விருது வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவமனைக்கு கிடைத்தது.


    சிவகிரி:


    உலக குருதி கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குருதி கொடையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. விழாவில் குருதி கொடை சிறப்பாக பெற்று தந்த சிறந்த வட்டார மருத்துவமனைக்கான விருது வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவமனைக்கு கிடைத்தது. இதற்கான விருதை வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தி சரவணபாய்க்கு நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வழங்கி கவுரவித்தார்.


    இதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் உள்ள உயர் அதிகாரிகள், வாசு வட்டார மருத்துவமனை மருத்துவர்கள், அலுவலர்கள், அனைத்து ஊழியர்களும் நேரில் சென்று சந்தித்து வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்தனர்.




    • பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கி முகாமினை தொடங்கி வைத்தார்.
    • வாசுதேவநல்லூரில் வேலைவாய்ப்பு முகாம் - யூனியன் சேர்மன் தொடங்கி வைத்தார்

    சிவகிரி:

    தமிழ்நாடு அரசு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் இளைஞர் திறன் திருவிழா, அரசு மூலம் வழங்கப்படும் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பு முகாம் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சமுதாய நலக்கூடத்தில் வைத்து நடைபெற்றது.

    வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வாசு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி முகாமினை தொடங்கி வைத்தார். தன்னம்பிக்கை, வெற்றி இலக்குகள் குறித்து சிறப்புரையாற்றினார். முகாமில் 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் மாவட்ட தொழில் மையம், தாட்கோ திறன் வளர்ப்பு கழகம் ஆகியன கலந்து கொண்டன. இதில் 500- க்கும் மேற்பட்ட இளைஞர்கள், ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மனோகரன், தென்மலை ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் உதவி திட்ட அலுவலர் முருகன், மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர், வாசுதேவநல்லூர் வட்டார இயக்க மேலாளர் போத்திராஜ், வட்டார ஒருங்கி ணைப்பாளர்கள் ராம ச்சந்திரன், இசக்கியம்மாள், மகாராசி, உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


    • வாசுதேவநல்லூர் ஒன்றியத்தில் உள்ள 22 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் ஆகியோருக்கு சமூக தணிக்கை தொடர்பான பயிற்சி கூட்டம் யூனியன் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும் வாசு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் ஒன்றியத்தில் உள்ள 22 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் ஆகியோருக்கு சமூக தணிக்கை தொடர்பான பயிற்சி கூட்டம் யூனியன் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும் வாசு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் சந்திரமோகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கருப்பசாமி, ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் அலுவலக மேலாளர் கருத்தப்பாண்டியன், உதவியாளர் சிலம்பரசன், ஓவர்சீஸ் ராமசாமி, அலுவலர்கள், பணியாளர்கள், தென்மலை ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • பள்ளிகளின் அருகே பீடி, சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • பொதுஇடங்களில் புகை பிடித்ததாக 5 பேர்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது

    சிவகிரி:

    பள்ளிகளின் அருகே பீடி, சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும், பொது இடங்களில் மக்களுக்கு இடையூறாக பீடி, சிகரெட் புகைப்பதாகவும், ஆங்காங்கே புகையிலை எச்சில் துப்பி பொதுமக்கள் முகம் சுளிக்கும் வகையில் ஒருசிலர் நடந்து கொள்வதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இதன் அடிப்படையில் வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தி சரவணபாய் உத்தரவின்பேரில் சுகாதார மேற்பார்வையாளர் சரபோஜி தலைமையில், சுகாதார அலுவலர்கள் அடங்கிய குழுவினர் வாசுதேவநல்லூர் பேருந்து நிலையம், மெயின் பஜார், காய்கறி மார்க்கெட் பஜார், பள்ளிகள் அருகே மற்றும் பொதுஇடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது பொதுஇடங்களில் புகை பிடித்ததாக 5 பேர்களுக்கு தலா ரூ.100 அபராதமும், பள்ளிகளின் அருகே கடைகளில் பீடி, சிகரெட் விற்பனை செய்ததாக 2 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

    • ஒன்றிய குழு தலைவருக்கு புதிய வாகனம் கொள்முதல் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது.
    • கூட்டத்திற்கு யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார்.

    சிவகிரி:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவை விதி எண் 110 -இன் கீழ் ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள ஒன்றிய குழு தலைவருக்கு புதிய வாகனம் கொள்முதல் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது. தொடர்ந்து வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியக்குழு சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.

    கூட்டத்திற்கு யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன் தலைமை தாங்கினார். துணை சேர்மன் சந்திரமோகன், ஆணையாளர் கருப்பசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள், அலுவலக மேலாளர் கருத்தப்பாண்டி, உதவியாளர் சிலம்பரசன், அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • இணையதள பயிற்சி ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு வாசுதேவநல்லூர் யூனியன் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
    • 2 நாட்கள் நடைபெற்ற இணையதள பயிற்சியில் ஒன்றியக்குழு தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    சென்னையில் இருந்து ஊரக உள்ளாட்சித்துறை அலுவலகம் மூலமாக காணொலியில் கிராம ஊராட்சி செயல்படுத்தும் பிரிவுகள், வளர்ச்சிகள், இலக்குகள் தொடர்பான இணையதள பயிற்சி ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு வாசுதேவநல்லூர் யூனியன் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

    ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு 2 நாட்கள் நடைபெற்ற இணையதள பயிற்சியில் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 22 கிராம ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒன்றியக்குழு தலைவர் பொன் முத்தையா பாண்டியன், துணைத் தலைவர் சந்திரமோகன், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலை வர்கள், துணைத் தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா நடைபெற்றது. சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., யூனியன் சேர்மனும் வாசு வடக்கு ஒன்றிய செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினர். யூனியன் துணை சேர்மன் சந்திரமோகன் முன்னிலை வகித்தார்.

    இந்நிகழ்ச்சியில் தென்மலை ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், வாசு பேரூராட்சி வார்டு கவுன்சிலர் பூமாரி, கிளை செயலாளர் ஸ்டாலின், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார், பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயசீலன், உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் நெல்கட்டும்செவல் மாவீரன் பூலித்தேவன் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ -மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் நெல்கட்டும்செவல் மாவீரன் பூலித்தேவன் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

    யூனியன் சேர்மனும் வடக்கு ஒன்றிய செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி மாணவ -மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை வழங்கினார். யூனியன் துணை சேர்மன் சந்திரமோகன் முன்னிலை வகித்தார்.

    இந்நிகழ்ச்சியில் யூனியன் சேர்மன் பேசியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவ -மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மேலும் இப்பள்ளியின் சார்பாக வைக்கப்பட்ட அடிப்படை கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றி தரப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் நெல்கட்டும்செவல் ஒன்றிய கவுன்சிலர் விமலா மகேந்திரன், தென்மலை ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், கிளை செயலாளர் ஸ்டாலின், பள்ளி தலைமை ஆசிரியர் ராமசாமி, அரசு ஒப்பந்ததாரர் பூசைத்துரை, உள்ளார் மணிகண்டன், விக்கி, தி.மு.க. நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.


    • பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளியில் "உலக செவித்திறன் குறைவுடையோர்" தினம் கொண்டாடப்பட்டது.
    • பள்ளியின் முன்பு தொடங்கிய பேரணியில் ஒலிப்பெருக்கி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி முக்கிய வீதிகள் வழியாக வலம்வந்து பள்ளியில் நிறைவடைந்தது.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் மகாத்மா காந்திஜி சேவா சங்கத்தின் கீழ் இயங்கும் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளியில் "உலக செவித்திறன் குறைவுடையோர்" தினம் கொண்டாடப்பட்டது.

    நேஷனல் டிரஸ்டின் அறிவுரையின்படி செவித்திறன் குறைவுடை யோர் சைகை மொழி என்ற மையக் கருத்தின் அடிப்படையில் பள்ளி மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கடந்த 19-ந் தேதி முதல் 23-ந் தேதி ( நேற்று) வரை உலக செவித்திறன் குறைவுடை யோர் சைகை மொழி தின, விழிப்புணர்வு வாரமாக கொண்டாட வேண்டும் என மத்திய கல்வி அமைச்சகத்தின் அறிவுரையின் பேரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    பள்ளி தாளாளர்தவமணி தலைமை தாங்கி விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் சங்கரசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.


    மாணவ, மாணவிகள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு சென்றனர். பள்ளியின் முன்பு தொடங்கிய பேரணியில் ஒலிப்பெருக்கி மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி முக்கிய வீதிகள் வழியாக வலம்வந்து பள்ளியில் நிறைவடைந்தது.

    பேரணியில் பள்ளியின் சிறப்பு ஆசிரியர்கள் சாந்தி, ஹெலன் இவாஞ்சலின், உதவி ஆசிரியை செல்வி கார்த்தி, இயன்முறை மருத்துவர் புனிதா, அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.


    • வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் ஏமன்பட்டி கிராமத்தில் புதிய ரேசன் கடை திறப்பு விழா நடைபெற்றது.
    • சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. மற்றும் யூனியன் தலைவரும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி புதிய ரேசன் கடையை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் ஏமன்பட்டி கிராமத்தில் புதிய ரேசன் கடை திறப்பு விழா நடைபெற்றது. சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ. மற்றும் யூனியன் தலைவரும், வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையா பாண்டியன் ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி புதிய ரேசன் கடையை திறந்து வைத்து முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் தனி வட்டாட்சியர் சாந்தி, கள அலுவலர், பொது விநியோக திட்டம் சார்பதிவாளர் செல்வகணேஷ், ஊராட்சி மன்றத் தலைவர் மாரியம்மாள், துணைத்தலைவர் கிளைச்செயலாளர் பாண்டி, தென்மலை கவுன்சிலர் முனியராஜ், உள்ளார் மணிகண்டன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • வாசுதேவநல்லூர் அருகே உள்ள கூடலூர் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் கார்த்திக்(வயது 21).
    • இவர் கடந்த 13-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    நெல்லை:

    வாசுதேவநல்லூர் அருகே உள்ள கூடலூர் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் கார்த்திக்(வயது 21).

    தற்கொலை

    இவர் கடந்த 13-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு வாசுதேவநல்லூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வாசுதேவநல்லூர் போலீசார் அங்கு விரைந்து சென்று கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    காதல் திருமணம்

    இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் என்ன என்று விசாரித்தனர். அதில், கார்த்திக் கோவையில் உள்ள ஒரு தனியார் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அதே மில்லில் வேலை பார்த்து வந்த தமிழ்செல்வி(20) என்ற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது.

    பின்னர் நாளடைவில் அவர்களது பழக்கம் காதலாக மாறியது. இதனால் அவர்கள் 2 பேரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி சமீபத்தில் சென்னையில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். அதன்பின்னர் கூடலூரில் உள்ள தனது பாட்டி வீட்டில் கார்த்திக் தனது மனைவியுடன் வசித்து வந்தார்.

    விசாரணை

    கடந்த சில நாட்களாக அவர் சரிவர வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது. இதனால் தமிழ்செல்வி அவரை கண்டித்துள்ளார். அதில் கார்த்திக் மனம் உடைந்து காணப்பட்டுள்ளார்.

    இதன் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


    • தென்காசி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலமாக ‘நம்ம ஊரு சூப்பரு’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    • இத்திட்டத்தினை செயல்படுத்த அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மட்டுமல்லாது பொதுமக்களும் தங்களது பங்களிப்பினை முழுமையாக அளிக்க வேண்டும்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலமாக 'நம்ம ஊரு சூப்பரு' என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    கலெக்டர் அறிவுரை

    இத்திட்டத்தினை செயல்படுத்த அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மட்டுமல்லாது பொதுமக்களும் தங்களது பங்களிப்பினை முழுமையாக அளிக்க வேண்டும். இதன் மூலம் நமது மாவட்டத்தை தூய்மையான மாவட்டமாக மாற்றலாம். தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் முன்னோடி மாவட்டமாக நமது மாவட்டம் திகழவேண்டும். மேலும், கடைகளிலுள்ள குப்பைகளை தெரு ஓரங்களில் மற்றும் திறந்தவெளியில் கொட்டாமல், அதற்கென அமைக்கப்பட்ட குப்பைத் தொட்டிகளில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியே பிரித்தெடுத்து போட வேண்டுமெனவும், காந்தி ஜெயந்தி விழாவினை முன்னிட்டு சுற்றுச்சூழலை மேம்படுத்த அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தங்களது முழு பங்களிப்பினை அளிக்க வேண்டும் என தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் அறிவுறுத்தியுள்ளார்.

    பேரணி

    இதனைத் தொடர்ந்து வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் நெல்கட்டும்செவல் மற்றும் தலைவன்கோட்டை ஊராட்சிகளில் 'நம்ம ஊரு சூப்பரு' திட்டத்தின் கீழ் தூய்மைப்படுத்தும் பணிகள் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. யூனியன் சேர்மனும், வாசு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையாபாண்டியன் தலைமை தாங்கி நம்ம ஊரு சூப்பரு திட்டத்தின் கீழ் தூய்மைப்படுத்தும் பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் நெல்கட்டும்செவல் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டியராஜா, துணைத்தலைவர் முத்து ப்பாண்டி, தலைவன்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் சர்மிளா, துணைத்தலைவர் குபேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜெயராமன், உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×