என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vasudevanallur"

    • வாசுதேவநல்லூர் அருகே ராயகிரியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பாக 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
    • நெல்லை நாடார் உறவின்முறை சங்க தலைவர் அசோகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கினார்.

    வாசுதேவநல்லூர்:

    தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே ராயகிரியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பாக 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட சி.பா.சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப்பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.

    இந்து நாடார் உறவின்முறை செயலாளர் சண்முகானந்தன் தலைமை தாங்கினார். இந்து நாடார் உறவின்முறை பள்ளி கமிட்டி உப தலைவர் காளியப்பன், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற நெல்லை மாநகர தலைவர் பாக்யராஜ், செயலாளர் ராமலிங்கம், மாவட்ட துணை செயலாளர் அய்யாசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தலைமை ஆசிரியர் வெங்கடகிருஷ்ணன் வரவேற்றார்.

    நெல்லை நாடார் உறவின்முறை சங்க தலைவர் அசோகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்ற வாசுதேவநல்லூர் ஒன்றிய தலைவர் ராயகிரி அய்யாசாமி, நெல்லை மாநகர துணை தலைவர் ஜோசப்ராஜ், துணை செயலாளர் மனோகரன், நிர்வாகிகள் சரத் கண்ணன், சண்முகராஜ், ராஜேஷ், தமிழ் ஆசிரியர் முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காமராஜர் ஆங்கிலப்பள்ளி செயலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.

    இதேபோல் டி.ராமநாதபுரம் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் நாடார் உறவின்முறை கமிட்டி மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவிற்கு பள்ளி செயலாளர் செல்லக்கனி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் பாஸ்கர் முன்னிலை வகித்தார்.

    தமிழ் ஆசிரியர் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

    நெல்லை நாடார் உறவின்முறை சங்க தலைவர் அசோகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்கள் வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் பசுபதி தனராஜ் நன்றி கூறினார்.

    • பேச்சியம்மாள் நேற்று இரவு வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு பீடிசுற்றி கொண்டிருந்தார்.
    • நகைபறித்து சென்ற மர்மநபர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    வாசுதேவநல்லூரை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி லட்சுமியம்மாள் (வயது75). ராமராஜ் மனைவி சண்முகவடிவு (60).

    கோவில் திருவிழா

    இவர்கள் சிந்தாமணிநகரில் உள்ள கோவில் திருவிழாவிற்கு சென்றனர். அப்போது அங்குள்ள கூட்டநெரிசலை பயன்படுத்தி லெட்சுமியம்மாள் கழுத்தில் கிடந்த 3 பவுன் நகை மற்றும் சண்முகவடிவு கழுத்தில் கிடந்த 5 பவுன் நகை ஆகியவற்றை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.

    இது தொடர்பாக அவர்கள் வாசுதேவநல்லூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மயக்க மருந்து

    வாசுதேவநல்லூர் சேனையர்தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி பேச்சியம்மாள் (28). இவர் நேற்று இரவு வீட்டின் கதவை திறந்து வைத்துவிட்டு பீடிசுற்றி கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த மர்மநபர் அவரது முகத்தில் மயக்கமருந்து தெளித்து அவரிடம் இருந்த 2½ பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.

    இது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி பேச்சியம்மாளிடம் நகைபறித்து சென்ற மர்மநபர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாசுதேவநல்லூர் பஜாரில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.
    • மாயசுடலை, கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. போலீசார், அவரிடம் இருந்து 110 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்

    வாசுதேவநல்லூர்:

    வாசுதேவநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் நேற்று அப்பகுதியில் ரோந்த சென்றனர். அப்போது பஜாரில் சந்தேகத்திற்கு இடமான முறையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

    அவரை போலீசார் பிடித்து விசாரித்தபோது அவர் அதே பகுதியை சேர்ந்த மாயசுடலை(வயது 21) என்பதும், கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 110 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    வாசுதேவநல்லூரில் வீட்டில் தூங்கிய தாய்- மகளிடம் 5 பவுன் நகை பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் புதுமந்தை 3-வது தெருவை சேர்ந்தவர் சந்திரராஜ் (வயது55). பால் வியாபாரி. இவரது மனைவி இந்திரா. இவர்களது மகள் வாசுதேவி. சம்பவத்தன்று சந்திரராஜ் பால் எடுக்க சென்று விட்டார். இந்திராவும், வாசு தேவியும் வீட்டில் படுத்து தூங்கினர். அப்போது காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கியதாக தெரிகிறது.

    இந்த வேளையில் வீட்டின் பின்பக்க வழியாக மர்ம நபர் வீட்டிற்குள் நுழைந்தார். அவர் தூங்கி கொண்டிருந்த இந்திரா, வாசுதேவி அணிந்திருந்த 5 பவுன் நகைகளை பறித்து சென்று விட்டார். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். சத்தம் கேட்டு திடுக் கிட்டு விழித்த இந்திரா திருடன் திருடன் என கத்தினார்.

    அக்கம் பக்கத்தினர் திரண்டு வருவதற்குள் மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். இதுபற்றி வாசுதேவநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    வாசுதேவநல்லூர் பகுதியில் பெய்த கனமழையால் 5 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் நாசமானது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு தகுந்த நிவாரணம் அளிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். #Paddy #Farmers
    சிவகிரி:

    வாசுதேவநல்லூர் மற்றும் தேனை சுற்றியுள்ள சிந்தாமணி பேரிப்புதூர், ஆத்துவழி, சுப்பையாபுரம், நாரணபுரம், ஏமன்பட்டி, கூடம்பட்டி, கீழப்புதூர், சங்கனாப்பேரி, வெள்ளாணைக்கோட்டை, தாருகாபுரம், மலையடிகுறிச்சி, நெல்கட்டும்செவல் கிராமங்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நன்செய் நிலங்களில் விவசாயிகள் நெல் பயிரிட்டுள்ளனர். நெற்பயிர்கள் நன்கு விளைந்து அறுவடை செய்து முடித்து விட்டனர்.

    இந்நிலையில் கடந்த 9-ந் தேதி இரவு சுமார் 4 மணி நேரம் இடி, மின்னலுடன் பெய்த கனமழையால் அறுவடைக்கு காத்திருந்த மீதி வயல்கள் முழுவதும் நீர் சூழ்ந்து நெற்கதிர்கள் முற்றிலும் தலையோடு சாய்ந்துவிட்டன. இதனால் இப்பகுதியில் சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்களில் நெற்பயிர்களை அறுவடை செய்யமுடியாமல் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். இது குறித்து இப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

    நாற்று நடுவை முதல் அறுவடை காலம் வரை 5 மாதங்கள் ஆகின்றன. ஒரு ஏக்கர் நெல் பயிரிட விவசாயிகள் சுமார் ரூ. 20 ஆயிரம் செலவு செய்கின்றோம். செழிப்பாக மகசூல் கிடைத்தால் ஒரு ஏக்கரில் சுமார் 30 மூட்டைகளை அதாவது 35 ஆயிரம் வருவாய் கிடைக்கும். இந்நிலையில் பருவம் தவறி பெய்த இந்த கனமழையால் வயல் முழுவதும் நீர் சூழ்ந்து நெற்கதிர்கள் அனைத்தும் சாய்ந்துவிட்டன.

    இதன் காரணமாக பாதி நெல் மணிகள் உதிர்ந்துவிட்டன. இன்னும் 10 நாட்களுக்கு வெயில் அடித்தால் தான் அறுவடை எந்திரம் வயலுக்குள் செல்லமுடியும். அதே நேரத்தில் பாதி நெற்பயிர்கள் வீணாகிவிட்டதால் ஏக்கருக்கு 15 மூட்டை தான் கிடைக்கும். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு தகுந்த நிவாரணம் அளிக்க வேண்டும் என்றனர்.

    இப்பகுதியில் சில விவசாயிகள் தங்கள் நெற்பயிர்களை பிரதமரின் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்துள்ளனர். எனவே கனமழையினால் ஏற்பட்ட இழப்பை உரிய அதிகாரிகள் கள ஆய்வு செய்து இழப்பீட்டு தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  #Paddy #Farmers
    ×