search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Veethiula"

    • பிரசித்தி பெற்ற கருட சேவை உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
    • 130-வது கருட சேவை உற்சவம் நேற்று நடைபெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அடுத்த திருநாங்கூர் மற்றும் அதனை சுற்றி 11 திவ்யதேச பெருமாள் கோவில்கள் உள்ளன. ஆண்டுதோறும் தை அமாவாசைக்கு மறுநாள் இந்த 11 கோவில்களில் இருந்து பெருமாள், நாராயண பெருமாள் கோவிலில் எழுந்தருளி பிரசித்தி பெற்ற கருட சேவை உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இதன் ஆண்டு 130-வது கருட சேவை உற்சவம் நேற்று நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு நாங்கூர் மணிமாடக்கோவில் எனப்படும் நாராயண பெருமாள், அரிமேய வின்னகரம் குடமாடுகூத்தர், செம்பொன்னரங்கர், பள்ளிக்கொண்ட பெருமாள், வண்புரு டோத்தம பெருமாள், வைகுந்தநாதன், திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள், திருமேணிக்கூடம் வரதராஜ பெருமாள், கீழச்சாலை மாதவப்பெருமாள், பார்த்தன்பள்ளி பார்த்தசாரதி பெருமாள், திருகாவாளம்பாடி கோபாலன் ஆகிய 11 பெருமாள்களும் ஒருசேர எழுந்தருளினர்.

    அப்போது திருமங்கை ஆழ்வார் அவரது சிஷ்யர் மணவாள மாமுனிகள் ஆகியோர் அனைத்து பெருமாள்களையும் வரவேற்றார். பின்னர், 11 பெருமாள்களும் கோவில் மண்டபத்தில் எழுந்தருள சிறப்பு திருமஞ்சணம் நடைபெற்றது.

    தொடர்ந்து, இரவு 12 மணிக்கு மணிமாடக்கோவில் ராஜகோபுரவாயிலில் மணவாள மாமுனிகளும், ஹம்ஸ வாகனத்தில் குமுத வள்ளி தாயாருடன், திருமங்கை ஆழ்வாரும் எழுந்தருளினர்.தொடர்ந்து, அங்கு 11 பெருமாள்களும் ஒருவர் பின் ஒருவராக தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினர்.

    அவர்களுக்கு திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்யும் நிகழ்வு நடைபெற்று, கும்ப தீப ஆரத்தி எடுக்கப்பட்டு, தங்க கருட சேவை உற்சவம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் திருமங்கை ஆழ்வார் அருளிய பாசுரங்களை பாடினர்.

    அதனைத்தொடர்ந்து, இரவு 2.30 மணிக்கு 11 பெருமாள்களும் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி விடிய, விடிய வீதிஉலா காட்சி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
    • முத்துப்பந்தல் வாகன வீதிஉலா நடந்தது.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் மூன்றாம் நாளான நேற்று காலை சிம்ம வாகனத்திலும், மாலையில் முத்துப்பந்தல் வாகனத்திலும் மலையப்பசாமி வீதி உலா நடைபெற்றது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை சிம்ம வாகன சேவை நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி யோக நரசிம்மர் அலங்காரத்தில் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

     வாகன வீதி உலாவுக்கு முன் மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன, கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை முத்துப்பந்தல் வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி பகாசுரவத அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான இன்று (புதன்கிழமை) காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை கல்ப விருட்ச வாகன வீதிஉலாவும், இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை சர்வபூலபால வாகன வீதிஉலாவும் நடக்கிறது.

    • சிறிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது.
    • மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன, கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 2-வது நாளான நேற்று காலை சிறிய சேஷ வாகன வீதிஉலா, இரவு ஹம்ச வாகன வீதிஉலா நடந்தது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை சிறிய சேஷ வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி, சங்கு-சக்கரதாரியுடன் பத்ரிநாராயணர் அலங்காரத்தில் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    வாகன வீதிஉலாவுக்கு முன்னால் அலங்கரிக்கப்பட்ட யானைகள், குதிரைகள், காளைகள் ஊர்வலமாக அணிவகுத்துக் கொண்டு செல்லப்பட்டன. மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்கப்பட்டன, கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    அதைத்தொடர்ந்து இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை ஹம்ச வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலில் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை சிம்ம வாகன வீதிஉலா, இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை முத்துப்பந்தல் வாகன வீதிஉலா நடக்கிறது.

    • பரதநாட்டிய நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது
    • நாளை காலை சுவாமி- அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் அருகே மெலட்டூர் ஸ்ரீ சித்தி புத்தி தெட்சிணாமூர்த்தி விநாயகர் கோயில் விநாயகர் சதுர்த்தி பிரமோற்சவத்தை முன்னிட்டு ஐந்தாம் நாள் நிகழ்ச்சியாக நேற்று மாலை சென்னையை சேர்ந்த பிரபல பரத நாட்டிய கலைஞர், முனைவர் அர்ச்சனா நாராயணமூர்த்தி அவர்களின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து சுவாமி சித்தி, புத்தி விநாயகர் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.

    நாளை 15 ந்தேதி காலை 9 மணியளவில் சுவாமி அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.

    ஏற்பாடுகளை மெலட்டூர் எஸ்.குமார் மற்றும் கிராமவாசிகள் செய்து இருந்தனர்.

    • திருப்பரங்குன்றத்தில் இன்று மாலை சுப்பிரமணிய சுவாமி வீதி உலா நடக்கிறது.
    • தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளுகிறார்கள்.

    திருப்பரங்குன்றம்

    அறுபடை வீடுகளுன் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிர–மணிய சுவாமி கோவிலில் மாதம் தோறும் வரும் கார்த்திகையின் போது சுப்பிரமணிய சுவாமி தங்க–மயில் வாகனத்தில் எழுத்த–ருளி வீதி உலா வந்து பக்தர் களுக்கு அருள் பாலிப்பது வழக்கம். இதில் ஆடி மாதம் வரும் கார்த்திகை கோலாக–லமாக கொண்டாடப்படும்.

    இன்று ஆடி கார்த்திகை தினத்தை முன்னிட்டு அதி–காலையில் உற்சவர் சன்ன–தியில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு பால், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷே–கங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் கோவிலில் இருந்து புறப்பாடகி கார்த் திகை மண்டபத்தில் எழுந்த–ருளினார்.

    அங்கு காலை முதல் மாலை வரை பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் சுப்பிர–மணிய சுவாமி, தெய்வானை இரவு 7 மணி அளவில் சிறப்பு அலங்காரத்தில் தங்க–மயில் வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள். விழாவுக் கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • அகத்தியருக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி அளித்த தலம்.
    • ஆடிப்பூர விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது.

    அகத்தியருக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி அளித்த தலம்.

    பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆடிப்பூர விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவின் 7-ம் நாளான நேற்று சிறப்பு அலங்காரத்தில் வேதநாயகி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதிஉலா நடைபெற்றது.

    வைத்தீஸ்வரன்கோவிலில் கிருத்திகை வழிபாடு நிகழ்ச்சியில் பஞ்சமூர்த்திகள் புஷ்பபல்லக்கு வீதியுலா நடந்தது.
    சீர்காழி:

    மயிலாடுதுறைற மாவட்டம், வைத்தீஸ்வரன் கோயிலில் புகழ்பெற்றற தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு வைகாசி மாதம் நடைபெறும் கிருத்திகை வழிபாடு மண்டலாபிஷேக கிருத்திகை என்று அழைக்கப்படுகிறது. இதை முன்னிட்டு வள்ளி, தெய்வானை உடனாகிய செல்வமுத்து க்குமாரசாமிக்கு கார்த்திகை மண்டபத்தில் அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு மகா அபிஷேகமும், தொடர்ந்து சண்முகார்ச்சனை மகா தீபாராதனையும் நடைபெற்றது.

    இதில், தருமபுர ஆதீனம் 27-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று வழிபட்டார். தொடர்ந்து, கற்பக விநாயகர், சுவாமி -அம்பாள், செல்வமுத்துக்குமாரசாமி, சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்தி சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் தனித்தனியே புஷ்பப் பல்லக்கில் எழுந்தருளினர். தொடர்ந்து நான்கு வீதிகளில் வீதியுலா நடைபெற்றது.
    • பக்தர்கள் கரகம், காவடி எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர்.
    • இரவு அம்மன் வீதிஉலா நடைபெற்றது.

    பாபநாசம்:

    பாபநாசம் அருகே சரபோஜிராஜபுரம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

    அது சமயம் குடமுருட்டி ஆற்றில் இருந்து திரளான பக்தர்கள் கரகம் காவடி எடுத்து வந்து முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து அம்மன் தீ குண்டத்திற்கு எழுந்தருள கங்கணம் கட்டிய ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்.

    • கடந்த 31-ந் தேதி காப்பு கட்டி மின் அலங்காரத்துடன் அய்யனார் வீதியுலா நடந்தது.
    • 23-ந் தேதி சக்தி கரகம், படுகளம் நிகழ்ச்சி நடந்தது.

    கபிஸ்தலம்:

    பாபநாசம் அருகே மாத்தூரில் அய்யனார், வடிவுள்ள அம்மன், வடுகநாதர், மதுரை வீரன் கோவிலில் வடிவுள்ள அம்மனுக்கு பால்குடம், காவடி, தேர்வலம் வருதலை முன்னிட்டு அய்யனாருக்கு கடந்த 31-ந் தேதி காப்பு கட்டி மின் அலங்காரத்துடன் அய்யனார் வீதியுலா சிறப்பாக நடந்தது.

    விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.

    இதனையொட்டி கடந்த 11-ந் தேதி இரவு எல்லை பிடாரிக்கு காப்பு கட்டுதல், அடுத்தநாள் வடிவுடைய அம்மனுக்கு காப்பு கட்டுதல், 23-ந் தேதி சக்தி கரகம், படுகளம், 25-ந்தேதி காலை பால்குடம், காவடி, கரகம், தொட்டி வெள்ளை விநாயகர் கோவிலில் இருந்து புறப்பாடு நிகழ்ச்சியும், இரவு வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடந்தது.

    தொடர்ந்து, 26-ந் தேதி வடிவுடையம்மன், வடுகநாதர், மதுரை வீரன் ஆகிய 3 தேரை சிட்டி யூனியன் வங்கி தலைவர் பாலசுப்பிரமணியனும் வடம்பிடித்து தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்தனர். சுண்டக்குடி சுவாமிநாதன் மற்றும் மதியழகன் குழுவினரின் சரித்திர நாடக நிகழ்ச்சியும் நடந்தது.

    விழா ஏற்பாடுகளை கிராம நாட்டாண்மைகள், கிராமமக்கள் மற்றும் மாத்தூர் மேற்கு கிராம பக்தர்கள் செய்திருந்தனர்.

    • சிம்ம வாகனத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் பரிவார தெய்வங்களுடன் எழுந்தருளி வீதிஉலா.
    • கப்பரை எடுக்கும் திருவிழா நடைபெற்றது.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த ராஜாளிகாடு அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா விக்னே ஸ்வர பூஜையுடன் தொடங்க ப்பட்டது.

    தொடர்ந்து, நேற்று வேதாரண்யேஸ்வரர் கோவிலில் இருந்து பக்தர்கள் பால் காவடிகள் எடுத்து வந்து அம்பாளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

    பின், அலங்கரிக்கப்பட்ட முத்து பல்லக்கில் சிம்ம வாகனத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் பரிவார தெய்வங்களுடன் மேள தாளங்கள் முழங்க எழுந்தருளி வீதிஉலா நடை பெற்றது.

    வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர்.

    பின், கப்பரை எடுக்கும் திருவிழா நடைபெற்றது.

    விழா ஏற்பாடுகளை கோவில் வளர்ச்சி குழு தலைவர் மாதவன் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.

    • தினமும் அம்மன் வீதிஉலா நடைபெற்று வந்தது.
    • மாவிளக்கு தீபம் ஏற்றி பழ வகைகளை வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை அருகே சேந்தங்குடியில் உள்ள அமர்ந்தாளம்மன், துர்கா பரமேஸ்வரி கோவிலில் பங்குனி உற்சவ திருவிழா கடந்த மாதம் 22-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    தொடர்ந்து, தினமும் அம்மன் வீதிஉலா நடைபெற்று வந்தது.

    விழாவின் சிகர நிகழ்வான தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.

    இதையொட்டி, அமர்ந்தாளம்மன் மற்றும் துர்கா பரமேஸ்வரி இருவரும் 2 தேர்களில் எழுந்தருளி தேரோட்டம் நடைபெற்றது.

    ஒவ்வொரு வீட்டு வாசலிலும், மண்ணினால் மேடை அமைத்து அதில் மாவிளக்கு தீபம் ஏற்றி பழ வகைகளை வைத்து பூஜை செய்து வழிபட்டனர்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர்.

    விழாவில் டாக்டர் குரு குடும்பத்தார்கள், முத்துகுமாரசாமி, ரமேஷ், விழா குழுவினர்கள், குலதெய்வ குடும்பத்தார்கள், தெருமக்கள், இளைஞர் மன்றத்தினர் திரளானோர் கலந்து கொண்டனர்.

    • கோபுர வாசல் வழியாக வெளியே வந்து, வீதி உலா தொடங்கியது.
    • பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி மகாபிஷேகம் நடைபெறுகிறது.

    பூதலூர்:

    திருக்காட்டுப்பள்ளி ஸ்ரீ அக்னிஸ்வர சுவாமி கோவிலில் பங்குனி உத்திர பெருவிழாவின் 10 ஆம் நாளான இன்று காலை கோவில் உள் மண்டபத்தில் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து பக்தர்களின் பக்தி கோஷம் மற்றும் நாதஸ்வர, கிராமிய இசை முழக்கத்தோடு பஞ்சமூர்த்திகளும் கோவிலில் கோபுர வாசல் வழியாக வெளியே வந்து, வீதி உலா தொடங்கியது.

    திருக்காட்டுப்பள்ளி பஸ் நிலையம் அருகே உள்ள அக்னி தீர்த்தத்தில் பஞ்ச மூர்த்திகளும் நிறுத்தப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. அதனை தொடர்ந்து திருக்காட்டுப்பள்ளி மற்றும் ஒன்பத்துவேலி நகர வீதிகளில் வழியாக வீதியுலா நடைபெற்ற பின்பு இன்று மாலை திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆற்றில் அமைக்க ப்பட்டுள்ள அலங்கார பந்தலில் பஞ்சமூர்த்திகள் எழுந்து அருளப்பட்டு, அங்கே மகாபிஷேகம் நடைபெறுகிறது.

    அதனை தொடர்ந்து இரவு நாட்டுப்புற மக்கள் இசை பாடகர் செந்தில் கணேஷ் -ராஜலட்சுமி குழுவினரின் இசை நிகழ்ச்சி, வாணவேடிக்கையும் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை பங்குனி உத்திர பெருவிழா குழு தலைவர் வக்கீல் ஜெயக்குமார், மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    ×