என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "View"
- பழமை மாறாமல் மேம்பாட்டு பணிகள், வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது.
- பணிகளை விரைவாக முடிக்குமாறு அங்கு பணியில் இருந்தவர்களிடம் அறிவுறுத்தினார்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் பழைய மாவட்ட கலெக்டரக அருங்காட்சியகத்தில் பழமை மாறாமல் மேம்பாட்டு பணிகள், வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த வளர்ச்சி பணிகளின் முன்னேற்றம் குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பணிகள் நடைபெறும் விதம் குறித்து ஆய்வு நடத்தினார்.
இதையடுத்து தஞ்சை அரண்மனை வளாக கலைக்கூடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளையும் ஆய்வு செய்தார். அப்போது இந்த பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் சரவணகுமாரிடம் கேட்டு அறிந்தார்.
இந்த வளர்ச்சிப் பணிகளை விரைவாக முடிக்குமாறு அங்கு பணியில் இருந்தவர்களிடம் அறிவுறுத்தினார்.
- புதிய மின்விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது.
- நாகை எம்.எல்.ஏ ஜெ.முகம்மது ஷா நவாஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையம் மிகவும் சிதிலமடைந்து காணப்பட்டது.
இதனால் அங்கு வந்து செல்லும் பயணிகள் மிகுந்த சிரமங்களை சந்தித்தனர். எனவே, அதை சீரமைக்க வேண்டும் என்று நீண்டகாலமாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், மூலதன மானிய நிதியிலிருந்து ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, நாகை பேருந்து நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகின்றன.
பேருந்து நிலையத்திலுள்ள கட்டிடத்தின் மேல் தளத்தில் தட்டு ஓடு பதித்தல், நடைபாதையில் டைல்ஸ் மற்றும் பேவர் பிளாக் அமைத்தல், தார்ச்சாலை அமைத்தல், சாலையோர வியாபாரிகளுக்கு கடைகள் கட்டுதல், புதிய மின்விளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருவதை நாகை எம்.எல்.ஏ ஜெ.முகம்மது ஷா நவாஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மழைக்காலத்திற்கு முன்பு பணிகளை விரைந்து முடிக்கும்படி அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
ஆய்வின் போது, நாகை நகராட்சி ஆணையர், செயற் பொறியாளர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- படிப்பு தான்வாழ்க்கை யை மாற்றும், ஒருவரை வெளிஉலகுக்கு நிரூபிக்க உதவும் ஒரே ஆயுதம் கல்வி மட்டுமே என்று கூறினார்.
- ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
தஞ்சாவூர்:
ஆசிரியர் தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் தஞ்சை மேம்பாலம் அரசு பார்வை திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலை பள்ளி மாணவ- மாணவிகளுக்கு சுமார் 300 விலையில்லா நோட்டு புத்தகங்களும் பள்ளி அளவில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழும்பரிசுகளும் வழங்கப்பட்டன .
நிகழ்ச்சியில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில் பார்வைத்திறன் குறையுடையோருக்கான இந்தச் சிறப்பு பள்ளியில் பிரெய்லி வழியில் பாடங்கள் நடத்தப்பட்டு சென்ற ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 பொதுத் தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
படிப்பு தான்வாழ்க்கையை மாற்றும், ஒருவரை வெளிஉலகுக்கு நிரூபிக்க உதவும் ஒரே ஆயுதம் கல்வி மட்டுமே என்று கூறினார்.
பார்வை திறன் குறைபாடு கொண்ட மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பள்ளி அளவில் நடைபெற்ற கட்டுரை, பேச்சுப்போட்டி, நடனம், சதுரங்கம்உள்ளிட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ மாணவிகளுக்கு கலெக்டர் பரிசு, சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் போக்கு வரத்து பிரிவு காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன், மேற்கு இன்ஸ்பெக்டர் சந்திரா, தொழிலதிபர் நார்த்தாங்குடி பாலசுப்ரம ணியன், பார்வை திறன்கு றையுடை யோருக்கான அரசு மேல்நிலை பள்ளி முதல்வர் சோபியா, ஜோதி அறக்கட்டளை செயலாளர் டாக்டர் பிரபு ராஜ்குமார் ஆகியோர்கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை ஜோதி அறக்கட்டளை மேலாளர் ஞானசுந்தரி தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்