என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "village administrative officers"
- கலெக்டரிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
- போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த, யாரும் வராததால், விடிய விடிய தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:
தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் டிஜிட்டல் கிராப் சர்வே பணியில் அதற்கான உபகரணங்கள் சர்வே உட்பிரிவு ஒன்றுக்கு ரூ.10 வழங்கும் பட்சத்தில் இப்பணியை செய்ய இயலும் என தீர்மானம் வழங்கிய நிலையில், இப்பணியை செய்யாத தொண்டமாநத்தம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயராமமூர்த்தியை எந்த ஒரு விளக்கமும் இல்லாமல், பணியிடை நீக்கம் செய்த கடலூர் கோட்டாட்சியரை கண்டித்தும், அவரை உடனடியாக பணியில் சேர்க்க வலியுறுத்தியும் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். மேலும் கலெக்டரிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் நேற்று மாலை முதல் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த, யாரும் வராததால், விடிய விடிய தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தற்போது வரை அவர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
இது குறித்து மாவட்ட செயலாளர் ஜெயராமன் கூறுகையில், கிராம நிர்வாக அலுவலர் ஜெயராம மூர்த்தி என்பவரை பணியிட நீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்து அவருக்கு உடனடியாக ஆணை வழங்க வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி மாவட்டம் முழுவதும் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களை அழைத்து போராட்டம் தொடர்ந்து நடைபெற உள்ளது என தெரிவித்தார்.
கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம் 2-வது நாளாக இன்றும் தொடர்வதால் வருவாய் துறையின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
- சப்- கலெக்டர் உத்தரவு
- உடனடியாக புதிய பணியிடத்தில் சென்று சேர வேண்டும்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்கள் 13 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி பீஞ்சமந்தையில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த குணராஜ் அணைக்கட்டுக்கும், நந்திவர்மன் கீழ்கிருஷ்ணா புரத்தில் இருந்து வெட்டுவா னத்திற்கும், முனிரத்தினம் பொய்கையில் இருந்து பள்ளிகொண்டாவுக்கும், தமிழ்அரசு பூதூரில் இருந்து கீழாச்சூருக்கும், அபிலாஸ் சின்னபள்ளிக்குப்பத்தில் இருந்து ஒடுகத்தூர் மற்றும் பீஞ்சமந்தைக்கு கூடுதல் பொறுப்பு, கார்த்தி கீழாச்சூரிலிருந்து செதுவாலைக்கும், சிவமூர்த்தி ஒடுக்கத்தூரிலிருந்து கருங்காலிக்கும், தமிழழகன் அணைக்கட்டில் இருந்து திப்பசமுத்திரத்திற்கும், ஞானசுந்தரி பள்ளி கொண்டாவில் இருந்து பொய்கைக்கும், தங்கமுத்து வெட்டு வாணத்தில் இருந்து பூதூருக்கும், கிருஷ்ணவேணி கருங்காலியிலிருந்து கீழ்கிருஷ்ணாபுரத்திற்கும், குமரேசன் மேல்அர சம்பட்டில் இருந்து சின்ன பள்ளிக்குப்பத்திற்கும், அன்பு செதுவாலை யிலிருந்து மேல்அரசம்பட்டுக்கும் பணியிடமாற்றம் செய்து வேலூர் சப்-கலெக்டர் கவிதா உத்தரவிட்டு உள்ளார்.
மேலும் பணியிட மாற்றம் செய்யப்ப ட்டவர்கள் உடனடியாக புதிய பணியி டத்தில் சென்று சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- லூர்து பிரான்சிஸ் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, சங்கராபுரம் வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
- ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, சங்கராபுரம் வட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் தாலுகா அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். தாசில்தார் சரவணன், தலைமையிடத்து துணை தாசில்தார் அனந்தகிருஷ்ணன், தேர்தல் துணை தாசில்தார் பசுபதி, மாவட்ட துணைத்தலைவர் ராஜா, மாவட்ட தலைமை நிலைய செயலாளர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் வரதராஜன் கண்டன உரையாற்றினார். இதில் வட்ட பொருளாளர் பர்க்கத்துன்னிஷா, வருவாய் ஆய்வாளர் கல்யாணி, கிராம நிர்வாக அலுவலர்கள் கார்த்தி, தீபா, ஜெயலட்சுமி, சண்முகபிரியா, பாரதி மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
- மேலூர் தாலுகா அலுவலக முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பழைய ஓய்வூதியம் திட்டத்தை நடைமுறைபடுத்தவும், கருணைப் பணி நியமனங்களை கருணையோடு காலதாமதமின்றி வரன்முறை செய்யவும், தகுதிகாண் பருவத்திற்கான விதிமுறைகளை தளர்வு செய்யவும், கிராம நிர்வாக அலுவலர்களின் பதவி காலம் 6 ஆண்டுகளை 3 ஆண்டுகளாக குறைத்திடவும், மக்கள் தொகை பரப்பளவு அடிப்படையில் கிராமங்களை பிரித்து புதிய பணியிடங்களை உருவாக்கிடவும், பயணப் படியை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்க கோரியும், நகர நிலவரி திட்ட கணக்குகளை கிராம நிர்வாக அதிகாரிகளிடம் அளித்திட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.
- கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அரக்கோணம்:
அரக்கோணம் சப் கலெக் டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை அரக்கோ ணம், நெமிலி தாலுகாவை சேர்ந்த விஏஓகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார்.
நெமிலி வட்ட தலைவர் கோபிநாத் முன்னிலை வகித்தார். அரக் கோணம் வட்ட தலைவர் ராஜேஷ் பழைய திட்டத்தை வரவேற்றார். பென்ஷன் மீண்டும் கொண்டு வரவேண்டும்.
ஈட்டிய விடுப்புக்கான சம்பளத்தை விரைந்து வழங்க வேண்டும். மேலும் பட்டம் முடித்த விஏஓ க்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதில் விஏஓகள் கொய்யாமணி, லட்சுமணன், டோமேசன் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட விஏஓ க்கள் கலந்து கொண்டனர்.
- திருப்பூர் மாவட்டத்தில் 235 ஊராட்சிகள் உள்ளன.
- கிராம நிர்வாக அலுவலர் அளவிலான பணிகள் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் 235 ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு கிராம நிர்வாக அலுவலர் பணியில் இருப்பார்கள். இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு கிராம நிர்வாக அலுவலர் அளவிலான பணிகள் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் புதியதாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அதில், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கின்றனர். கிராம நிர்வாக அலுவலர்கள் பணிநாட்களில் மதியம் வரை கட்டாயம் அலுவலகத்தில் இருக்க வேண்டும்.
அலுவல் நிமித்தமாக மதியத்துக்கு பிறகே வெளியே செல்ல வேண்டும். வெளியே செல்லும் காரணத்தை அங்குள்ள தகவல் பலகையில் எழுதி வைத்துவிட்டு செல்ல வேண்டும். கட்டாயம் தொடர்பு எண் எழுதி வைத்திருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாமக்கல் பூங்கா சாலையில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.
கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயணப்படியை அடிப்படை ஊதியத்தில் 5 சதவீதம் உயர்த்தி வழங்கிட வேண்டும். பேரிடர் மேலாண்மை பணிகளை செய்யும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தனி ஊதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அம்மா திட்ட செலவின நிலுவைத்தொகை மற்றும் இணையதள செலவின நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உடனடியாக மடிக் கணினி வழங்க வேண்டும். பொங்கல் வேட்டி-சேலைகளை ரேஷன்கடைகள் மூலமே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
இந்த போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன் வரவேற்று பேசினார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் பழனியப்பன், நடராஜன், சிவஞானம் ஆகியோர் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தனர். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த போராட்டம் மாலை 4 மணிக்கு முடிவடைந்தது.
முன்னாள் வட்ட தலைவர்கள் சுப்பிரமணியம், தர்மலிங்கம் ஆகியோர் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தனர். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் தினேஷ்குமார் நன்றி கூறினார்.
இதேபோல் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு மின்சாரம், கழிப்பறை மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை வழங்க வேண்டும். மாவட்ட மாறுதல்களை ஒரே அரசாணை மூலம் உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கடந்த 10-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இவர்களின் போராட்டம் நேற்றும் நீடித்தது.
இதையொட்டி கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் ராஜ்குமார் வரவேற்று பேசினார். இதில் முன்னாள் மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஈரோடு மாவட்ட தலைவர் பழனிசாமி, பொருளாளர் சதீஷ்கமல், ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்பாபு உள்பட திரளான கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
கிராம நிர்வாக அலுவலர்கள் அலுவலகங்களில் மின்சார வசதி, குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் கடந்த 12 நாட்களாக கிராம நிர்வாக அலுவலர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.கோவை மாவட்டத்திலும் இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது. முதலில் ஆன்லைன் பணியை புறக்கணித்தனர். பின்னர் கோட்ட அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
கடந்த 10 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று 12 -வது நாளாக போராட்டம் நடைபெற்றது.
இதையொட்டி கலெக்டர் அலுவலகம் முன் கிராம நிர்வாக அலுவலர்கள் திரண்டனர். அவர்கள் அலுவலக நுழைவு வாயில் முன் தரையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க பிரதிநிதிகளை தமிழக அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இல்லாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்றனர். பின்னர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். போராட்டம் குறித்து மாவட்ட தலைவர் பிரஸ் நேவ், செயலாளர் சரவணன், பொருளாளர் சந்திரசேகர் ஆகியோர் விளக்கி பேசினார். முற்றுகையில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர்களை போலீசார் கைது செய்தனர். 65 பெண்கள் உள்பட 130 பேர் கைது செய்யப்பட்டனர். #tamilnews
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்