என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "villupuram rain"
- வானூர் பகுதியில் உள்ள ஆரோவில், கோட்டக்குப்பம் ஆகிய பகுதிகளிலும் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.
- திடீர் திடீரென மிதமானது முதல் பலத்த மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
மரக்காணம்:
வளிமண்ட மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று அதிகாலை முதல் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், கோட்டக்குப்பம், வானூர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.
கடந்த காலங்களில் மழை விட்டு விட்டு பெய்து வந்த நிலையில் இன்று அதிகாலை முதல் மழை விடாமல் பெய்து வருகிறது. இதனால் மரக்காணம் பகுதியில் உள்ள ஏரி, குளம், குட்டை தண்ணீர் நிரம்பி விவசாயிகளுக்கு பயிரிட தேவையான தண்ணீர் கிடைக்கும். அதுபோல் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும். அதேசமயம் மரக்காணத்தில் உள்ள உப்பளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. உற்பத்தி செய்யப்பட்ட 25 ஆயிரம் டன் உப்பை பாதுகாப்பாக தார்ப்பாய் போட்டு மூடி வைத்துள்ளனர்.
வானூர் பகுதியில் உள்ள ஆரோவில், கோட்டக்குப்பம் ஆகிய பகுதிகளிலும் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. திடீர் திடீரென மிதமானது முதல் பலத்த மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- மரக்காணத்தில் பக்கிங்காங் கால்வாயில் மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு சொந்தமான 2500 ஏக்கர் உப்பளம் உள்ளது.
- உப்பளத்தில் 500 கூழித்தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
விழுப்புரம்:
தமிழகத்தில் கோடை காலம் முடிந்து பல நாட்கள் ஆனது. இந்நிலையில் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தாலும் அவ்வப்போது மழை பெய்த வண்ணம் இருக்கிறது. இதில் குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்தாலும் இரவு நேரத்தில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினத்திலிருந்து 2 நாட்கள் காலை நேரத்தில் வெயில் வாட்டி வந்த நிலையில் பொதுமக்கள் வெயிலினால் ஏற்படும் புழுக்கம் மற்றும் அலர்ஜியில் பெரிதும் அவதிக்குள்ளாகினர். இதனையடுத்து நேற்று மாலை குளிர்ந்த காற்று வீசி இரவு 11 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் மழை பெய்தது. இதனால் வெயிலினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து பொதுமக்கள் விடுபட்டு மகிழ்ச்சி அடைந்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் மணம்பூண்டியில் 27, சூரப்பட்டு 21, முகயைூர் 20, கெடார் 15 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த மழை அரகண்டநல்லூர், செஞ்சி, திண்டிவனம், அனந்தபுரம், விக்கிரவாண்டி, கோலியனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்தது. நேற்று பெய்த மழை மற்றும் பலத்த காற்றால் விழுப்புரம் நகராட்சி வடக்கு ரெயில்வே பகுதியில் இருந்த 100 ஆண்டுகள் பழமையான மரம் வேரோடு முறிந்து அருகில் இருந்த புத்துமாரி அம்மன்கோவில் மீது விழுந்தது. இதனால் புத்துமாரி அம்மன்கோவில் சேதமானது. அப்போது கோவிலில் யாரும் இல்லாததால் எந்தவித பாதிப்பும் இல்லை. கோவில் மரம் விழுந்து முழுவதும் சேதமானது. இதுகுறித்து தகவல் அறிந்த நகராட்சி ஊழியர்கள் மற்றும் ரெயில்வே பொதுபணித்துறை பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அந்த இடம் சிறிது நேரம் பரபரப்பாக இருந்தது.
இதேபோல் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் பக்கிங்காங் கால்வாயில் மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு சொந்தமான 2500 ஏக்கர் உப்பளம் உள்ளது. இந்த உப்பளத்தில் 500 கூழித்தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் ஜனவரி மாதத்திலிருந்து ஆகஸ்ட் மாதம் வரை உப்பளத்தில் வேலை தொடர்ந்து நடைபெற்று வருவது வழக்கம்.
இந்நிலையில் தற்போது மழை பெய்யும் காரணத்தால் ஜனவரி-ஜூலை மாதம் வரை உப்பளத்தில் வேலை பார்ப்பதற்கு ஊழியர்களுக்கு வேலை வழங்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று பெய்த மழையினால் 2500 ஏக்கர் உப்பளம் மழை நீரில் முழ்கியது. இதனால் உப்பளத்தில் மழை நீர் கடல் போல் காட்சியளித்தது. இங்கு வேலை பார்க்கும் உப்பள உற்பத்தி கூலித்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்பு குள்ளானது. இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத நிலையில் நிவாரணம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட கூலித்தொழிலாளர்கள் கோரிக்கை விடுகின்றனர். விழுப்புரத்தில் நேற்று பெய்த மழையினால் பெரும் சேதம் ஏற்பட்டது.
விழுப்புரம்:
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகி இருப்பதால் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் விட்டு விட்டு பரவலாக மழை பெய்ய கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
இதையடுத்து விழுப்புரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான தோகைப்பாடி, நன்னாடு, வழுதரெட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலையில் இருந்து லேசாக மழை தூரிக்கொண்டிருந்தது. இரவு 9.30 மணியளவில் பலத்த மழை பெய்தது.
2 மணி நேரம் நீடித்த இந்த மழையினால் சாலைகளில் தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி நின்றது. இன்று காலையும் அந்த பகுதிகளில் தொடர்ந்து மழை தூறி கொண்டே இருந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோலியனூர், அரசூர், மயிலம், முண்டியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.
கடலூரில் நேற்று முன்தினம் இரவு முதல் சாரல் மழை விட்டு விட்டு பெய்யத்தொடங்கியது. இந்த நிலையில் நேற்று இரவும் மழை தொடர்ந்து தூரிக்கொண்டே இருந்தது.
இதைத்தொடர்ந்து இன்று காலை 9 மணியளவில் பலத்த மழை பெய்தது. இந்தமழை சிறிது நேரம் நீடித்தது. இதனால் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடியும், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியும் வாகனங்களை ஓட்டிசென்றனர். தொடர்ந்து மழை லேசாக விட்டு விட்டு தூரிக்கொண்டே இருந்தது.
பெண்ணாடம் மற்றும் திட்டக்குடி பகுதிகளில் நேற்று காலை 7 மணியில் இருந்து லேசாக மழை பெய்தது. இரவு 7 மணியளவில் பலத்த மழை பெய்தது. சுமார் 1 மணிநேரம் நீடித்தது. இதைத்தொடர்ந்து மழைநீர் வடிந்து செல்ல வழியில்லாமல் அந்த பகுதியில் உள்ள பெண்ணாடம் கடை வீதிகளில் வெள்ளம்போல் தேங்கி நின்றது.
ஸ்ரீமுஷ்ணம் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளான அம்புஜ வல்லி பேட்டை, கள்ளிப்பாடி, காவனூர், எசனூர், வெங்கடசமுத்திரம், நகரபாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 10 மணியளவில் பலத்த மழை பெய்தது.
1 மணிநேரம் பெய்த மழையினால் அந்த பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதேபோல் கடலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூர், விருத்தாசலம், நெய்வேலி, சிதம்பரம், புவனகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வந்தது.
கடலூர் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு (மி.மீட்டர்) பின்வருமாறு:-
சிதம்பரம்-35, கொத்தவாச்சேரி-32, அண்ணாமலைநகர்-31, சேத்தியாத்தோப்பு-30, புவனகிரி-27, ஸ்ரீமுஷ்ணம்-23.40, பரங்கிப்பேட்டை-23, காட்டு மன்னார் கோவில்-22, வடக்குத்து-19, குறிஞ்சிப்பாடி-15, கடலூர்-15.80, லால்பேட்டை-13.80, கீழ்செறுவாய்-13, வேப்பூர்-11, தொழுதூர்-7, விருத்தாசலம்-5.30, பண்ருட்டி-3.
கடலூர்:
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை நேற்று தொடங்கியது. இதைத் தொடர்ந்து கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணிமுதல் மழை பெய்யத்தொடங்கியது. கடலூர் நகரில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இரவு 1 மணிக்கு தொடங்கிய மழை அதிகாலை 5 மணிவரை தொடர்ந்து பெய்தது.
நேற்று காலையில் சாரல் மழை பெய்தது. பின்னர் விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இன்றும் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
கடலூர், திருப்பாதிரி புலியூர், நெல்லிக்குப்பம் போன்ற இடங்களில் நேற்று இரவு விடிய, விடிய பலத்த மழை பெய்தது. அதுபோல் சேத்தியாத்தோப்பு, ஒரத்தூர், வளையமாதேவி, மஞ்சக்கொல்லை, வீரமுடையான் நத்தம், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, லால்பேட்டை போன்ற பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
அதுபோல் ஸ்ரீமுஷ்ணம், குணமங்கலம், புதுகுப்பம், சேத்தம்பட்டு, காவனூர், காட்டுமன்னார்கோவில், குமராட்சி மற்றும் பண்ருட்டி, கண்டரக்கோட்டை, புதுப்பேட்டை, காடாம்புலியூர், அண்ணாகிராமம் போன்ற பகுதிகளில் காலை 6 மணிக்கு பெய்யத் தொடங்கிய மழை தொடர்ந்து பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கி காணப்பட்டது. மழை தொடர்ந்து பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் கடும் அவதியடைந்தனர். குடைபிடித்தபடியும், நனைந்தபடியும் செல்லும் நிலை ஏற்பட்டது.
கடலூர் தேவனாம்பட்டினம், தாழங்குடா போன்ற பகுதிகளில் இன்றும் கடல் கொந்தளிப்பும், பலத்த காற்றும் வீசியது. இதனால் மீனவர்கள் இன்று2-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. படகுகள் கடற்கரையோரம் நிறுத்தப்பட்டுள்ளன.
பரங்கிப்பேட்டை 6 மில்லி மீட்டர்.
அண்ணாமலைநகர் -58.80
சிதம்பரம் -46.80.
கடலூர்-29.30
வானமாதேவி-16.50
பண்ருட்டி-9.20
ஸ்ரீமுஷ்ணம்-9.10
குப்பநத்தம்-7.50
மாவட்டம் முழுவதும் 461.25 மி.மீ. மழை பெய்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் சாரல்மழை பெய்தது. மரக்காணம், அனுமந்தை, கூனிமேடு, எண்டியூர், பிரம்மதேஷம் போன்ற பகுதிகளில் காலை 6 மணிக்கு லேசான மழை பெய்யத்தொடங்கியது. பின்னர் பலத்த மழை பெய்தது. 9 மணி வரை பலத்த மழை கொட்டியதால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
எக்கியார்குப்பம், கூனிமேடுகுப்பம், கீழ்புத்துப்பட்டு, அனிச்சக்குப்பம் உள்பட 19 மீனவ கிராம மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கடல் கொந்தளிப்பும், சூறைகாற்று வீசுவதால் சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.
இதனால் படகுகள் அனைத்தும் கடற்கரையோரம் நிறுத்தப்பட்டன.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் விழுப்புரத்தில் மழை பெய்தது. இந்த மழை 6.20 மணி வரை நீடித்தது. அதன்பிறகு இரவு 12 மணி அளவில் இடி-மின்னல் மற்றும் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் 45 நிமிடங்கள் பெய்தது.
இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கி நின்றது.
விழுப்புரம் மாவட்டம் மயிலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான கூட்டேரிப்பட்டு, ரெட்டணை, குணமங்கலம், வெளியனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை 6 மணிக்கு பலத்த சூறாவளி காற்று வீசியது. சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது.
தெருக்களில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து அடித்த சூறாவளி காற்றால் மயிலம், ரெட்டணை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சாலையோரம் மற்றும் ஊர் பகுதிகளில் இருந்த 50-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. இதில் பல மரங்கள் மேலே சென்ற மின்வயர்கள் மீது விழுந்ததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதனால் அந்த பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. மின்வயர்கள் மீது விழுந்த மரங்களை அப்புறப்படுத்ததால் இரவு முழுவதும் மின்சாரம் வரவில்லை. விடிய விடிய மின்தடை நீடித்தது. இன்று காலை 10 மணி வரை மின்சாரம் வரவில்லை. இரவில் கொசுக்கடியால் தூங்க முடியாமல் முதியவர்கள், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். திருவெண்ணைநல்லூர் பகுதியில் நேற்று மாலை 6 மணி முதல் இரவு 10 மணிவரை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.
திருவெண்ணைநல்லூர் அதன் சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்டுள்ள நெல் பயிர்கள் தற்போது அறுவடைக்கு தயாராக இருந்தன. தற்போது பெய்த இந்த மழையால் நெல் பயிர்களை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
உளுந்தூர்பேட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான எலவ னாசூர் கோட்டை, மடப்பட்டு, களமருதூர், காட்டு நெமிலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 9 மணி அளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து இடை விடாது பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதேபோல் கடலூரிலும் நேற்று மாலை 6 மணிக்கு லேசான மழை பெய்ய தொடங்கியது. சற்று நேரத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.
இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இடி-மின்னலுடன் பெய்த மழையால் சாலையோர பள்ளங்களில் மழை நீர் தேங்கி நின்றது.
இதேபோல் கடலூர் மாவட்டம் பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று மாலை 5 மணியில் இருந்து இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இரவு 8 மணி வரை இந்த மழை நீடித்தது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலை அடுத்த லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும்.
வீராணம் ஏரி மற்று அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்றுமாலை லேசான மழை பெய்தது. இன்று காலை ஏரியின் நீர் மட்டம் 46.80 அடியாக உள்ளது. ஏரியில் இருந்து விவசாயத்துக்கு 256 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. மேலும் சென்னை குடி நீருக்காக 74 கனஅடி தண்ணீர் ஏரியில் இருந்து அனுப்பப்படுகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்