search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Volunteer"

    • கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் கார்கே கட்சியின் பூத் ஏஜெண்டுகளை நாய்களுடன் ஒப்பிட்டார்.
    • தட்டில் வைத்த அந்த பிஸ்கட்டை ராகுல் காந்தி காங்கிரஸ் தொண்டர் ஒருவருக்கு கொடுத்தார்.

    ராஞ்சி:

    காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி 2-வது கட்ட நடை பயணத்தை கடந்த 14-ந் தேதி மணிப்பூரில் இருந்து தொடங்கினார். அவர் தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் 'பாரத ஒற்றுமை நீதி' யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.

    ஜார்க்கண்ட் பாத யாத்திரையின் போது ராகுல்காந்தி சர்ச்சையில் சிக்கி உள்ளார். நாய் சாப்பிட மறுத்த பிஸ்கட்டை அவர் காங்கிரஸ் தொண்டருக்கு கொடுக்கும் வீடியோவை பா.ஜனதா வெளியிட்டு விமர்சனம் செய்துள்ளது.

    ராகுல்காந்தி திறந்த வாகனத்தில் சென்றார். அப்போது தன்னுடன் இருந்த நாய்க்கு பிஸ்கட்டை ஊட்டினார். அதை சாப்பிட மறுத்ததால் அவர் தட்டில் வைத்தார். தட்டில் வைத்த அந்த பிஸ்கட்டை ராகுல் காந்தி காங்கிரஸ் தொண்டர் ஒருவருக்கு கொடுத்தார். வீடியோ பதிவில் இந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளது.

    பா.ஜனதா தகவல் தொழில் நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:-

    கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் தலைவர் கார்கே கட்சியின் பூத் ஏஜெண்டுகளை நாய்களுடன் ஒப்பிட்டார். தற்போது ராகுல் காந்தி நாய் சாப்பிடாத பிஸ்கட்டை கட்சி தொண்டருக்கு கொடுத்துள்ளார்.

    ஒரு கட்சியின் தலைவரும், பட்டத்து இளவரசரும் கட்சி தொண்டர்களை நாய்களை போல் நடத்தினால் அத்தகைய கட்சி காணாமல் போவது இயற்கையானது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    மற்றொரு பா.ஜனதா தலைவர் சி.டி. பல்லவி கூறும்போது, "தற்போது அசாம் முதல்-மந்திரியாக இருக்கும் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை ராகுல்காந்தி அவமரியாதை செய்து தனது நாய் சாப்பிடும் அதே தட்டில் பிஸ்கட் சாப்பிட வற்புறுத்தினார்" என்றார்.

    அசாம் பா.ஜனதா முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா இதற்கு பதில் அளித்து தனது எக்ஸ் வலைதள பதிவில் பதில் கூறி இருப்பதாவது:-

    ராகுல்காந்தி மட்டுமல்ல ஒட்டு மொத்த குடும்பத்தாராலும் அந்த பிஸ்கட்டை என்னை சாப்பிட வைக்க முடியவில்லை. நான் ஒரு பெருமைமிக்க அசாமியன் மற்றும் இந்தியன் ஆவேன். நான் சாப்பிட மறுத்தேன். காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்தேன்.

    கட்சி தொண்டருக்கு நாயால் நிராகரிக்கப்பட்ட பிஸ்கட் கொடுத்த ராகுல் காந்தியின் இது போன்ற சம்பவம் தான் காங்கிரசை விட்டு வெளியேற செய்தது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    பா.ஜனதா வெளியிட்ட இந்த வீடியோ வைரலாகி உள்ளது.

    • முதலுதவி பயிற்சி ஒவ்வொரு தனி நபருக்கும் அவசியமானது.
    • முதலுதவி பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும்.

    தஞ்சாவூர்:

    உலகெங்கிலும் உள்ள பலர் சரியான நேரத்தில் மருத்துவ உதவி கிடைக்காததால் விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் பலர் உயிரை இழக்கிறார்கள்.

    ஆனால் ஒரு நபருக்கு முதலுதவி பற்றிய அறிவு இருந்தால் தொழில்முறை உதவிக்காக காத்திருக்கும் போது ஒருவரின் உயிரைக் காப்பாற்ற முடியும். மேலும் பேரழிவுகள் மற்றும் தினசரி அவசர நிலைகளின் தாக்கத்தை பெருமளவில் குறைக்க உதவும்.

    அந்த வகையில் உலக முதலுதவி தினத்தை முன்னிட்டு பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு முதலுதவி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மற்றும் 108 ஆம்புலன்ஸ் சார்பில் தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு உள்ளரங்கில் 100 ஆப்தமித்ரா, ரெட்கிராஸ் தன்னார்வலர்கள் முதலுதவி செய்யும் முறையினை ஒத்திகையாக வெளிப்படுத்தினர்.

    அப்போது ஒருவரை மயக்க நிலையில் இருந்து காத்தல், எலும்பு முறிவு, காயங்களுக்கு கட்டு போடுதல், அடிபட்டவர்களை சுமந்து செல்லுதல் மற்றும் மிகவும் அத்தியாவசியமான கார்டியோ புல்மோனரி மறுமலர்ச்சி குறித்தும் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

    இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன் பேசும்போது,

    முதலுதவி பயிற்சி ஒவ்வொரு தனி நபருக்கும் அவசியமானது.

    பேரிடர் காலங்களிலும், விபத்து காலங்களிலும் கோல்டன் ஹவர் என சொல்லப்படும் நேரத்தில் முறையான முதலுதவி செய்வதன் மூலம் பல உயிர்களை காப்பாற்ற முடியும்.

    அத்தமித்ரா தன்னார்வலர்கள் அதற்கு முன்னோ டியாக திகழ்கிறார்கள்.

    மாவட்டத்திற்கு அவர்கள் பெரிதும் உதவிகரமாக திகழ்வார்கள்.

    ரெட்கிராஸ் அமைப்பின் மூலம் முதலுதவி பயிற்சி மாவட்டத்திலுள்ள அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு தொடர்ந்து வழங்கப்படும் என்றார்.

    இந்நிகழ்வில் யூத் ரெட்கிராஸ் ஆலோசகர் ஜெயக்குமார், ஜூனியர் ரெட்கிராஸ் ஆலோசகர் பிரகதீஷ், ரெட்கிராஸ் பயிற்றுனர் சுரேஷ் குமார், தாசில்தார் சக்திவேல், 108 ஆம்புலன்ஸ் உதவியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ரெட்கிராஸ் துணை சேர்மன் பொறியாளர் முத்துக்குமார், பொருளாளர் சேக்நாசர் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • தன்னார்வலருக்கு விருது வழங்கப்பட்டது.
    • நிறுவனர் சபரிமலைநாதனுக்கு, நவாஸ் கனி எம்.பி. விருது வழங்கினார்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில் நேரு யுவகேந்திரா சார்பில் பேச்சு, கவிதை, நடன போட்டி நடந்தது. சிறப்பு அழைப்பாளர்களாக கலெக்டர், கூடுதல் கலெக்டர் மற்றும் ராமநாதபுரம் எம்.பி. கலந்துகொண்டனர்.

    இதில் தன்னார்வலர்களை சிறப்பிக்கும் வகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் மக்கள் சேவையில் சிறந்து விளங்கும் தொண்டு நிறுவனங்களில், முத்தமிழ் அறக்கட்டளை தேர்வு செய்யப்பட்டு, அதன் நிறுவனர் சபரிமலைநாதனுக்கு, நவாஸ் கனி எம்.பி. விருது வழங்கினார்.

    கருணாநிதியின் உடல்நிலை குறித்து வெளியான தகவலால் தி.மு.க. கிளை செயலாளர் கிருஷ்ணன் மாரடைப்பால் உயிரிழந்தார்.
    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள அம்பாலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 45). தி.மு.க. கிளை செயலாளராக இருந்தார்.

    தி.மு.க. தலைவர் கருணாநிதி சிகிச்சை பெறும் சென்னை காவேரி ஆஸ்பத்திரிக்கு சென்ற இவர் அங்குள்ள நிர்வாகிகளிடம் தி.மு.க. தலைவரின் உடல்நிலை கேட்டுவிட்டு ஊருக்கு திரும்பினர்.

    நேற்று கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. டி.வி.யில் இந்த செய்தியை பார்த்த அவர் உறவினர்களிடம் கூறி கதறி அழுதார். திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனே அவரை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் தருமபுரி மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான தடங்கம் சுப்பிரமணி மற்றும் நிர்வாகிகள் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
    ×