என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wallet"

    • பெரியார் பஸ் நிலையத்தில் ராணுவ வீரர் மனைவியிடம் மணிபர்சை திருடிய பெண் கைது செய்யப்பட்டார்.
    • ரூ.2,200 அடங்கிய மணி பர்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது.

    மதுரை

    மதுரை கே.புளியங்குளம், மேலத்தெருவை சேர்ந்தவர் வெற்றிமாறன். ராணுவ வீரர். இவரது மனைவி பிரேமலதா (வயது 32). இவர் நேற்று காலை மதுரைக்கு வந்திருந்தார்.

    பின்னர் ஊருக்கு செல்வதற்காக பெரியார் பஸ் நிலைய 3-வது பிளாட்பாரத்தில் காத்திருந்தார். அங்கு பதுங்கியிருந்த பெண், பிரேமலதா வைத்திருந்த மணிபர்சை பறித்துக்கொண்டு தப்பி முயன்றார்.

    பிரேமலதா, 'திருடி, திருடி' என்று கூச்சல் போட்டார். அப்போது திடீர்நகர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் லோகே ஸ்வரி தற்செயலாக பெரியார் பஸ் நிலையத்துக்கு வந்திருந்தார். பிரேமலதாவின் கூச்சலை கேட்டதும் அவர் சக போலீசாருடன் தப்பி ஓடிய பெண்ணை மடக்கி பிடித்தார்.

    அந்த பெண்ணிடம் இருந்து ரூ.2,200 அடங்கிய மணி பர்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் அந்த பெண்ணை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர் உசிலம்பட்டி, பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அய்யப்பன் மனைவி காந்தி என்ற லட்சுமி (28) என்பது தெரிய வந்தது.

    இவர் மீது வழிப்பறி செய்ததாக திடீர் நகர் போலீஸ் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு போலீசிடம் சிக்கி சிறைக்கு சென்றார். அதன் பிறகு ஜாமீனில் வந்த லட்சுமி மீண்டும் பெரியார் பஸ் நிலையத்தில் ராணுவ வீரர் மனைவியிடம் மணிபர்சை திருடியபோது போலீசில் சிக்கினார்.

    அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பையில் 2000 ரூபாய் பணம், ஆதார் கார்டு, ஏ.டி.எம் கார்டு இருந்தது.
    • போலீசார் உரியவரை வரவழைத்து ஒப்படைத்தனர்

    அரவேணு,

    கோத்தகிரி தினசரி மார்க்கெட்டில் பணப்பை ஒன்று கிடந்தது. இதனை அந்த வழியாக சென்ற கெட்சிகட்டி யை சேர்ந்த மணி என்பவர் பார்த்தார். பின்னர் அதனை எடுத்த பார்த்தார். அப்ேபாது அந்த பையில் 2000 ரூபாய் பணம், ஆதார் கார்டு, ஏ.டி.எம் கார்டு இருந்தது.

    அதனை ஒப்படைப்பதற்காக நீண்ட நேரமாக அங்கேயே காத்திருந்தார். ஆனால் யாரும் வராததால் நேராக, கோத்தகிரி போலீஸ் நிலையத்திற்கு சென்றார்.

    அங்கு இருந்த போலீசாரிடம் இந்த பணப்பை கீழே கிடந்தது. யாருடையது என்று தெரியவில்லை என கூறி அதனை ஒப்படைத்தார்.

    இதையடுத்து போலீசார் அந்த பணப்பை யாருடையது என்பதை கண்டறிய அதில் இருந்த பொருட்களை ஆய்வு செய்தனர். அப்போது அதில் இருந்த ஆதார்கார்டு மூலம், பணப்பையை தவறவிட்டது, கூடலூர் ஒவேலியை சேர்ந்த கலாதேவி என்பவருக்கு சொந்தமானது என்பதை கண்டுபிடித்தனர்.

    உடனடியாக அதில் இருந்த போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர். பின்னர் அந்த பெண்ணும் போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.

    போலீசார் அவரிடம் விசாரித்த போது, தனது உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மீண்டும் கூடலூர் திரும்பிய போது பணப்பையை தவற விட்டதாக தெரிவித்தார்.

    இதையடுத்து குன்னூர் துணை சூப்பிரண்டு கோவிந்தசாமி, இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் அர்ஜூனன் ஆகியோர் கலாதேவியிடம் பணப்பையை ஒப்படைத்தனர். மேலும் பணப்பையைக் கண்டெடுத்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த மணியை போலீஸ் துணை சூப்பிரண்டு பாராட்டி ஊக்குவித்தார்.

    கீழே கிடந்த பணப்பையை எடுத்து போலீசாரிடம் ஒப்படைத்த மணிக்கு பொதுமக்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    • மருத்துவ செலவுக்கு கொளத்தூரில் உள்ள வங்கியில் நகையை அடகு வைத்து, 2 லட்சம் ரூபாய் பெற்றார்.
    • சாலையில் சென்றபோது, ஹெல்மெட் தவறி விழுந்தது. அதை எடுத்துக் கொண்டு பார்த்தபோது, வண்டியில் இருந்த பணப் பையை காணவில்லை.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர், கத்திரிப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி ராஜா (வயது 55). இவர் நேற்று முன்தினம் மருத்துவ செலவுக்கு கொளத்தூரில் உள்ள வங்கியில் நகையை அடகு வைத்து, 2 லட்சம் ரூபாய் பெற்றார். அந்த பணத்தை, மொபட்டில் வைத்துக்கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

    கொளத்தூர் ஒன்றிய அலுவலகம் பின்புற சாலையில் சென்றபோது, ஹெல்மெட் தவறி விழுந்தது. அதை எடுத்துக் கொண்டு பார்த்தபோது, வண்டியில் இருந்த பணப் பையை காணவில்லை. இதுகுறித்து ராஜா அளித்த புகாரின்பேரில், கொளத் தூர் போலீசார் அப்பகுதி யில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரிக்கின்றனர்.

    ×