என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "water project"
- நிலக்கோட்டை பேரூராட்சிக்கு ரூ.37 கோடி மதிப்பில் அணைப்பட்டி பேரணையிலிருந்து குடிதண்ணீர் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது.
- சிறுமலை நீர்த்தக்கம், நிலக்கோட்டை சப்-கோர்ட்டு கொண்டு வந்தது தி.மு.க. ஆட்சியில் தான். அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் செல்லும் சாலை விரைவில் சீரமைக்கப்படும் என பேசினார்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பேரூராட்சிக்கு ரூ.37 கோடி மதிப்பில் அணைப்பட்டி பேரணையிலிருந்து குடிதண்ணீர் வழங்கும் திட்டத்திற்கு அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது. இதில் அமைச்சர் பேசிய தாவது,
மாணவிகளின் நலன் கருதி தி.மு.க. ஆட்சியில் நிலக்கோட்டை மகளிர் கலைக்கல்லூரி கொண்டு வரப்பட்டது. கல்லூரி மாணவிகளுக்கு உதவித்தொகை ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார். அதேபோல் எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டமான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தில், 1 கோடியே 15 லட்சம் பெண்களுக்கு வழங்கப்பட்டு ள்ளது.
மேலும் மகளிர் உரிமைத் தொகை கிடைக்காத அனைத்து பெண்களுக்கும் விரைவில் வழங்கப்படும். நான் ஊரக மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சரான பிறகு 100 நாள் வேலை திட்ட பெண்களுக்கு தினக்கூலி ரூ.250-லிருந்து ரூ.300 வரை வழங்க முடிவு செய்து வழங்கப்பட்டு வருகிறது. நிலக்கோட்டை பேரூராட்சி யில் அனைத்து வீடுகளுக்கும் குடிதண்ணீர் வழங்கும் நோக்கத்தோடு ரூ.37 கோடி மதிப்பிலான குடிநீர் திட்டத்திற்கு பூமி பூஜை செய்யப்பட்டுள்ளது.
மேலும் நிலக்கோட்டை, ஆத்தூர், திண்டுக்கல் தொகுதிகளுக்கு, காவேரி தண்ணீர் மட்டும் இல்லாமல் முல்லைப் பெரியாறு, வைகை அணைகளில் இருந்து குடிதண்ணீர் வழங்க முடிவு செய்ய ப்பட்டுள்ளது. இந்த திட்டம் விரைவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நிலக்கோ ட்டையில் தொடங்கப்பட உள்ளது. 1975-ஆம் ஆண்டுகளில் நல்ல தண்ணீர் வழங்க தி.மு.க. ஆட்சி முடிவு செய்து, முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி உத்தரவின் பேரில், பேரணையிலிருந்து குடிநீர் வழங்கப்பட்டது.
கொடைரோடு அருகே சிறுமலை நீர்த்தக்கம், நிலக்கோட்டை சப்-கோர்ட்டு கொண்டு வந்தது தி.மு.க. ஆட்சியில் தான். அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் செல்லும் சாலை விரைவில் சீரமைக்கப்படும் என பேசினார்.
நிகழ்ச்சியில் வேலுச்சாமி எம்.பி., நிலக்கோட்டை ஒன்றிய தி.மு.க. செய லாளர்கள் மணிகண்டன், சவுந்தரபாண்டியன், நிலக்கோட்டை பேரூர் செயலாளர் ஜோசப் கோவில் பிள்ளை, பேரூ ராட்சி தலைவர் சுபாஷினி கதிரேசன், துணை தலைவர் முருகேசன், தி.மு.க. மாவட்ட இளைஞர் அணி முன்னாள் துணை அமைப்பாளர் கரிகால பாண்டியன்,
அம்மைய நாயக்கனூர் நகர செயலாளர் விஜயகுமார், காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர் கோகுல்நாத், பேரூராட்சி செயல் அலுவலர் (பொறுப்பு) பூங்கொடி முருகு, மாவட்ட கவுன்சிலர் நாகராணி ராஜ்குமார், ஒன்றிய கவுன்சிலர் அறிவு என்ற சின்னமாயன், நில க்கோட்டை முக்குலத்தோர் பிரிவு சங்க செயலாளர் ராஜசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- லோயர்கேம்பில் புதிய குடிநீர் திட்ட பணிகள் ரூ.1295.76 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது.
- தடுப்பணையும் கட்டப்பட்டுள்ளதால் 2 மாதத்திற்குள் தேனி மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து பணிகளும் முடிவடையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூடலூர்:
மதுரை மாநகராட்சி பகுதிக்கு தினசரி 125 மி.கனஅடி நீர் பெறும் வகையில் தேனி மாவட்டம் லோயர்கேம்பில் புதிய குடிநீர் திட்ட பணிகள் ரூ.1295.76 கோடி மதிப்பில் நடைபெற்று வருகிறது. இதில் தலைமை நீரேற்றுநிலையம் மற்றும் பெரியாறு குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெற்றன.
25 மீட்டர் நீளம், அகலம் மற்றும் 22 மீட்டர் ஆழத்தில் கட்டப்பட்டு வரும் தலைமை நீரேற்று நிலைய கட்டுமான பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இத்திட்டத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் கிடைக்கும் வகையில் முல்ைலபெரியாற்றின் குறுக்கே தடுப்பணையும் கட்டப்பட்டுள்ளது.
தடுப்பணையில் இருந்து தலைமை நீரேற்று நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும் தண்ணீர் அங்கிருந்து குழாய்மூலம் திண்டுக்கல் மாவட்டம் பண்ணைப்பட்டிக்கு எடுத்துச்செல்லப்படும். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், இந்த திட்டத்தில் முக்கிய பணியான தலைமை நீரேற்று நிலைய கட்டுமான பணி பெரும் சவாலாக இருந்தது. ெதாடர் முயற்சி காரணமாக இந்த பணி ஒரு மாதத்திற்குள் முடிக்கப்பட்டுள்ளது.
தடுப்பணையும் கட்டப்பட்டுள்ளதால் 2 மாதத்திற்குள் தேனி மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து பணிகளும் முடிவடையும் என்றனர்.
- மதுரை குடிநீர் திட்டக்கு ழாய் அமைக்கும் பணிகள் உத்தமபாளையம் முல்லை ப்பெரியாற்றில் மேல் பகுதியில் முதற்கட்ட பணிகள் முடிவடைந்து ள்ளது.
- தற்போது 2ம் கட்ட மாக ஆற்றின் மறு பகுதியில் தூண்கள் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.
உத்தமபாளையம்:
மதுரை குடிநீர் திட்டக்கு ழாய் அமைக்கும் பணிகள் உத்தமபாளையம் முல்லை ப்பெரியாற்றில் மேல் பகுதியில் முதற்கட்ட பணிகள் முடிவடைந்து ள்ளது.
இந்த நிலையில் ஆற்றின் அடுத்த பகுதியில் தூண்கள் அமைப்பதற்காக அஸ்திவாரம் தோண்டும் பணிகள் தொடங்கி உள்ளது. மதுரை மாநகராட்சிக்கு தினசரி 125 மில்லியன் கன அடி நீர் தண்ணீர் பெறும் வகையில் தேனி மாவட்டம் ேலாயர் கேம்பில் புதிய குடிநீர் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அம்ரூத்-3 என்னும் திட்டத்தில் ரூ.1295.76 கோடி மதிப்பில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
லோயர்கேம்ப், வண்ணா ந்துரை பகுதியில் தலைமை நீரேற்றும் நிலையம் அமைக்கப்பட்டு அங்கிருந்து குழாய் மூலம் திண்டுக்கல் மாவட்டம் பண்ணப்பட்டி க்கு கொண்டு செல்லப்படு கிறது. அங்கு நீர் சுத்திகரிக்க ப்பட்டு மதுரைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்ப ட்டுள்ளது.
தற்போது லோயர்கே ம்ப்பில் இருந்து தப்புக்குண்டு விலக்கு வரை குழாய் பதிக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது.
இந்த வழித்தடத்தில் உத்தமபாளையம் பைபாஸ், கண்டமனூர் அருகே அடைக்கம்பட்டி ஆகிய இடங்களில் முல்லைப்பெரி யாற்றின் குறுக்கே தூண்கள் அமைத்து குழாயை அதன் மேல் பதிக்க திட்டமிடப்பட்டு ள்ளது. உத்தமபாளையத்தில் இதற்கான பணிகள் நடை பெற்று வருகிறது. ஆற்றில் நீரோட்டம் ெதாடர்வதால் ஒரே நேரத்தில் பணிகள் மேற்கொள்ள முடியாது.
எனவே முதல் கட்டமாக நீரோட்டம் மாற்றப்பட்டு அப்பகுதியில் தூண்கள் கட்டப்பட்டன. அங்கு 3 தூண்கள் அமைக்கப்பட்டு அதன்மேல் குழாய்களை பதித்து அளவீடு செய்யப்ப ட்டது. தற்போது 2ம் கட்ட மாக ஆற்றின் மறு பகுதியில் தூண்கள் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. தூண்கள் அமைப்பதற்காக மண் அள்ளும் எந்திரம் மூலம் அஸ்திவாரம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
வெள்ளம் வந்தாலும் குழாய்க்கு பாதிப்பு ஏற்ப டாத வகையில் உயரமாக கட்டப்பட்டு வருகிறது. 5 தூண்களில் 3 தூண்களு க்கான பணிகள் முடிவடை ந்துள்ளது. மீதம் உள்ள 2 தூண்கள் 3 மாதத்தில் கட்டப்பட்டு குழாய் பதிக்கும் பணி தேனி மாவட்டத்தில் விரைவில் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்த னர்.
- எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார்
- குடிநீர் பிரிவு மூலம் ரூ.11 லட்சத்து 30 ஆயிரம் செலவில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது.
புதுச்சேரி:
வில்லியனூர் கொம்பாக்கம்பேட், மாதா கோவில் வீதியில் பொதுப்பணித்துறை பொது சுகாதாரக் கோட்டத்தின் குடிநீர் பிரிவு மூலம் ரூ.11 லட்சத்து 30 ஆயிரம் செலவில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது.
இந்த பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா பணியினை பூஜை செய்து தொடங்கி வைத்தார். இதேபோல், கொம்பாக்கம் வார்டுக்குட்பட்ட முத்துக்குமரன் நகர், சத்குரு நகர், ஜெயகணபதி நகர் மக்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் பொதுப்பணி த்துறை பொது சுகாதாரக் கோட்டம் மூலம் ரூ. 4 லட்சத்து 50 ஆயிரம் செலவில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணியினையும் எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிகளில் பொதுப்பணித்துறை பொது சுகாதாரக் கோட்ட உதவிப் பொறியாளர் வாசு, இளநிலைப் பொறியாளர் கோபாலகிருஷ்ணன், மற்றும் தி.மு.க. தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, சோமசுந்தரம், செல்வநாதன், தர்மராஜ், தொகுதி துணைச் செயலா ளர்கள் ஜெகன்மோகன், ஹரி கிருஷ்ணன், பொருளாளர் கந்தசாமி, ம.தி.மு.க. மாநில செயலாளர் கபிரியேல், கம்யூனிஸ்ட்டு அந்தோணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் மாநகராட்சி மேயர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
- தேவையான அளவு குடிநீர் உள்ளதா என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகர் பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்தநிலையில் இன்று காலை அன்னூர் குறுக்கிலியம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள 4-வது குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மேயர் தினேஷ்குமார் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தினமும் எவ்வளவு லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது. தேவையான அளவு குடிநீர் உள்ளதா என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது மாநகராட்சி கமிஷனர் பவன் குமார் கிரியப்பனவர், துணை மேயர் பாலசுப்பிரமணியம், தலைமை பொறியாளர் வெங்கடேஷ், செயற்பொறியாளர் கண்ணன் ,இளநிலைபொறியாளர் கோவிந்த பிரபாகரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- விநி யோகம் செய்ய கூட்டு குடிநீர் திட்டப் பணிகளை குடிநீர் வடிகால் வாரியம் செய்து வருகிறது.
- காவிரி ஆற்றில் உள்ள பாறைகளை வெடி வைத்து தொழிலாளர்கள் தகர்த்து வருகின்றனர்.
அம்மாப்பேட்டை,
ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த அம்மா பேட்டை காவிரியாற்றின் மறுகரையில் உள்ள சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே காட்டூர் பகுதி காவிரி ஆற்றில் ராசிபுரம் மல்லசமுத்திரம் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் ராசிபுரம், மல்லசமுத்திரம், நாமக்கல் ஆகிய பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நடை பெற்று வருகிறது. காட்டூரில் நீரேற்று நிலையம் கட்ட ப்பட்டு கரட்டுப்புதூரில் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து குடிநீர் விநி யோகம் செய்ய கூட்டு குடிநீர் திட்டப் பணிகளை குடிநீர் வடிகால் வாரியம் செய்து வருகிறது.
இந்நிலையில் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க இரவு, பகலாக 20-க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் எந்திரத்தின் உதவியுடன் தீவிரமாக ஈடு பட்டுள்ளனர். அம்மா பேட்டை காவிரியாற்றின் மறுகரையில் கட்டப்படும் நீரேற்று நிலைய பணிகளுக்கு காவிரி ஆற்றில் உள்ள பாறைகளை வெடி வைத்து தொழிலாளர்கள் தகர்த்து வருகின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் கட்டுமான பணிகள் நடைபெற்று வரு கிறது. அதற்காக பாறைகளை தகர்க்க அதிக திறன் கொண்ட 'தோட்டாக்களை' பயன்படுத்தி வருகின்றனர்.
தினமும் காலை முதல் மாலைக்குள் 2 முறை பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்படுவதால் பிளவு பட்டு சிதறும் பாறைத் துகள்கள் ஆற்றில் விழு கிறது. பாறை துகள்களால் பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லை என்றாலும் வெடி சத்தம் பெரும் பாதிப்பை உருவாக்குவதாக அம்மாபேட்டை கரையோர பொதுமக்கள் கூறுகின்ற னர்.
இதுபற்றி கரையோர த்தில் வசிக்கும் பொது மக்கள் கூறும்போது:-
ராசிபுரம்மல்ல சமுத்திரம் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு அம்மா பேட்டை காவிரி ஆற்றின் மறுகரையில் பணிகள் நடந்து வருகிறது. சுமார் 500 மீட்டர் தொலைவில் நடக்கும் கட்டுமான பணி க்காக ஆற்றில் உள்ள பாறைகளை 'தோட்டாக்களை' பயன்படுத்தி வெடி வைத்து தகர்த்து வரு கின்றனர்.
குறிப்பிட்ட தொலைவில் வெடி வைக்கும் போது கரையோர வீடுகள் அதிர்வு அடைகின்றன. ஒரு சில நேரங்களில் வீடுகளில் உள்ள பாத்திரங்கள் உள்ளி ட்ட பொருட்கள் கீழே விழு கின்றன.
நிலநடுக்கத்தால் ஏற்படும் உணர்வு போல, கரையோர மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் இந்த பகுதிகளில் உள்ள கட்டிடங்கள் வலுவிழந்து நாளடைவில் சரிந்து விழும் நிலையும் உருவாகலாம்.
எந்த நேரத்தில் வெடி வைக்கிறார்கள் என தெரியாததால் திடீரென கேட்கும் வெடி சத்தத்தால், பயம் ஏற்படுகிறது.
மேலும் அம்மாபேட்டை காவிரி கரையோரத்தில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வரும் கர்ப்பிணி பெண்கள் மற்றும் மற்ற பெண்கள் வெடி சத்தத்தால் ஒரு வித அச்சத்தில் இருந்து வரு கிறார்கள்.
அதே நேரத்தில் மீன்பிடி க்கும் தொழிலாளர்கள் அச்சத்துடனேயே ஆற்றில் மீன் பிடித்து வருகின்றனர். இதுபற்றி எந்த அதிகாரிக்கு தகவல் தெரிவிப்பது என தெரியாமல் பொதுமக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்சினையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
- மணிகண்டராஜா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ராஜபாளையம்
குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் ராஜபாளையம் நகராட்சி பகுதிக்கானதாமிரபரணி கூட்டுக்குடி நீர் திட்டப்பணியின் தொடக்க விழா சங்கரன்கோவிலில் நடந்தது.
இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, கூடுதல் தலைமை செயலாளர் ஷிவ்தாஸ்மீனா, மேலாண்மை இயக்குநர் தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாக இயக்குநர் பொன்னையா, தலைமை பொறியாளர் ரகுபதி, தனுஷ்குமார் எம்.பி.,
தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் ராஜபாளையம் நகராட்சியில் முடிவுற்ற பாதாள சாக்கடைத்திட்ட தொடக்க விழா மற்றும் ராஜபாளையம் ஒன்றிய கிராமப்பகுதிகளுக்கு ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இந்த விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் திட்டத்தை தொடங்கி வைத்தும், அடிக்கல் நாட்டு விழாவிலும் பங்கேற்றனர்.
இதில் நகராட்சி சேர்மன் பவித்ராஷியாம், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ராசாஅருண்மொழி, நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்டராஜா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- மேட்டுப்பாளையம் தலைமை நீரேற்று நிலையத்தில் குடிநீர் திட்டப்பணிகள் நடைபெறுகிறது.
- பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மேட்டுப்பாளையம் தலைமை நீரேற்று நிலையத்தில் நடைபெற்று வரும் 4-வது குடிநீர் திட்டப்பணிகளை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். மாநகராட்சி ஆணையர் கிராந்திகுமார், துணைமேயர் பாலசுப்பிரமணியம் மற்றும் பலர் உடனிருந்தனர்.
- 2 வருடங்களுக்கு ஒரு முறை 28 நாட்கள் மட்டுமே தண்ணீர் கிடைத்து வருகிறது.
- 8 டி.எம்.சி. நீர் பற்றாக்குறையால் கடும் சிக்கலில் உள்ளது.
பல்லடம் :
ஆழியாறு அணையிலிருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்த்தை ரத்து செய்ய கோரி திருப்பூரில் விவசாயிகள் பேரணி நாளை நடைபெறவுள்ளது. இது குறித்து கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க பல்லடம் வட்டார தலைவர் வேலுமணி கூறியதாவது:-பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டம் மூலம் பொள்ளாச்சி,உடுமலைப்பேட்டை,பல்லடம்,உள்ளிட்ட பல்வேறு தாலுகாவில் உள்ள விவசாய நிலங்களில் பாசனத்திற்கும்,பொதுமக்களுக்கு குடிநீராகவும் பயனளிக்கும் திட்டம்.
இங்கு 2 வருடங்களுக்கு ஒரு முறை 28 நாட்கள் மட்டுமே தண்ணீர் கிடைத்து வருகிறது.ஏற்கனவே பி.ஏ.பி. பாசன திட்டம் ஆண்டுக்கு 8 டி.எம்.சி. நீர் பற்றாக்குறையால் கடும் சிக்கலில் உள்ளது. இந்தநிலையில் ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்திற்கு தண்ணீர் எடுப்பதால் பி.ஏ.பி. பாசனத் திட்டத்தில் மேலும் கடுமையான பாதிப்பு ஏற்படும்.
எனவே அந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரியும், நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ள ஆனைமலையாறு- நல்லாறு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், நாளை 21-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) விவசாயிகள் கவன ஈர்ப்பு பேரணி நடைபெற உள்ளது. திருப்பூர் அருகே உள்ள வீரபாண்டி பிரிவில் இருந்து கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலம் செல்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ் சுமார் 4 லட்சம் ஏக்கர் அளவிற்கு மேல் பாசனம் நடைபெற்று வருகிறது.
- பி.ஏ.பி., திட்டம் வெறும் காட்சிப் பொருளாக மட்டுமே இருக்கும்.
பல்லடம் :
பி.ஏ.பி., பாசனத் திட்டத்தில் ஒட்டன்சத்திரம் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ் சுமார் 4 லட்சம் ஏக்கர் அளவிற்கு மேல் பாசனம் நடைபெற்று வருகிறது. பாசனத்துக்கும், குடிநீருக்கும் தண்ணீர் பற்றாக்குறை இருந்து வரும் சூழ்நிலையில், அணையில் தண்ணீர் இருக்கும்போதே, தண்ணீர் இல்லை என்று கூறி அதிகாரிகள் பாசனத்துக்கான தண்ணீரை நிறுத்துகின்றனர்.
இந்த சூழ்நிலையில் 150 கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்துக்கு எவ்வாறு தண்ணீர் வினியோகிக்க முடியும் ? பி.ஏ.பி., பாசன விவசாயிகள் ஏற்கனவே தண்ணீர் இல்லாமல் பற்றாக்குறையில் தவித்து வருகின்றனர்.இதில் ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் வினியோகித்தால், பி.ஏ.பி., திட்டம் வெறும் காட்சிப் பொருளாக மட்டுமே இருக்கும்.
எனவே பி.ஏ.பி., பாசன விவசாயிகளை பாதிக்கும் இந்த திட்டத்தை தமிழக அரசு உடனே ரத்து செய்ய வேண்டும். இதை கண்டித்து, வரும் ஜூன் 27-ந் தேதி அன்று பொள்ளாச்சி, உடுமலையில் நடக்கவுள்ள கண்டன ஆர்ப்பாட்டம், மற்றும் கடையடைப்பு போராட்டத்துக்கு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் முழு ஆதரவு அளித்து திருப்பூர் மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் கலந்துகொள்ள உள்ளோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்