என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "waterfall"

    • குற்றாலம் அருவிகளில் கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.
    • சுமதி கழுத்தில் கிடந்த சங்கிலியை அருகே நின்று குளித்துக்கொண்டிருந்த ஒரு பெண் பறித்துள்ளார்.

    நெல்லை:

    தொடர்விடுமுறை காரணமாக குற்றாலம் அருவிகளில் கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.

    இந்நிலையில் நேற்று மெயினருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் அதிக அளவு பெண்கள் நின்று குளித்து கொண்டிருந்தனர். புளியங்குடி அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த சுமதி என்ற பெண்ணும் அங்கு குளித்துள்ளார்.

    நகை பறிப்பு

    அப்போது அவரது கழுத்தில் கிடந்த சங்கிலியை அருகே நின்று குளித்துக்கொண்டிருந்த ஒரு பெண் பறித்துள்ளார். சுதாரித்து கொண்ட சுமதி கத்தி கூச்சலிட்டுள்ளார். உடனே அவருடன் குளித்து கொண்டிருந்த மற்ற பெண்கள், நகை பறித்த பெண்ணை பிடித்து பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    அந்த பெண்ணை குற்றாலம் போலீஸ் நிலை யத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், சேலம் மாவட்டம் சீலைநாயக்கன்பட்டியை சேர்ந்த லெட்சுமி(வயது 39) என்பதும், அவர் மீது ஏற்கனவே சேலத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    • மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது.
    • கூடலூர்-மசினகுடி இடையே 4-வது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் அனைத்து அணைகளும் நிரம்பி உள்ளது. நேற்று நடுவட்டம்(128 மி.மீ.), கூடலூரில்(107 மி.மீ.) அதிகபட்ச மழை அளவு பதிவாகி உள்ளது.

    இந்த நிலையில் நடுவட்டம், பைக்காரா பகுதியில் இருந்து வரும் தண்ணீர் மாயார் ஆற்றில் கலந்து ஓடுவதாலும், முதுமலை வனப்பகுதியில் பெய்த தொடர் மழையாலும் எம்.ஜி.ஆர். அருவியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

    இதேபோல் தரைப்பாலம் மூழ்கியவாறு உள்ளதால் கூடலூர்-மசினகுடி இடையே 4-வது நாளாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் மசினகுடி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப்புற மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மேலும் பஸ் போக்குவரத்தும் இல்லாததால் மாணவ- மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு வர முடியாமல் வீடுகளில் முடங்கி உள்ளனர்.

    கூடலூர் நகரில் இன்று காலை முதல் கனமழை பெய்தது. பின்னர் படிப்படியாக மழை குறைந்து லேசான வெயில் தென்பட்டது. தொடர்ந்து மாலை 3 மணிக்கு பிறகு பரவலாக மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து கடும் குளிர் நிலவுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

    இதேபோன்று தேவர்சோலை பேரூராட்சி கணியம் வயல் பகுதியை சேர்ந்த சுல்தான் என்பவரது வீடு மண் சரிவு ஏற்பட்டு சேதமடைந்தது. மேலும் கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலையில் கெவிப்பாரா பகுதியில் வாய்க்காலில் இன்றும் அடைப்பு ஏற்பட்டு மழைநீர் தெருவுக்குள் வழிந்து ஓடியது.

    இதனால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். மேலும் கூடலூர் சின்னப்பள்ளி வாசல் தெருவில் இருந்து கோத்தர் வயல் செல்லும் சாலையில் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டு மழை வெள்ளம் சாலையில் தேங்கியது. இதைத்தொடர்ந்து பொக்லைன் எந்திரம் கொண்டு வந்து அடைப்புகளை அதிகாரிகள் சரி செய்தனர். அதன் பின்னர் தண்ணீர் சீராக வழிந்து ஓடியது.

    • நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமான கொல்லிமலையில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி உள்ளது.
    • சுற்றுலா பயணிகள் அங்கு சென்று குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமான கொல்லிமலையில் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி உள்ளது. சுமார் 1600 படிக்கட்டுகள் கடந்து சென்று தான் இந்த அருவிக்கு செல்ல முடியும். இங்கு வரும் தண்ணீரானது பல்வேறு மூலிகை மரம் மற்றும் செடிகளை கடந்து வருவதால் மூலிகை நறுமணம் வீசும்.

    இந்த பகுதியில் தற்போது தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆகாய கங்கை நீர்வீழ்ச்சியில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. கன மழையால் அந்த நீர்வீழ்ச்சியை நெருங்க முடியாத அளவிற்கு தண்ணீர் விழுகிறது. சுற்றுலா பயணிகள் அங்கு சென்று குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். அத்துடன் நீர்வீழ்ச்சிக்கு வரும் நீர் வழிப்பாதையின் வழியாக சிறு, சிறு மரத்துண்டுகள் மற்றும் சிறு பாறைகள் உருண்டு வந்து நீர்வீழ்ச்சியின் தடாகத்தில் விழும். இதனால் சுற்றுலா பயணிகளின் நலன்கருதி இன்று (சனிக்கிழமை) முதல் ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் குளிக்க மற்றும் அங்கு செல்ல தற்காலிகமாக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

    உத்தரகன்னடா மாவட்டத்தில் அமைந்துள்ளது அப்சரா கோண்டா நீர்வீழ்ச்சி. இந்த நீர்வீழ்ச்சியில் வானில் உள்ள தேவதைகள் நீராடியதாக இங்குள்ள மக்களால் நம்பப்படுகிறது.
    உத்தரகன்னடா மாவட்டம் முருடேஸ்வரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அப்சரா கோண்டா நீர்வீழ்ச்சி. மலையில் இருந்து ஆர்ப்பரித்து கொட்டும் நீரானது தடாகத்தில் தவழ்ந்து செல்லும் காட்சியை கண் இமைக்காமல் ரசித்து கொண்டே இருக்கலாம்.

    இந்த நீர்வீழ்ச்சியில் வானில் உள்ள தேவதைகள் நீராடியதாக இங்குள்ள மக்களால் நம்பப்படுகிறது. மேலும் இங்குள்ள மலைகளில் பெரிய, சிறிய பாண்டவர் குகைகள் காணப்படுகிறது. இந்த குகைகளில் தான் பாண்டவர்கள் பதுங்கி வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

    இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அருகே உள்ள உக்கிர நரசிம்ம கோவில், உயபா கணபதி கோவில், பசவேஸ்வர துர்கா மற்றும் ராமசந்திரபுரா மடம் போன்ற கோவில்களையும், காசர்கோடு கடற்கரையையும் கண்டு மகிழலாம். இந்த இடங்களை கண்டு ரசிக்க செப்டம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான காலம் சிறந்தது. 
    அமெரிக்காவின் புகழ்பெற்ற இ.எல்.கே அருவியில் குளித்தபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி இந்திய பொறியாளர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். #ElkRiverFalls # IndianEngineer #US
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் புகழ்பெற்ற இ.எல்.கே அருவி அதன் அழகுடன் சேர்த்து ஆபத்துக்கும் பெயர் போனது. இந்த  அருவியில் தனது நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கோகினேனி நாகார்ஜூனா என்ற இந்திய பொறியாளர் அங்கிருந்த பாறையின் மீது ஏறி நீரில் குதித்துள்ளார்.



    அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி அவர் பலியானார். இதுகுறித்து மீட்புப்படை அதிகாரி பால் புசனான் கூறுகையில், பாறையின் மீது இருந்து குதித்த பொறியாளர் மீள முடியவில்லை எனவும், 2 மணி நேர தேடலுக்கு பிறகு அவரது உடல் மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் உயிரிழந்த இந்தியர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. #ElkRiverFalls # IndianEngineer #US
    ×