என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Wealth"
- ஐஸ்வர்ய லட்சுமியை வணங்கினால் செல்வம் மட்டுமல்ல.. ஆரோக்யம், வெற்றி என 16 வளங்களும் கிடைக்கும்.
- இவளை கன்யாலட்சுமி என்று அழைப்பதும் உண்டு.
வாழ்வில் மகிழ்ச்சி, மன நிம்மதியை தரக் கூடிய மகாலட்சுமியை நம்முடைய வீட்டிற்கு வர வைப்பதற்கும், நம்முடைய வீட்டில் மகாலட்சுமி எப்போதும் வசிப்பதற்கும், அவளின் அருட் பார்வை நம்மீது பட்டுக் கொண்டே இருப்பதற்கு வீட்டில் சில எளிய வழிபாடுகளை தொடர்ந்து செய்து வந்தாலே போதும். என்ன செய்தால் மகாலட்சுமியை நம்முடைய வீட்டிற்கு வர வைக்கலாம் என்பதை பார்ப்போம்
ஒரு சமயம் சுரர் – அசுரர்கள் சேர்ந்து,பாற்கடலை கடைந்தனர். அப்போது, அதிலிருந்து மகாலட்சுமி தோன்றினாள். அவளோடு செழிப்பினை நல்கும் செல்வங்கள் அனைத்தும் தோன்றின.
அந்தச் செல்வங்களோடு உடனாக வந்து லட்சுமிதேவியே, ஐஸ்வர்ய மகாலட்சுமி எனப் போற்றப்பட்டாள். இவளை கன்யாலட்சுமி என்று அழைப்பதும் உண்டு.
பாற்கடலின் மேற்பகுதியில் ஐராவதம் படுத்த நிலையில், அதன் மீது உலகத்தாயான இவள் தோன்றினார். தன் பின் இரு கரங்களில் தாமரைகளைக் கொண்டும், முன் வலக்கரம் அபயம் காட்டியும், முன் இடக்கரம் அமுத கலசத்தினை தாங்கியும் காட்சியளிக்கிறாள்.
பாதங்களில் தேவர்கள் அர்ச்சித்த பொற்காசுகளும் நறுமலர்களும் குவிந்துள்ளன. ஐஸ்வர்ய லட்சுமியின் பின்புறம் கற்பக விருட்சம், விந்திய வாசினி எனும் துர்கை, சந்திரன், அப்சரஸ் ஆகியோர் நிற்கின்றனர்.
இவளின் இடப்பக்கத்தில் நோய்களைப் போக்குத் தன்வந்தரிரி, தெய்விகப் பசுவான காமதேனு, உச்சைச்வரஸ் எனும் தெய்விக குதிரை ஆகியவை இருக்கின்றன.
இந்த ஐஸ்வர்ய லட்சுமியை வணங்கினால் செல்வம் மட்டுமல்ல.. ஆரோக்யம், வெற்றி என 16 வளங்களும் கிடைக்கும்.
செல்வ வளம், சொத்துக்கள், அதிகாரம், அழகு, குழந்தைப்பேறு ஆகியவற்றிற்கு காரணமான தெய்வமாக மகாலட்சுமி கருதப்படுகிறாள். இந்துக்களின் வழிபாட்டு முறையில் விநாயகருக்கு அடுத்தபடியாக மகாலட்சுமி வழிபாட்டிற்கு முக்கிய இடம் அளிக்கப்படுகிறது. ஒரு வீட்டில் அனைத்து விதமான செல்வங்களும் நிறைந்திருக்க அஷ்டலட்சுமிகளின் அருளும் கிடைக்க வேண்டும். எங்கெல்லாம் லட்சுமி தேவி இருக்கிறாளோ அந்த இடங்களில் துன்பம், வறுமை என்பது இருக்கவே இருக்காது. அதனால் அனைத்து வீடுகளிலும் லட்சுமி தேவியின் வழிபாட்டை அவசியம் செய்வதுண்டு.
மகாலட்சுமியின் வழிபாட்டிற்கு ஏற்ற நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது. மகாவிஷ்ணுவின் மனைவியான மகாலட்சுமி, நவராத்திரியின் நான்கு, ஐந்து மற்றும் ஆறாம் நாளுக்குரிய தெய்வமாக கருதி வணங்கப்படுகிறாள். இந்த நாளில் அலை மகளான லட்சுமி தேவியை வழிபட்டால் ஆண்டுதோறும் வீட்டில் செல்வ வளம் நிறைந்திருக்கும் என்பது ஐதீகம். மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கு அவரின் படம் அல்லது சிலையை வீட்டில் வைத்து தொடர்ந்து உண்மையான பக்தியுடன் வழிபட்டு வர வேண்டும். இது தவிர எட்டு விதமான விஷயங்களை வீட்டில் செய்து வந்தால் மகாலட்சுமி நம்முடைய வீடு தேடி வருவாள்.
பூஜை அறையில் மகாலட்சுமியின் பாதங்கள் வரைதல், காயத்ரி மந்திர பாராயணம் செய்தல், நெய் விளக்கு ஏற்றுதல், தாமரை தண்டு திரி இட்டு விளக்கு ஏற்றுதல், வலம்புரி சங்கு வைத்து வழிபடுதல், துளசி செடியின் முன்பு விளக்கேற்றி வைத்து வழிபடுதல், புல்லாங்குழலை வீட்டில் வைத்திருத்தல், பசுக்களுக்கு உணவளித்தல் இது போன்ற வழிபாடுகளால் வீட்டின் செல்வ வளம் பெருக வைக்கும். வாழ்க்கையிலும் குடும்பத்திலும் உள்ள அனைத்து விதமான தடைகளும் நீங்கும். பாவங்கள் அனைத்தும் நொறுங்கி சகல ஐஸ்வர்யங்களும் நமக்கு கிடைக்க பெறும்.
- பல லட்சம் கோடி ரூபாய் சம்பாதித்திருப்பதாக குற்றம்சாட்டு.
- பல தலைவர்கள் பல லட்சங்களை சம்பாதித்திருப்பார்கள்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பா.ஜ.க. நேற்று ஒரு நாள் மட்டும் பங்குச்சந்தையில் பல லட்சம் கோடி ரூபாய் சம்பாதித்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர்கூறியதாவது:-
எதற்காக நேற்றைய தினம் 10 ஆயிரம் புள்ளிகளுக்கு மேல் பங்குச்சந்தை ஏறியது, அதுமட்டுமில்லாமல் இன்று ஏன் 10 ஆயிரம் புள்ளிகள் பங்குச்சந்தை சரிவை சந்தித்துள்ளது. என்ன காரணம்?
வாக்கு எண்ணிக்கை ஒருநாள் விட்டு 1-ந்தேதி நடைபெற்றிருக்க வேண்டும். ஏன் 2-ந்தேதி பா.ஜ.க. வாக்கு எண்ணிக்கையை வைக்கவில்லை? ஏனென்றால் பா.ஜ.க. நேற்று ஒரு நாளில் மட்டும் பல லட்சம் கோடிகளை பங்குச்சந்தையில் சம்பாதித்துள்ளது.
பங்குச்சந்தையில் லாங், ஷாட் என்று சொல்வார்கள் இதில் ஷாட்டில் சென்று அனைத்து முதலீடுகளை வாங்கிவிட்டனர். அதனை நேற்று மாலையே விற்றுவிட்டனர். இன்று மேலும் வாங்குவார்கள் இதில் பா.ஜ.க.வுக்கு இரட்டிப்பு லாபம் கிடைத்துள்ளது. இதில் பல தலைவர்கள் பல லட்சங்களை சம்பாதித்திருப்பார்கள் என்பது போகப்போக விசாரணையில் தெரியவரும்.
இவ்வாறு செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டி உள்ளார்.
- இரும்பு உலோகத்தால் செய்யப்பட்ட சனி பகவான் விக்கிரகத்தை வழிபடுவது கூடுதல் சிறப்பு.
- மாலையில் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று எள் கலந்த நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.
செல்வம், ஆயுள், ஆரோக்கியம் இவை மூன்றும் ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியமானது. இவை அனைத்தும் பரிபூரணமாகக் கிடைக்க வேண்டுமெனில் சனிக்கிழமைகளில் விரதம் இருக்கலாம். மற்ற விரதங்களை காட்டிலும் சனிக்கிழமை விரதத்திற்கென்று தனி மகத்துவம் உண்டு. ஒரு மாதத்தின் வளர்பிறையில் வரும் சனிக்கிழமையில் இந்த விரதத்தை தொடங்கலாம். இந்த விரதம் 11 வாரம் முதல் 51 வாரங்கள் வரை கடைப்பிடித்தால் அது நன்மையை தரும் என்பது நம்பிக்கை. நவக்கிரகங்களில், சனிபகவானை 'ஆயுள்காரகன்' என்று அழைக்கிறோம். அவரது ஆதிக்கத்தைப் பொறுத்தே ஆயுட்காலம் அமையும்.
இந்த சனிக்கிழமை விரதத்தை அனுசரிப்பவர்கள், காலையில் எழுந்து புனித நீராடி கருப்பு அல்லது அடர் நீல நிறத்தில் உடையணிந்து கொள்ளலாம். இரும்பு உலோகத்தால் செய்யப்பட்ட சனி பகவான் விக்கிரகத்தை வழிபடுவது கூடுதல் சிறப்பு. பூஜையின்போது கருமையை ஒட்டிய மலர்கள், எள்ளு, கருப்பு வஸ்திரம் ஆகியவற்றை சனி பகவானுக்கு படைக்க வேண்டும். அதனுடன் வேக வைத்த அரிசியையும் வைக்கலாம்.
இந்த பூஜையை அனுசரிக்கும் பக்தர்கள், அனுமன் அல்லது பைரவர் கோவிலுக்குச் செல்லலாம். ஒரு நாள் முழுவதும் விரதம் இருந்து, சூரிய அஸ்தமனத்திற்கு பின் உணவை உட்கொள்ளலாம். பகலில் பழமும், நீர் கலந்த பானத்தை மட்டும் சாப்பிட்டு, இரவில் எளிய உணவுடன் விரதம் முடிக்கலாம். மாலையில் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று எள் கலந்த நல்லெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும்.
சனிக்கிழமை விரதம் எல்லா மாதங்களிலும் கடைப்பிடிக்கத் தொடங்கலாம். புரட்டாசி மாத சனிக்கிழமையில் தொடங்குவது மிகவும் விசேஷம். சகல செல்வமும் பெற்று ஒருவர் வாழ வேண்டும் என்றால், சனிக்கிழமை விரதத்தை கடைப்பிடிக்கலாம்.
- மகாலட்சுமி அம்மனுக்கு ஐந்து தீபமேற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால் சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.
- மகாலட்சுமி அம்மனுக்கு இனிப்பு மற்றும் உப்பு சமர்ப்பித்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் கீழராஜவீதி யில் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் அமைந்து ள்ளது. இக்கோவி ல் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்ப ட்டது. தஞ்சாவூரில் இத்தல த்தில் மட்டுமே பெருந்தேவி என்கிற மகாலட்சுமி அம்மனு க்கு தனி விமானத்துடன் கூடிய சன்னதி உள்ளது குறிப்பிடத்தக்கது. இங்கு மாதந்தோறும் புனர்பூசம் நட்சத்திரம், உத்திரம் நட்சத்திரம், பஞ்சமி, அஷ்டமி திதி மற்றும் செவ்வாய், வெள்ளி ,ஞாயிறு கிழமை மகாலட்சுமி அம்மனுக்கு ஐந்து தீபமேற்றி அர்ச்சனை செய்து வழிபட்டால் சகல ஐஸ்வர்ய ங்களும் கிட்டும் என்பது ஐதீகம். மகாலட்சுமி உப்பில் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே இக்கோவி லில் பக்தர்கள் மகாலட்சுமி அம்மனுக்கு இனிப்பு மற்றும் உப்பு சமர்ப்பித்து வழிபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோவி லில் நேற்று ஐப்பசி மாத புனர்பூசம் நட்சத்திரத்தை முன்னிட்டு பெருந்தேவி என்கிற மகாலட்சுமி அம்ம னுக்கு சிறப்பு அபிஷேகம் , அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பி க்கப்பட்டது .இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தா ர்கள். இந்த வழிப்பாட்டிற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே , உதவி ஆணையர் கவிதா ,கோவில் செயல் அலுவலர் மாதவன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தார்கள்.
- ராஜகோபாலன் 3-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி அரியாங்குப்பம் மணவெளி வாட்டர் டேங்க் அருகில் நடந்தது.
- பின்னர் பொது மக்களுக்கு வேட்டி,துண்டு-அன்னதானம் வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை அரிச்சுவடி மனநலமைய சேர்மன் பேராசிரியர் கபாலி என்ற ராஜகோபாலன் 3-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி அரியாங்குப்பம் மணவெளி வாட்டர் டேங்க் அருகில் நடந்தது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு அலங்கரிக்கப்பட்ட பேராசிரியர் கபாலி என்ற ராஜகோபாலன் உருவபடத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் பொது மக்களுக்கு வேட்டி,துண்டு-அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் டாக்டர் அரவிந்தன் மணவெளி ஊர் முக்கியஸ்தர்கள் காமராஜ், கணேஷ்குமார், கணேசன், செல்வம், சதீஷ், ஆனந்தன், நடராஜன், விஜயகணபதி, மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி பிரெஞ்சு சிட்டி தலைவர் சீனிவாசன், செயலாளர் ராமச்சந்திரன், முன்னாள் தலைவர் சதீஷ் குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேராசிரியர் கபாலி என்ற ராஜகோபாலன் உருவபடத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
இதற்கான ஏற்பாடுகளை அரிச்சுவடி இயக்குனர் டாக்டர் இளவழகன் ஆத்திசூடி பள்ளி தாளாளர் டாக்டர் சத்தியவண்ணன் மற்றும் அரிச்சுவடி டிரஸ்டி அரசம்மா தேவி ரவிச்சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.
- மகாலட்சுமியை ஆவணி மாதம் வரும் அஷ்டமியன்று வணங்குவது சிறப்பானது.
- “கனகதாராவைப் பாடுவோருக்கு தனது அருள் கிட்டும்” என்பது திருமகள் வாக்கு.
மகாலட்சுமியை எவ்வாறு வணங்கினால் நிறைய செல்வம் கிடைக்கும்?
மகாலட்சுமியை ஆவணி மாதம் வரும் அஷ்டமியன்று விரதமிருந்து வணங்குவது சிறப்பானது.
அதுவும் அந்த நாள் வெள்ளிக்கிழமையாக இருந்தால் மிகவும் விசேஷம். அதனால் எல்லாவிதமான நன்மைகளும் நமக்குக் கிடைக்கும்.
அதைத்தவிர நாம் பணத்தை எப்போது பயன்படுத்தினாலும் அப்போதெல்லாம் "ஓம் ஸ்ரீ மகாலட்சுமியை நம" என்று சொல்லிவிட்டுப்பயன்படுத்தினால் நம்மிடம் பணம் நிலைத்து நிற்கும்.
சிறு வயதிலேயே துறவுபூண்டவர் ஆதிசங்கரர்.
துறவு நெறிக்கு ஏற்றவாறு தினமும் இறைவழிபாட்டை முடித்துக் கொண்டு அதன் பின்னால் யாசகம் வாங்கி உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அப்படி யாசகம் வாங்குவதற்காக ஒரு வீட்டுக்குச் சென்றார். அவர் போன வீடு ஏழை பிராமணரான சோமதேவருடையது.
அச்சமயம், சோமதேவர் வீட்டில் இல்லை. வெளியில் சென்றிருந்தார். அவருடைய மனைவியான தர்மசீலை மட்டும் தான் வீட்டில் இருந்தாள்.
அந்த வீட்டின்முன் நின்ற சங்கரர் "பவதி பிசோந்தேஷி!" என்றார்.
வறுமையில் வாடினாலும் யாசகம் கேட்டு வந்தவருக்கு இல்லை என்றுபதில் கூறு தர்மசீலைக்கு வருத்தமாக இருந்தது.
வேறு வழியின்றி "கொடுப்பதற்கு ஒன்றுமில்லை" என்று மனம் வருந்திக்கூறினாள்.
அதைக்கேட்ட சங்கரர் "அன்னமிட வழியில்லாவிட்டாலும் பரவாயில்லை. உண்ணத்தகுந்த பொருள் எதுவாக இருந்தாலும் கொடுங்கள்"! என்றார்.
வீட்டில் அங்குமிங்கும் தேடிப்பார்த்தாள் தர்மசீலை.
எப்போதோ செய்திருந்த ஒரே ஒரு நெல்லிக்காய் ஊறுகாய் இருந்தது.
அதைக் கொண்டுபோய் ஆதிசங்கரருக்கு வழங்கினாள்.
"அம்மையே தாங்கள் அன்புடன் அளித்ததால் இந்த நெல்லிக்காய் இவ்வுலகிலேயே சிறந்த பொருளாகும்" என்றார் சங்கரர்.
இந்த ஏழ்மை நிலையிலும் அடுத்தவருக்குத் தரவேண்டும் என்னும் எண்ணம் இருக்கிறதே என்று வியந்த அவர் அந்தத் குடும்பம் நல்லபடியாக வாழ வேண்டும் என்பதற்காகத் திருமகளை நினைத்து கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார்.
அவ்வளவுத்தான்.
வானத்தில் இருந்து தங்க நெல்லிக்கனிகள் அந்த வீட்டின்மேல் மழையெனக் கொட்டின.
"கனகதாராவைப் பாடுவோர் அனைவருக்கும் தனது அருள் கிட்டும்" என்பது திருமகள் வாக்கு
- நாமக்கல் கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும், செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்குகள் தொடங்கப்பட்டன.
- தபால்துறை சார்பில் நாமக்கல் கோட்டத்தில் ஒரே நாளில் 1,700 செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்குகள் துவக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்:
இந்திய அஞ்சல் துறை சார்பில், அம்ரித் பெக்ஸ் பிளஸ் 3 திட்டத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் அஞ்சல் துறை மூலமாக செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்கு தொடங்க சிறப்பு முகாம் நடைபெற்றது. நாமக்கல் கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும், செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்குகள் தொடங்கப்பட்டன. நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட அழகு நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்ற விழாவில் 25 குழந்தைகளுக்கு, நடராஜபுரம் துணை அஞ்சலகத்தில் சிறுசேமிப்பு கணக்கு துவங்கியதற்கான பாஸ் புத்தகத்தினை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியன் பிள்ளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் நடரா ஜபுரம் துணை அஞ்சலக அதிகாரி சங்கீதா அஞ்சலக இன்சூரன்ஸ் வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன், வணிக வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், சேமிப்பு பிரிவு அலுவலர் அனிதா, அழகு நகர் நல சங்க துணைத் தலைவர் மணி ராஜா, செயலாளர் ராமசாமி, பொருளாளர் வீராசாமி, கந்தசாமி, அன்பு மற்றும் ஈசாக் ஆகியோர் கலந்து கொண்டனர். தபால்துறை சார்பில் நாமக்கல் கோட்டத்தில் ஒரே நாளில் 1,700 செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்குகள் துவக்கப்பட்டுள்ளதாக அஞ்சல் கோட்ட கண்கா
ணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
- சுதந்திர தினத்தின் அமுத பெருவிழாவை இந்திய அஞ்சல் துறையோடு கொண்டாடுங்கள்.
- செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்கு எண், கணக்கு துவங்கிய அலுவலகத்தின் பெயர் ஆகிய விவரங்கள் எழுதிய அஞ்சல் அட்டையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் வருகிற ஆகஸ்ட் 13.8.2022 ஆகும்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-
சுதந்திர தினத்தின் அமுத பெருவிழாவை இந்திய அஞ்சல் துறையோடு கொண்டாடுங்கள். உங்களின் செல்ல மகளுக்கு அஞ்சல் அலுவலகத்தில் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கு துவங்கி சிறந்த பரிசினை இன்றே அளியுங்கள். நாமக்கல் கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் வருகிற ஆகஸ்ட் 15.8.2022- க்குள் நீங்கள் துவங்கும் செல்வமகள் சேமிப்புத் திட்ட கணக்கின் விவரங்களை ஒரு அஞ்சல் அட்டையில் எழுதி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் நாமக்கல் கோட்டம் நாமக்கல்-637001 என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.
குழந்தையின் பெயர், செல்வ மகள் சேமிப்பு திட்ட கணக்கு எண், கணக்கு துவங்கிய அலுவலகத்தின் பெயர் ஆகிய விவரங்கள் எழுதிய அஞ்சல் அட்டையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் வருகிற ஆகஸ்ட் 13.8.2022 ஆகும். குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் குழந்தைகளுக்கு சிறந்த பரிசு வழங்கப்படும் . மேலும் 6385377754 என்ற செல்போண் எண்ணிற்கு வாட்ஸ் அப் மற்றும் குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்