என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "well"

    • சடையனேரி குளம் அருகே உள்ள கிணற்றில் நேற்று காலை ஆண் சடலம் ஒன்று தண்ணீரில் மிதந்துள்ளது.
    • திண்டுக்கல் மாவட்டம், பேகம்பூர் பள்ளப்பட்டியை சேர்ந்த சிவநேசன் மகன் தண்டபாணி என்பது தெரிய வந்தது.

    புளியங்குடி:

    புளியங்குடி சங்கரன்கோவில் சாலை அருகே உள்ள சடையனேரி குளம் அருகே உள்ள கிணற்றில் நேற்று காலை ஆண் சடலம் ஒன்று தண்ணீரில் மிதந்துள்ளது. இதை அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்து புளியங்குடி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவன், வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஷேக்அப்துல்லா தலைமையில் தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவர் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கிணற்றில் விழுந்து இறந்தவர் திண்டுக்கல் மாவட்டம், பேகம்பூர் பள்ளப்பட்டியை சேர்ந்த சிவநேசன் மகன் தண்டபாணி என்பது தெரிய வந்தது. அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அவர் எதற்காக புளியங்குடி வந்தார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மூதாட்டி உடல்நிலை சரியின்றி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • வெள்ளகோவில் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள நாகமநாயக்கன்பட்டியை சேர்ந்த கந்தசாமி மனைவி சவுந்தரம் (வயது 75).இவர் உடல்நிலை சரியின்றி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சவுந்திரம் வெள்ளகோவில் அருகே உள்ள மோளகவுண்டன்வலசில் உள்ள மகன் சிவசாமி (47), வீட்டிற்கு 2 நாட்களுக்கு முன்பு வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிவசாமி திடீரென்று எழுந்து பார்த்த போது வீடு திறந்த நிலையில் இருந்துள்ளது. அத்துடன் தாய் சவுந்திரத்தை வீட்டில் காணவில்லை. இதனால் தாயாரை பல இடங்களில் தேடி பார்த்தனர். அப்போது வீட்டிற்கு அருகில் உள்ள கிணற்றின் அருகில் சிவசாமி வீட்டு போர்வை, சவுந்தரத்தின் செருப்பு கிடந்துள்ளது. உடனே கிணற்றுக்குள் பார்க்கும்போது சவுந்தரம் கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.இது குறித்து வெள்ளகோவில் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து சவுந்தரத்தின் உடமலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • துத்திகுளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துமாரி விவசாயி, நெல் நடவு பணிகள் நடைபெற்று வருவதை பார்த்துக்கொண்டிருந்தார்.
    • இரவு வெகுநேரமாகியும் அவரை காணாததால் அவரது மனைவி வயலுக்கு சென்று பார்த்துள்ளார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள துத்திகுளம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துமாரி(வயது 33). விவசாயி. இவரது மனைவி ராமலெட்சுமி.

    முத்துமாரிக்கு சொந்தமான வயல் அப்பகுதியில் உள்ளது. அங்கு நெல் நடவு பணிகள் நடைபெற்று வருவதால் அதனை முத்துமாரி பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தடுமாறி விழுந்தார்.

    இந்நிலையில் இரவு வெகுநேரமாகியும் அவரை காணாததால் அவரது மனைவி வயலுக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது கிணற்றில் முத்துமாரி பிணமாக மிதந்து கொண்டிருந்தார். இதுதொடர்பாக அவரது உறவினர்கள் ஆலங்குளம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், முத்துமாரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கீழசெவல்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்து முதியவர் பலியானார்.
    • இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி அருகே உள்ள ஆவிணிப்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் தியாகராஜ கேசரி (வயது 68). இவர் தனியாக வசித்து வந்தார்.

    இந்தநிலையில் இவரது வீட்டின் முன்புறம் உள்ள கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இவரது மகன் சிவசுப்பிரமணியனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கிணற்றில் தியாகராஜ கேசரியின் உடல் கிடப்பதை பார்த்துள்ளார். உடனடியாக சுப்பிர மணியன் திருப்பத் தூர் தீயணைப்பு நிலையத் திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் நிலைய அலுவலர் பெரி.கணேசன் தலைமையிலான பேரிடர் மீட்பு குழுவினர் கிணற்றில் அழுகிய நிலையில் இருந்த தியாகராஜ கேசரியின் உடலை மீட்டு கீழச் செவல் பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முதியவரின் உடலை பிரேத பரிசோத னைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிணற்றில் தவறி விழும் சிசிடிவி காட்சி வெளியாகியது.
    • உடனிருந்த சிறுவன் உதவி கேட்டு அலறியதால் அங்கு வந்த குடும்பத்தினர் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்டனர்.

    தாமம்:

    மத்திய பிரதேசத்தில் வீட்டின் முற்றத்தில் விளையாடி கொண்டிருந்த சிறுவன் நாற்பது அடி ஆழம் கொண்ட கிணற்றில் தவறி விழும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது

    தாமோ மாவட்டத்தில் உள்ள வீட்டில் இரு சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அங்கு மூடி போடப்பட்டிருந்த தரைக்கிணறு சரியாக மூடப்படாததால் அதில் சிறுவன் தவறி விழுந்தான். உடனே உடனிருந்த மற்றொரு சிறுவன் உதவி கேட்டு அலறியதால் அங்கு வந்த குடும்பத்தினர் கிணற்றில் விழுந்த சிறுவனை மீட்டனர். 

    • கிணற்றில் உடல் அழுகிய நிலையில் வாலிபர் பிணம் இருந்தது
    • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    பெரம்பலுார்:பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, டி.களத்தூர் கிராமத்தை சேர்ந்த வீராசாமி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் உள்ள பயன்பாட்டில் இல்லாத கிணற்றில் நேற்று மாலை ஆண் ஒருவர் உடல் அழுகிய நிலையில் பிணமாக மிதந்து கொண்டிருந்தார். இதனை கண்டவர்கள் இதுகுறித்து உடனடியாக பாடாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் கிணற்றில் இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இறந்து கிடந்தவர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில்,விசாரணையில், கிணற்றில் இறந்து கிடந்தவர் திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, பச்சை மலையில் உள்ள நெசக்குளம் பகுதியை சேர்ந்த சேகரின் மகன் சிவா(வயது 35) என்பது தெரியவந்தது. மேலும் சிவாவின் நண்பரான பச்சை மலையில் உள்ள சிலையூர் கிராமத்தை சேர்ந்த ரவி (43) என்பவர் டி.களத்தூரில் வீராசாமியின் வயலுக்கு அருகே உள்ள அதே பகுதியை சேர்ந்த ஒருவரின் 4 ஏக்கர் வயலை கடந்த 1½ ஆண்டுகளாக குத்தகைக்கு எடுத்து தங்கியிருந்து விவசாயம் செய்து வந்தார்.இந்த நிலையில் கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு நண்பர் சிவாவை ரவி தன்னுடன் இருந்து வேலை செய்ய ஊரில் இருந்து டி.களத்தூருக்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அன்றைய தினம் முதல் சிவாவையும், ரவியையும் காணவில்லையாம். இதனால் அவர்கள் 2 பேரையும், அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடி வந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் சிவா கிணற்றில் பிணமாக மிதந்தது தெரியவந்தது. சிவாவின் நண்பர் ரவியையும் போலீசார் தேடி வருகின்றனர். அவரை பிடித்தால் சிவாவின் இறப்புக்கான காரணம் கொலையா அல்லது வேறு ஏதும் காரணமா என தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஷகிலா வேலைக்கு சென்று சேர்த்த பணத்தில் சமீபத்தில் ஒரு நிலம் வாங்கினார். அ
    • தாயும், மகன்களும் சேர்ந்து கிணறு தோண்டி அதில் தண்ணீரும் வந்த தகவல் ஊர் முழுவதும் பரவியது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மலப்புரத்தை அடுத்த குட்டிப்புரம் பகுதியை சேர்ந்தவர் ஷகிலா (வயது 40).

    ஷகிலாவுக்கு 2 மகன்கள் மட்டும் உள்ளனர். அவர்கள் பிளஸ்-2 மற்றும் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்கள். 3 பேரும் அந்த பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

    ஷகிலா வேலைக்கு சென்று சேர்த்த பணத்தில் சமீபத்தில் ஒரு நிலம் வாங்கினார். அங்கு வீடு கட்ட முடிவு செய்தார். அதற்கு தண்ணீர் தேவை என்பதால் தனது நிலத்தில் சொந்தமாக கிணறு தோண்ட முடிவு செய்தார்.

    அதற்கு அதிக பணம் தேவைப்பட்டதால் அவர் தனது மகன்களுடன் சேர்ந்து தன்னந்தனியாக கிணறு தோண்ட முடிவு செய்தார்.

    இதையடுத்து கடந்த மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறை விடப்பட்டபோது அவர் தனது 2 மகன்களுடன் சேர்ந்து கிணறு தோண்டும் பணியை தொடங்கினார். இதற்கான கருவிகளை வாடகைக்கு எடுத்து பணி செய்தார். தினமும் காலை 9 மணிக்கு வேலை தொடங்கினால் மாலை 6 மணிவரை இடைவிடாது மூவரும் வேலை செய்தனர்.

    இப்படி 22 நாட்களில் அவர் முழு கிணற்றையும் தோண்டி முடித்தனர். 22-வது நாள் இறுதியில் அவர்கள் தோண்டி கொண்டிருந்தபோது கிணற்றில் தண்ணீர் ஊற்றெடுத்து பெருகியது. இதை கண்டு தாயும், மகன்களும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர்.

    தாயும், மகன்களும் சேர்ந்து கிணறு தோண்டி அதில் தண்ணீரும் வந்த தகவல் ஊர் முழுவதும் பரவியது. தகவல் அறிந்த மக்கள் அங்கு சென்று பார்த்ததுடன் ஷகிலாவையும், அவரது 2 மகன்களையும் பாராட்டினர்.

    இதுபற்றி ஷகிலா கூறும்போது, கிணறு தோண்டி களைத்திருக்கும்போது எனது மகன்கள் பாட்டு பாடி உற்சாகப்படுத்துவார்கள். அதில் களைப்பை மறந்து மீண்டும் வேலை செய்வோம்.

    கிணற்றில் தண்ணீர் வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுபோல கஷ்டப்பட்டு எப்படியாவது வீட்டையும் கட்ட திட்டமிட்டு உள்ளோம், என்றார்.

    • ஆறு மாதத்திற்கு ஒரு முறை பாசனத்திற்கு நீர் வழங்கப்படுகிறது.
    • தண்ணீர் திருட்டு அபரிமிதமாக நடந்து வருகிறது.

    திருப்பூர் :

    பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. பாசன நிலங்கள் நான்கு மண்டலமாக பிரிக்கப்பட்டு, ஆறு மாதத்திற்கு ஒரு முறை பாசனத்திற்கு நீர் வழங்கப்படுகிறது.

    திருமூர்த்தி அணையிலி ருந்து பாசனத்திற்கு நீர் செல்லும், 132 கி.மீ., நீளம் உள்ள பிரதான கால்வாய், ஆயிரம் கி.மீ., நீளம் உடைய கிளைக்கால்வாய்கள் மற்றும் பகிர்மான கால்வாய்களில், நேரடியாகவும், ஓஸ் அமைத்தும், கரையோரம் கிணறு அமைத்து, சைடு போர் முறை என, தண்ணீர் திருட்டு அபரிமிதமாக நடந்து வருகிறது.

    இந்நிலையில், பி.ஏ.பி., பாசன நீர் திருட்டை கட்டுப்படுத்தவும், பாசன விவசாயிகளுக்கு முறையாக பயிர் சாகுபடிக்கு உரிய நீர் வழங்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

    உயர் நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், திருப்பூர், கோவை மாவட்டங்களில், பி.ஏ.பி., கால்வாயில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கை குழுவினர், கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

    கடந்த பிப்., 27ம் தேதி நிலவரப்படி, கோவை, திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பி.ஏ.பி., பாசனம் உள்ள வருவாய் கிராமங்களில், மொத்தம், 2,069 இடங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதில், பாசன கால்வாய்களுக்கு அருகில், 2,895 கிணறுகள் இருப்பது கண்டறியப்பட்டது. விதி மீறி மின் இணைப்பு பெற்றதாக, 1,004 கிணற்றின் உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், 884 கிணறுகள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், 780 கிணறுகளில் விதிமீறல் உறுதி செய்யப்பட்டது. அதோடு, 288 கிணறுகளின் மின் இணைப்பு துண்டிக்க நோட்டீஸ் வினியோகிக்க ப்பட்டுள்ளது. தற்போது வரை,21 கிணறுகளின் மின் இணைப்பு துண்டிக்கப்ப ட்டுள்ளது. விதிமீறல் தொடர்பாக, 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
    • திருப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே தொங்குட்டிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மசநல்லாம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது 45). இவரது மகள் வைஷ்ணவி (13). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை தங்களது மகளை காணவில்லை என பெற்றோர் பல இடங்களில் தேடி உள்ளனர். அப்போது அருகில் இருந்த தனியாருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தின் கிணற்றில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக இதுகுறித்து திருப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து தேடியதில் கிணற்றில் வைஷ்ணவியின் உடலை கண்டுபிடித்து மீட்டு மேலே கொண்டு வந்தனர்.

    இது குறித்து அவினாசிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மாணவி வைஷ்ணவி உடலை பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவி இறந்ததற்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • 500 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவை ஆண்ட மன்னரால் இந்த கிணறு வெட்டப்பட்டது.
    • தண்ணீர் எடுப்பதால் இங்குள்ள மக்கள் யாரும் மாநகராட்சிக்கு குடிநீர் கட்டணம் செலுத்துவதில்லை.

    திருவனந்தபுரம்:

    கேரளாவின் கோட்டயம் மாநகராட்சிக்கு உட்பட்ட தெக்கூர் சமஸ்தான பகுதியில் கமலநீராழி என்ற பழங்கால கிணறு உள்ளது. 500 ஆண்டுகளுக்கு முன்பு கேரளாவை ஆண்ட மன்னரால் இந்த கிணறு வெட்டப்பட்டது.

    அப்போது அந்த பகுதி மக்கள் அனைவரும் இந்த கிணற்றில் இருந்துதான் குடிநீர் எடுத்து பயன்படுத்தி வந்தனர். மன்னராட்சி மறைந்து மக்களாட்சி வந்த பின்னரும் இந்த கிணறு மக்களின் தாகம் போக்கி வருகிறது.

    அதாவது கோட்டயம் தெக்கூர் சமஸ்தான பகுதியில் இப்போது 300 குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள பெரும்பாலான வீடுகளுக்கு மாநகராட்சியின் குடிநீர் இணைப்பு இல்லை. ஆனால் அவர்கள் அனைவருக்கும் தினமும் தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீர் கிடைத்து வருகிறது.

    இந்த கிணற்றை கோட்டயம் மாநகராட்சி நிர்வகித்து வருகிறது. இந்த கிணற்றில் இருந்து 300 குடும்பங்களின் வீடுகளுக்கும் குழாய் இணைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. கிணற்றை பராமரிக்க இப்பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார். தினமும் காலை 6 மணிக்கு அவர் கிணற்றில் இருந்து மோட்டார் மூலம் தண்ணீர் திறந்து விடுவார். மதியம் வரை அனைத்து வீடுகளுக்கும் தண்ணீர் தாராளமாக கிடைக்கும். அதன்பின்பு மறுநாள் தண்ணீர் வழக்கம் போல தண்ணீர் விடப்படும்.

    இக்கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதால் இங்குள்ள மக்கள் யாரும் மாநகராட்சிக்கு குடிநீர் கட்டணம் செலுத்துவதில்லை. 500 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கிணறு இப்போதும் கோட்டயம் பகுதி மக்களின் தாகம் தணித்து வருவது ஆச்சரியமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் கூறினர்.

    • 60 அடி ஆழம் கிணறு இருந்ததால், மேலே வர முடியாமல் மயில் தண்ணீரில் தத்தளித்தது.
    • தீயணைப்பு நிலைய வீரா்கள் கயிறு கட்டி கிணற்றில் இறங்கி மயிலை உயிருடன் மீட்டனா்.

    காங்கயம் :

    காங்கயம் அருகே, செம்மங்காளிபாளையம் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் ஆண் மயில் விழுந்துள்ளது. 60 அடி ஆழம் கிணறு இருந்ததால், மேலே வர முடியாமல் மயில் தண்ணீரில் தத்தளித்தது. தகவலின்பேரில் காங்கயம் தீயணைப்பு நிலைய வீரா்கள் சம்பவ இடத்துக்கு சென்று, கயிறு கட்டி கிணற்றில் இறங்கி மயிலை உயிருடன் மீட்டனா்.

    மீட்கப்பட்ட மயில் காங்கயம் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னா் ஊதியூா் காப்புக்காட்டில் பாதுகாப்பாக விடப்பட்டது. 

    • நேற்று உதயகுமார் அப்பகுதியில் உள்ள தோட்டத்திற்கு குளிக்க சென்றார்.
    • தீயணைப்பு வீரர்கள் 2 மோட்டார்கள் மூலம் கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றியபோது அதில் உதயகுமார் இறந்து கிடந்தார்.

    நெல்லை:

    சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூரை அடுத்த பெரியூர் கண்டியபேரியை சேர்ந்தவர் உதயகுமார்(வயது 41). விவசாயி. அப்பகுதியில் காளியம்மன் கோவில் கொடைவிழா நடைபெற்றது.

    இதில் நேற்று நடந்த மஞ்சள்பால் ஆடுதலில் பங்கேற்றுவிட்டு உதயகுமார் அப்பகுதியில் உள்ள தோட்டத்திற்கு குளிக்க சென்றார். அப்போது அவர் கிணற்றில் தவறி விழுந்தார். அப்போது அவரது உடலில் காயம் ஏற்பட்டு நீரில் மூழ்கினார்.

    இந்நிலையில் குளிக்க சென்ற உதயகுமார் வெகுநேரமாகியும் வராததால், அவரது உறவினர்கள் அங்கு தேடி சென்றபோது கிணற்று அருகே அவரது ஆடைகள் மட்டும் இருந்தது. இதனால் அவர் மூழ்கியிருக்கலாம் என நினைத்து சங்கர ன்கோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடனடியாக அங்கு வந்த வீரர்கள் 2 மோட்டார்கள் மூலம் கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றியபோது அதில் உதயகுமார் இறந்து கிடந்தார். அவரது உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். தொடர்ந்து கரிவலம்வந்த நல்லூர் போலீசார் அவரது உடலை சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×