என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "WHO"
- நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
- 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஒப்புதல் அளிக்கப்படவில்லை.
ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 700-க்கும் மேற்பட்டோர் இந்த நோய் பாதிப்புக்கு பலியாகி உள்ளனர். கடந்த வாரம் மட்டும் 107 பேர் குரங்கம்மை பாதித்து உயிரிழந்தனர். தொடர்ந்து பரவி வருவது மற்றும் உயிரிழப்பு அதிகரிப்பதைத் தொடர்ந்து, நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்நிலையில் பெரியவர்கள் குரங்கம்மை நோய்க்கு எதிரான தடுப்பூசியை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு அனுமதி வழங்கி உள்ளது. இது ஆப்பிரிக்கா மற்றும் இதர நாடுகளில் குரங்கம்மை நோய்த்தடுப்பு நடவடிக்கையில் முக்கிய படி என்று உலக சுகாதார அமைப்பு கூறி உள்ளது.
பவேரியன் நார்டிக் ஏ/எஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த தடுப்பூசியை கவி (GAVI) மற்றும் யுனிசெப் (UNICEF) போன்ற நன்கொடையாளர்கள் மட்டுமே வாங்க அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. ஒரே ஒரு உற்பத்தியாளர் மட்டுமே இருப்பதால் தடுப்பூசி இருப்பு குறைவாகவே இருக்கிறது.
நன்கொடையாளர்கள் தடுப்பூசியை கொள்முதல் செய்து உடனடியாக தேவைப்படும் பகுதியில் விரைவாக விநியோகம் செய்ய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் அதானம் கோரிக்கை விடுத்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் வழங்கி இருப்பதை அடுத்து, இந்த தடுப்பூசியை இரண்டு டோஸ் என்ற அளவில் 18 வயது அல்லது அதற்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கலாம். 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ஒப்புதல் அளிக்கப்படவில்லை.
எனினும், அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பு அதிகம் ஏற்படும் என கணிக்கப்பட்ட பகுதிகளில் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினருக்கும் இந்த தடுப்பூசி செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- செல்போன் பயன்படுத்துவது பெருமளவு அதிகரித்துள்ளது.
- செல்போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு, அதன் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
லண்டன்:
உலகம் முழுவதும் செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. செல்போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சால் மனிதர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் என்று பேசப்படுகிறது. மூளை புற்றுநோய் தாக்கும் என்ற அச்சமும் நிலவுகிறது.
இதுபற்றி உலக சுகாதார அமைப்பு மற்றும் இதர சர்வதேச சுகாதார அமைப்புகள், செல்போன் பயன்பாட்டுக்கும், பல்வேறு உடல் உபாதைகளுக்கும் சம்பந்தம் இருப்பதற்கு உறுதியான ஆதாரம் இல்லை என்று கூறி வந்துள்ளன. இருப்பினும், இதுகுறித்து விரிவான ஆய்வு நடத்துவது அவசியம் என்று தெரிவித்துள்ளன.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு, செல்போன் பயன்பாட்டுக்கும், மூளை புற்றுநோய்க்கும் சம்பந்தம் உள்ளதா என்று அறிய ஆய்வு நடத்தியது. 10 நாடுகளை சேர்ந்த 11 ஆய்வாளர்கள் இதில் பங்கேற்றனர். ஆஸ்திரேலிய அரசின் கதிரியக்க பாதுகாப்பு குழுவும் பங்கேற்றது.
கடந்த 1994-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை நடத்தப்பட்ட 63 ஆய்வுகளின் முடிவுகளும் இந்த ஆய்வில் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன. செல்போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு, அதன் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வில் கூறப்பட்டு இருப்பதாவது:-
செல்போன் பயன்படுத்துவதற்கும், மூளை புற்றுநோய் வருவதற்கான அபாயம் அதிகரிப்பதற்கும் சம்பந்தம் இல்லை. நீண்ட நேரம் செல்போன் பேசுபவர்களுக்கும், 10 ஆண்டுகளுக்கு மேலாக செல்போன் பயன்படுத்தி வருபவர்களுக்கும் கூட இது பொருந்தும்.
செல்போன் பயன்படுத்துவது பெருமளவு அதிகரித்துள்ளது. அதற்கேற்றாற்போல், மூளை புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்கவில்லை. இதில் இருந்தே இரண்டுக்கும் சம்பந்தம் இல்லை என்பதை அறியலாம்.
- ஆணுறை பயன்படுத்துவது குறைந்து வருவது கண்டறியப்பட்டு இருக்கிறது.
- கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து எவ்வித மாற்றமும் இன்றி தொடர்கிறது.
உலக சுகாதார மையம் சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்டு இருக்கும் ஆய்வு அறிக்கையில், ஐரோப்பாவில் கடந்த பத்து ஆண்டு காலக்கட்டத்தில் உடலுறவில் ஈடுபாடு கொண்ட இளைஞர்கள் ஆணுறை பயன்படுத்துவது பெருமளவுக்கு குறைந்து வருவது கண்டறியப்பட்டு இருக்கிறது.
அரசாங்கங்கள், சுகாதார அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில் இந்த நிலை பேராபத்தை ஏற்படுத்திவிடும் என்று உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. இதுக் குறித்து ஐரோப்பியாவை சுற்றியுள்ள 53 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2 லட்சத்து 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
இந்தக் கருத்துக் கணிப்பில் உடலுறவு நாட்டம் கொண்ட ஆண்களிடையே 2014 ஆம் ஆண்டு 70 சதவீதத்தில் இருந்த ஆணுறை பயன்பாடு 2022 ஆம் ஆண்டு 61 சதவீதமாகக் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இதேக் காலக்கட்டத்தில் பெண்கள் உடலுறவின் போது பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றுவது 63 சதவீதத்தில் இருந்து 57 சதவீதமாக குறைந்துள்ளது.
மூன்றில் ஒரு பங்கு இளம் பருவத்தினர் கடைசியாக உடலுறவு கொண்ட போது ஆணுறை மற்றும் கருத்தடை மாத்திரைகள் எதையும் பயன்படுத்தவில்லை என்று தெரிவித்துள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த 2018 ஆம் ஆண்டில் இருந்து எவ்வித மாற்றமும் இன்றி தொடர்கிறது.
இந்த ஆய்வைத் தொடர்ந்து அரசுகள், கல்வியாளர்கள் மற்றும் சுகாதார துறையை சேர்ந்தவர்கள் பாலியல் தொடர்பான கல்வியில் முதலீடுகளை அதிகப்படுத்தவும், பாலியல் சுகாதார சேவைகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- சண்டிபுரா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
- 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தியாவில் சண்டிபுரா வைரஸ் பாதிப்பு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் இந்தியாவில் 245 பேருக்கு அக்யூட் என்செபாலிடிஸ் சிண்ட்ரோம் அதாவது மூளையழற்சி நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 82 பேர் உயிரிழந்தனர்.
தற்போது நாடு முழுக்க 43 மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு அக்யூட் என்செபாலிடிஸ் சிண்ட்ரோம் பாதிப்பு ஏற்படுகிறது. இதில் 64 பேருக்கு சண்டிபுரா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
"சண்டிபுரா வைரஸ் தொற்று இந்தியாவில் அழிந்து போகும் தருவாயில் உள்ளது. எனினும், தற்போது ஏற்பட்டுள்ள பாதிப்பு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது," என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
குஜராத்தில் ஒவ்வொரு நான்கைந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை சண்டிபுரா வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது. கொசுக்கள், பூச்சி வகைகளால் சண்டிபுரா வைரஸ் பரவுகிறது. இந்த நோய் பாதிப்புக்கு குறிப்பிட்ட சிகிச்சை முறை மற்றும் தடுப்பு மருந்து என எதுவும் இல்லை.
பாதிப்பு ஏற்பட்டதும் அதனை எவ்வளவு சீக்கிரம் கண்டுபிடிக்கிறோமோ அதற்கு ஏற்ப நோய் பாதிப்பை குணப்படுத்தும் வாய்ப்புகள் அதிகரிக்கும். அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்துவது, 15 வயதிற்கும் கீழ் உள்ள சிறுவர்களை கண்காணிப்பது அவசியம் ஆகும்.
- கடந்த 2019-ம் ஆண்டில் மது அருந்துவதால் 26 லட்சம் இறப்புகள் ஏற்பட்டது.
- அந்த உயிரிழப்புகளில் முக்கால்வாசி பேர் ஆண்கள் என உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.
ஜெனீவா:
ஆல்கஹால் மற்றும் போதை பொருளால் ஒவ்வொரு ஆண்டும் 30 லட்சம் பேர் மரணம் அடைந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது.
உலக சுகாதார நிறுவனம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஒவ்வொரு ஆண்டும் மதுவினால் கிட்டத்தட்ட 30 லட்சம் மக்கள் உயிரிழக்கின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக இறப்பு விகிதம் சற்றே குறைந்திருந்தாலும், அது ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், மதுவினால் தூண்டப்பட்ட வன்முறை, துன்புறுத்தல், பல நோய்கள் உள்ளிட்டவை ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் ஏற்படும் 20-ல் ஒரு மரணத்துக்குக் காரணமாக உள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டில் மது அருந்துவதால் 26 லட்சம் இறப்புகள் ஏற்பட்டது. சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி அந்த எண்ணிக்கை உலகளவில் ஏற்பட்ட மொத்த இறப்புகளில் 4.7 சதவீதம் ஆகும். அந்த உயிரிழப்புகளில் முக்கால்வாசி பேர் ஆண்கள்.
2019-ம் ஆண்டில் மது காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகளில் அதிகபட்சமாக 13 சதவீதத்தினர் 20 முதல் 39 வயதுக்கு உட்பட்டவர்கள்.
மதுவினால் 2019-ல் ஏற்பட்ட உயிரிழப்புகளில் 16 லட்சம் பேர் தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள்.
இவர்களில் 4,74,000 பேர் இதய நோய்களாலும், 4,01,000 பேர் புற்றுநோயாலும், 7,24,000 பேர் போக்குவரத்து விபத்துக்கள், சுய துன்புறுத்தல் உள்ளிட்ட காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள்.
9 ஆண்டுக்கு முன் 5.7 லிட்டராக இருந்த உலகளவில் தனிநபர் மது நுகர்வு 2019-ம் ஆண்டில் 5.5 லிட்டராகக் குறைந்துள்ளது என தெரிவிக்கிறது.
- மது மற்றும் கஞ்சாவினால் மரணிப்பவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள் தான்.
- 2019 ஆம் ஆண்டு எடுத்த தரவுகளின் அடிப்படையில் உலக சுகாதார நிறுவனம் இதை தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் மது மற்றும் போதைப் பொருட்களால் ஒவ்வொரு வருடமும் 32 லட்சம் மக்கள் இறக்கின்றனர் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
மது அருந்துவதால் மட்டும் உலக முழுவதும் ஒவ்வொரு வருடமும் 26 லட்சம் மக்கள் மரணிக்கின்றனர்.
போதைப் பொருட்களால் உலகம் முழுவதும் ஒவ்வொரு வருடமும் 6 லட்சம் மக்கள் இறக்கின்றனர்.
மது மற்றும் போதைப் பொருட்களால் மரணிப்பவர்களில் பெரும்பாலானோர் ஆண்கள் தான். மது அருந்துவதால் 20 லட்சம் ஆண்களும் கஞ்சாவினால் 4 லட்சம் ஆண்களும் ஒவ்வொரு வருடமும் உயிரிழக்கின்றனர்.
மக்கள் குறைந்த வருமானம் பெறும் நாடுகளில் அதிகமானோர் மதுவினால் உயிரிழக்கின்றனர். மக்கள் அதிக வருமானம் பெறும் நாடுகளில் குறைவான அளவிலேயே மதுவினால் ஏற்படும் உயிரிழப்புகள் உள்ளது.
2019 ஆம் ஆண்டு எடுத்த தரவுகளின் அடிப்படையில் உலக சுகாதார நிறுவனம் இதை தெரிவித்துள்ளது.
- இரத்த தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதே நோக்கம்.
- இரத்த தானம் செய்வதன் முக்கியத்துவதைக் கூறுவது.
உலகம் முழுக்க இன்று சர்வதேச இரத்த தான தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பாதுகாப்பான இரத்தம் சேமிக்கப்படுவதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும், கட்டணமின்றி தங்களின் குருதியை தானம் செய்து பலரின் உயிரை காக்கும் பரிசை வழங்குவோருக்கு பாராட்டு தெரிவிக்கவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
மனிதனின் உயிர்நாடியாக காணப்படுகின்ற இரத்தத்தின் முக்கியத்துவத்தை அறிவதும், இரத்த தானம் செய்வதன் முக்கியத்துவதைக் கூறுவதும் இந்நாளின் நோக்கமாகும்.
வலிமையான சுகாதார கட்டமைப்பில் போதுமான அளவுக்கு பாதுகாப்பான இரத்தம் மற்றும் அதில் இருந்து பிரிக்கப்படும் சிவப்பணுக்கள், வெள்ளை அணுக்கள் மற்றும் பிளேட்லெட்டுகளை சேமித்து வைப்பதே இரத்த சேவை ஆகும். ஒவ்வொரு ஆண்டும் இரத்த தான நாளுக்கான கருப்பொருள் மாறிக் கொண்டே இருக்கும்.
கருப்பொருள் எதுவாயினும், மக்களிடம் இரத்த தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது இந்நாளின் பிரதான நோக்கங்களில் ஒன்று ஆகும். இந்த ஆண்டு இரத்த தானம் நாளின் 20 ஆவது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது.
சர்வதேச இரத்த தான நாளில் கடந்த ஆண்டுகளில் உலகளவில் இரத்தம் தானம் செய்து வருவோருக்கு நன்றி தெரிவிக்கவும், மருத்துவர்கள் மற்றும் தானம் வழங்குவோரை பெருமைப்படுத்தவும் உலக சுகாதார மையம் திட்டமிட்டுள்ளது.
இதுமட்டுமின்றி இரத்தம் தானம் செய்வதில் உள்ள தொடர்ச்சியான சவால்களை எதிர்கொண்டு, வரும் காலங்களில் இரத்த தானம் செய்வதை மேலும் துரிதப்படுத்தவும் உலக சுகாதார மையம் உறுதியேற்கிறது.
- வங்காளதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகள் சைமா வஜேத்.
- இவர் உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவின் மண்டல இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
ஜெனீவா:
உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவின் மண்டல இயக்குனராக சைமா வஜேத் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு இவர் அந்தப் பதவி வகிப்பார்.
சைமா வஜேத்தின் பதவிக் காலம் 2024, பிப்ரவரி 1ம் தேதி முதல் தொடங்குகிறது. இந்தப் பதவியை அடைந்த வங்காளதேசத்தின் 2-வது பிரதிநிதி இவர்.
இவர் வங்காளதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
- கொரோனாவின் புதிய வகையான ஜே.என்.1 வைரஸ் தான் தற்போது அதிகரித்து வருவதற்கு காரணம்.
- கடந்த ஒரு மாதத்தில் உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஜெனீவா:
உலக நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறவர்களின் எண்ணிக்கை சுமார் 3 ஆயிரம் ஆகியுள்ளது.
இந்தியாவில் கேரளாவில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவிலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கிறது.
கொரோனாவின் புதிய வகையான ஜே.என்.1 வைரஸ் தான் தற்போது அதிகரித்து வருவதற்கு காரணமாக உள்ளது.
இந்நிலையில், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 52 சதவீதம் உயர்ந்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தக் காலகட்டத்தில் உலக அளவில் 8,50,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை கடந்த 28 நாட்கள் கால கட்டத்தோடு ஒப்பிடுகையில் 8 சதவீதம் குறைந்துள்ளது எனவும் கூறியுள்ளது.
- ஒமிக்ரான் வகையில் இருந்து உருமாறிய JN1 எனும் வைரஸ் பரவி வருகிறது.
- உலக சுகாதார மையம் உலக நாடுகளை எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்தி இருக்கிறது.
இந்தியாவில் புதிய வகை கொரோனா JN1 பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கொரோனா தொற்றுக்கு பிறகு பல்வேறு உருமாற்றங்களால் புதிய வகை வைரஸ்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றன. அந்த வகையில் கொரோனா ஒமிக்ரான் வகையில் இருந்து உருமாறிய JN1 எனும் வைரஸ் பரவி வருகிறது.
புதிய வகை கொரோனா பரவலை தொடர்ந்து, உலக சுகாதார மையம் உலக நாடுகளை எச்சரிக்கையாக இருக்க வலியுறுத்தி இருக்கிறது. இந்த நிலையில், புதிய வகை கொரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதார துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் INSACOG அமைப்பின் தலைவர், மருத்துவர் என்.கே. அரோரா உண்மை விவரங்களை தெரிவித்து இருக்கிறார்.
இது குறித்து பேசிய அவர், "இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து கடந்த வாரம் வரையிலும், கடந்த எட்டு வாரங்கள் வரையிலும் 22 பேருக்கு புதிய வகை கொரோனா JN1 பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த வகை வைரஸ் வேகமாக பரவுவதாக எந்த ஆதாரமும் இல்லை. மற்ற வகை கொரோனா பாதிப்புகளை போன்ற அறிகுறிகளை JN1 வகையும் வெளிப்படுத்துகிறது."
"கொரோனா JN1 பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பதாக எந்த தகவலும் இல்லை. தற்போதைய சூழலில் இந்த வகை கொரோனா பாதிப்பு குறித்து பதற்றம் அடைய வேண்டியதில்லை, மாறாக விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் ஆகும்," என்று தெரிவித்தார்.
- நோயாளிகளின் எண்ணிக்கையில் ஏதும் அபாயகரமான அதிகரிப்பு இல்லை என்றும் சீனா திட்டவட்டமாக தெரிவித்து இருந்தது.
- ஆலோசனையில் ஆக்சிஜன் கையிருப்பு, முக கவசம், அவசரகால மருந்துகள் கையிருப்பு வைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.
சென்னை:
சீனாவின் வடக்கு பகுதியில் கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து குழந்தைகளுக்கு சுவாச கோளாறு உள்ளிட்ட நுரையீரல் நோய்க்கான அறிகுறிகள் தோன்றி, பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளி வந்தன. இச்செய்தி உலக நாடுகளை கவலை கொள்ள செய்தது.
உலக சுகாதார அமைப்பு (World Health Organization), இது குறித்து சீனாவிடம் விளக்கம் கேட்டிருந்த நிலையில்,
புதிய நோய் தொற்று கிருமி எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் புதிய நோய்க்கான அறிகுறிகள் இதுவரை நோயாளிகளிடம் காணப்படவில்லை என்றும் தற்போது அதிகரித்துள்ள சுவாச கோளாறுகளுக்கு காரணம், மருத்துவ துறையினர் முன்னரே அறிந்துள்ள நோய் கிருமிகளால் ஏற்படும் வழக்கமான நிமோனியா தாக்குதல்தான். மேலும், மருத்துவமனைகளின் கொள்ளளவிற்கு உட்பட்ட அளவில்தான் நோயாளிகளின் எண்ணிக்கை உள்ளதாகவும், நோயாளிகளின் எண்ணிக்கையில் ஏதும் அபாயகரமான அதிகரிப்பு இல்லை என்றும் சீனா திட்டவட்டமாக தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் சீனாவில் புதிய வகை நிமோனியா காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் இன்று ஆலோசனையில் ஈடுபட்டனர்.
ஆலோசனையில் சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம், தொற்றுநோய் தடுப்பு அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற ஆலோசனையில், தொற்றுநோய் பரவாமல் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், ஆக்சிஜன் கையிருப்பு, முக கவசம், அவசரகால மருந்துகள் கையிருப்பு வைப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நிமோனியா நோய் தொற்று குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் இன்று மாலை வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- கோவிட்-19 பெருந்தொற்றால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்
- உலக சுகாதார அமைப்பு சீனாவிடம் விளக்கம் கேட்டது
கடந்த 2019 டிசம்பர் மாதம், சீனாவின் வூஹான் (Wuhan) மாகாணத்தில் தோன்றியதாக சொல்லப்படும் கொரோனா (Corona) எனும் வைரஸ் வகை நுண்கிருமியால், நுரையீரல் தொற்று நோய் ஏற்பட்டு, மக்கள் உயிரிழந்தனர். 2020 மார்ச் மாதம் இந்த பெருந்தொற்று இந்தியாவிற்கும் பரவியது.
கோவிட்-19 பெருந்தொற்றை தடுக்கும் விதமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகள், பல மாதங்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டிருந்தன. இந்த பெருந்தொற்றால் இந்தியா உட்பட பல உலக நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். நோய் பரவலை தடுக்க, உயிரிழந்தவர்களின் உடலை கூட சுகாதார துறையினர், உறவினர்களிடம் காட்ட மறுத்த சோகம் நிலவியது.
மேலும், ஊரடங்கால் அலுவலகங்களும், தொழிற்சாலைகளும் பல மாதங்கள் மூடப்பட்டதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்.
இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து, சீனாவின் வடக்கு பகுதியில் குழந்தைகளுக்கு சுவாச கோளாறு உள்ளிட்ட நுரையீரல் நோய்க்கான அறிகுறிகள் தோன்றி, பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளி வந்தன. இச்செய்தி உலக நாடுகளை கவலை கொள்ள செய்தது.
உலக சுகாதார அமைப்பு (World Health Organization), இது குறித்து சீனாவிடம் விளக்கம் கேட்டிருந்தது.
சீனாவின் பதில் குறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் அந்த அமைப்பு தெரிவித்திருப்பதாவது:
புதிய நோய் தொற்று கிருமி எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் புதிய நோய்க்கான அறிகுறிகள் இதுவரை நோயாளிகளிடம் காணப்படவில்லை என்றும் தற்போது அதிகரித்துள்ள சுவாச கோளாறுகளுக்கு காரணம், மருத்துவ துறையினர் முன்னரே அறிந்துள்ள நோய் கிருமிகளால் ஏற்படும் வழக்கமான நிமோனியா தாக்குதல்தான் என சீனா பதிலளித்துள்ளது. மேலும், மருத்துவமனைகளின் கொள்ளளவிற்கு உட்பட்ட அளவில்தான் நோயாளிகளின் எண்ணிக்கை உள்ளதாகவும், நோயாளிகளின் எண்ணிக்கையில் ஏதும் அபாயகரமான அதிகரிப்பு இல்லை என்றும் சீனா திட்டவட்டமாக தெரிவித்தது.
இவ்வாறு உலக சுகாதார அமைப்பின் அறிக்கை கூறுகிறது.
இதையடுத்து, கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்தின் கட்டுப்பாடுகளை மீண்டும் சீன மக்கள் கடைபிடிக்க அந்நாட்டை உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்குதல் நடந்து 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்த வைரஸ் தோன்றிய காரணங்கள் குறித்து கண்டறிய சீனா சரிவர ஒத்துழைக்கவில்லை என பல நாடுகள் குற்றஞ்சாட்டி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்