என் மலர்
நீங்கள் தேடியது "Wife missing"
- இவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் கணவன் மனைவிக்குள் அடிக்கடிதகராறு இருந்து வந்துள்ளது.
- சப் இன்ஸ்பெக்டர் சரண்யா ஆகியோர்வழக்கு பதிவு செய்து காணாமல்போன கஸ்தூரியை தேடி வருகின்றனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பனங்காட்டு தெருவை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி கஸ்தூரி (வயது 30) இவர்களுக்குதிருமணம் ஆகி11ஆண்டுகள்ஆகிறது. இவர்களுக்குஒரு மகன் உள்ளான். ஆனந்த் குடிப்பழக்கம் உள்ளவர். இவர் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் கணவன் மனைவிக்குள் அடிக்கடிதகராறு இருந்துவந்துள்ளது.வழக்கம் போல நேற்று முன்தினம் 8ம்தேதி இரவு குடித்துவிட்டுஆனந்த் வீட்டுக்கு வந்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அவரது மனைவி கஸ்தூரிசண்டை போட்டுவிட்டு படுத்து தூங்கிட்டார். காலையில் எழுந்து பார்த்தபோது மனைவியை காணவில்லை பல இடங்களில் தேடி எங்கும் கிடைக்காததால் பண்ருட்டி போலீசில் புகார் கொடுத்தார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பொறுப்பு நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் சரண்யா ஆகியோர்வழக்கு பதிவு செய்து காணாமல்போன கஸ்தூரியை தேடி வருகின்றனர்.
- தாம்பரம் வரை செல்வதாக கணவரிடம் கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.
- உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் எங்கும் இல்லை.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த நந்திமா நகரை சேர்ந்த ஏழுமலையின் மனைவி கலையரசி (வயது.35), திருப்போரூர் அருகே உள்ள ஆலத்தூர் தொழில்பேட்டையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். திருமணம் ஆகி 15ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் தாம்பரம் வரை செல்வதாக கணவரிடம் கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடியும் எங்கும் இல்லை. இதுகுறித்து மாமல்லபுரம் போலீஸ் நிலையத்தில் ஏழுமலை தனது மனைவியை கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்தார்.
மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கலையரசியை தேடி வருகின்றனர்.
மதுரை:
மதுரை பாலமேடு செட்டியார் தெருவைச் சேர்ந்தவர் நந்தினி (வயது 24). இவரது கணவர் கணேசன். இவர்களுக்கு தர்ஷன் (4) என்ற மகன் உள்ளான்.
இந்த நிலையில் நந்தினி சமீபத்தில் புதிதாக செல்போன் வாங்கினார். அதற்கு கணேசன் ‘எனக்கு தெரியாமல் நீ எப்படி செல்போன் வாங்கலாம்?’ என்று கண்டித்தார்.
இதையடுத்து கணவன் -மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் நந்தினி சம்பவத்தன்று காலை மகன் தர்ஷனுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
இது தொடர்பாக கணேசன் பாலமேடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ் பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து மாயமான தாய்-மகனை தேடி வருகிறார்.