என் மலர்
நீங்கள் தேடியது "Wild elephants camped"
- பலாப்பழம் உள்பட உணவுகளின் ருசி கண்டு திரும்ப திரும்ப குடியிருப்பு, விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடுவதால் பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
- மின் நிலைய ஆஸ்பத்திரி அருகே யானைக் கூட்ம் முகாமிட்டுள்ளதால் ஊழியர்கள் மற்றும் குடும்பத்தினர் ஒரு வித பீதியுடனே சென்று வரு கின்றனர்.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சுருளியாறு மின் நிலையம் உள்ளது. இதனையொட்டி மின் ஊழியர்கள் குடியிருப்பு பகுதி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை கூடலூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட பளியங்குடி, வண்ணாத்தி ப்பாறை, மங்கலதேவி பீட், மாவடி, வட்டிதொட்டி உள்ளிட்ட பகுதிகள் பெரியாறு புலிகள் சரணாலயமாக உள்ளது. இங்கு ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன.
குறிப்பாக காட்டு யானைகள் உள்ளன. யானைக் கூட்டம் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விடுகின்றன. வனப்பகுதியில் கிடைக்காத பயிர்கள் விவசாய நிலங்களில் உள்ளதால் அங்கு புகுந்து சேதப்படுத்தி செல்கின்றன. மேலும் பலாப்பழம் உள்பட உணவுகளின் ருசி கண்டு திரும்ப திரும்ப குடியிருப்பு, விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடுவதால் பொது மக்கள் அச்சமடைந்து ள்ளனர்.
தற்போது சுருளியாறு மின் நிலைய ஆஸ்பத்திரி அருகே யானைக் கூட்ம் முகாமிட்டுள்ளன. இதனால் ஊழியர்கள் மற்றும் குடு ம்பத்தினர் ஒரு வித பீதியுடனே சென்று வரு கின்றனர். ஏற்கனவே முணாறு அருகே சின்னக்கானல் பகுதியில் அட்டகாசம் செய்த அரிசி கொம்பன் யானையை பிடித்து மங்கலதேவி கண்ணகி கோவில் வனப்பகுதியில் விட்டனர்.
ஆனால் அந்த யானை மாவடி வனப்பகுதி வழியாக தமிழக எல்லைக்குள் புகுந்து மேகமலையில் தங்கியது. இதனால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அரிசி கொம்பன் யானை கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தப்பட்டுள்ளதால் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது பெரியாறு புலிகள் சரணாலய பகுதிக்கு அரிசி கொம்பன் மீண்டும் திரும்பியுள்ளது. குமுளியில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள சீனியர் ஓடை பகுதியில் அரிசி கொம்பன் நடமாட்டம் உள்ளது ஜி.பி.எஸ். காலர் மூலம் வனத்துறையினருக்கு தெரிய வந்தது.
இது குறித்து அவர்கள் கூறுகையில், அரிசி கொம்பன் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். யானை மீண்டும் மேகமலைக்கு செல்ல வாய்ப்பு இல்லை. எனினும் சுற்றுலா பயணி களுக்கான தடை இன்னும் விளக்கப்படவில்லை. கள நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றனர்.
- குடியிருப்புக்குள் வராதபடி வனத்துறை கண்காணிப்பு
- 22 யானைகள் சுற்றி திரிவதால் பொதுமக்கள் அச்சம்
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட்டை சுற்றிலும் அடர்ந்த காடுகள் உள்ளன.
இங்கு யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன.
இந்த வனவிலங்குகள் அவ்வப் போது உணவு மற்றும் தண்ணீருக்காக வனத்தை விட்டு வெளியேறி ஊருக்குள் வருவதை வாடிக்கையாக வைத்துள்ளது.
அதிலும் குறிப்பாக காட்டு யானைகள் அடிக்கடி வந்து செல்கின்றன. அண்மைக்காலங்களாக எஸ்டேட் பகுதிகளில் உள்ள தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிகளுக்குள் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. காட்டு யானைகள் தனியாகவும், கூட்டமாகவும் சுற்றி திரிகின்றன.
வால்பாறை அருகே கருமலை எஸ்டேட், ஐயர் பாடி எஸ்டேட், பச்சமலை எஸ்டேட், அப்பர் பாரளை எஸ்டேட் பகுதிகள் உள்ளன.
இந்த பகுதிகளில் 22 காட்டு யானைகள் சுற்றி திரிந்து வருகின்றன.இவை அவ்வப்போது ஊருக்குள் புகுந்து வீடுகளை இடித்து, பொருட்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்திலேயே உள்ளனர்.
இந்நிலையில் அப்பர் பாரனை எஸ்டேட் வனப்பகுதிக்குள் இந்த 22 யானைகளும் முகாமிட்டிருந்தன. மாலையில் அங்கிருந்து தேயிலைத் தோட்டம் வழியாக புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதிக்கு யானைகள் கூட்டமாக வந்தன.
இதனை அப்பகுதி மக்கள் பார்த்து சத்தம் போட்டு ஊருக்குள் வராமல் விரட்டி விட்டனர். இதுகுறித்து பொது மக்கள் கூறும்போது, யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் வெளியில் வருவதற்கே அச்சமாக உள்ளது.
எனவே குடியிருப்பையொட்டி பகுதிகளில் சுற்றி திரியும் யானைகளை வனத்துறையினர் கண்காணித்து ஊருக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து வால்பாறை வன சரக வேட்டை தடுப்பு காவலர்கள், அந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாக இருக்க வனத்துறை எச்சரிக்கை.
- விவசாய பயிர்களை சேதப்படுத்தும் அபாயம் உள்ளது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம். தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள ஊடேதுர்க்கம் காப்புக்காட்டில் இருந்து 40-க்கும் மேற்பட்ட யானைகள், நேற்று நள்ளிரவு நாகமங்கலம் கிராமத்தை கடந்து சானமாவு வனப்பகுதிக்குள் புகுந்தன.
இந்த யானைக்கூட்டம், அருகிலுள்ள கிராமங்களில் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தும் அபாயம் உள்ளது.
எனவே, சானமாவு, சினிகிரிப்பள்ளி, அனுமந்தபுரம், டி.கொத்தப் பள்ளி, கொம்மேப்பள்ளி, பென்னிக்கல் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்கள், விவசாயிகள், மேய்ச்சலுக்காக கால்நடைகளை அழைத்து செல்பவர்கள் என அனைவரும் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாக இருக்க வனத்துறையின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், 20-க்கும் மேற்பட்ட வனத்துறை பணியாளர்கள் அந்த யானைகளின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- யானைகளை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- குட்டியுடன் சுற்றி திரியும் யானை கூட்டம் நேற்று குமரமூடி பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் முகாமிட்டது.
அரவேணு:
கோத்தகிரி அருகே சோலூர்மட்டம் பகுதியை சுற்றி, குமரமூடி, கரீக்கையூர், அரக்கோடு, குள்ளங்கரை, முடியூர், வக்கனாமரம், மெட்டுக்கல் என 40-க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்கள் உள்ளது.
இந்த பகுதிகளில் அதிகளவிலான பலாமரங்கள் உள்ளன. தற்போது பலாப்பழ சீசன் என்பதால், பலாப்பழங்கள் அதிகளவில் காய்த்து தொங்குகின்றன. இந்த பழங்களை சாப்பிடுவதற்காக காட்டு யானைகள் அதிகளவில் வருகின்றன.
யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், கிராம மக்கள் அச்சத்துடனேயே பணிக்கு சென்று வருகின்றனர்.
இந்த நிலையில் குட்டியுடன் சுற்றி திரியும் யானை கூட்டம் நேற்று குமரமூடி பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் முகாமிட்டது. இதை பார்த்த தொழிலாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றனர்.
நீண்ட நேரம் அங்கேயே சுற்றி திரிந்த யானை கூட்டம் அங்கிருந்த பலாப்பழத்தை பறித்து சாப்பிட்டது. பின்னர் அங்கிருந்து சென்றது.
இதுகுறித்து மக்கள் கூறுகையில், கடந்த சில மாதங்களாகவே காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.குறிப்பாக தேயிலை தோட்டங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றுவதால் வேலைக்கு செல்ல முடியவில்லை. வீடுகளை விட்டு வெளியில் வரவும் பயமாக உள்ளது.
எனவே தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு உள்ள காட்டு யானை கூட்டங்களை வனத்துறையினர் வாகன ரோந்து மேற்கொண்டு அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.