என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Woman Stabbed"

    • ஸ்டெல்லா (35). வாடகை வீட்டில் வசித்து வரும் இவர்களது வீட்டு வாசலில் இருந்த காலணியை அருகில் வசிக்கும் கணேசன் மனைவி மகாலட்சுமி மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டதை தட்டி கேட்டுள்ளார்.
    • ஆத்திரம் அடைந்த கணவனும் மனைவியும் ஸ்டெல்லாவிடம் தகராறு ஈடுபட்டு கத்தியால் கையில் குத்தி உள்ளனர்.

    சேலம்:

    சேலம் செவ்வாய்ப்பேட்டை கந்தசாமி பிள்ளை தெருவை சேர்ந்தவர் தினேஷ். இவரது மனைவி ஸ்டெல்லா (35). வாடகை வீட்டில் வசித்து வரும் இவர்களது வீட்டு வாசலில் இருந்த காலணியை அருகில் வசிக்கும் கணேசன் மனைவி மகாலட்சுமி மாடியில் இருந்து கீழே தள்ளிவிட்டதை தட்டி கேட்டுள்ளார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கணவனும் மனைவியும் ஸ்டெல்லாவிடம் தகராறு ஈடுபட்டு கத்தியால் கையில் குத்தி உள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த ஸ்டெல்லா சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து புகாரின் பேரில் செவ்வாய்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வாலிபர் இருசக்கர வாகனத்தை போட்டு விட்டு தப்பி ஓட்டம்.
    • சம்பவம் குறித்து போலீசார் விசாரணை.

    ஸ்ரீவைகுண்டம்:

    தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள அகரம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் சந்திரலிங்கம். இவரது மனைவி தேவிகலா (வயது 36). இவர்களுக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.

    இந்நிலையில் தேவிகலாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த கணவர் சந்திரலிங்கம் மனைவி தேவிகலாவை கண்டித்துள்ளார்.

    இந்த நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு தேவிகலா மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்து தேவிகலாவை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.

    தேவிகலாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்தனர். அதற்குள் வாலிபர் தனது இருசக்கர வாகனத்தை போட்டு விட்டு ஓடினார்.

    இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஏரல் போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் தேவிகலாவை கொலை செய்தது அதே பகுதியை சேர்ந்த லிங்கராஜ் (26) என்பது தெரியவந்துள்ளது. கள்ளக்காதல் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய லிங்கராஜை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    காதலிக்க மறுத்த பெண்ணை 38 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். #WomanStabbed
    இந்தூர்:

    மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் சங்லி காலனியில் வசித்து வந்தவர் சுப்ரியா  ஜெயின். நேற்று முன்தினம் இரவு இவரை 25 வயது வாலிபர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்தனர். ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த சுப்ரியாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவரது உடலில் 38 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டிருந்தது.

    இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கமலேஷ் சாஹு என்ற வாலிபரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், காதலிக்க மறுத்ததால் கொலை செய்தது தெரியவந்தது.

    சாகர் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்ரியா ஜெயினும், கமலேஷ் சாஹுவும் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்துள்ளனர். அப்போதிருந்தே சுப்ரியாவை கமலேஷ் தீவிரமாக காதலித்துள்ளார். 6 வருடங்களுக்கு முன்பு காதலை சொன்னபோது, அவரது காதலை சுப்ரியா ஏற்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கமலேஷ் கையில் பிளேடால் அறுத்துக்கொண்டுள்ளார். இதனால் வேறுவழியில்லாமல் காதலிப்பதாக கூறி அவரிடமிருந்து தப்பித்துச் சென்றுள்ளார் சுப்ரியா.

    பின்னர் படிப்பை தொடர்வதற்காக இந்தூர் வந்துள்ளார் சுப்ரியா. 6 மாதங்களுக்கு முன்பு, அவரை சந்தித்த கமலேஷ் மீண்டும் காதலை சொல்லியிருக்கிறார். ஆனால் சுப்ரியா மறுத்துவிட்டார். பின்னர் சமூக வலைத்தளம் மூலம் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்த கமலேஷ், திட்டமிட்டு சுப்ரியாவை கொடுரமாக கொலை செய்துள்ளார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #WomanStabbed
    லாஸ்பேட்டையில் இளம்பெண்ணை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டை குறிஞ்சிநகர் கற்பக விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் தமிழ்சந்திரன், கட்டிட மேஸ்திரியாக வேலைபார்த்து வருகிறார். இவருடைய மனைவி கீர்த்தனா (வயது23).

    தமிழ்ச்சந்திரனுக்கும், அவ்வை நகரை சேர்ந்த சதீஷ் மற்றும் மகாத்மா காந்தி நகரை சேர்ந்த விக்கி, கொட்டுபாளையத்தை சேர்ந்த மதன், ஹேமச்சந்திரன் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. சதீஷ், விக்கி, மதன், ஹேமச்சந்திரன் ஆகியோர் தமிழ்சந்திரன் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவர் இல்லை. வீட்டில் மனைவி கீர்த்தனா மட்டும் இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் கீர்த்தனாவிடம் தகராறில் ஈடுபட்டு வீட்டில் உள்ள கதவுகளை உடைத்தும், கீர்த்தனாவை கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இதில் காயம் அடைந்த கீர்த்தனா புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். பின்னர் இதுகுறித்து கீர்த்தனா லாஸ்பேட்டை புறநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜன், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந் தன் வழக்குபதிவு செய்து தப்பி ஓடிய 4 பேரையும் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் விக்கி, சதீசை போலீசார் கைது செய்தனர். மற்ற 2 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
    பெண்ணை கத்தியால் குத்தி நகையை பறித்த வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருச்சி:

    திருச்சி கே.கே.நகர் தென்றல்நகர் உத்தமர் தெருவை சேர்ந்தவர் பரமேஸ்வரன்.  இவரது மனைவி உதயலதா (வயது 43). இவர்கள் வெளிநாட்டில் வேலை பார்த்து  வந்தனர்.

    இந்தநிலையில் உதயலதாவுக்கு உடல்நிலை பாதிக்கப்படவே கடந்த  சில மாதங்களுக்கு முன்பு இருவரும் திருச்சி வந்தனர். பின்னர் உதயலதா டாக்டர்களிடம்  சிகிச்சை பெற்று வந்தார். உடல் நிலை சரியானதையடுத்து இருவரும் வெளிநாடு செல்ல முடிவுசெய்தனர். அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு பரமேஸ்வரன் முதலில் வெளிநாட்டிற்கு சென்றார். உதயலதா நேற்று செல்ல இருந்தார். அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார்.  

    இதனிடையே அவரது  வீட்டில் வேலை பார்த்து வந்த கரூர் மாவட்டம் பூசாரியூர் மயிலம்பட்டியை சேர்ந்த சிவசக்தி (27) என்பவர், அவரது நண்பர் ஜீவானந்தம்(23) என்பவருடன் சேர்ந்து உதயலதா அணிந்திருந்த நகைகளை கொள்ளையடிக்க திட்ட மிட்டார். இதைத் தொடர்ந்து ஜீவானந்தத்தை அங்கு வரவழைத்ததும், இருவரும் உதயலதா அணிந்திருந்த நகைகளை கொள்ளையடிக்க முயன்றனர். 

    அவர் நகைகளை கொடுக்க மறுக்கவே கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். இருப்பினும் உதயலதா நகைகளை கழற்றி கொடுக்காததால் ஆத்திரத்தில் இருவரும் உதயலதாவின் கண் அருகே கத்தியால் குத்தியுள்ளனர். 
    இதனால் பயந்து போன அவர்  அணிந்திருந்த  3 பவுன் நகைகளை கழற்றி கொடுத்தார்.  அதன்பின்னர் இருவரும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். 

    இது குறித்து கே.கே.நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி தப்பியோடிய சிவசக்தி, ஜீவானந்தம் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம்  திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ×