என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "womens arrest"
- பஸ் பரமத்திவேலூர் நான்கு ரோடு பகுதியில் நின்ற போது திருமண மண்டபத்திற்கு செல்வதற்காக உமா கனகராஜ் கீழே இறங்கி உள்ளார்.
- போலீசார் 3 பெண்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 15 பவுன் தங்க நகைகளை மீட்டனர்.
பரமத்திவேலூர்:
சென்னை மேற்கு வேளச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் உமாகனகராஜ்( 58). இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் நடைபெற்ற அவரது உறவினர் வீட்டு திருமணத்திற்கு கடந்த செப்டம்பர் மாதம் 8-ந் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாலை கரூரிலிருந்து சேலம் செல்லும் தனியார் பஸ்சில் ஏறி பரமத்தி வேலூருக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது பஸ் பரமத்திவேலூர் நான்கு ரோடு பகுதியில் நின்ற போது திருமண மண்டபத்திற்கு செல்வதற்காக உமா கனகராஜ் கீழே இறங்கி உள்ளார். அப்போது பஸ்சில் அவருடன் நோட்டமிட்டு வந்த 3 பெண்கள் சில்லறை காசுகளை கீழே போட்டு உமாகனகராஜ் கவனத்தை திசை திருப்பி உள்ளனர்.
அப்போது கைப்பேக்கில் மணிபர்சில் உமாகனகராஜ் வைத்திருந்த 25 பவுன் தங்க செயினை திருடி கொண்டனர். உமாகனகராஜ் திடீரென கை பேக்கில் இருந்த மணிபர்ஸை பார்த்தபோது 25 பவுன் தங்கச் செயின் இருந்த மணி பர்சை காணவில்லை. திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த உமா கனகராஜ் இது குறித்து பரமத்திவேலூர் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 25 பவுன் தங்கச் செயினை மர்மநபர்கள் திருடிச் சென்ற 4 ரோடு பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான பதிவுகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது நகை திருட்டுகளில் ஈடுபடும் பெண்களின் பழைய குற்றப்பதிவுகளை ஆராய்ந்தனர். பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள அவர்களின் பெயர்களை ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் நேற்று பரமத்திவேலூர் பஸ் நிலையத்திற்கு பின்புறம் உள்ள ஒரு கடைக்கு அருகில் 3 பெண்கள் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர். தகவல் அறிந்த போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று மூன்று பெண்களையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இவர்கள் 3 பேரும் சேர்ந்து உமா கனகராஜ் பேக்கில் இருந்த 25 பவுன் தங்க நகையை திருடியது தெரியவந்தது. அவர்களை கைது செய்து விசாரணை நடத்திய போது, திருப்பத்தூர் அவ்வை நகர் பகுதியைச் சேர்ந்த சக்தி என்பவருடைய மனைவிகள் அமுதா (36), நந்தினி( 30), மற்றும் தேவா என்பவரது மனைவி பூமிகா என்கிற பரிமளா (25) ஆகியோர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
இவர்கள் அனைவரும் தற்பொழுது கிருஷ்ணகிரி ராயக்கோட்டை ரோடு பெத்தனப்பள்ளி பகுதியில் குடியிருந்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 15 பவுன் தங்க நகைகளை மீட்டனர். பின்னர் 3 பேரும் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஹாங்காங்கில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு 1.30 மணிக்கு கேத்வே பசிபிக் நிறுவனத்தின் விமானம் ஒன்று வந்தது.
அந்த விமானத்தில் இருந்து இறங்கிய சுமார் 200 பயணிகளை நுண்ணறிவு பிரிவினரும், சுங்கத் துறையினரும் கண்காணித்தனர்.
பயணிகளில் சுங்கத் தீர்வை கட்டுவதற்குரிய பொருட்களை கொண்டு வந்தவர்கள் அதற்குரிய இடத்துக்கு சென்று வரிசையில் நின்றனர். சுங்கத்தீர்வை கட்டும் அளவுக்கு பொருட்களை கொண்டு வராத சாதாரண பயணிகள் மற்றொரு பாதை வழியாக வெளியே புறப்பட்டு வந்தனர்.
பயணிகள் அனைவரும் கடும் சோதனைக்கு பிறகே புறப்பட்டு சென்றனர். அப்போது சுங்கத்தீர்வை கட்டாமல் வரும் வழியில் 2 கொரியா பெண்கள் வந்தனர். அவர்களிடம் சிறிய அளவில்தான் உடமைகள் இருந்தது. இருவரும் டிப்- டாப்பாக உடை அணிந்து இருந்தனர்.
2 கொரியா பெண்களும் ஒரே மாதிரி உடை அணிந்து இருந்தனர். அவர்களது நடவடிக்கையில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் வைத்திருந்த உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
ஆனால் அவர்கள் வைத்திருந்த சூட்கேஸ் மற்றும் உடமைகளில் எந்த பொருட்களும் இல்லை. அவர்களது உடை மட்டுமே இருந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தனர்.
அப்போது 2 கொரியா பெண்களும் சுற்றுலா விசாவில் ஹாங்காங்கில் இருந்து சென்னைக்கு வந்து இருப்பது தெரிய வந்தது. இதனால் அவர்களை புறப்பட்டு செல்லும்படி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
அந்த 2 பெண்களும் புறப்பட்டு செல்லும்போது அவர்களது நடவடிக்கைகளில் சுங்கத்துறையினருக்கு மீண்டும் சந்தேகம் எழுந்தது. இதையடுத்து பெண் அதிகாரிகள் மூலம் அவர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது.
அதன்படி கொரியா பெண்கள் விமான நிலையத்தில் உள்ள தனி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு அவர்களது உடைகளை களைந்து பெண் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது 2 பெண்களும் தங்களது ஆடைக்கு உள்ளே மற்றொரு மினி ஆடை அணிந்து இருப்பது தெரிய வந்தது. அந்த ஆடைக்குள் ஏராளமான சிறு சிறு பைகள் வைத்து தைக்கப்பட்டு இருந்தது. அந்த பைகளுக்குள் தங்க கட்டிகள் இருந்தன.
மினி உள்ஆடையின் முன்னும் பின்னும் அந்த தங்க கட்டிகள் இருந்தன. ஒவ்வொரு பெண்ணும் தலா 12 கிலோ எடை உள்ள தங்க கட்டிகளை அந்த ஆடைக்குள் மறைத்து வைத்து இருந்தனர். அந்த தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அந்த பெண்கள் மீது சந்தேகம் வலுத்தது. உடனடியாக அவர்கள் வைத்திருந்த பாஸ்போர்ட்டை வாங்கி மீண்டும் தீவிர ஆய்வு செய்தனர். அப்போது அந்த பெண்கள் அடிக்கடி ஹாங்காங்கில் இருந்து சென்னைக்கு சுற்றுலா விசாவில் வந்து சென்று இருப்பது தெரிந்தது.
அந்த பாஸ்போர்ட் விவரங்களை மேலும் ஆய்வு செய்தபோது 2 கொரியா பெண்களும் சர்வதேச அளவில் தங்கம் கடத்தும் கும்பலுடன் தொடர்பு வைத்திருப்பவர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஹாங்காங்கில் இருந்து சென்னையில் உள்ள யாரோ ஒரு தொழில்அதிபருக்காக இந்த தங்க கட்டிகள் கடத்தி கொண்டு வரப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது. அதற்கு இந்த 2 பெண்களும் கருவியாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
ஆனால் சென்னையில் யாருக்காக தங்கம் கடத்தி வரப்பட்டது என்பதை 2 கொரியா பெண்களும் சொல்லவில்லை. அவர்களிடம் இன்று காலை 10 மணிவரை விசாரணை நடத்தியும் புதிய தகவல்கள் கிடைக்கவில்லை.
இதைத் தொடர்ந்து 2 பெண்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்த சுங்கத் துறையினர் முடிவு செய்துள்ளனர். இதற்கு முன்பும் 2 பெண்களும் பல கோடி ரூபாய் தங்கத்தை கொண்டு வந்துள்ளனர்.
ஆனால் இவர்கள் இதுவரை ஹாங்காங்கிலும், சென்னையிலும் சிக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் தங்களது உள்ளாடைக்குள் மறைத்து தங்க கட்டிகளை எடுத்து வந்தது ஹாங்காங் விமான நிலைய அதிகாரிகளுக்கு தெரியாமல் போனது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஹாங்காங் விமான நிலையத்தில் உள்ள ஸ்கேனர் கருவிகளில் இவர்கள் சிக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் விமான நிலையங்களில் ஒவ்வொருவரது உடலையும் நன்கு பரிசோதித்த பிறகே விமான நிலையத்துக்குள் அனுமதிப்பார்கள். இந்த சோதனையில் 2 பெண்களும் தப்பியது எப்படி? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஹாங்காங் விமான நிலையத்திலும், சென்னை விமான நிலையத்திலும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் துணையுடன்தான் இவர்கள் இந்த தங்க கட்டி கடத்தலில் ஈடுபட்டு இருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றியும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. #ChennaiAirport #GoldSeized
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா காட்டுக்காநல்லூர் கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவருடைய மனைவி நளினி (வயது 51). இவர்களுடைய மகள் சென்னையில் உள்ளார். மகளை பார்ப்பதற்காக கணவன், மனைவி இருவரும் சென்னைக்குச் செல்ல முடிவு செய்தனர்.
அதற்காக ஊரில் இருந்து புறப்பட்ட அவர்கள், நேற்று பகலில் வேலூர் புதிய பஸ் நிலையத்துக்கு வந்தனர். அங்கிருந்து காட்பாடி ரெயில் நிலையத்துக்குச் செல்ல, ஒரு தனியார் பஸ்சில் ஏறினர். ஓடும் பஸ்சில் நளினியின் அருகில் 3 பெண்கள் அமர்ந்திருந்தனர். நளினி தனது கைப்பையை மடியில் வைத்திருந்தார். அந்தக் கைப்பையில் ரூ.3 ஆயிரம் இருந்தது.
காட்பாடி சில்க் மில் பஸ் நிறுத்தம் அருகே பஸ் சென்ற போது, நளினியின் கைப்பையைக் காணவில்லை. அதிர்ச்சி அடைந்த அவர், தனது கணவரிடம் கூறினார். அந்த நேரத்தில், நளினியின் அருகில் அமர்ந்திருந்த 3 பெண்களும் பஸ்சை நிறுத்தி அவசர அவசரமாக கீழே இறங்கினர்.
அந்தப் பெண்கள் மீது சந்தேகமடைந்த நளினியும், திருநாவுக்கரசும் ஓடும் பஸ்சை நிறுத்தி, கீழே இறங்கி 3 பெண்களை மடக்கி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசினர். அதில் ஒரு பெண், நளினியின் கைப்பையை மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. கைப்பையை பார்த்த நளினி, அதனை அப்பெண்ணிடம் இருந்து கைப்பற்றினார்.
கைப்பையைத் திருடிய 3 பெண்களை, அப்பகுதி மக்களின் உதவியோடு பிடித்து, விருதம்பட்டு போலீசில் ஒப்படைத்து, அவர்கள் மீது புகார் செய்தார்.
போலீசார், 3 பெண்களிடம் விசாரித்தனர். அவர்கள் சேலம் மாவட்டம் ஓமலூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த அர்ஜுன் என்பவரின் மனைவி அலமேலு (25), கணேசனின் மனைவி சாந்தி (46), விக்ரமின் மனைவி கவிதா (29) எனத் தெரிய வந்தது. இதையடுத்து 3 பெண்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலம் அடுத்த திட்டக்குடியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 39). இவர் திட்டக்குடியில் இருந்து விருத்தாசலம் பஸ் நிலையத்துக்கு டவுன் பஸ்சில் வந்தார். பஸ்சை விட்டு இறங்கும் போது அவரை இடித்துக்கொண்டு இறங்கிய 2 பெண்கள் அவரது பையில் கையை விட்டு அதில் இருந்த 1000 ரூபாயை திருட முயன்றனர்.
இதனை பார்த்த அவர் அந்த 2 பெண்களையும் பிடித்து விருத்தாசலம் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் 2 பேரும் திருவண்ணாமலை ஆவூர் பிள்ளையார் கோவில்தெருவைச் சேர்ந்த மணி என்பவரின் மனைவிகள் ஆதனா (28), சாந்தி (35) என்பதும், 2 பேரும் அக்காள்- தங்கைகள் என்பதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்