search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women's rights programme"

    • இன்று தாய்மார்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால், பிச்சைப் போட்டால் தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்களா?
    • பல்வேறு அரசியல் தலைவர்களும் குஷ்புவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    சென்னை செங்குன்றத்தில் மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து கடந்த 11 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு கலந்து கொண்டார்.

    அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய குஷ்பு, "தமிழகத்தில் எவ்வளவு போதைப் பொருள்கள் வந்துள்ளது. இந்த போதைப் பொருள்கள் ஒவ்வொரு இடத்திற்கும் செல்ல உள்ளது. இது குறித்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் டெல்லியில் உள்ள அதிகாரிகள் சொல்லியுள்ளனர். இதற்கு முதலமைச்சர் என்ன பதில் சொல்ல போகிறார். இன்று தாய்மார்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால், பிச்சைப் போட்டால் தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்களா?" என காட்டமாக பேசினார்.

    மகளிர் உரிமைத் திட்டம் குறித்து குஷ்புவின் சர்ச்சைக்குரிய பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு அரசியல் தலைவர்களும் குஷ்புவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இது தொடர்பாக, நடிகை அம்பிகா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "யாராக இருந்தாலும் சரி, எந்த கட்சியாக இருந்தாலும் சரி, அவர்கள் உதவி செய்தாலோ அல்லது மக்களுக்கு ஆதரவாக இருந்தாலோ அதனை ஏற்றுக்கொண்டு பாராட்டுங்கள். பாராட்ட மனமில்லை என்றால் அமைதியாக இருங்கள். 'பிச்சை' என அவமானப்படுத்தும் சொற்களை பயன்படுத்தாதீர்கள். 5 ரூபாய் கொடுத்தாலும் அது உதவிதான்" என பதிவிட்டுள்ளார்.

    • மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
    • விழா மேடை அமைக்கும் பணிகள் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

    காஞ்சிபுரம்:

    2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்த குடும்பத் தலைவிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    இந்த திட்ட தொடக்க விழாவுக்கான பந்தல் மற்றும் விழா மேடை அமைக்கும் பணிகள் காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

    காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுப் பணித்துறையினரால் மேற்கொள்ளப்படும் பந்தல் அமைக்கும் பணிகளை அமைச்சர் தா.மோ. அன்பரசன், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மேலும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

    இந்த ஆய்வின்போது காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் செல்வகுமார், மாநகராட்சி ஆணையர் கண்ணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15 முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
    • மாவட்ட வாரியாக இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    குமாரபாளையம்:

    குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15 முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. மாவட்ட வாரியாக இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

    இல்லம் தேடி கல்வி பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களை மகளிர் உரிமைத் தொகை திட்டப் பணியில் முழுமையாக ஈடு படுத்த அரசு திட்ட மிட்டுள்ளது. இதற்கான பயிற்சி முகாம் குமாரபாளை யம் தனியார் கல்லூரியில் தாசில்தார் சண்முகவேல் தலைமையில் நடைபெற்றது. இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் பங்கேற்ற னர். இவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர்கள் இதற் கான பயிற்சி வழங்கினர். இதில் குமாரபாளையம், பள்ளிபாளையத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.

    மாதம் ரூ.1000 வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செய லாக்கம் தொடர்பாக சில நாட்க ளுக்கு முன்பு முதல்வர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கலை ஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின்கீழ் தகுதியான பயனாளிகள் விவரங்களை சேகரிக்கும் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    • 2-ம் கட்ட முகாம்கள் 5-ந் தேதி தொடங்குகிறது
    • விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் எடுத்து வர வேண்டும்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்து உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கடலூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் கடந்த 24.07.2023 முதல் நடை பெற்று வருகிறது. மேற்படி முதற்கட்ட விண்ணப்ப பதிவிற்காக ஏற்கனவே நியாய விலைக் கடை பணியா ளர்கள் ஒவ்வொரு நியாய விலை கடை பகுதியில் உள்ள முகாம்கள் நடை பெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை குறிப்பிட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவற்றை வீட்டில் நேரடியாக ஏற்கனவே 20.07.2023 முதல் 23.07.2023 வரை வழங்கப்பட்டது.

    மேற்படி விண்ணப்ப தாரர்கள் விண்ணப்பம் மற்றும் டோக்கன் பெற்ற வர்கள் விண்ணபங்களை இதுவரை முகாமில் அளித்துக் கொள்ள வில்லை என்றால் வருகிற 3.8.2023 மற்றும் 4.8.2023 ஆகிய நாட்களில் தங்களுக்குரிய நியாய விலைக் கடை முகாம்களில் கொடுத்துக் கொள்ளலாம். மேலும் குடும்ப அட்டை இருக்கும் நியாய விலைக் கடை பகுதியில் நடை பெறும் முகாமில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் பதிவு செய்யும் போது சரி பார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய வற்றை எடுத்து வர வேண்டும்.

    இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம்கள் வரும் 5.8.2023 முதல் 16.8.2023 வரை நடைபெறும். நியாய விலைக் கடை பணியா ளர்கள் ஒவ்வொரு நியாய விலைகடை பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகிய வற்றை குறிப்பிட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவற்றை வீட்டில் நேரடியாக இன்று (1-ந் தேதி) முதல் 4.8.2023 வரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடும்ப அட்டை இருக்கும் நியாய விலைக் கடை பகுதியில் நடைபெறும் முகாமில் மட்டுமே விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை பெற்றுக் கொண்ட குடும்பத்தில் உள்ள குடும்ப தலைவி விண்ணப்பங் களை பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்ப பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் எடுத்து வர வேண்டும். கடலூர் மாவட்டத்தில் 2-ம் கட்டமாக 14 ஒன்றி யங்களில் 557 நியாய விலைக் கடைகளில் 2-ம் கட்ட முகாம் நடைபெறுகிறது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    • கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பம் பெறும் முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது.
    • முதற்கட்டமாக நேற்று முதல் 4.8.2023 வரை 611 இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளன.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரி மைத்திட்ட விண்ணப்பம் பெறும் முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக நேற்று முதல் 4.8.2023 வரை 611 இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளன. 2-வது கட்டமாக 5.8.2023 முதல் 16.8.2023 வரை 303 இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளன.

    இதனைத்தொடர்ந்து, நேற்று நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுக்கா பரமத்தி பேரூராட்சி சமு தாய கூடம் மற்றும் வேலூர் பேரூராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்ப பதிவு முகாமினை கலெக்டர் டாக்டர் உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வுகளின் போது, விண்ணப்பங்க ளைப் பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் பணி, விண்ணப் பங்கள் பதிவேற்றம் செய்யும் உள் ளிட்ட பணிகளை பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.மேலும் விண்ணப்ப பதிவு முகாமில் பொது மக்களுக்கு தேவை யான குடிநீர், மின் வசதி, கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் முகாம் பொறுப்பு அலுவ லர்கள் உறுதி செய்திடல் வேண்டு மெனவும், ஆவ ணங்களை சரிபார்த்து பதிவேற்றம் செய்திட வேண்டும் என அலுவ லர்க ளுக்கு கலெக்டர் டாக்டர் உமா அறிவுறுத்தி னார்.

    இந்த ஆய்வுகளின்போது, மாவட்ட ஆதிதிரா விடர் நல அலுவலர் சுகந்தி, பரமத்தி வேலூர் தாசில்தார் கலைச் செல்வி வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஒவ்வொரு குடும்பத்துக்கும் வீடு, வீடாக சென்று தன்னார்வலர்கள் மூலமாக விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது.
    • வீடு, வீடாக ஆய்வு செய்து தகவல் உள்ளீடு மற்றும் கள ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.

    திருப்பூர்:

    கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதியில் இருந்து தொடங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் யார், யார் தகுதியானவர்கள் என்ற விதிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது.

    ரேஷன் கார்டு வாரியாக ஒவ்வொரு குடும்பத்துக்கும் வீடு, வீடாக சென்று தன்னார்வலர்கள் மூலமாக விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள்நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக மாவட்டத்தில் முதன்மை கல்வி அதிகாரி மூலமாக விவரங்கள் பெற்று அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    இந்தநிலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ், மாவட்ட வழங்கல் அதிகாரி ரவிச்சந்திரன், மகளிர் திட்ட இயக்குனர் வரலட்சுமி ஆகியோர் பங்கேற்றார்கள்.

    அதன்பிறகு இல்லம் தேடி கல்வி திட்டத்தில் உள்ள தன்னார்வலர்களுக்கு மாவட்ட பயிற்றுனர்களுக்கான பயிற்சிக்கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் எந்தெந்த ரேஷன் கடை பகுதியில் வசிக்கிறார்கள் என்ற விவரங்களை பெற உள்ளனர். வீடு, வீடாக ஆய்வு செய்து தகவல் உள்ளீடு மற்றும் கள ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.முதல்கட்டமாக அவர்களுக்கு பயிற்சி வழங்குவது தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

    ×