என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Work Order"
- ரோஜ்கார் மேளா திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
- இத்திட்டம் மூலம் மத்திய அரசில் ஒரு ஆண்டில் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்படுகிறது.
புதுடெல்லி:
மத்திய அரசில் ஒரு ஆண்டில் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் ரோஜ்கார் மேளா திட்டத்தை கடந்த மாதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது நாடு முழுவதும் 75,000 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. பல்வேறு இடங்களில் நடந்த விழாவில் மத்திய மந்திரிகள் இந்த ஆணைகளை வழங்கினார்கள்.
இதைத் தொடர்ந்து கடந்த வாரம் இரண்டாவது கட்டமாக 71,000 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
இந்நிலையில், இன்று மேலும் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி வழங்கினார். அப்போது பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:
கடந்த 2014-ம் ஆண்டில் நாடு எங்களுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பையும், அரசாங்கத்தை நடத்தும் பொறுப்பையும் வழங்கியபோது, முதலில் 'பின்தங்கியவர்களுக்கு முன்னுரிமை' என்ற தாரக மந்திரத்துடன் முன்னேற ஆரம்பித்தோம்.
திட்டங்களின் பலனை ஒருபோதும் பெறாத மக்களுக்கு அரசாங்கமே சென்றடைந்தது. பல தசாப்தங்களாக அரசிடம் இருந்து எந்த வசதியும் பெறாதவர்களின் வாழ்க்கையை மாற்ற முயற்சித்து வருகிறோம்.
அரசாங்கத்தின் சிந்தனை மற்றும் பணி நெறிமுறைகளில் ஏற்பட்ட மாற்றம் நாட்டில் நம்பமுடியாத மாற்றங்களுக்கு வழிவகுத்தது. அதிகாரத்துவமும் ஒன்றுதான், மக்களும் ஒன்றுதான். இன்னும் ஏழைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதும், எல்லாமே மாறத் தொடங்கி இந்தியா சுறுசுறுப்பாக முன்னேறியது என தெரிவித்தார்.
ரெயில்வே அமைச்சகம், அஞ்சல்துறை, உள்துறை அமைச்சகம், வருவாய்த்துறை, உயர்கல்வித்துறை, பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள், துறைகளில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு இருப்பவர்களுக்கு காணொலி காட்சி மூலம் பணி நியமன ஆணை வழங்கப்படுகிறது.
புதிதாக பணி நியமனம் பெறுபவர்கள், (https://portal.igotkarmayogi.gov.in/) எனும் இணையதளம் வழியாக, 800-க்கும் மேற்பட்ட மின்-கற்றல் படிப்புகளை படித்து தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
- மத்திய அரசின் வேலைவாய்ப்பு முகாமில் மத்திய மந்திரி பங்கேற்றார்.
- ரெயில்வே உதவி மேலாளர் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மதுரை
மத்திய அரசின் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 45 இடங்களில் இன்று சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டு பணிநியமன ஆணைகளை வழங்கினார். அரசுத்துறை மற்றும் அமைப்புகளில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 71 ஆயிரம் பேருக்கு பணி ஆணைகள் வழங்கப் பட்டன.
மதுரையில் இது தொடர்பான தொழில் வர்த்தக சங்கத்தில் இது தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது. மத்திய அரசு சார்பில் இணை மந்திரி ஸ்ரீபாத் யசோ நாயக் கலந்து கொண்டு பணி ஆணைகளை வழங்கினார். மதுரை தபால் துறை தலைமை அதிகாரி வி.எஸ்.ஜெயசங்கர், மதுரை மண்டல ரெயில்வே உதவி மேலாளர் ஆனந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் தபால் துறை மற்றும் ரெயில்வே துறை சார்பில் 200 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.இவர்களுக்கு ஆன்லைன் மூலம் புத்தாக்க பயிற்சி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தபால் துறை ஊழியர், ரெயில்வே பயணச்சீட்டு எழுத்தர், இளநிலை எழுத்தர் மற்றுத் தட்டச்சர், தண்டவள பராமரி ப்பாளர், ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிக ளுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.
- அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பது அனைவருக்கும் உள்ள ஆசையாகும்.
- நீங்கள் அரசு வேலை கிடைக்கும் வரை தற்போது பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை உறுதியாக பற்றி கொள்ளுங்கள்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொ ன்ராஜ் ஆலிவர் அரசின் பல்வேறு நல்ல திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் சென்று சேரும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறார். வாரந்தோறும் நடக்கும் குறைதீர் கூட்டத்தில் பொது மக்களிடம்இருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களுக்கு உடனுக்கு டன் தீர்வு கண்டு வருகி றார். இதேபோல் விவசா யிகளிடம் இருந்து பெறப்ப டும் மனுக்களுக்கும் உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
மேலும் மாற்றுத்திறனா ளிகளும் தங்களதுவாழ்வில் முன்னேற பல்வேறு எடுத்து ள்ளார். அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை , கும்பகோணம், பட்டுக்கோட்டைஆகிய 3 இடங்களில் மாற்றுத்தி றனாளிகளுக்கு என்று தனியாக மாவட்டத்திலேயே முதன் முறையாக வேலை வாய்ப்பு முகாம் நடத்த உத்தரவு பிறப்பித்தார். அதன்படி தஞ்சையில் இன்று மாற்றுத்திறனாளிக்கு தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
மண்டல இணை இயக்குனர் (வேலைவாய்ப்பு) சந்திரன் , மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக உதவி இயக்குனர் ரமேஷ், மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமில் தஞ்சை மற்றும் திருச்சி சேர்ந்த தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டன. 72 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இதில் மதியம் 1 மணி நிலவரப்படி 15-க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கான பணி நியமன ஆணையை கலெ க்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கி ஊக்கப்ப டுத்தினார் .அப்போது அவர் பேசியதாவது மாற்றுத்திற னாளிகளு க்கு உதவிகள் செய்வது நமது பொறுப்புஅவர்கள் வாழ்வில் முன்னேற வேண்டும். இதற்காக இன்றைய தினம் அவர்களுக்காகவே தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களை தேர்ந்தெடுத்த கம்பெனியில் பணிபுரிவர். அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பது அனைவ ருக்கும் உள்ள ஆசையாகும். நீங்கள் அரசு வேலை கிடைக்கும் வரை தற்போது பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை உறுதியாக பற்றி கொள்ளுங்கள். உங்களுக்கு தஞ்சாவூர் நகரை ஒட்டி உள்ள கம்பெனிகளிலேயே வேலை கிடைத்துள்ளது. நன்றாக உழைத்து வாழ்வில் முன்னேறுங்கள். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்வதற்கு தயாராக உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.இதைத் தொடர்ந்து மாற்று திறனாளிகளுடன் கலெக்டர் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டார்.தனியாக வேலைவாய்ப்பு முகாம் நடத்த ஏற்பாடு செய்த கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரை மனதார பாராட்டினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்