என் மலர்
நீங்கள் தேடியது "worker died"
- மூர்த்தி வேலைக்கு செல்லும் போது வீட்டில் மது குடித்து விட்டு சென்றார்.
- அப்போது அவர் நடந்து சென்ற போது தவறி கீழே விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார்.
கோபி:
கோபி செட்டி பாளையம் அருகே உள்ள பொலவக்காளி காளி பாளையம் பெரியார் நகரை சேர்ந்தவர் மூர்த்தி (49). இவரது மனைவி அலமேலு. கூலி தொழிலாளியான மூர்த்திக்கு குடிப்பழக்கம் உள்ளது. சம்பவத்தன்று காலை மூர்த்தி வேலைக்கு செல்லும் போது வீட்டில் மது குடித்து விட்டு சென்றார்.
அப்போது அவர் பழையூர் பாட்டப்பமடை பள்ளம் பகுதியில் நடந்து சென்ற போது தவறி கீழே விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டார். இது குறித்து தெரியவந்ததும் அலமேலு மற்றும் உறவினர்கள் விரைந்து சென்று மூர்த்தியின் உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் இது குறித்து சிறுவலூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து மூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோபி செட்டி பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரத்தை சேர்ந்தவர் பால்துரை (வயது65). தொழிலாளி
- நான்குவழிச் சாலையில் வந்தபோது பின்னால் வந்த கார் அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரத்தை சேர்ந்தவர் பால்துரை (வயது65). தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் ராகவன் (72).
இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் இன்று காலை நாங்குநேரி அருகே தாழைகுளத்தில் உள்ள தோட்டத்திற்கு சென்றனர். பின்னர் அவர்கள் வீடு திரும்பினர்.
அவர்கள் நான்குவழிச் சாலையில் வந்தபோது பின்னால் வந்த கார் அவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் சம்பவ இடத்திலேயே பால்துரை பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்த ராகவனை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மானூர் அருகே உள்ள கானார்பட்டி பகுதியை சேர்ந்தவர் அதிசய சாமுவேல் . கட்டிட தொழிலாளி.
- அதிசயசாமுவேலுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
நெல்லை:
மானூர் அருகே உள்ள கானார்பட்டி பகுதியை சேர்ந்தவர் அதிசய சாமுவேல் (வயது 35). கட்டிட தொழிலாளி.
இவரது மனைவி ஜான்சிராணி (30). இவர்கள் இருவரும் கடந்த 6-ந் தேதி மோட்டார் சைக்கிளில் நெல்லை நோக்கி வந்தனர். ராமையன்பட்டி போலீஸ் காலனி அருகே வந்த போது பின்னால் வந்த கார் இவர்களது மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாய மடைந்தனர். அப்பகுதி பொதுமக்கள் இருவரையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜான்சிராணி பரிதாபமாக இறந்தார்.
அதிசயசாமுவேலுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலை பரிதாபமாக இறந்தார்.
விபத்து தொடர்பாக காரை ஓட்டி வந்த ரெட்டியார்பட்டியை சேர்ந்த வெங்கடகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் சபாபதி விசாரணை நடத்தி வருகிறார்.
- கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
- உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ பற்ற வைத்தார்.
பொள்ளாச்சி
ஆனைமலை அருகே உள்ள மஞ்சநாயக்கனூரை சேர்நதவர் மாசிலாமணி (வயது 29). கூலித் ெதாழிலாளி. இவருக்கு திருமணமாகி சங்கீதா என்ற மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். சம்பவத்தன்று மாசிலாமணி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த மாசிலாமணி தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ பற்ற வைத்தார். உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர் சிகிச்சை அளித்தனர். சிகிச்சை முடிந்த பின்னர் மாசிலாமணி குணமடைந்து வீட்டிற்கு திரும்பினார்.சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் மாசிலாமணியை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிேலயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
- பிரகாஷ் மது குடித்து விட்டு ரோட்டில் ரத்த வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்து கிடந்தார்.
- இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பு.புளியம்பட்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஈரோடு:
சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அடுத்த தொட்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 55). இவர் பு.புளியம்பட்டியில் உள்ள ஒரு ஜவுளி கடையில் தொழி லாளியாக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கு திருமணமாகி விட்டது. ஆனால் இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதையயடுத்து அந்த பகுதியில் தனது தாயாருடன் தங்கி வந்தார். மேலும் இவ ருக்கு குடி பழக்கம் இருந்து வந்ததாகவும் கூற ப்படுகிறது.
இந்த நிலையில் பிரகாஷ் பு.புளியம்பட்டி- பவானி சாகர் ரோட்டில் மது குடித்து விட்டு ரத்த வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்து கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பு.புளியம்பட்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதை தொடர்ந்து மேல் கிசிச்சைக்காக கோவை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இங்கு சிகிச்சை பலனன்றி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பு.புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- நாகராஜ் கட்டிட தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
- பிக்கப் வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியது.
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை ஜடையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகன் நாகராஜ் (35). கட்டிட தொழிலாளி.
இவருக்கு திருமணமாகி இரு பெண், ஒரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் நாகராஜ் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் சிறுமுகையில் இருந்து வேலைக்காக மேட்டுப்பா ளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது அய்யப்பன் கோவில் அருகே சென்றபோது எதிரே வந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பிக்கப் வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியது.இதில் நாகராஜ் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில் அதே இடத்தி்ல் உயிர் இழந்தார்.
சிறுமுகை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து சிறுமுகை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- புதுவை வில்லியனூர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் வீரமணி (வயது 48) தச்சு தொழிலாளி. இவர் குடிபழக்கம் உடையவர்.
- கோமதி, கணவரை உடனே அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி:
புதுவை வில்லியனூர் பாண்டியன் நகரை சேர்ந்தவர் வீரமணி (வயது 48) தச்சு தொழிலாளி. இவர் குடிபழக்கம் உடையவர். இவருக்கு கோமதி என்ற மனைவியும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக வீரமணி வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். கடந்த வாரம் கோமதி மன்னார்குடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார்.நேற்று காலை கோமதிக்கு போன் செய்த வீரமணி எப்போது ஊருக்கு வருவாய் என கேட்டுள்ளார். அப்போது கோமதி புறப்பட்டு விட்டேன், மாலைக்குள் வந்துவிடுவேன் என கூறியுள்ளார்.
ரெயிலில் கோமதி புதுவை வந்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது மகன் அவருக்கு போன் செய்து அப்பா மயக்கத்தில் இருப்பதாக கூறியுள்ளார். கோமதி, கணவரை உடனே அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார்.
அவரது மகன்கள் வீரமணியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வீரமணி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சோத்துப்பாறை பகுதியில் உள்ள மாந்தோப்புக்கு செல்வதற்காக நண்பர்களுடன் தொழிலாளி மோட்டார் சைக்கிளில் சென்றார்.
- திடீரென நிலைதடுமாறி பைக்கில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பெரியகுளம்:
தேனி அன்னஞ்சியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது49). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி குழந்தை களுடன் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் சோத்துப்பாறை பகுதியில் உள்ள மாந்தோ ப்புக்கு செல்வதற்காக நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் பகுதியில் சென்றபோது திடீரென நிலைதடுமாறி பைக்கில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்ப ட்டார். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பால கிருஷ்ணன் இறந்து விட்டட தாக தெரிவித்தனர். இது குறித்து தென்கரை போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
- வேகமாக சென்ற டிராக்டர் பள்ளத்தில் ஏறி இறங்கியபோது தொழிலாளி தவறி விழுந்தார்.
- டயரில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சின்னமனூர்:
சின்னமனூரை சேர்ந்த வர் குப்பமுத்து(42). இவர் சுமைதூக்கும் கூலித்தொழில் செய்து வருகிறார். சுக்கா ம்பட்டி பகுதியில் உள்ள கோழிப்பண்ணைக்கு வேலைக்காக டிராக்டரில் சென்றார்.
கண்ணன் என்பவர் டிராக்டரை ஓட்டி சென்றுள்ளார். வேகமாக சென்ற டிராக்டர் பள்ள த்தில் ஏறி இறங்கியபோது குப்பமுத்து தவறி விழுந்தார். இதில் டிராக்டர் சக்கரம் அவர் மீது ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து குப்பமுத்துவின் மனைவி பவித்ரா ஓடைப்பட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கட்டுமான பணியின் போது பழமையான சுவர் இடிந்து தொழிலாளி பலியானார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகில் உள்ள ஆழந்தழிர்தெற்கு தெருவை சேர்ந்தவர் ராமர்(51). கட்டிட தொழி லாளி. இவர் சம்பவத்தன்று ரவி என்பவருடன் சேர்ந்து சோலைதேவன்பட்டியில் உள்ள ராகவன் என்பவரது வீட்டில் செப்டிக் டேங்க் கட்டும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது அங்கிருந்த பழமையான சுவர் இடிந்து ராமர் மீது விழுந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கிய ராமரை அங்கிருந்து தொழிலாளர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு ெகாண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ராமர் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் உடன் பணிபுரிந்து கொண்டிருந்த வேலுச்சாமி (60) என்பவரு க்கும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து கடமலை க்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனது வீடு அருகே பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வந்தார்.
- சம்பவத்தன்று அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார்.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி அருகே சந்திராபுரம் ஒத்தவீடு பகுதியை சேர்ந்தவர் அடைக்கண்(52). இவர் தனது வீடு அருகே பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வந்தார். சம்பவத்தன்று அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் அடைக்கண் மீது மோதியதில் படுகாயமடைந்தார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் வழியிலேயே அடைக்கண் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மது போதைக்கு அடிமையாகி ஊர்சுற்றிய தொழிலாளி கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் திடீரென மாயமானார்.
- மாயமான தொழிலாளி கல்குவாரியில் மர்மமான முறையில் இறந்துகிடந்த நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி மேட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் காட்டுராஜா(45). இவர் வேலைக்கு செல்லாமல் மது போதைக்கு அடிமையாகி ஊர்சுற்றி திரிந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர் திடீரென மாயமானார். இதனைதொடர்ந்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் காட்டு ராஜாவை தேடி வந்தனர்.
இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கல்குவாரி பள்ளத்தில் காட்டுராஜா பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தேவதானப்பட்டி போலீசார் காட்டுராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.