என் மலர்
நீங்கள் தேடியது "world cup cricket"
- உலக கோப்பை போட்டியை நடத்தும் நாடுகள் குறித்து ஐசிசி அட்டவணை வெளியிட்டுள்ளது
- 2024ம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை போட்டி இலங்கையில் நடைபெறுகிறது.
துபாய்:
2024-2027 ஆம் ஆண்டுக்கு இடையில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர்களை நடத்தும் நாடுகள் குறித்து ஐசிசி அட்டவணை வெளியிட்டுள்ளது.
போட்டிகளை நடத்துவதற்கு இலங்கை, மலேசியா மற்றும் தாய்லாந்து, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா, வங்காளதேசம் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒப்புதல் அளித்துள்ளது.
அதன்படி 2024ம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடைபெறுகிறது. தொடர்ந்து 2026ம் ஆண்டு ஜிம்பாப்வே, நமிபியா ஆகிய நாடுகளில் நடக்கின்றன. 2025ம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக்கோப்பை போட்டி மலேசியா மற்றும் தாய்லாந்திலும், 2027ம் ஆண்டு வங்காளதேசம் மற்றும் நேபாளத்திலும் போட்டிகள் நடக்கின்றன.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் சேர்த்தது.
- அதிரடியாக பென் ஸ்டோக்ஸ், பந்துகளை பவுண்டரிகளாக விளாச இங்கிலாந்து அணியின் ரன்ரேட் உயர்ந்தது.
மெல்போர்ன்:
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 8-வது டி20 உலக கோப்பை தொடரின் பரபரப்பான இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது. மெல்போர்னில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக ஷான் மசூத் 38 ரன்கள் சேர்த்தார். கேப்டன் பாபர் ஆசம் 32 ரன்களும், சதாப் கான் 20 ரன்களும் சேர்த்தனர்.
இதையடுத்து 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். பில் சால்ட் 10 ரன்கள் மட்டுமே சேர்த்தார். அதன்பின்னர் கேப்டன் ஜாஸ் பட்லர் 26 ரன்கள் சேர்த்தார். மறுமுனையில் அதிரடியாக பென் ஸ்டோக்ஸ், பந்துகளை பவுண்டரிகளாக விளாச, அணியின் ரன்ரேட் உயர்ந்தது. ஹென்றி ப்ரூக் 20 ரன்களில் விக்கெட்டை இழந்தார். மொயீன் அலி 19 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
தொடர்ந்து பாகிஸ்தான் பந்துவீச்சை பதம் பார்த்த ஸ்டோக்ஸ் அரை சதம் கடக்க, இங்கிலாந்து அணி 6 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது. பென் ஸ்டோக்ஸ் 52 ரன்களுடன் களத்தில் இருந்தார். இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் டி20 உலக கோப்பையை இங்கிலாந்து அணி வசமாக்கி உள்ளது. இங்கிலாந்து அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இறுதிப் போட்டியில் சாம் கரன் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார். அதுமட்டுமின்றி இந்த தொடர் முழுவதும் சிறப்பாக பந்துவீசி 13 விக்கெட்களை வீழ்த்திய சாம் கரன் "தொடர் நாயகன்" விருதையும் தட்டி சென்றார்.
- இரு அணிகளும் ஐசிசி நடத்தும் தொடர்கள் மற்றும் ஆசியக் கோப்பை தவிர நேரடி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில்லை.
- இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் குரூப் சுற்றில் விளையாட உள்ள போட்டி அகமதாபாத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:
எதிர்வரும் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேருக்கு நேர் பலப்பரீட்சை செய்ய வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகின் பெரிய கிரிக்கெட் மைதானத்தில் உலகக் கோப்பை தொடரின் மிகப் பெரிய மோதல் என இந்தப் போட்டி குறித்து கேப்ஷன் கொடுக்கப்பட்டு வருகிறது.
வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. 10 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்று விளையாட உள்ளன. குரூப் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளோடு விளையாட வேண்டும். புள்ளிப் பட்டியலில் டாப் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இந்தத் தொடரின் இறுதிப் போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இந்தத் தொடருக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்தச் சூழலில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் குரூப் சுற்றில் விளையாட உள்ள போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
அதற்கு முன்னதாக ஆசியக் கோப்பை தொடர் பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், பாகிஸ்தானுக்கு இந்திய அணி சென்று விளையாடுவது இயலாத காரியமாக உள்ளது. அதனால், இந்தத் தொடர் வேறு இடத்தில் நடத்தப்படலாம் என சொல்லப்படுகிறது.
இரு அணிகளும் ஐசிசி நடத்தும் தொடர்கள் மற்றும் ஆசியக் கோப்பை தவிர நேரடி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- 15 ஆண்டுகளுக்கும் மேலாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக ஹூப்பர் விளையாடி உள்ளார்.
- உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் தகுதி சுற்றுக்கு முன்னதாக அணியில் இணையவுள்ளார்.
10 அணிகள் இடையிலான 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடக்கிறது.
இந்த போட்டிக்கு சூப்பர் லீக் மூலம் புள்ளிபட்டியலில் டாப்-8 இடங்களை பிடித்த நியூசிலாந்து, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, வங்காளதேசம், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக தகுதி பெற்றுவிட்டன. மீதமுள்ள இரு அணிகளை தேர்வு செய்வதற்கு தகுதி சுற்று போட்டி நடத்தப்படுகிறது.
அதன்படி தகுதி சுற்று போட்டி அடுத்த மாதம் (ஜூன்) 18-ந்தேதி முதல் ஜூலை 9-ந்தேதி வரை ஜிம்பாப்வேயில் 4 மைதானங்களில் நடைபெறுகிறது. இதில் 10 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, நெதர்லாந்து, நேபாளம், அமெரிக்கா, 'பி' பிரிவில் முன்னாள் சாம்பியன் இலங்கை, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 6 சுற்றை அடையும்.
இந்நிலையில் இதை கருத்தில் கொண்டு வெண்ட் இண்டீஸ் அணியின் துணை பயிற்சியாளராக முன்னாள் வீரர் ஹூப்பர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தகுதி சுற்றுக்கு முன்னதாக அணியில் இணையவுள்ளார்.
15 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கிந்திய தீவுகளுக்காக விளையாடி உள்ளார். 329 சர்வதேச போட்டிகளில் விளையாடி 10,500 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். ஹூப்பர் பல்வேறு நிலைகளில் பயிற்சியாளராகவும் வழிகாட்டியாகவும் இருந்துள்ளார்.
56 வயதான அவர் பிக் பாஷ் லீக்கில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ் அணியின் உதவி பயிற்சியாளராகவும் கரீபியன் பிரீமியர் லீக்கில் ஆன்டிகுவா ஹாக்ஸ்பில்ஸ் மற்றும் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.
- இந்திய அணி மோதும் அனைத்து ஆட்டங்களும் பகல்-இரவாக நடக்கிறது.
- மொத்தம் உள்ள 48 ஆட்டங்களில் 6 போட்டிகள் மட்டுமே பகல் ஆட்டமாக நடக்கிறது.
மும்பை:
13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர்-நவமபர் மாதங்களில் நடக்கிறது. இதில் 10 நாடுகள் பங்கேற்கின்றன.
உலக கோப்பை போட்டிக்கான அதிகாரப்பூர்வ அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியமும் (பி.சி.சி.ஐ.), சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் (ஐ.சி.சி.) இணைந்து நேற்று வெளியிட்டது.
50 ஓவர் கொண்ட ஒருநாள் போட்டிக்கான உலக கோப்பை கிரிக்கெட் அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை நடைபெறுகிறது. அகமதாபாத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சென்னையில் அக்டோபர் 8-ந் தேதி சந்திக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் அக்டோபர் 15-ந் தேதி அகமதாபாத்தில் மோதுகின்றன.
முதல் அரைஇறுதி ஆட்டம் நவம்பர் 15-ந் தேதி மும்பையிலும், 2-வது அரை இறுதி போட்டி 16-ந் தேதி கொல்கத்தாவிலும் நடக்கிறது. இறுதிபோட்டி அகமதாபாத் மைதானத்தில் நவம்பர் 19-ந் தேதி நடக்கிறது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 5 ஆட்டங்கள் நடக்கிறது. இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் மோதும் போட்டி இங்குதான் நடக்கிறது. இதேபோல நியூசிலாந்து அணியும், பாகிஸ்தான் அணியும் சென்னையில் தலா 2 ஆட்டங்களில் விளையாடுகிறது.
உலக கோப்பை போட்டிகள் அகமதாபாத், ஐதராபாத், தர்மசாலா, சென்னை, டெல்லி, லக்னோ, புனே, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா ஆகிய 10 இடங்களில் நடக்கிறது. இதில் ஐதராபாத் தவிர மற்ற 9 நகரங்களிலும் இந்திய அணி 9 ஆட்டத்தில் விளையாடுகிறது.
இந்திய அணி மோதும் அனைத்து ஆட்டங்களும் பகல்-இரவாக நடக்கிறது. பகல்-இரவு போட்டி 2 மணிக்கு தொடங்குகிறது. மொத்தம் உள்ள 48 ஆட்டங்களில் 6 போட்டிகள் மட்டுமே பகல் ஆட்டமாக நடக்கிறது. பகல் நேர போட்டிகள் காலை 10.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்த நிலையில் உலக கோப்பை போட்டிக்கான இடங்கள் தொடர்பாக பஞ்சாப், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு கிரிக்கெட் சங்கங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன. பிரபல இடங்களான மொகாலி, இந்தூர், ராஜ்கோட் ராஞ்சி, நாக்பூர் போன்ற நகரங்கள் விடுபட்டுள்ளன.
பஞ்சாப், மாநில கிரிக்கெட் சங்க நிர்வாகி கூறும்போது, '2011 உலக கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் மோதிய அரை இறுதி மொகாலியில் தான் நடந்தது. 1996 உலக கோப்பை போட்டிகளும் இங்கு நடைபெற்றது. தற்போது உலக கோப்பை போட்டிக்கான இடங்களை ஒதுக்காதது அதிருப்தி அளிக்கிறது' என்றார்.
மத்திய பிரதேச கிரிக்கெட் சங்க தலைவர் அபிலாஷ் கண்டேகர் கூறியதாவது:-
1987-ம் ஆண்டு இந்தியா-நியூசிலாநது அணிகள் மோதிய உலக கோப்பை போட்டி இந்தூரில் தான் நடந்தது. இந்தியா-ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியும் இங்கு சமீபத்தில் நடைபெற்றது.
தற்போது உலக கோப்பை போட்டியை நாங்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தோம். ஆனால் எங்களுக்கு போட்டி ஒதுக்காதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
2019-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பையில் 11 இடங்களில் போட்டிகள் நடந்தது. தற்போது 10 இடங்களில் தான் போட்டிகள் நடக்கிறது. இதை அதிகரித்து இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தர நிலைகளை ஆய்வு செய்ய ஐ.சி.சி. குழு மொகாலி மைதானத்துக்கு சென்றதா என்பதையும் தெரிவிக்க வேண்டும்.
- கிரிக்கெட்டை பொறுத்தவரை பல ஜாம்பவான்கள் உருவாகி இருக்கிறார்கள்.
மும்பை:
13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) இந்தியாவில் அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை நடக்கிறது.
இதற்கான போட்டி அட்டவணையை கடந்த 22-ந் தேதி இந்திய கிரிக்கெட் வாரியமும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் இணைந்து வெளியிட்டது.
அகமதாபாத், ஐதராபாத், தர்மசாலா, சென்னை, டெல்லி, லக்னோ, புனே, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா ஆகிய 10 நகரங்களில் போட்டிகள் நடக்கிறது. பிரபல இடங்களான மொகாலி இந்தூர், ராஜ்கோட், ராஞ்சி, நாக்பூர் போன்ற நகரங்கள் இதில் விடுபட்டுள்ளது.
இதனால் பஞ்சாப், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு கிரிக்கெட் சங்கங்கள் அதிருப்தி தெரிவித்தன. மொகாலி மைதானம் போட்டியை நடத்த ஐ.சி.சி.யின் அளவு கோல்களை பூர்த்தி செய்ய வில்லை என்று கிரிக்கெட் வாரிய துணைத்தலைவர் ராஜூசுக்லா தெரிவித்தார்.
இந்தநிலையில் பஞ்சாப் மாநில விளையாட்டுத்துறை மந்திரி குர்மீத்சிங் மீட் ஹேயர், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய்ஷா ஆகியோருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு மொகாலி மைதானம் தகுதியற்றதாக கருதப்பட்டுள்ளது. ஐ.சி.சி.யின் அளவுகோல் என்ன என்பதை அறிய விரும்புகிறோம்.
2022-ம் ஆண்டு செப்டம்பரில் இந்தியா-ஆஸ்திரேலியா சர்வதேச 20 ஓவர் போட்டி நடைபெற்றதால், தற்போது விதிமுறைகளில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா என்பதை தெரிவிக்க வேண்டும்.
தர நிலைகளை ஆய்வு செய்ய ஐ.சி.சி. குழு மொகாலி மைதானத்துக்கு சென்றதா என்பதையும் தெரிவிக்க வேண்டும். மொகாலி ஸ்டேடியம், இந்தியாவின் தலை சிறந்த மைதானங்களில் ஒன்று மட்டுமல்ல, உலகின் முக்கிய மைதானங்களின் பட்டியலிலும் உள்ளது.
மொகாலி எப்போதும் கிரிக்கெட் ரசிகர்களின் முதல் தேர்வாக உள்ளது. மொகாலியில் சர்வதேச விமான நிலையம் உள்ளது. நகரத்தில் சிறந்த உள் கட்டமைப்பு உள்ளது. அணிகள் தங்குவதற்கு போதுமான ஓட்டல்கள் உள்ளன.
விளையாட்டு அரங்கிலும், பஞ்சாப் மாநிலம் முன்னிலையில் உள்ளது. கிரிக்கெட்டை பொறுத்தவரை பல ஜாம்பவான்கள் உருவாகி இருக்கிறார்கள்.
பஞ்சாப்பில் போட்டிகளை நடத்தவில்லை என்றால் அது நியாயமான விளையாட்டின் உணர்வை முற்றிலும் பொய்யாக்கும். எனவே பஞ்சாப்பில் சில போட்டிகளை நடத்துவது நீதியின் நலனுக்காக இருக்கும். மிக அவசரமான இந்த விஷயத்தில் பஞ்சாப்புக்கு நீதி கிடைக்கும் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- பாகிஸ்தான் அணி பங்கேற்கும் சில போட்டி இடங்களை மாற்றுமாறு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்தது.
- இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் எந்த இடத்திலும், எந்த அணியுடனும் விளையாட பாகிஸ்தான் அணி தயாராக இருக்கிறது.
இஸ்லாமாபாத்:
13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வருகிற அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை நடைபெறுகிறது.
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, தென்ஆப்பி ரிக்கா, வங்காளதேசம், நியூ சிலாந்து, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன.போட்டிக்கான அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது.
அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, தர்மசாலா, ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே ஆகிய 10 நகரங்களில் போட்டிகள் நடக்கிறது.
இதற்கிடையே பாகிஸ்தான் அணி பங்கேற்கும் சில போட்டி இடங்களை மாற்றுமாறு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்தது.
அக்டோபர் 20-ந்தேதி பெங்களூருவில் நடை பெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி 23-ந்தேதி சென்னையில் நடைபெறும் ஆப்கானிஸ் தானுக்கு எதிரான போட்டிகளின் மைதானங்களை மாற்றுமாறு வலியுறுத்தியது.
ஆனால் பாகிஸ்தானின் கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நிராகரித்தது. இந்த நிலையில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் எந்த இடத்திலும், எந்த அணியுடனும் விளையாட பாகிஸ்தான் அணி தயாராக இருக்கிறது.
உலக கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக விளையாடி வெற்றி பெறுவது பற்றி மட்டும் சிந்திக்கவில்லை. ஒட்டு மொத்த போட்டியிலும் சிறப்பாக செயல்பட வேண்டும். ஐ.சி.சி. பட்டத்தை வெல்ல வேண்டுமானால் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாட வேண்டும். அதில் கவனம் செலுத்துவோம்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் என்ன நடக்கிறது என்பதில் நாங்கள் கவனம் செலுத்தவில்லை. கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். வர இருக்கும் போட்டிகளின் முழு அட்டவணையும் எங்களிடம் உள்ளது. போட்டிகளில் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்.
இப்போட்டிகளுக்காக வீரர்கள் தங்களை தயார் படுத்தி வருகிறார்கள். உலக கோப்பை போட்டி எங்கு நடந்தாலும் அங்கு நாங்கள் விளையாட வேண்டும். எங்களுக்கு முன்னால் உள்ள சவால்களை எதிர் கொள்ள உற்சாகமாக இருக்கிறோம்.
பாகிஸ்தான் அணி தனது பலம் மற்றும் போட்டியை நடத்தும் நாடுகளின் நிலைமையை மனதில் கொண்டு ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பைக்கான திட்டங்களை வகுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இலங்கை, நெதர்லாந்து அணிகள் முதல் 2 இடங்களை பிடித்து உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன.
- 2 முறை உலக கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதல் முறையாக தகுதி பெறவில்லை.
ஹராரே:
13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர் 5-ந் தேதி முதல் நவம்பர் 19-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 10 நாடுகள் பங்கேற்கின்றன. 8 நாடுகள் நேரடியாக தகுதி பெற்றன. 2 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதி சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகிறது.
இலங்கை, நெதர்லாந்து அணிகள் முதல் 2 இடங்களை பிடித்து உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றன. 2 முறை உலக கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதல் முறையாக தகுதி பெறவில்லை. இதேபோல் ஜிம்பாப்வே அணியும் தகுதி பெறவில்லை.
இலங்கை-நெதர்லாந்து அணிகள் மோதும் இறுதிப் போட்டி ஹராரேயில் நாளை நடக்கிறது.
- 10 மைதானங்களில் 48 போட் டிகள் நடக்கிறது.
- சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம், பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியம் ஆகியவற்றை ஆய்வு செய்தது.
13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் நடக்கிறது.
இதில் 10 நாடுகள் பங்கேற்கின்றன. அகமதாபாத், கொல்கத்தா, சென்னை, மும்பை, டெல்லி, ஐதராபாத், பெங்களூரு, புனே, லக்னோ, புனே ஆகிய 10 மைதானங்களில் 48 போட் டிகள் நடக்கிறது. கவுகாத்தி, திருவனந்தபுரத்தில் பயிற்சி ஆட்டங்கள் நடைபெறுகிறது.
இந்நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறும் மைதானங்களில் ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) குழு ஆய்வு செய்து வருகிறது.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம், பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியம் ஆகியவற்றை ஆய்வு செய்தது. மைதானங்களை பார்த்து ஐ.சி.சி. குழு திருப்தி தெரிவித்தது. இந்திய அணி மோதும் முதல் ஆட்டம் சென்னையில் நடக்கிறது. அக்டோபர் 8-ந் தேதி ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது. நியூசிலாந்து அணி மோதும் 2 ஆட்டமும், பாகிஸ்தான் விளையாடும் 2 போட்டியும் ஆக மொத்தம் 5 ஆட்டங்கள் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது.
பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் 5 போட்டிகள் நடக்கிறது. இந்தியா-நெதர்லாந்து அணிகள் மோதும் ஆட்டம் பெங்களூருவில் நவம்பர் 23-ந்தேதி நடக்கிறது.
இதேபோல பயிற்சி ஆட்டம் நடைபெறும் திருவனந்தபுரம் ஆடுகளத்தையும் ஆய்வு செய்தது.
ஐ.சி.சி. குழு தற்போது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தை ஆய்வு செய்து வருகிறது. தொடக்க ஆட்டம், இறுதிபோட்டி உள்பட 5 போட்டிகள் அகமதாபாத்தில் நடக்கிறது.
- உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ம் தேதி தொடங்குகிறது.
- உலக கோப்பை கிரிக்கெட்டில் 9 ஆட்டங்களின் தேதி, நேரம் மாற்றம் செய்யப்பட்டது.
புதுடெல்லி:
13-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5-ம் தேதி முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெறுகிறது. இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பங்கேற்கின்றன.
இதற்கான போட்டி அட்டவணை கடந்த ஜூன் 27-ம் தேதி வெளியிடப்பட்டது. அக்டோபர் 5-ம் தேதி அகமதாபாத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இதற்கிடையே, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 9 ஆட்டங்களின் தேதி மற்றும் நேரங்களில் மாற்றம் செய்து திருத்தப்பட்ட புதிய போட்டி அட்டவணையை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது. ஆனால் இடங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்நிலையில், உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவுக்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை வரும் 25-ம் தேதி தொடங்குகிறது. அன்று இந்திய அணி அல்லாத மற்ற ஆட்டங்கள் மற்றும் பயிற்சி ஆட்டத்திற்கான டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது.
இந்திய அணி மோதும் போட்டிக்குரிய டிக்கெட்டுகள் வரும் 30-ம் தேதி முதல் செப்டம்பர் 3-ம் தேதி வரை கிடைக்கும். அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டுகள் செப்டம்பர் 15-ம் தேதி விற்கப்படும்.
ரசிகர்கள் உலக கோப்பை கிரிக்கெட் இணையதளத்தில் வரும் 15-ம் தேதி முதல் தங்கள் பெயரை பதிவுசெய்து கொண்டால், அவர்களுக்கு டிக்கெட் விற்பனை தொடர்பான தகவல்கள் முதலிலேயே தெரிவிக்கப்படும் என ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.
- சாம்சன் உங்களுடைய வாய்ப்பை நீங்கள் வீணடிக்காதீர்கள்.
- உங்களுக்கு கிடைக்கும் போட்டிகளில் நீங்கள் ரன் அடிக்கவில்லை என்றால் நீங்கள் பிற்காலத்தில் மிகவும் வருத்தப்படுவீர்கள்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியில் யார் விக்கெட் கீப்பர் என்ற முடிவு இன்னும் தெரியவில்லை.
இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் இருவரிடையே போட்டி நிலவி வருகிறது. தற்போது இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் எதிராக விளையாடி வருகிறது. ஒருநாள் தொடரில் இஷான் கிஷன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3 அரை சதத்தை பதிவு செய்தார். சஞ்சு சாம்சன் 2 போட்டிகளில் விளையாடி ஒரு அரைசதத்தை பதிவு செய்தார்.
இந்த நிலையில் நீங்கள் இருவருமே டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் வெளியேறி ஜித்தேஷ் சர்மா கூட பிளேயிங் லெவனில் இடம் பெறலாம் என முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சாம்சன் உங்களுடைய வாய்ப்பை நீங்கள் வீணடிக்காதீர்கள். உங்களுக்கு கிடைக்கும் போட்டிகளில் நீங்கள் ரன் அடிக்கவில்லை என்றால் நீங்கள் பிற்காலத்தில் மிகவும் வருத்தப்படுவீர்கள். இஷான் கிஷன் மேலே வருவது முக்கியமல்ல சஞ்சு சான்சன் இதற்கு மேல் கீழே போக கூடாது.
நீங்கள் இருவருமே டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் வெளியேறி ஜித்தேஷ் சர்மா கூட பிளேயிங் லெவனில் இடம் பெறலாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதேபோன்று பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா அளித்துள்ள பேட்டியில்,சஞ்சு சாம்சன் எப்போது நீங்கள் ரன் அடிக்கப் போகிறீர்கள்? உங்களுக்காக நான் தொடர்ந்து பேசி வருகின்றேன். ஆனால் உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை நீங்கள் வீணடித்து வருகிறீர்கள் என்று குறை கூறியுள்ளார்.
- முதல் வீரராக இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியை தேர்வு செய்துள்ளார்.
- 4-வது வீரராக ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான்.
புதுடெல்லி:
10 அணிகள் பங்கேற்கும் 13-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது.
இந்நிலையில் உலககோப்பை தொடருக்கான கனவு 11 அணியில் தான் தேர்வு செய்த முதல் 5 வீரர்களை இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் அறிவித்துள்ளார். அதில் இரண்டு இந்திய வீரர்கள், ஒரு ஆஸ்திரேலிய வீரர் , ஒரு தென்னாப்பிரிக்க வீரர் மற்றும் ஒரு ஆப்கானிஸ்தான் வீரர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
முதல் வீரராக இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியை தேர்வு செய்துள்ளார். விராட் கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன் எனவும் கூறியுள்ளார். 2-வது வீரராக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை தேர்வு செய்துள்ளார். இவர் ஐசிசி மற்றும் இருதரப்பு தொடர்களில் அதிக ரன்களை குவித்து சிறப்பான வீரர் என நிரூபித்துள்ளார்.
3-வது வீரராக ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை தேர்வு செய்துள்ளார். 4-வது வீரராக ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான். 5-வது வீரராக தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடாவை தேர்வு செய்துள்ளார்.