என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "worship"

    • சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பனம் பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் கோவிலில் விநாயகர் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
    • 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    பரமத்தி வேலூர்:

    சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பனம் பாளையத்தில் உள்ள பரமேஸ்வரர் கோவிலில் விநாயகர் பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் பரமத்தி வேலூர் பேட்டை பஞ்சமுக விநாயகர் கோவில், நன்செய்இடையாறு பகுதியில் உள்ள விநாயகர் கோவில்கள், பரமத்தி, பாண்டமங்கலம், பொத்தனூர், ஆனங்கூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவிலிகளில் சங்கடகர சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயக பெருமானை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    • படித்துறையில் காவிரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை.
    • குஞ்சித ராஜ விநாயகர், இரட்டை கால பைரவர் ஆகியோர் சன்னதியில் சிறப்பு வழிபாடு.

    கும்பகோணம்:

    அகில பாரதீய சந்நியாசிகள் மற்றும் அன்னை காவிரி நதிநீர் பாதுகாப்பு அறக்கட்டளையின் சார்பாக தலைக் காவிரியிலிருந்து பூம்புகார் வரை 12 ஆம் ஆண்டு ரதயாத்திரை கஞ்சனூர் வந்தது.

    கஞ்சனூர் வடகாவிரி படித்துறையில் காவிரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. சூரியனார்கோயில் ஆதீனம் 28-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் அபிஷேகத்தை தொடக்கி வைத்தார். தொடர்ந்து கிராம மக்கள் காவிரி அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். பின்னர் சுவாமி ராமானந்தா தலைமையிலான துறவியர்கள் காவிரி நதிக்கு மகா ஆரத்தி வழிபாடு செய்தனர்.

    மாணவ -மாணவியர் விளக்கேற்றி காவிரி நதியை வணங்கினர். இதில் கஞ்சனூர் கோட்டூர், துகிலி, மணலூர் கிராம மக்கள் கலந்து கொண்டனர் தொடர்ந்து கதிராமங்கலம் வடகாவிரி படித்துறையில் குஞ்சித ராஜ விநாயகர், இரட்டை கால பைரவர் ஆகியோர் சன்னதியில் சிறப்பு வழிபாடு செய்து படித்துறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள மூலவர் காவிரி அம்மன் மற்றும் ரத யாத்திரை காவிரி அம்மனுக்கு சிறப்பு மகா அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. இதில் சிவராமபுரம் வாயு சித்த ராமானுஜர் சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதில் கதிராமங்கலம், சிவராமபுரம் கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    • நெற்குப்பையில் பெரியகண்மாய் நிரம்பியதால் கிராம மக்கள் வழிபாடு செய்தனர்.
    • தேங்காய், பழம், வெற்றிலை வைத்து பூஜை செய்தனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா நெற்குப்பை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கனமழையின் காரணமாக 3 கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட பெரியகண்மாய் முழுகொள்ளவை எட்டியது.

    இந்த கண்மாயில் இருந்து சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பெரியகண்மாய் முழுகொள்ளவை எட்டியவுடன் பாரம்பரிய முறைப்படி நெற்குப்பை பேரூராட்சியில் உள்ள கிராமத்தினர் ஒன்றுகூடி சிறிய மண் பானையில் கருப்பு-வெள்ளை பொட்டு வைத்து, பொட்டுகலயத்தை கீழத்தெருவில் உள்ள கோவிலில் வழிபாடு செய்தனர்.

    அதனைத்தொடர்ந்து அங்கிருந்து ஊர்வலமாக சென்று பெரியகண்மாய் மடைபகுதி கரையில் பாரம்பரிய முறைப்படி ஊர்முக்கியஸ்தர்கள், கிராமமக்கள் ஒன்றுகூடி தேங்காய், பழம், வெற்றிலை வைத்து பூஜை செய்தனர். பின்னர் ஆழமான இடத்தில் குச்சியின் நுனிப்பகுதியில் வைக்கோல் வைத்து கட்டப்பட்டு அதன்மேல் பெரியகண்மாய் முழுகொள்ளவை எட்டியதற்கு அடையாளமாக பெண்கள் குலவையிட, வாண வேடிக்கையுடன் பொட்டுகலையம் வைக்கப்பட்டது.

    பெரியகண்மாய் முழுகொள்ளவை எட்டி யவுடன் பாரம்ப ரிய முறைப்படி பொட்டுக்கலை யம் வைத்து வழிபாடு செய்வது இந்த ஆண்டு நல்லமழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது கிராமமக்களின் ஐதீகமாகும்.

    பெரிய கண்மாய் முழுகொள்ளவை எட்டும்போதல்லாம் திருவிழா போல் கொண்டாடி மகிழ்கிந்து வருகின்றனர். இந்த விழாவில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சங்கர், உதவி பொறியாளர் ஆனந்த், உதவியாளர் முரளி, மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

    • கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது
    • பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா,பாடாலூர் அருகே உள்ளது கூத்தனூர் கிராமம்.இந்த கிராமத்தில் உள்ள சங்கிலியாண்டவர் சுவாமி கோயிலில் தொடர்ந்து மழை பெய்ய வேண்டி கெடா வெட்டி பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு செய்வது வழக்கம்.அதன்படி நடப்பாண்டு கூத்தனூர் காட்டுப்பகுதியில் உள்ள சங்கிலியாண்டவர் சுவாமி கோயிலுக்கு பொங்கல் வைத்தும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்தும், மழை பெய்ய வேண்டிய சிறப்பு வழிபாடு செய்தனர்.

    முன்னதாக நாட்டா ர்மங்கலம் முத்தையா கோயில் செல்லும் சாலையில் உள்ள வெள்ளிமலை கிழக்கே உள்ள பாறையில் குடி அழைப்பு நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கூத்தனூர் கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • சாஸ்திர ரீதியாக ஐந்து வகையான முறையில் இறைவனை வணங்கலாம்.
    • பஞ்ச நமஸ்காரங்களை பற்றி பார்ப்போம்.

    கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள், இறைவனை வணங்கும் முறைகளில் வேறுபாடு இருக்கும். சாஸ்திர ரீதியாக ஐந்து வகையான முறையில் இறைவனை வணங்கலாம் என்கிறார்கள். இதனை 'பஞ்ச நமஸ்காரங்கள்' என்று அழைக்கிறார்கள். அதுபற்றி பார்ப்போம்.

    ஏகாங்க நமஸ்காரம்: தலை மட்டும் குனிந்து வணங்குதல்

    துவிதாங்க நமஸ்காரம்: இரு கைகளையும் தலைக்கு மேல் குவித்து வணங்குதல்

    பஞ்சாங்க நமஸ்காரம்: இரு கைகள், இரு முழந்தாள்கள், சிரசு ஆகிய ஐந்து அங்கங்களும் பூமியில் பதிய வணங்குதல். இதனை பெண்கள் மட்டுமே செய்ய வேண்டும்.

    சாஷ்டாங்க நமஸ்காரம்: இரு கைகள், இரு முழந்தாள்கள், சிரசு, மார்பு ஆகிய ஆறு அங்கங்கள் பூமியில் பதிய வணங்குதல்.

    அஷ்டாங்க நமஸ்காரம்: இரு கைகள், இரு முழந்தாள்கள், இரு செவிகள், சிரசு, மார்பு என எட்டு அங்கங்கள் பூமியில் பதிய வணங்குதல்.

    • கோவிலுக்குள் நுழையும் நாம் முதலில் செல்ல வேண்டியது கோவில் குளம்தான்.
    • கோவில் வளாகத்திலோ குறைந்தது ஒரு மணி நேரமாவது அமர்ந்து இருக்க வேண்டும்.

    கோவில் என்பது அமைதியான முறையில் எந்த அவசரமும் இன்றி சென்று வரவேண்டிய இடம். இன்றைய எந்திர வாழ்க்கையில், அவசர கதியில் கோவிலுக்குள் நுழைந்து, நேராக இறைவனை தரிசித்து விட்டு வெளியே வரும் பக்தர்கள் ஏராளம். அப்படி ஒருவர் ஆலயத்திற்குள் செல்வது நல்லதல்ல. வழிபாடு என்பது முறையானதாக இருக்க வேண்டும். அதற்காகத்தான் ஆலயங்களானது அறிவியல்பூர்வமாகவும், ஆரோக்கியத்திற்கு வழி காட்டும் வகையிலும் நம் முன்னோர்களால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

    கோவிலுக்குள் நுழையும் நாம் முதலில் செல்ல வேண்டியது கோவில் குளம்தான். அதை ஒருபோதும் அலட்சியப்படுத்தக்கூடாது. (கோவில் குளம் இல்லாத சிறிய ஆலயங்களில் கூட, கால்களை கழுவிவிட்டு ஆலயத்திற்குள் செல்ல வேண்டும் என்ற வழக்கத்தை மீறாமல் இருப்பதற்காக, தண்ணீர் குழாய்கள் அமைக்கப்பட்டிருப்பதைக் காண முடியும்.)

    இந்த உலகத்தில் உள்ள கிரகங்களின் கதிர்வீச்சுக்களை உள்வாங்கி தக்கவைத்துக் கொள்ளும் தன்மை, நீருக்கு உண்டு. மேலும் மூளைக்கு செல்லும் நரம்புகளின் நுனிகள், கால் பாதங்களின் முன் பகுதி, பின் பகுதியோடு இணைந்திருக்கின்றன. அதே போல் பின் காலில் இருக்கிற மெல்லிய எலும்புகள் நம்முடைய முதுகு எலும்போடு தொடர்பு கொண்டவை. எனவே குளிர்ச்சியான நீரில் நாம் கால்களை நனைக்கும்போது, கால் பாதங்களில் உள்ள நரம்புகள், எலும்புகள் தூண்டப்பட்டு, கோவிலுக்குள் இருக்கும் இறைவனை தரிசித்து நாம் பெறப்போகும் சக்திக்கு, நம்மை தயார்படுத்தும்.

    ஆலயங்களின் நுழைவு வாசலில் நம்முடைய கால்கள் அழுந்தும்படி நன்றாக மிதித்து ஏறிச்செல்ல வேண்டும். இது ஒரு அக்குபஞ்சர் முறையான அழுத்தத்தைக் கொடுக்கும். அதற்காகத்தான் கோவில் வாசல் படிகளில், சிறிய மேடாக குமிழ்களை அமைத்திருப்பார்கள். நம்முடைய பித்தப்பை மற்றும் மூளையில் உள்ள நரம்புகளை இந்த அழுத்தமானது சமநிலைப்படுத்தும்.

    கோவிலின் பிரகாரத்தைச் சுற்றி நடக்கும்போது, நம்முடைய ரத்த அழுத்தம் சீராகும். இதனால் மூளையின் பரபரப்பு தன்மை அடங்கி, மூளையில் சுரக்கும் சுரபிகளின் செயல்பாடும் சமநிலைப்படும். இதனால் உடலில் அமைதி ஏற்படும். எனவே கோவிலின் கருவறை சன்னிதிக்குள் நாம் நுழையும்போது, உடம்பும் மனதும் ஒருநிலைப்பட்ட நிலையில் இருக்கும்.

    கோவில் கருவறைக்குள் இருக்கும் இறை சக்தியை, பூமியில் விழுகிற கிரகங்களின் கதிர்வீச்சுகளை உள்வாங்கும் வகையில்தான் அமைத்திருப்பார்கள். கர்ப்பக்கிரகத்தில் உள்ள பொருட்களும் கூட, இறை சக்தியை தூண்டும் வகையிலானதுதான். கர்ப்பக்கிரகத்தின் உள்ளே ஏற்றப்படும் தீபம் கூட, இறை சக்திக்கு தேவைப்படும் அளவு வெப்பத்திற்கு ஏற்ப, 1, 3, 5, 7, 9 என்ற ரீதியில் திரி தீபங்களாக அமைந்திருக்கும். கோவிலில் இறைவனுக்கு படைக்கப்பட்டு வழங்கப்படும் பிரசாதங்களும் கூட, அந்த சக்தியை நம் உடலுக்குள் கொண்டு செல்லும் ஒரு செயல்பாடுதான்.

    ஆலயத்தில் நிலவும் அமைதியையும், இறைசக்தியையும் பெற, ஆலயத்தின் உட்பிரகாரத்திலோ அல்லது கோவில் வளாகத்திலோ குறைந்தது ஒரு மணி நேரமாவது அமர்ந்து இருக்க வேண்டும். அதனைச் செய்ய இந்த அவசர யுகத்தில் பலருக்கு பொறுமை இல்லை. அதனை முன்கூட்டிய நம் முன்னோர்கள் அறிந்த காரணத்தால்தான், விளக்கு பூஜை, சுவாமி அபிஷேகம், ஆராதனை, சங்கு பூஜை போன்ற நிகழ்வுகளை வைத்து, மக்களை கோவிலுக்குள் நெடுநேரம் இருக்கச் செய்யும் யுக்தியை கையாண்டிருக்கிறார்கள்.

    • நான்கு தளங்களைக் கொண்டது இந்த கோவில்.
    • கூரைகளை ஏராளமான தூண்கள் தாங்கி நிற்கின்றன.

    ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் கிருஷ்ணா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது, உண்டவல்லி என்ற ஊர். இங்கு 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த குடைவரைக் கோவில்கள் உள்ளன. நான்கு தளங்களைக் கொண்ட இதன் அடித்தளம், 7 தலைவாசல்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. கூரைகளை ஏராளமான தூண்கள் தாங்கி நிற்கின்றன. இந்த அடித்தளத்தில் பணிகள் முழுமைபெறாத நிலை காணப்படுகிறது.

    முதல் தளத்தில் சிவன், பிரம்மா, விஷ்ணு சிலைகளும், சிற்பங்களும் காணப்படுகின்றன. இரண்டாம் தளத்தில் அனந்த சயனப் பெருமாளின், பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டுள்ளது. 7 தலை நாகம் குடைப்பிடிக்க சயனக் கோலத்தில் மகாவிஷ்ணு அருள்கிறார். மூன்றாம் தளமும் முழுமையாக முற்றுப்பெறாத நிலையில் காணப்படுகிறது.

    • புனித தீர்த்தங்கள் நிரப்பி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம்அவினாசியில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை  வாய்ந்த ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது.இக்கோவிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சுவாமிக்கு கோவில் சிவாச்சார்யார்கள் சார்பில் 108 வலம்புரி சங்காபிஷேகம் நடந்தது. முன்னதாகஇதில் கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதா, உள்ளிட்ட புனித தீர்த்தங்கள் நிரப்பி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.இதையடுத்து சுவாமிக்கு அபிஷேக அலங்கார, தீபாராதனை நடந்தது .

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • மானாமதுரையில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
    • கார்த்திகை சோமவார பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம். மானாமதுரை வைகைஆற்று கரையில் உள்ள ஆனந்த வல்லி-சோமநாதர் கோவிலில் கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு யாகம், சங்காபிஷேகம் நடந்தது. மாலையில் நந்தி, சோமநாதருக்கு பிரதோஷ காலத்தில் 16 வகை அபிஷேகம் செய்து சிறப்பு தீபாராதனையும், வெள்ளி ரிஷப வாகனத்தில் கோவில் பிரகாரத்தில் வலம் வரும் நிகழ்ச்சியும் நடந்தது.

    இதேபோல் சிருங்கேரி சங்கரமடம் சந்திரமவுலீசுவரர், நாகலிங்கம் நகர் அண்ணாமலையார், ெரெயில் நிலையம் எதிரில் உள்ள பூரணசக்கரவிநாயகர் கோவிலில் உள்ள காசிவிசுவநாதர், இடைக்காட்டூர் மணிகண்டேசுவரர், வேம்பத்தூர் கைலாசநாதர், திருப்புவனம் புஸ்பவனேசுவரர், திருப்பாசேத்தி அழகேசுவரர், மேலெநெட்டூர் சொர்ணவாரீசுவரர், குறிச்சி வழிவிடு பெரிய நாச்சிகோவிலில் உள்ள காசியில் இருந்து கொண்டு வந்து பிரதிஷ்டை செய்த காசிவிசுவநாதர் ஆகிய கோவில்களில் கார்த்திகை சோமவார பிரதோஷ பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    • வரலாற்று சிறப்புவாய்ந்த கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது.
    • சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வரலாற்று சிறப்புவாய்ந்த கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. நேற்று கார்த்திகை அமாவாசை தினத்தை முன்னிட்டு ஸ்ரீகருணாம்பிகை அம்மன்- அவினாசியப்பர்சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோவில் மண்டபத்தில் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    அவினாசியிலுள்ள ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோவில், கரிவரதராஜப்பெருமாள் கோவில், பழங்கரை பொன்சோழீசுவரர் கோவில், கருவலூர் மாரியம்மன் கோவில், அவினாசி ரங்கா நகரிலுள்ளவனபத்திரகாளியம்மன்கோவில், நடுவச்சேரி சிவளபுரியம்மன் கோவில், ராயம்பாளையம் காட்டு மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    • இரவு 8-30 மணிக்கு பாலக்காடு கடுக்கன் குன்னம் கிருஷ்ணன் குழுவினரின் பூஜை மற்றும் தாயம் வகை செண்டை மேளம் நடைபெறுகிறது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடுமலை ஸ்ரீ தர்மசாஸ்தா சபரி யாத்திரை குழுவினர் செய்து வருகின்றனர்.

    உடுமலை :

    உடுமலை தில்லைநகரில் உள்ள ரத்னாம்பிகை உடனமர் ரத்தின லிங்கேஸ்வரர் ேகாவிலில் கேரள பாரம்பரிய முறைப்படி ஸ்ரீ அய்யப்பன் விளக்கு பூஜை நடைபெறுகிறது.வருகிற 10 ந்தேதி காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், 7:30 மணிக்கு வாழைமரம் கொண்டு உருவாக்கும் அம்பலத்தில் அய்யப்ப சாமி பிரதிஷ்டை, 12 மணிக்கு உச்சிகால பூஜை, அய்யப்பன் விளக்கு சப்பரம், விளக்கு சங்கல்பம் ,மாலை 5 மணிக்கு உடுமலை ருத்ரப்பா நகர் ஸ்ரீ சக்தி விநாயகர் கோவிலில் இருந்து தாளப்பொலியுடன் பாலை கொம்பு எழுந்தருளல், மாலை 7 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது.

    இரவு 8-30 மணிக்கு பாலக்காடு கடுக்கன் குன்னம் கிருஷ்ணன் குழுவினரின் பூஜை மற்றும் தாயம் வகை செண்டை மேளம் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு ஸ்ரீ அய்யப்பன் சரித்திரம் உடுக்கை பாட்டு, பால் கிண்டி எழுந்தருளல், திரிஉழிச்சல், அய்யப்பனும் வாபரும், வெட்டும் -தடவும் நிகழ்ச்சியும் நடக்கிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உடுமலை ஸ்ரீ தர்மசாஸ்தா சபரி யாத்திரை குழுவினர் செய்து வருகின்றனர்.

    • 16 வகை திரவியங்களால் அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
    • சிறப்பு பூஜையை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    பல்லடம் : 

    பல்லடம் சந்தைப்பேட்டை கோட்டை விநாயகர் கோவிலில் சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு விநாயகப்பெருமானுக்கு, சந்தனம், பால், தயிர், உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு பூஜையை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×