என் மலர்
நீங்கள் தேடியது "WTC"
- 11 பேரை தேர்ந்தெடுக்க மிகவும் கடினமாக இருந்தது.
- என்ன பொறுத்தவரைக்கும் பேட் கம்மின்ஸ் டாப் கிளாஸ் ஆபரேட்டர்.
ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி லண்டனில் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.
இரண்டு ஆண்டுகள் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளின் அடிப்படையில் இரு அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி அணி முன்னேறாத நிலையில், இன்று விராட் கோலி சிராஜ் உள்ளிட்ட ஏழு பேர் இங்கிலாந்து புறப்பட்டு விட்டனர்.
இந்த நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை இணைத்து ஒரு லெவன் அணியை ரவி சாஸ்திரி அறிவித்து உள்ளார். அந்த அணியில் அஸ்வின், புஜாராவுக்கு அவர் இடம் கொடுக்கவில்லை.
அந்த அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
ரோகித் சர்மா (கேப்டன்), உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபஸ்சேன், விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித், ஜடேஜா, அலேக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், முகமது ஷமி.
11 பேரை தேர்ந்தெடுக்க மிகவும் கடினமாக இருந்தது. ஏனென்றால், அஸ்வின் தலைசிறந்த உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர். அதேபோல் ஹசில்வுட், புஜாராவும் மிரட்டக் கூடியவர்கள். ஆகவே, அது எளிதானது அல்ல.
என்ன பொறுத்தவரைக்கும் பேட் கம்மின்ஸ் டாப் கிளாஸ் ஆபரேட்டர். முகமது ஷமி வின்டேஜே் போன்றவர். அவர் மேலும் மேலும் சிறந்த ஆட்டத்தை பெற்று வருகிறார். நாம் ஐ.பி.எல். போட்டியில் அதை பார்த்திருப்போம். இதனால் அவருக்கு அணியில் இடம் என ரவி சாஸ்திரி தெரிவித்தார்.
- ஆஸ்திரேலியாவை விட இந்திய ரசிகர்களே அதிகமாக இருப்பார்கள்.
- இது சிறப்புமிக்க ஜாலியான ஒரு போட்டியாக இருக்கப்போகிறது.
லண்டன்:
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடக்க உள்ள லண்டன் ஓவலில் குறிப்பிட்ட பகுதியில் சுழற்பந்து வீச்சு எடுபடும் என்று ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் சுமித் கூறியுள்ளார்.
2-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவலில் வருகிற 7-ந்தேதி (மாலை 3மணி) தொடங்குகிறது. இதில் புள்ளிப் பட்டியலில் டாப்-2 இடங்களை பிடித்த ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதையொட்டி ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்கள் அங்கு தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆஸ்திரேலிய அணி பேட் கம்மின்ஸ் தலைமையில் ஆயத்தமாகி வருகிறது.
இந்த போட்டி குறித்து ஆஸ்திரேலிய முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவன்சுமித் நேற்று அளித்த ஒரு பேட்டியில், 'டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடக்க உள்ள ஓவலில் போக போக ஆடுகளத்தன்மையில் மாற்றம் ஏற்பட்டு கொஞ்சம் சுழற்பந்து வீச்சு எடுபட வாய்ப்புள்ளது. இந்தியாவில் நாங்கள் எந்த மாதிரி சவாலை எதிர்கொண்டோமோ அதே போன்று இங்கும் சந்திக்க நேரிடலாம். ஒட்டுமொத்தத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்கு அற்புதமான ஒரு இடம் ஓவல். நிலைத்து நின்று விட்டால் பேட்டிங் செய்வதற்கு அருமையான இடம். இதே போல் வேகத்துடன் கூடிய பவுன்சும் ஓரளவு இருக்கும்' என்றார்.
மேலும் அவர் கூறுகையில், 'இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் மோதுவது உற்சாகம் அளிக்கிறது. நிச்சயம் அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள் திரள்வார்கள். அனேகமாக ஆஸ்திரேலியாவை விட இந்திய ரசிகர்களே அதிகமாக இருப்பார்கள். இது சிறப்புமிக்க ஜாலியான ஒரு போட்டியாக இருக்கப்போகிறது. அதை நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம்' என்றார்.
ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 3 ஆட்டங்களில் மட்டுமே விளையாடினார். கணுக்கால் காயத்தால் பாதியில் ஒதுங்கிய அவர் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் அங்கம் வகிக்கிறார். அவர் கூறுகையில், 'எனது உடல்தகுதி இப்போது நன்றாக இருக்கிறது. இன்னும் ஒரு வாரத்திற்குள் முழு உடல்தகுதியை அடைவதற்கான பயிற்சியை மேற்கொள்வேன். டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடுவேன் என்று நம்புகிறேன்' என்றார்.
- இந்த போட்டிக்கான ஒளிபரப்பு உரிமையை பெற்றுள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வர்ணனையாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது.
- ஆங்கில வர்ணனைக்கு ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர், மேத்யூ ஹைடன் மற்றும் நாசர் ஹுசைன் நியமிக்கப்பட்டனர்.
லண்டன்:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் மாதம் 7-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோத உள்ளன.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி 2019-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. சவுத்தாம்ப்டனில் நடந்த முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
தற்போது 2-வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா விளையாட உள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த போட்டிக்கான ஒளிபரப்பு உரிமையை பெற்றுள்ள ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் வர்ணனையாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது.
இதில் ஆங்கில வர்ணனைக்கு ரவி சாஸ்திரி, சுனில் கவாஸ்கர், மேத்யூ ஹைடன் மற்றும் நாசர் ஹுசைன் ஆகியோரும், ஹிந்தி வர்ணனைக்கு ஹர்பஜன் சிங், சவுரவ் கங்குலி, தீப் தாஸ்குப்தா மற்றும் எஸ். ஸ்ரீசாந்த் ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், தமிழ் மொழி வர்ணனைக்கு யோ மகேஷ், எஸ்.ரமேஷ், எல்.பாலாஜி மற்றும் எஸ்.ஸ்ரீராம் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- நாங்கள் இந்திய அணிக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் கோப்பையில் விளையாடினோம்.
- அவர்கள் எப்படி விளையாடுவர்கள் எப்படி பந்து வீசுவார்கள் என்பது குறித்த நுணுக்கங்களை கற்று வைத்துள்ளோம்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி ஜூன் 7-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதுகிறது. இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் லாபுசேன் இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடுவதில் மும்முரமாக இருந்தபோதும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்க்கு தயாராகி வந்தார். கடந்த சில மாதங்களாக கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடி சிறப்பான பார்மில் உள்ளார்.
இந்நிலையில் இந்திய பந்து வீச்சாளர்கள் சவாலாக இருப்பார்கள் எனவும், கவுண்டி கிரிக்கெட் உதவியாக இருக்கும் என ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் மார்னஸ் லாபுசேன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
இயற்கையாகவே, ஆஸ்திரேலியாவுக்காக நம்பர் 3 பேட்டிங் செய்யும் எவருக்கும் பொறுப்பு இருக்கும். 2019-ல் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய போதும் எனக்கு இந்த பொறுப்பு இருந்தது. ரன்கள் எடுப்பது எனது வேலை. நான் ரன்கள் எடுக்கவில்லை என்றால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் என் வேலையைச் செய்ய வேறொருவரைக் தேர்வு செய்து விடும். இந்த நிலை எப்போதுமே மாறாது.
என்னால் முடிந்த அளவு அதிக ஆட்டங்களில் ரன்களை குவிப்பதற்கும் பங்களிப்பதற்கும் பல வழிகளைக் கண்டுபிடிக்க வேண்டும்.
இங்கிலாந்து மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் இந்திய அணியில் முகமது சமி, சிராஜ், உமேஷ் யாதவ் ஆகியோரை தேர்வு செய்துள்ளது. ஓவல் மைதானத்தில் இந்திய பந்து வீச்சாளர்கள் சவாலாக இருப்பார்கள். நாங்கள் இந்திய அணிக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் கோப்பையில் விளையாடினோம். அவர்கள் எப்படி விளையாடுவர்கள் எப்படி பந்து வீசுவார்கள் என்பது குறித்த நுணுக்கங்களை கற்று வைத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கவுண்டி கிரிக்கெட்டில் 28 வயதான அவர் எட்டு இன்னிங்ஸ்களில் இரண்டு சதங்கள் மற்றும் மொத்தம் 504 ரன்கள் எடுத்தார்.
- சுப்மான் கில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்ப்பு
- ஆஸ்திரேலியாவில் ஸ்டார்க், ஹேசில்வுட் போன்ற சிறந்த பந்து வீச்சாளர்கள் உள்ளனர்
ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா முடிந்த கையோடு இந்திய அணியில இடம் பிடித்துள்ள வீரர்கள் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட இங்கிலாந்து சென்றுள்ளனர். இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் சாம்பியனுக்காக பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இந்த ஆட்டம் வருகிற 7-ந்தேதி நடக்கிறது. இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
கடந்த முறை இந்தியா நியூசிலாந்திடம் தோல்வியடைந்து சாம்பியன் வாய்ப்பை இழந்தது. இந்திய பேட்ஸ்மேன்கள் மிகப்பெரிய அளவில் சாதிக்கவில்லை. இந்த முறை இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மான் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு காரணம் சமீபகாலமாக அவர் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. ஐ.பி.எல். கிரிக்கெட்டிலும் அசத்தினார்.
ஆனால், அவர் இந்த விசயத்தில் ஆட்டம் கண்டுவிடுவார் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் கிரேக் சேப்பல் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கிரேக் சேப்பல் கூறியதாவது:-
நான் சுப்மான் கில்லை ஆஸ்திரேலியாவில் வைத்து பார்த்து இருக்கிறேன். இந்தியாவில் உலக கிரிக்கெட்டில் மற்ற அணிகளை விட சிறப்பாக இருக்க காரணம், அவர்கள் ஏராளமான ஆட்டங்களில் விளையாடி முன்னேற்றம் அடைகிறார்கள். அவர்கள் அதிக அளவில் வெளிநாட்டு தொடரில் விளையாடுவதை உறுதி செய்கிறார்கள். ஆகவே, சுப்மான் கில் வெளிநாட்டில் ஏராளமான போட்டிகளில் விளையாடியுள்ளார்.
அவர் இதற்கு முன் இங்கிலாந்து மண்ணில் விளையாடியுள்ளார். ஆஸ்திரேலியா சிறப்பாக பந்து வீசினால், இங்கிலாந்து சூழ்நிலையில் எந்தவொரு பேட்ஸ்மேனும் திணறுவதுபோல் அவரும் திணறுவார். மிட்செல் ஸ்டார்க் போன்று கூடுதல் வேகம் மூலம் சுப்மான் கில்லை திணறடிக்க முடியும். கூடுதல் வேகம் சிறந்த பேட்ஸ்மேனை ஆட்டமிழக்கச் செய்யும். அதேபோல் எக்ஸ்ட்ரா பவுன்சரும் சிறந்த வீரர்களை ஆட்டமிழக்கச் செய்யும்.
ஹேசில்வுட் உடற்தகுதி பெற்று விளையாடினால், அது சுப்மான் கில்லுக்கு தொந்தரவு கொடுப்பார். ஹேசில்வுட் விளையாடவில்லை என்றால், போலந்து விளையாட வாய்ப்புள்ளது. அவரும் நெருக்கடி கொடுக்க வாய்ப்புள்ளது. அவர் சரியான லைனில் பந்து வீசுகிறார். இங்கிலாந்து சூழ்நிலையில் அவரது பந்து வீச்சு சிறந்த லெந்த் ஆகவும் இருக்கும்.
சுப்மான் கில் தொடக்கத்தில் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில் செல்லும் பந்து மீது கவனம் செலுத்துவார். பந்து சற்று பவுன்சரானால், க்ரீஸ் உள் நின்று விளையாடுவார். நான் பார்த்த இந்த சிறிய விசயத்தை ஆஸ்திரேலியாவை அறிந்திருக்க வேண்டும் என்றார்.
- ஆல் ரவுண்டர் பணியில் கேமரூன் க்ரீன் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு
- ஆஸ்திரேலியாவின் முதல் இலக்கு விராட் கோலியாகத்தான் இருப்பார்
கிரிக்கெட்டில் உலகில் தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை பற்றிதான் பேசப்படுகிறது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் பலம் வாய்ந்த அணி என்பதால் போட்டி விறுவிறுப்பில் பஞ்சம் இருக்காது. ஸ்லெட்ஜிங், மோதல், முறைத்தல் போன்றவைகளை பார்க்கலாம்.
மைதானத்தில் எலியும் பூனையாக மோதிக்கொண்டாலும் வெளியில் நண்பர்களாக ஒருவரை ஒருவர் பாராட்டுவது நடைபெற்றுதான் வருகிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அதிரடியாக விளையாடிய கேமரூன் க்ரீன் ஆஸ்திரேலியா அணியில் உள்ளார். சிறந்த ஆல்ரவுண்டர் என்பதால் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுப்பார் என்பது உறுதி.
இந்த நிலையில் விராட் கோலி குறித்து கேமரூன் க்ரீன் கூறுகையில் ''விராட் கோலி, மிகப்பெரிய தருணம், அதாவது மிகப்பெரிய போட்டியில் முன்னணி வீரராக உயர்ந்து நிற்க எப்போதுமே முயற்சி மேற்கொள்வார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் உண்மையிலேயே மிகப்பெரிய தருணம். ஆகவே, நான் அதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
களத்தில் இறங்கும் போது டெஸ்ட் கிரிக்கெட் போன்று ஏதும் இல்லை. பதற்றமான நிலையுடன் அதிக டென்சன் உண்டாகும். அதை கையாளத் தெரிந்த சிறந்த வீரர் சிறந்த வீரராக திகழ்வார்.
ஆஸ்திரேலியாவுக்கு விராட் கோலி, சுப்மான் கில் அச்சுறுத்தலாக இருப்பார்கள் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை மறுதினம் லண்டனில் நடைபெற உள்ளது.
- இந்தப் போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் சாம்பியன் கோப்பைக்காக மோத உள்ளன.
லண்டன்:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை மறுதினம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் சாம்பியன் கோப்பைக்காக மோத உள்ளன.
இந்திய அணியில் ரிஷப் பண்ட், பும்ரா, கே.எல்.ராகுல், ஸ்ரேயஸ் அய்யர் ஆகியோர் இல்லாதது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
இந்திய அணியின் பேட்டிங்கில் சுப்மன் கில், ரோகித் சர்மா, விராட் கோலி, புஜாரா ஆகியோரை தான் நம்பி உள்ளது. பந்துவீச்சில் ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ், அஷ்வின், ஜடேஜா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக அணியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அவருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் மைக்கேல் நெசர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட் இல்லாதது ஆஸ்திரேலியாவுக்கு சற்று பின்னடைவாகக் கருதப்படுகிறது.
- அஸ்வினை எடுக்காமல் விட்டுள்ளது ஆச்சரியமாக இருப்பதாக ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
- சூழ்நிலையை பார்த்து இந்த முடிவை எடுத்ததாக பந்து வீச்சு பயிற்சியாளர் தெரிவித்தார்.
லண்டன் ஓவல் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் விளையாடுகின்றன. இப்போட்டியில் இந்திய அணியில் அனுபவ வீரரும், நம்பர் 1 சுழற்பந்துவீச்சாளருமான ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெறவில்லை. அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் அணியின் தேர்வு குழுவுக்கு பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து விமர்சனங்களையும் கண்டனத்தையும் பதிவு செய்தவண்ணம் உள்ளனர்.
அஸ்வினை எடுக்காமல் விட்டுள்ளது ஆச்சரியமாக இருப்பதாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, "இந்த போட்டியில் முதல் இன்னிங்சுக்கு தகுந்தாற்போன்ற பவுலிங் அட்டாக்கை மட்டும் தேர்வுசெய்து இந்திய அணி தவறு செய்துவிட்டது. ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசையில் நிறைய இடதுகை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். அவர்களுக்கு ஜடேஜாவை விட அஸ்வின் சவாலாக இருந்திருப்பார். இருந்தும் இந்திய அணி அவரை அணியில் எடுக்காமல் இருந்தது எனக்கு ஆச்சரியமாக உள்ளது" என்றார்.
இந்நிலையில், அஸ்வினை அணியில் சேர்க்காதது ஏன்? என்பது குறித்து இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரஸ் ஹம்ப்ரே விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், 'அஸ்வின் போன்ற சாம்பியன் பந்துவீச்சாளரை அணியில் இருந்து நீக்குவது மிகவும் கடுமையான முடிவு. காலையில் ஆடுகளத்தின் தன்மை, சூழ்நிலையை பார்க்கும்போது கூடுதலாக வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தால் சாதகமாக இருக்கும் என்று நினைத்தோம். கடந்த காலங்களில் இந்த முடிவு எங்களுக்கு சாதகமாக இருந்தது. வேகப்பந்து வீச்சாளர்கள் எங்களுக்கு சிறப்பாக செயல்பட்டுள்ளனர். ஆனால், கூடுதல் சுழற்பந்து வீச்சாளர்கள் இருந்தால் பலன் அளித்திருக்கும் என நீங்கள் நினைக்கலாம் ஆனால், ஆடுகள சூழ்நிலையை பார்த்து நாங்கள் இந்த முடிவு எடுத்தோம்' என்றார்.
- ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது.
- ஐசிசி நடத்தும் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ஆஸ்திரேலியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
லண்டன்:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 469 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 296 ரன்களில் ஆல் அவுட்டானது.
2வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கு 270 ரன்களை எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனால் இந்தியா வெற்றி பெற 444 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. நான்காம் நாள் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், ஐந்தாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் சீரான இடைவெளியில் இந்தியா விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில் இந்தியா 2-வது இன்னிங்சில் 234 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியதன் மூலம் ஐசிசி நடத்தும் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி என்ற வரலாற்று சாதனையை ஆஸ்திரேலியா அணி படைத்துள்ளது.
ஐசிசி 50 ஓவர் உலக கோப்பை, டி 20 உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆகிய சர்வதேச தொடர்களை நடத்தி வருகிறது. இந்த 4 விதமான தொடர்களிலும் சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி என்ற சாதனையை ஆஸ்திரேலியா படைத்துள்ளது.
- டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித்துடன் இணைந்து நன்றாக விளையாடியது எங்களை காக்க வைத்தது.
- ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன் என்றார் ரோகித் சர்மா.
லண்டன்:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தோல்வி அடைந்த பிறகு கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மைதான சூழ்நிலையில், டாஸ் வென்று ஆஸ்திரேலியாவை முதலில் பேட்டிங் செய்ய வைத்தது எங்கள் சிறப்பான தொடக்கம் என நான் நினைத்தேன்.
முதல் அமர்வில் நாங்கள் நன்றாகப் பந்துவீசினோம். டிராவிஸ் ஹெட் வந்து ஸ்டீவன் ஸ்மித்துடன் நன்றாக விளையாடினார். அதுதான் எங்களைக் கொஞ்சம் காக்க வைத்தது.
திரும்பி வருவது எப்போதுமே கடினம் என்று எங்களுக்குத் தெரியும், ஆனால் நாங்கள் ஒரு நல்ல நிகழ்ச்சியை வெளிப்படுத்தினோம். இறுதிவரை போராடினோம்.
அந்த நான்கு வருடங்களும் கடுமையாக உழைத்தோம். இரண்டு இறுதிப் போட்டிகளில் விளையாடுவது எங்களுக்கு ஒரு நல்ல சாதனை. ஆனால் நாங்களும் ஒரு மைல் முன்னால் செல்ல விரும்புகிறோம்.
இங்கு வந்து கடந்த இரண்டு வருடங்களில் நாங்கள் செய்ததை நீங்கள் பெறமுடியாது. துரதிர்ஷ்டவசமாக இறுதிப் போட்டியில் எங்களால் வெற்றிபெற முடியவில்லை.
ரசிகர்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். ஒவ்வொரு ரன்னுக்கும், ஒவ்வொரு விக்கெட்டுக்கும் ஆரவாரம் செய்தார்கள் என தெரிவித்தார்.
- பெரும்பாலான பகுதிகளில் நாங்கள் கட்டுப்பாட்டில் இருந்தோம்.
- போலண்ட் எனக்கு மிகவும் பிடித்த வீரர் என்றார் பாட் கம்மின்ஸ்.
லண்டன்:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு ஆஸ்திரேலியா கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியதாவது:
டிராவிஸ் மற்றும் ஸ்மித் பார்ட்னர்ஷிப் பதற்றமான காலைக்குப் பிறகு எங்களுக்கு ஆறுதல் அளித்தது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆஷசுடன் தொடங்கிய இந்த ஆட்டத்தில் ஹெட் மிகச் சிறந்தவராக இருந்தார். அவர் பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தத்தை மீண்டும் கொடுக்கிறார்.
முதல் நாள் ஆட்டத்தில் நாங்கள் உச்சத்தில் இருப்பது போன்ற உணர்வை விட்டுவிட்டோம். அதை எண்ணும்போது நாங்கள் நன்றாக விளையாடினோம்.
பெரும்பாலான பகுதிகளில் நாங்கள் கட்டுப்பாட்டில் இருந்தோம். போலண்ட் - அவர் எனக்கு மிகவும் பிடித்த வீரர். அவர் எனக்கு மிகவும் பிடித்தவராகத் தொடர்கிறார்.
ஸ்மித், போலண்ட், ஹெட் உள்பட ஒவ்வொருவரும் தங்கள் பங்கை நன்றாகவே செய்திருக்கிறார்கள். அனைவரும் நன்றாக விளையாடினார்கள், சில வருடங்கள் இதை ரசிப்போம், நாங்கள் எங்கள் கவனத்தை (ஆஷஸ் பக்கம்) திருப்புவோம்.
இது எங்களுக்கு பிடித்தமான பார்மட், நாங்கள் டெஸ்ட் கிரிக்கெட் பார்த்து வளர்ந்தவர்கள். வெற்றிபெறும் போது நீங்கள் மிகவும் திருப்தி அடைவீர்கள். நாங்கள் விளையாடுவதை விரும்புகிறோம் என தெரிவித்தார்.
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தை 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்தினால் சரியாக இருக்கும் என்று ரோகித் தெரிவித்து இருந்தார்.
- ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் தங்கம் வெல்வதற்கு ஒரு பந்தயமோ, ஒரு இறுதி ஆட்டமோ மட்டுமே உள்ளது.
லண்டன்:
இங்கிலாந்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
இந்த தோல்விக்கு பிறகு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறும்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தை 3 போட்டிகள் கொண்ட தொடராக நடத்தினால் சரியாக இருக்கும் என்று தெரிவித்து இருந்தார்.
இதற்கு ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
தொடர் என்று வரும்போது அதில் எத்தனை ஆட்டங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் சாம்பியன்ஷிப் என்றால் அதில் ஒரே ஒரு இறுதி ஆட்டம் இருந்தால் தான் சரியாக இருக்கும்.
ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் தங்கம் வெல்வதற்கு ஒரு பந்தயமோ, ஒரு இறுதி ஆட்டமோ மட்டுமே உள்ளது. இந்த ஒரு வெற்றிக்காக பல்வேறு நாடுகளில் சென்று டெஸ்ட் ஆட்டங்களில் வெல்ல வேண்டியிருந்தது. சில ஆட்டங்களில் தோற்று இருந்தாலும் அதில் இருந்து மீண்டும் வந்து இருக்கிறோம்.
இவ்வாறு கம்மின்ஸ் கூறினார்.