என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Yashasvi Jaiswal"
- பேட்டிங் தரவரிசையில் ஜெய்ஸ்வால் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
- ரச்சின் ரவீந்திரா 8 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தை பிடித்துள்ளார்.
டெஸ்ட் தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் டெஸ்ட் பந்து வீச்சாளர்களில் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ரபாடா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார். வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் டெஸ்ட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும் மிகவும் வேகமாக 300 விக்கெட்டுகளை எடுத்தவர் வீரர் என்ற சாதனையையும் ரபாடா படைத்தார்.
2018-ல் ரபாடா ஐசிசி தரவரிசையில் முதலிடம் பிடித்திருந்தார். பின்னர் பின்னடைவை சந்தித்த ரபாடா மீண்டும் முதலிடம் பிடித்து மாஸ் காட்டியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சுழற்பந்து வீச்சில் அசத்திய பாகிஸ்தானின் நோமன் அலி டாப் 10-க்குள் நுழைந்துள்ளார்.
3-வது மற்றும் 4-வது இடங்கள் முறையே பும்ரா, அஸ்வின் உள்ளனர்.மிட்செல் சான்ட்னர் 30 இடங்கள் முன்னேறி 44-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன்பாக சான்ட்னர் 2017-ம் ஆண்டு 39-வது இடத்தில் இருந்ததே அவரது உச்சபட்ச தரவரிசையாகும்.
பேட்டிங் தரவரிசையில் ஜெய்ஸ்வால் ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். பாகிஸ்தான் வீரர் சவுத் ஷகீல் 20 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை பிடித்துள்ளார். நியூசிலாந்தை சேர்ந்த ரச்சின் ரவீந்திரா 8 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.
- 2018 ஆம் ஆண்டு பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியானது கே.ஜி.எஃப் திரைப்படம்.
- கே.ஜி.எஃப் 2 திரைப்படமும் மிகப் பெரிய ஹிட்டாகியது.
2018 ஆம் ஆண்டு பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியானது கே.ஜி.எஃப் திரைப்படம். இத்திரைப்படம் வெளியாகி மக்களின் மிகப்பெரிய அங்கிகாரத்தை பெற்றது. திரைப்படம் உலகம் முழுவது பேசப்பட்டது. கன்னட திரையுலகில் இப்படி ஒரு படைப்பா என உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த பெருமை கே.ஜி.எஃப் திரைப்படத்திற்கு உள்ளது. இதைத் தொடர்ந்து கே.ஜி.எஃப் 2 திரைப்படமும் மிகப் பெரிய ஹிட்டாகியது.
நடிகர் யாஷ் இப்படங்களில் வெற்றிக்கு பிறகு டாக்சிக் மற்றும் ராமயணா திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடந்த நேர்காணலில் கே.ஜி.எஃப் 3 திரைப்படத்தை குறித்து தகவல் கூறியுள்ளார் " கே.ஜி.எஃப் 3 திரைப்படம் கண்டிப்பாக எடுப்போம். தற்போது டாக்சிக் மற்றும் ராமாயணா திரைப்படங்களில் கவன செலுத்தி வருகிறேன். கேஜிஎஃப் 3 திரைப்படத்திற்கு மிகப் பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது. சரியான நேரம் வரும்பொழுது மிக பிரம்மாண்டமாக எடுப்போம்" என கூறினார்.
இக்கேள்வியை இந்திய கிரிக்கெட் முன்னணி வீரரான சுப்மேன் கில் கேட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இளம் வயதில் அரை சதம் விளாசிய இந்தியர்களில் ரோகித் முதல் இடத்தில் உள்ளார்.
- அடுத்த 2 இடங்களில் திலக் வர்மா, ரிஷப் பண்ட் உள்ளனர்.
இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதிய 2-வது டி20 கிரிக்கெட் போட்டி டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச அணி 135 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
இந்த போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவர் 34 பந்தில் 74 ரன்கள் குவித்து அசத்தினார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இளம் வயதில் அரை சதமடித்த இந்திய வீரர் என்ற ஜெய்ஸ்வால் (21 வருடம் 227 நாட்கள்) சாதனையையும் நிதிஷ் ரெட்டி (21 வருடம் 136 நாட்கள்) முறியடித்துள்ளார்.
இந்த பட்டியலில் முதல் 3 இடங்களில் ரோகித் சர்மா (20 வருடம் 143 நாட்கள்), திலக் வர்மா (20 வருடம் 271 நாட்கள்), ரிஷப் பண்ட் (21 வருடம் 38 நாட்கள்) உள்ளனர்.
- ஒரு வருடத்தில் அதிக சிக்சர் விளாசியவர்கள் பட்டியலில் மெக்கல்லம் முதல் இடத்தில் உள்ளார்.
- அவர் ஒரு வருடத்தில் 33 சிக்சர்கள் விளாசி உள்ளார்.
இந்தியா - வங்கதேச ஆகிய இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற எதிரான டெஸ்ட் தொடர் வருகிற 19-ந் தேதி தொடங்குகிறது. அதனை தொடர்ந்து கான்பூரில் 2-வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.
இந்நிலையில் டெஸ்ட் தொடரின் மூலம் ஜெய்ஸ்வால் மிகப்பெரிய சாதனையை படைக்கவுள்ளார். நியூசிலாந்து ஜாம்பவான் பேட்டர் மெக்கல்லத்தின் நீண்ட கால சாதனையை முறியடிக்க இந்திய அணியின் ஜெய்வாலுக்கு வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
1 சிக்சர் விளாசினால் ஸ்டோக்சையும் 8 சிக்சர் விளாசினால் மெக்கல்லத்தையும் பின்னுக்கு தள்ளி அந்த பட்டியலில் முதல் இடத்தை ஜெய்ஸ்வால் பிடித்து சாதனை படைப்பார்.
ஒரு வருடத்தில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியல்:-
வீரேந்தர் சேவாக்- 22 சிக்சர்கள் (2008)
கில்கிறிஸ்ட் -22 சிக்சர்கள் (2005)
பென் ஸ்டோக்ஸ் - 26 சிக்சர்கள் (2022)
ஜெய்ஸ்வால் -26 சிக்சர்கள் (2024)
மெக்கல்லம் -33 சிக்சர்கள் (2014)
- சிக்கந்தர் ராசா வீசிய முதல் ஓவரில் டாஸ் பாலாக வந்த முதல் பாலை ஜெய்ஷ்வால் சிக்ஸர் விளாசினார்.
- பிரீ ஹிட்டாக வந்த அடுத்த பாலையும் ஜெய்ஷ்வால் சிக்ஸர் விளாசினார்.
ஜிம்பாப்வே - இந்திய அணிகளுக்கு இடையே 5 ஆவது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 167 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 168 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 18.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியடைந்தது.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 4 - 1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
இப்போட்டியின் முதல் ஓவரில் வீசப்பட்ட முதல் 2 பந்துகளில் சிக்ஸர் விளாசி யஷஸ்வி ஜெய்ஷ்வால் புதிய சாதனை படைத்துள்ளார். முதல் ஓவரை சிக்கந்தர் ராசா வீசிய வீசினார். டாஸ் பாலாக வந்த முதல் பாலை ஜெய்ஷ்வால் சிக்ஸர் விளாசினார். அந்த பால் நோ பால் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து பிரீ ஹிட்டாக வந்த அடுத்த பாலையும் ஜெய்ஷ்வால் சிக்ஸர் விளாசினார். இதன் மூலம் இந்திய அணி ஒரே பந்தில் 13 ரன்கள் குவித்தது.
இதன்மூலம் டி20 போட்டியில் முதல் பந்திலேயே 13 ரன்கள் குவித்த முதல் அணி என்ற சாதனையை இந்தியா படைத்தது.
மேலும், டி20 போட்டியில் முதல் ஓவரின் முதல் 2 பந்துகளில் சிக்ஸர் விளாசிய 2 ஆவது வீரர் என்ற சாதனையையும் ஜெய்ஷ்வால் படைத்துள்ளார்.
இதற்கு முன்பு தான்சானியாவை சேர்ந்த இவான் இஸ்மாயில் செலிமானி என்ற வீரர் ருவாண்டா அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரின் முதல் 2 பந்துகளில் சிக்ஸர் விளாசியுள்ளார்.
- தற்போது எத்தனை பேர் அதிரடியாக விளையாடுகிறார்கள்.
- இங்கிலாந்து அணியில் ஜாக் கிராலி மற்றும் ஹாரி புருக் ஆகியோர் அதிரடியாக விளையாடுகிறார்கள்.
லண்டன்:
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் லாரா கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்ஸில் 400 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். அவருடைய சாதனை இன்று வரை எந்த வீரராலும் முறியடிக்கப்படவில்லை.
இந்த நிலையில் என்னுடைய இந்த சாதனையை யார் முறியடிக்க வாய்ப்பு இருக்கிறது என்பதை வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிரைன் லாரா கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
சோபர்ஸ் (365) அடித்த சாதனையை 1970 மற்றும் 80-களில் யாருமே முறியடிக்கவில்லை. அதுவும் விவியன் ரிச்சர்ட்ஸ் போன்ற வீரர்கள் விளையாடும் போதும் அதை தொட முடியவில்லை. இதைப்போன்று என்னுடைய காலகட்டத்தில் சேவாக், கிறிஸ் கெயில், ஜெயசூர்யா, இன்சமாம் உல் ஹஜ், மேத்யூ ஹெய்டன் உள்ளிட்ட பல வீரர்கள் கடும் சவால் அளித்தார்கள்.
இன்னும் சொல்லப்போனால் இந்த வீரர்கள் எல்லாம் 300 ரன்கள் மேல் அடித்தார்கள். அவர்கள் எல்லாம் அதிரடி வீரர்களாக இருந்தது இன்னொரு காரணம். ஆனால் தற்போது எத்தனை பேர் அதிரடியாக விளையாடுகிறார்கள். இங்கிலாந்து அணியில் ஜாக் கிராலி மற்றும் ஹாரி புருக் ஆகியோர் அதிரடியாக விளையாடுகிறார்கள். இந்திய அணியை பொறுத்தவரை ஜெய்ஸ்வால் மற்றும் கில் மட்டும்தான் அதிரடியாக விளையாடுகிறார்கள்.
இந்த இருவரும் சரியான சூழலில் சரியான நேரத்தில் விளையாடினால் நிச்சயம் 400 ரன்கள் என்ற என்னுடைய சாதனையை முறியடிக்க முடியும்.
என்று பிரையன் லாரா கூறினார்.
- விராட் கோலிக்கு பதிலாக அவர் தொடக்க வீரராக விளையாட வேண்டும்.
- இந்திய அணியின் தொடக்க வீரராக ஒரு இடதுகை ஆட்டக்காரர் இருப்பது இந்திய அணிக்கு மேலும் பலத்தை சேர்க்கும்.
நியூயார்க்:
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் 9-வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 8-வது லீக் போட்டியில் அயர்லாந்து - இந்திய அணிகள் மோதின. இதில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் அனைவரும் எதிர்பார்த்த விராட் கோலி 1 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
இந்நிலையில் ஜெய்ஸ்வாலை தொடக்க வீரராக விளையாட வைக்க வேண்டும் என்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் இயன் பிஷப் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஐபிஎல் தொடரின்போது ஜெய்ஸ்வாலின் பார்ம் சற்று கவலை தரும் விதமாக இருந்தது உண்மைதான். ஆனால் இந்திய அணியின் தொடக்க வீரராக விளையாடக்கூடிய அளவிற்கு அவர் தகுதியுடன் இருப்பதாக நினைக்கிறேன்.
அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடியவர். அதனால் விராட் கோலிக்கு பதிலாக அவர் தொடக்க வீரராக விளையாட வேண்டும்.
இந்திய அணியின் தொடக்க வீரராக ஒரு இடதுகை ஆட்டக்காரர் இருப்பது இந்திய அணிக்கு மேலும் பலத்தை சேர்க்கும்.
என்று இயன் பிஷப் கூறினார்.
- நேற்று நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான், மும்பை அணிகள் மோதின.
- இதில் ராஜஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஜெய்ப்பூர்:
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 38-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதலில் ஆடிய மும்பை 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் திலக் வர்மா 65 ரன்னும் வதேரா 49 ரன்களும் எடுத்தனர்.
ராஜஸ்தான் சார்பில் சந்தீப் ஷர்மா 5 விக்கெட்டும், போல்ட் 2 விக்கெட்டும், சாஹல், ஆவேஷ் கான் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய ராஜஸ்தான் அணியில் ஜெய்ஸ்வால் சதமடிக்க 18.5 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் மும்பை அணி நடப்பு தொடரில் 5-வது தோல்வியைப் பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவை இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் சாடியுள்ளார்.
இதுதொடர்பாக கெவின் பீட்டர்சன் கூறுகையில், கோட்சி முதலில் பந்து வீசுகையில் ஜெய்ஸ்வால் நிறைய ரன்களை அடித்து விடுகிறார். இதனால் 2வது ஓவரை வீச கோட்சிக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை. இது பாண்ட்யாவின் மோசமான கேப்டன்சிக்கு உதாரணமாக விளங்குகிறது என தெரிவித்துள்ளார்.
- பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை இந்திய வீரர் ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார்.
- இவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு பல சாதனைகள் படைத்தார்.
துபாய்:
ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கனையை தேர்வு செய்து ஐ.சி.சி. கவுரவித்து வருகிறது.
அதன்படி பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்தது.
சிறந்த வீரர் விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இந்திய இளம் வீரர் ஜெய்ஸ்வால், நியூசிலாந்தின் முன்னணி வீரரான வில்லியம்சன், இலங்கை அணிக்காக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் முறையாக இரட்டை சதம் அடித்து அசத்திய பதும் நிசங்கா ஆகியோர் இடம்பெற்றனர்.
இந்நிலையில், பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை இந்திய வீரர் ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார் என ஐசிசி அறிவித்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு பல சாதனைகள் படைத்ததற்காக இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதை ஆஸ்திரேலிய வீராங்கனை அன்னாபெல் சதர்லேண்ட் பெற்றுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்று இந்தியா தொடரை கைப்பற்றியுள்ளது.
- 712 ரன்களுடன் 2 இரட்டை சதங்கள் அடித்த ஜெய்ஸ்வால் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது இந்தியா. 712 ரன்களுடன் 2 இரட்டை சதங்கள் அடித்த ஜெய்ஸ்வால் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார் ஜெய்ஸ்வால். அதில், "இந்த தொடர் உண்மையிலேயே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.இந்த தொடர் முழுவதுமே என்னுடைய பங்களிப்பை நான் சிறப்பாக வழங்கியதில் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.
நான் ஒரு பவுலரை அடிக்க முடியும் என்று முடிவு செய்துவிட்டால் கண்டிப்பாக அந்த ஓவரில் அதிரடியாக விளையாட முயற்சிப்பேன். அதுதான் என்னுடைய திட்டமாக இருந்தது. அதிலிருந்து நான் பின்வாங்கியதே கிடையாது. அதேபோன்று ஒவ்வொரு போட்டியிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதை யோசித்துக் கொண்டே இருந்தேன்.
இந்திய அணியை வெற்றியை நோக்கி தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கமாகவும் இருந்தது" என அவர் தெரிவித்துள்ளார்.
- இங்கிலாந்தின் ஜோ ரூட் 2-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
- ரோகித் சர்மா 2 இடங்கள் முன்னேறி தரவரிசையில் 11-ம் இடத்தைப் பிடித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) இன்று டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர்கள் முன்னேற்றம் கண்டிருந்தாலும், ஆஸ்திரேலிய அணி பேட்டர்கள் பின்னடைவை சந்தித்துள்ளனர். அதன்படி ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஷாக்னே ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர்.
இங்கிலாந்தின் ஜோ ரூட் 2-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். மேலும் 2-ம் இடத்தில் இருந்த ஸ்டீவ் ஸ்மித் ஒரு இடம் பின் தங்கி 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதேசமயம் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஆகியோர் முன்னேற்றம் கண்டுள்ளனர். டாப் 10 2 இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2 இடங்கள் முன்னேறி முதல் முறையாக 10-ம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார். விராட் கோலி 1 இடம் முன்னேறி 8-வது இடத்தையும் ரோகித் 2 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தை பிடித்துள்ளனர்.
டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் ஜஸ்ப்ரித் பும்ரா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தொடர்ந்து முதல் இரு இடங்களை தக்கவைத்துள்ளனர். நியூசிலாந்து தொடரில் சிறப்பாக பந்துவீசிய ஆஸ்திரேலிய அணியின் ஜோஷ் ஹசில்வுட் 4-ம் இடத்திற்கும், நாதன் லையன் 6-ம் இடத்திற்கும் முன்னேறியுள்ளனர். அதேசமயம் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் 5-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
மேலும் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி வீரர் கிளென் பிலிப்ஸ் அரைசதம் கடந்ததுடன், 5 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதன் மூலல் டெஸ்ட் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் 12 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
இப்பட்டியலின் முதல் இரண்டு இடங்களில் இந்திய வீரர்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் உள்ளனர்.
- ஜெய்ஸ்வால் 3 இடங்கள் முன்னேறி 12-வது இடத்தில் உள்ளார்.
- ரோகித் ஒரு இடம் பின் தங்கி 13-வது இடத்தில் இருக்கிறார்.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதில் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்திய இளம் வீரர்களான கில், ஜெய்ஸ்வால் மற்றும் துருவ் ஜூரெல் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளனர். இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்படுவதன் மூலம் ஏற்றம் கண்டுள்ளனர்.
இந்திய இளம் வீரர்களான ஜெய்ஸ்வால் 3 இடங்கள் முன்னேறி 12-வது இடத்திலும் கில் 4 இடங்கள் முன்னேறி 31-வது இடத்திலும் ஜூரெல் 31 இடங்கள் முன்னேறி 69-வது இடத்திலும் உள்ளனர். ரோகித் ஒரு இடம் பின் தங்கி 13-வது இடத்தில் இருக்கிறார்.
முதலிடத்தில் நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் தொடருகிறார். ரூட் 2 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். விராட் கோலி 2 இடங்கள் பின் தங்கி 9-வது இடத்தில் இருக்கிறார். இந்திய அணி வீரர்கள் பொறுத்தவரை கோலி மட்டுமே டாப் 10 இடத்திற்குள் உள்ளார்.
டெஸ்ட் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பும்ரா முதலிடத்தில் தொடருகிறார். மற்றொரு இந்திய வீரரான அஸ்வின் 2-வது இடத்தில் உள்ளார். குல்தீப் யாதவ் 10 இடங்கள் முன்னேறி 32-வது இடத்தை பிடித்துள்ளார்.
டெஸ்ட் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் ஜடேஜா முதலிடத்திலும், அஸ்வின் 2-வது இடத்திலும் உள்ளனர். இதில் ஜோ ரூட் 3 இடங்கள் முன்னேறி 4-வது இடத்தில் உள்ளார். மற்ற தரவரிசைகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்படவில்லை.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்