என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "young"
- கடந்த 26-ந் தேதி இரவு குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர்.
- மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது தூங்கிக் கொண்டிருந்த நவீனாவை காணவில்லை.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆயிபா ளையம் தேவேந்திரன் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜா, இவரது மனைவி லட்சுமி. இவர்களது மூத்த மகள் கவிதா (30), இளைய மகள் நவீனா (26) இவர் பொறியியல் கல்லூரி பட்டதாரி.
மூத்த மகள் கவிதாவை வேலகவுண்டன்பட்டி அருகே உள்ள முசிறி காட்டுக்காடு தேவேந்திரன் தெருவை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர்.
இந்நிலையில் கவிதா வின் தங்கை நவீனா கடந்த 2 வாரமாக தனது
அக்கா கவிதா வீட்டில் தங்கி இருந்தார். இந்நிலை யில் கடந்த 26-ந் தேதி இரவு குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது தூங்கிக் கொண்டிருந்த நவீனாவை காணவில்லை.
இது குறித்து கவிதா தனது தாய் லட்சுமிக்கு தகவல் தெரிவித்துள்ளார். லட்சுமி உறவினர்கள் வீடுகளிலும், நண்பர்கள் வீடுகளிலும் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று தேடிப்பார்த்துள்ளார். ஆனால் நவீனாவை கண்டு பிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து லட்சுமி வேலகவுண்டன்பட்டி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கங்காதரன் வழக்கு பதிவு செய்து நவீனா இரவில் எங்காவது தானாகவே சென்று விட்டாரா? அல்லது இரவு நேரத்தில் வெளியில் வந்த போது எவராவது கடத்திச் சென்று விட்டனரா? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேலகவுண்டன்பட்டி அருகே கருங்கல்காடு பச்சானூர் பகுதில் வீட்டில் இருந்த இளம்பெண் மாயம்.
- இதுகுறித்து சசிகலா, வேல கவுண்டன் பட்டி போலீசில் புகார் செய்தார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டன்பட்டி அருகே கருங்கல்காடு பச்சானூர் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 55). இவரது மகள் தாரணி (25). இவரை அதே பகுதியை சேர்ந்த விஜய் மதுரவேல் (30) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர். இவர்களுக்கு 3 வயதில் கோபீசன் என்ற மகன் உள்ளான்.
இந்நிலையில் தார ணிக்கும் அப்பகுதியில் உள்ள அஜித்குமார் என்ப வருக்கும் பழக்கம் ஏற்பட்டு, தாரணி அவருடன் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த தாரணியின் தாய் சசிகலா (47), அவரை அஜித்குமாரிடமிருந்து பிரித்து கூட்டி வந்து கூப்பிட்டாம் பாளையத்தில் உள்ள தனது சகோதரர் கதிர்வேல் வீட்டில் விட்டுவிட்டு வந்தார்.
இந்நிலையில், சம்பவத்தன்று கதிர்வேல் வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அங்கு தாரணியை காணவில்லை. அதிர்ச்சி அடைந்த கதிர்வேல், இது குறித்து தாரணியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார்.
தாரணியின் பெற்றோர், அவரை பல்வேறு இடங் களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து சசிகலா, வேல கவுண்டன் பட்டி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து தாரணி தீவிரமாக தேடி வருகின்றனர்.
- சேலம்-கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு பகுதியில் சாலையை கடக்க முயற்சித்த போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஸ்கூட்டர் மீது மோதியது.
- இதில், சாந்தி கண்ணெதிரே தங்கமணி சம்பவ இடத்தில் உடல்நசுங்கி பலியானார்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம், கொல்லப்பட்டி பகுதியில் வசிப்பவர் சாந்தி(வயது 42). டைலர். இவரது தங்கை தங்கமணி(38). இவர்கள் இருவரும் குமார பாளையம் வந்து விட்டு, ஊருக்கு ஸ்கூட்டரில் புறப்பட்டு சென்றனர்.
சேலம்-கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு பகுதியில் சாலையை கடக்க முயற்சித்த போது அந்த வழியாக வேகமாக வந்த லாரி ஸ்கூட்டர் மீது மோதியது. இதில், சாந்தி கண்ணெதிரே தங்கமணி சம்பவ இடத்தில் உடல்நசுங்கி பலியானார்.
சாந்தி படுகாயங்களுடன் குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
- இவருக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி (26) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.
- இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் வீட்டில் இருந்த லட்சுமி திடீரென மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
சேலம்:
சேலம் அம்மாப்பேட்டை வித்யா நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 30). தொழிலாளி . இவருக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி (26) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது.
லட்சுமியின் தாயார் இறந்ததை அடுத்து அவரது தந்தை 2-வது திருமணம் செய்து கொண்டு 2-வது மனைவியுடன் வசித்து வருகிறார். இதனால் லட்சுமியின் தங்கை தனியாக வசித்து வந்தார்.
இதையடுத்து லட்சுமி தனது தங்கை மகேஸ்வரியை (22) தனது கணவர் வீட்டுக்கு அழைத்து வந்தார். அங்கு தங்கியிருந்தார். சதீஷ்குமார் லட்சுமியின் தங்கை மகேஸ்வரியை விடுதியில் தங்க வைக்க ஏற்பாடு செய்துள்ளார். தங்கையை பிரிய மனம் இல்லாத லட்சுமிக்கும், கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை 10 மணி அளவில் வீட்டில் இருந்த லட்சுமி திடீரென மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக்
கொண்டார். தீயின் தாக்கத்தால் அலறி துடித்த லட்சுமியை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உறவினர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பலத்த தீக்காயத்துடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் லட்சுமி சிகிச்சை சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கோபிசெட்டிபாளையம் அருகே வாலிபர் மூச்சு விட சிரமப்பட்டு திடீரென பலியானார்.
- இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
தஞ்சாவூர் மாவட்டம் பேரவூரணி சங்கமங்களம் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (22). இவர் ஈரோடு மாவட்டம் கோபி கணக்கம்பாளையம் நேரு வீதியில் தங்கி தனியார் கார்மெண்சில் வேலை பார்த்து வந்தார்.
சம்பவத்தன்று வேலைக்கு செல்லாமல் அவரது அறையிலேயே இருந்தார். அன்று மாலை அவரது சகோதரர் வந்து பாலமுருகனை பார்த்தபோது மூச்சு விட சிரமப்பட்டு கொண்டிருந்தார்.
இதையடுத்து பாலமுருகனை மீட்டு அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்து விட்டு பாலமுருகன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரும்பாக்கம் பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவர் விபசார தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கும் கோயம்பேடு பஸ்நிலைய போலீஸ் நிலையத்தில் பணிபுரியும் ஒருவருக்கும் இடையே பழக்கம் இருந்துள்ளது.
விபசார அழகியின் வீட்டுக்கு போலீஸ் ஏட்டு அடிக்கடி சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். அதே நேரத்தில் வெளியில் இருந்து இளைஞர்கள் பலரும் அப்பெண்ணின் வீட்டுக்கு சென்று வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று இரவு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் வாலிபர் ஒருவர் விபசார அழகியின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது அவர்களுக்கு இடையே பணம் கொடுப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. விபசார அழகி குறிப்பிட்ட தொகையை கூறியுள்ளார். அந்த வாலிபரோ அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அந்த பெண், போலீஸ் ஏட்டுக்கு தகவல் தெரிவித்தார். அவர் அரும்பாக்கத்தில் உள்ள வீட்டுக்கு விரைந்து சென்றார். பின்னர் விபசார அழகியுடன் சேர்ந்து போலீஸ் ஏட்டு வாலிபரை சரமாரியாக தாக்கி அவரிடம் இருந்த பணத்தை பறித்துள்ளார்.
பின்னர் அமிஞ்சிகரை போலீஸ் நிலையத்துக்கு வாலிபரை அழைத்துச் சென்று அவர் மீது புகார் கொடுத்துள்ளனர். அதில், பெண்ணிடம் தகராறு செய்து பணம் பறிக்க முயன்றதாக வாலிபர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
ஆனால் அந்த வாலிபரோ, விபசார அழகியின் வீட்டில் நடந்த விஷயத்தை புட்டு புட்டு வைத்து விட்டார். இதனால் குட்டு வெளிப்பட்டதுடன் போலீஸ் ஏட்டுவும் வசமாக சிக்கிக் கொண்டார். இதுபற்றி உயர் போலீஸ் அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டிய போலீஸ்காரரே விபசார அழகியுடன் கைகோர்த்து சமூக விரோத செயலில் ஈடுபட்டிருப்பது போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. #tamilnews
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தியின் சிறப்பு அம்சமாக, பூஜை செய்யப்பட்ட கணபதி சிலைகளை ஆற்றிலும், கடலிலும் கரைப்பது வழக்கம்.
அதன்படி, திருப்பூர் மாவட்டம் மும்மூர்த்தி நகரில் இருந்து ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றில் விநாயகர் சிலையை கரைப்பதற்காக எடுத்து வந்துள்ளனர். அப்போது சிலையை ஆற்றில் கரைக்கும்போது எதிர்ப்பாராத விதமாக 3 இளைஞர்கள் ஆற்றில் விழுந்தனர்.
உடனடியாக அப்பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபடவே, ஒருவர் மீட்கப்பட்டார். மீட்கப்படாத இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி போன்ற தெய்வ வழிபாட்டு விழாக்களில் பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பையும் உறுதி செய்துகொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது. #GaneshChaturthi
மத்திய பிரதேச மாநிலம் தில்கவான் கிராமத்தில் வசிக்கும் 22 வயது வாலிபர் அமித் புர்மன். அதே கிராமத்தில் வசிக்கும் 16 வயது சிறுமியும் இவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று இரவு அமித்துடன் அந்த சிறுமி செல்போனில் பேச மறுத்துள்ளார். தொடர்ந்து அவரது அழைப்புகளை அவர் புறக்கணிக்கவே, சிறுமியின் தங்கையிடம் அமித் தூது அனுப்பியுள்ளார். அப்படியும் அமித்துடன் சிறுமி பேசவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அமித், சிறுமியின் தந்தை வீட்டில் இல்லாததை அறிந்து அவரது வீடு புகுந்து, தாயார் உட்பட அனைவரையும் தாக்கியுள்ளார். வெறிபிடித்ததை போல் நடந்துகொண்ட அமித், தன்னுடன் பேச மறுத்த தனது காதலியை கொடூரமாக தாக்கியதுடன், அவரது கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.
இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் கொடூர காதலர் அமித் புர்மனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அறிவு முதிர்ச்சி இன்றி காதல் போன்ற வாழ்வின் மிக முக்கிய கட்டங்களுக்குள் நுழைந்ததற்கு தண்டனையாக அமித் சிறையிலும், சிறுமி கல்லறையிலும் இருக்கிறார். #MadhyaPradesh
அரியானா மாநிலம் மோகர் காஸ் கிராமத்தில் துணை ஆய்வாளராக பணிபுரிபவர் ஆனந்த் குமார். இவரது மகன் மிலன் குமார். இவர் காவல்துறை தேர்வுக்காக பயின்று வருகிறார். கடந்த புதன்கிழமை அன்று ரோக்தாக் கிராமத்தில் இருந்து பேருந்து மூலம் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது, பேருந்தில் இருக்கை பிடிப்பதில் மிலன் குமாருக்கும், மோகித் என்பவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து வியாழன் கிழமை அன்று மிலனை சந்தித்த மோகித்தும் அவனது நண்பர்களும் மிலனை கொலை செய்யப்போவதாக மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து, மிலன் அப்பகுதியில் இருந்த காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இருப்பினும் காவல்துறை அதிகாரிகள் புகாரை வாங்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், வியாழன் அன்று இரவு மோகித்தின் நண்பர்கள் இருவர் மிலனின் வீட்டிற்கு வந்து மிலனை சந்திக்க வேண்டும் என அவரது தாயார் சரளாவிடம் கேட்டுள்ளனர். மேலும், மிலனுக்கும் மோகித்துக்குமான சண்டையை சரிசெய்யவே சந்திக்க வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
மிலன் குமார் வெளியே வந்ததும், அவரது தாயாரிடம் அந்த நபர்கள் குடிக்க நீர் கேட்க, அவர் வீட்டிற்குள் சென்றுள்ளார். அடுத்த கணமே துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு வேகமாக வெளியே வந்து பார்த்துள்ளார். மிலன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியபடி இருப்பதை கண்ட அவரது தாயார் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
ஆனால், மருத்துவர்கள் மிலன் குமார் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து, மோகித் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர், இதுவரை யாரையும் கைது செய்யவில்லை எனவும், கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்