search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனிருத்"

    • நயன்தாராவின் 'Nayanthara Beyond the Fairy Tale' ஆவணப்படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.
    • தனது திருமண வீடியோ வெளியாமல் இருந்ததற்கு தனுஷ் தான் காரணம் என நயன்தாரா குற்றம் சாட்டினார்.

    நடிகர் தனுஷ் இயக்கி நடித்து வரும் இட்லி கடை படத்தை தயாரித்து வரும் டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் ஆகாஷ் பாஸ்கரின் திருமணம் இன்று நடைபெற்றது.

    இந்த திருமண நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் மற்றும் நடிகை நயன்தாரா ஒன்றாக கலந்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

    மேலும், இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் கலந்து கொண்டனர். நயன்தாரா சிவகார்த்திகேயன் மற்றும் அனிருத் ஆகியோர் திருமண மேடை அருகே ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

    'Nayanthara Beyond the Fairy Tale' என்ற தலைப்பில் உருவாகியுள்ள இந்த ஆவணப்படம் வெளியாவதில் இரண்டு ஆண்டுகள் தாமதமான நிலையில், கடந்த 18-ந்தேதி நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது பிறந்தநாள் பரிசாக Netflix நிறுவனம் இந்த ஆவணப் படத்தை வெளியிட்டது.

    இதற்கிடைய தனது கடந்த 2 ஆண்டுகளாக திருமண வீடியோ வெளியாமல் இருக்க தனுஷ் தான் காரணம் என நயன்தாரா பரபரப்பை ஏற்படுத்தினார். நானும் ரவுடிதான் படத்தில் வரும் 3 நொடி காட்சியை பயன்படுத்தியதற்கு நடிகர் தனுஷ் 10 கோடி நஷ்டஈடு கேட்டதாக நயன்தாரா அவரைக் குறித்த காட்டமான அறிக்கையை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அமரன் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
    • அமரன் திரைப்படம் வசூலில் ரூ. 100 கோடியை கடந்துள்ளது.

    நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கூட்டணியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் "அமரன்." இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல், சோனி நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ஜி.வி. பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    சினிமா ரசிகர்கள், திரை பிரபலங்கள் தொடங்கி அரசியல் தலைவர்கள் வரை பலர் அமரன் படத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், முன்னணி இசையமைப்பாளர் அனிருத் அமரன் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "அமரன் சிறந்த சினிமாவாக உள்ளது. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு சிவகார்த்திகேயனை நினைத்து பெருமையாக உள்ளது. என் சகோதரர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் படக்குழுவை சேர்ந்த அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    இத்துடன் நடிகர் கமல்ஹாசன், மகேந்திரன் மற்றும் டிஸ்னி ஆகியோரை குறிப்பிட்டு வணக்கம் செலுத்தும் எமோஜியை சேர்த்துள்ளார்.

    இவரது பதிவுக்கு பதில் அளித்த நடிகர் சிவகார்த்திகேயன், "நன்றி, டியர் அனிருத். உங்களிடம் இருந்து இது வருவது ஸ்பெஷல். விரைவில் சென்னை வந்துவிடுவேன், நாம் ஒன்றாக கொண்டாடுவோம், சார்," என பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விக்னேஷ் சிவன் தற்போது எல்ஐகே (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) என்ற படத்தை இயக்கியுள்ளார்.
    • ரௌடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.

    விக்னேஷ் சிவன் தற்போது எல்ஐகே (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன், கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்து உள்ளனர். இப்படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.

    இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் படமாக்கப்பட்டு இருக்கிறது.

    படத்தின் பின்னணி வேலைகள் தற்போது நடைப்பெற்று வருகிறது. இத்திரைப்படம் எதிர்காலத்தில் நடக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது, தனது காதலை அடைவதற்காக எதிர்காலத்திற்கு டைம் டிராவல் செய்யும் கதையாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

    படத்தின் முதல் பாடலான தீமா என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    இப்பாடல் தற்பொழுது யூடியூபில் 10 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விக்னேஷ் சிவன் தற்போது எல்ஐகே (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) என்ற படத்தை இயக்கியுள்ளார்.
    • படத்தின் போஸ்டர்கள் சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    விக்னேஷ் சிவன் தற்போது எல்ஐகே (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன், கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்து உள்ளனர். இப்படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.

    இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் படமாக்கப்பட்டு இருக்கிறது.

    படத்தின் பின்னணி வேலைகள் தற்போது நடைப்பெற்று வருகிறது. இத்திரைப்படம் எதிர்காலத்தில் நடக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது, தனது காதலை அடைவதற்காக எதிர்காலத்திற்கு டைம் டிராவல் செய்யும் கதையாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

    படத்தின் போஸ்டர்கள் சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் முதல் பாடலான தீமா என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    படத்தை காட்சி படுத்திய விதத்தையும் , அதனுடைய பிஹைண்ட் தி சீன் வீடியோவை படக்குழு தற்பொழுது வெளியிட்டுள்ளனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • படத்தின் பின்னணி வேலைகள் தற்போது நடைப்பெற்று வருகிறது.
    • படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் படமாக்கப்பட்டு இருக்கிறது.

    விக்னேஷ் சிவன் தற்போது எல்ஐகே (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன், கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்து உள்ளனர். இப்படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.

    இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் படமாக்கப்பட்டு இருக்கிறது.

    படத்தின் பின்னணி வேலைகள் தற்போது நடைப்பெற்று வருகிறது. இத்திரைப்படம் எதிர்காலத்தில் நடக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது. தனது காதலை அடைவதற்காக எதிர்காலத்திற்கு டைம் டிராவல் செய்யும் கதையாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த நிலையில், படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'தீமா' பாடல் அனிருத் பிறந்தநாளான இன்று வெளியாகி உள்ளது. மூச்சே விடாமல் அனிருத் ஒரு பெரிய சரணத்தை பாடியுள்ளார் என்பது தான் இந்த பாட்டின் சிறப்பாக உள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் எல்.ஐ.கே. பட தீமா பாடல் இளம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. பலரும் இதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • விக்னேஷ் சிவன் தற்போது எல்ஐகே (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) என்ற படத்தை இயக்கியுள்ளார்.
    • இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    விக்னேஷ் சிவன் தற்போது எல்ஐகே (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன், கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்து உள்ளனர். இப்படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவனின் ரௌடி பிக்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.

    இந்த படத்தில் எஸ்ஜே சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் படமாக்கப்பட்டு இருக்கிறது.

    படத்தின் பின்னணி வேலைகள் தற்போது நடைப்பெற்று வருகிறது. இத்திரைப்படம் எதிர்காலத்தில் நடக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது, தனது காதலை அடைவதற்காக எதிர்காலத்திற்கு டைம் டிராவல் செய்யும் கதையாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

    படத்தின் போஸ்டர்கள் சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் முதல் பாடலான தீமா என்ற பாடல் நாளை காலை 10.06 மணிக்கு அனிருத் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு அறிவித்து இருந்தது.

    இந்நிலையில் பாடலின் ஒரு நிமிட முன்னோட்டத்தை தற்பொழுது  படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ஒரு நிமிட பாடல்வரிகளை அனிருத் மூச்சிவிடாமல் பாடியுள்ளார். இந்த பாடலின் ஒரு நிமிட முன்னோட்டமே மிகவும் இதமாகவும் அழகாகவும் அமைந்துள்ளது. இப்பாடலின் வரிகளை விக்னேஷ் சிவன் அவரது குடும்பத்தை நினைத்து அவரது மகன்களை மனதில் வைத்து எழுதியதுப் போல கேட்டுக் போது ஒரு உணர்வு நமக்கு ஏற்படுகிறது.

    இதனால் தீமா பாடலின் மீதுள்ள எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வெளியானது வேட்டையன் திரைப்படம்.
    • இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார்.

    அண்மையில் ரஜினிகாந்த் நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வெளியான வேட்டையன்  திரைப்படம்  மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். படத்தில் இடம் பெற்ற மனசிலாயோ மற்றும் ஹண்டர் வண்டார் பாடல்கள் மிகப் பெரிய ஹிட்டானது. சமீபத்தில் நடந்த நேர்காணலில் அனிருத் சில சுவாரசிய தகவல்களை கூறினார்.

    அதில் அவர் அடுத்ததாக ஷாருக்கான் நடிக்கும் திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். ஆனால் படத்தின் பெயரை கூறவில்லை. இதற்கு முன் அவர் நடிப்பில் வெளிவந்த ஜவான் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    மேலும் பொங்கலுக்கு மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் விடாமுயற்சி திரைப்படம் வெளியாக வாய்ப்பு உள்ளதாக  கூறினார் . இதனால் ரசிகர்கள் மிகவும் சந்தோஷத்தில் உள்ளனர். ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் கூலி திரைப்படம் அடுத்தாண்டு வெளியாகும் என கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வேட்டையன் படத்தின் ஹண்டர் வண்டார் பாடல் இன்று வெளியானது.
    • வேட்டையன் படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.

    சென்னை:

    இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படம் அக்டோபர் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.

    இந்நிலையில், வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்றது.

    இதில் பங்கேற்ற அனிருத், வக்கீல் சார்... ஆண்டவன் கோர்ட்ன்ணு ஒன்னு இருக்கு.. அங்க இந்த அண்ணாமலை ஜெயிப்பான்.. இது அந்த திருவண்ணாமலை சிவன் மேல சத்தியம் என பஞ்ச் டயலாக் பேசி அசத்தினார்.

    மேலும், நான் தலைவருடன் 4 படம் ஒர்க் பன்னிருக்கேன். இது என்னுடைய 34-வது படம். இந்த மாதிரி எந்தப் படத்துக்கும் நான் மியூசிக் போட்டதில்லை. தலைவர் இந்த மாதிரி படம் பண்ணினது சினிமாவுக்கு ரொம்ப நல்லது.

    நிறைய படத்தோட இசை வெளியீட்டு விழாவில் கலந்துருக்கேன். ஆனா, எந்தப் படத்துக்கும் ரஜினி சார் படம் போல கூட்டத்தையும், விசில் சத்தத்தையும் பார்த்தது கேட்டது இல்லை என தெரிவித்தார்.

    • வேட்டையன் படத்தை ஞானவேல் இயக்கியுள்ளார்.
    • இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

    ஜெய் பீம்' இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் முதல் பாடல் "மனசிலாயோ" சமீபத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    முதல் பாடலைத் தொடர்ந்து இந்த படத்தின் அடுத்த பாடல் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது. இது குறித்து இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், வேட்டையன் படத்தின் ஹண்டர் வண்டார் பாடல் நாளை மறுநாள் வெளியாகும் என்று குறிப்பிட்டு, பாடலின் ப்ரோமோ வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    இதைத் தொடர்ந்து வேட்டையன் படத்தில் நடிகர் பகத் பாசில் பேட்ரிக் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு தனி வீடியோ வெளியிட்டு தெரிவித்து உள்ளது. 

    வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற செப்டம்பர் 20 ஆம் தேதி சென்னையில் நடைப்பெறவுள்ளது. இப்படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • தெற்காசியாவில் முதல்முறையாக சென்னையில் இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற்று வருகிறது.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர்கள் அனிருத் , ஏ.ஆர். ரகுமான் வாழ்த்து.

    சென்னை தீவுத்திடல் பகுதியில் பார்முதலா 4 கார் பந்தயத்தை விளையாட்டுத் தறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    தெற்காசியாவில் முதல்முறையாக சென்னையில் இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற்று வருவதை ஒட்டி அமைச்சர் உதயநிதிக்கு சினிமா பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    இயக்குநர் நெல்சன் தனது எக்ஸ் பக்கத்தில், "தெற்காசியாவிலேயே இரவு நேர ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் பந்தயத்தை கொண்டுவந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலிக்கு வாழ்த்துக்கள். ஃபார்முலா 4 விளையாட்டு துறையின் மிகப்பெரிய முன்முயற்சியாக இருக்கும்" என்று வாழ்த்து தெரிவித்தார்.

    நடிகர் விஷ்ணு விஷால் தனது எக்ஸ் பக்கத்தில், "தெற்காசியாவிலேயே இரவு நேர ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் பந்தயத்தை நம்ம சென்னைக்கு கொண்டு வந்ததற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். நிச்சயமாக இது ஒரு த்ரில்லிங் ரைடாக இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

    நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தனது எக்ஸ் பக்கத்தில், "சகோதரர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் முயற்சியால், இந்தியாவில் முதல் முறையாக, இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஃபார்முலா 4 கார் பந்தயம், சென்னையின் புதிய வரலாறாக இருக்கப் போகிறது" என்று தெரிவித்துள்ளார்.

    இசையமைப்பாளர் அனிருத் தனது எக்ஸ் பக்கத்தில், "தெற்காசியாவின் முதல் இரவு நேர ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் பந்தயத்தை நம்ம சென்னைக்கு கொண்டு வந்ததற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள். நிச்சயமாக இது ஒரு பெரிய வெற்றியாக இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

    இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் நடைபெறவிருக்கும் ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் பந்தயம் ஒரு முக்கியமான நிகழ்வாக அமைய போகிறது. இந்த ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் பந்தயத்தை சென்னைக்கு கொண்டு வந்ததற்காக உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்து வருகிறார்.
    • இப்பாடலை காவலா பாடலை பாடிய சில்பா ராவ் பாடியுள்ளார்.

    நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் '' இயக்குநர் கொரட்டலா சிவா இயக்கத்தில் 'தேவரா பாகம் 1 படத்தில் நடித்து வருகிறார்.

    இப்படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்து வருகிறார். இதன்மூலம் அவர் தென்னிந்திய சினிமாவில் நடிகையாக கால் பதிக்கிறார்.

    இப்படத்தில் பிரகாஷ்ராஜ், சயிப் அலிகான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் பேன் இந்தியன் திரைப்படமாக உருவாகி வருகிறது. படத்தின் முதல் பாடலான ஃபியர் சாங் சமீபத்தில் வெளியாகி மக்கள் வரவேற்பை பெற்றது.

    இந்நிலையில் இப்படத்தில் இரண்டாவது பாடலான 'சுத்தமல்லி' இன்று வெளியாகியுள்ளது. இப்பாடலை காவலா பாடலை பாடிய சில்பா ராவ் பாடியுள்ளார்.

    இப்படம் வருகிற செப்டம்பர் 27 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • முதலில் ஆடிய மதுரை 156 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து விளையாடிய திருப்பூர் 157 ரன்களை எடுத்து வென்றது.

    கோவை:

    டி.என்.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற திருப்பூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மதுரை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 156 ரன்கள் சேர்த்துது. சசிதேவ் அதிரடியாக விளையாடி 19 பந்துகளில் 41 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கவுஷிக் 28 ரன்னும், ஸ்ரீ அபிஷேக் 21 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

    திருப்பூர் சார்பில் அஜித் ராம் 3 விக்கெட்டும், ராமலிங்கம் ரோகித் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் பேட்டிங் செய்தது. அந்த அணியின் பாலசந்தர் அனிருத் அதிரடியாக ஆடி அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், திருப்பூர் அணி 18.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. முகமது அலி 28 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். நடப்பு தொடரில் திருப்பூர் பெறும் முதல் வெற்றி இதுவாகும்.

    மதுரை சார்பில் முருகன் அஷ்வின் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    ×