என் மலர்
நீங்கள் தேடியது "அமீர்கான்"
- 'டங்கல்' திரைப்படம், உலக அளவில் 2,000 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.
- உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தான் டங்கல் திரைப்படம் எடுக்கப்பட்டது.
அமீர் கான் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான 'டங்கல்' திரைப்படம், உலக அளவில் 2,000 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.
மல்யுத்தப் போட்டிகளை மையமாக வைத்து உருவான 'டங்கல்' திரைப்படம், இந்தியாவில் பெரும் வெற்றியடைந்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து 'டங்கல்' திரைப்படம் சீனாவில் வெளியிடப்பட்டது. இந்தியாவை விட சீனாவில் டங்கல் திரைப்படம் வசூலை வாரிக்குவித்தது.
இதனால், டங்கல் படத்தின் மொத்த வசூல் தற்போது 2,000 கோடி ரூபாயை தாண்டி அதிகம் வசூல் செய்த இந்திய திரைப்படங்களில் தற்போது வரை முதலிடத்தில் உள்ளது.
அரியானாவில் மகாவீர் போகத் என்ற முன்னாள் மல்யுத்த வீரர் தனது 2 மகள்களுக்கு பயிற்சியளித்து அவர்களை மல்யுத்த வீராங்கனைகளாக மாற்றினார். இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தான் டங்கல் திரைப்படம் எடுக்கப்பட்டது.
அண்மையில் மகாவீர் போகத்தின் இளைய மகளும் பாஜக உறுப்பினருமான பபிதா போகத் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுத்தார். அப்போது, "எங்கள் வாழ்க்கை வரலாற்று கதையை படமாக எடுத்து அமீர் கான் 2000 கோடி சம்பாதித்தார். ஆனால் இதற்காக எங்கள் குடும்பத்திற்கு வெறும் 1 கோடி ரூபாய் மட்டுமே கொடுக்கப்பட்டது" என்று பபிதா போகத் தெரிவித்தார்.
2000 करोड़ की फिल्म, फोगाट परिवार को मिला सिर्फ 1 करोड़◆ बबीता फोगाट का चाय वाला इंटरव्यू मानक गुप्ता के साथ ◆ पूरा इंटरव्यू: https://t.co/LPKn1lwMLb@ManakGupta #ManakKaRapidFire @BabitaPhogat | #ChaiWalaInterview pic.twitter.com/Fgt843zYE1
— News24 (@news24tvchannel) October 22, 2024
பபிதா போகத் காமன்வெல்த் மல்யுத்த விளையாட்டுப் போட்டிகளில் 55 கிலோ எடைப் பிரிவில் 2010-ல் வெள்ளியும் 2014ல் தங்கமும் வென்றுள்ளார். இவரது அக்கா கீதா போகத்திற்கு பிறகு காமன்வெல்த் மல்யுத்தப் போட்டியில் தங்கம் வென்ற இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ரஜினிகாந்தின் 171 ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
- இப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், மாஸ்டர் மகேந்திரன் நடிக்கின்றனர்.
ரஜினிகாந்தின் 171 ஆவது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். கூலி என்று பெயரிட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு நடைப்பெற்று வருகிறது.
இப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், மாஸ்டர் மகேந்திரன் நடிக்கின்றனர். மற்ற நடிகர்களை குறித்து தகவல் இன்னும் வெளியாகவில்லை.
இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ஒரு பான் இந்தியன் திரைப்படத்தை இயக்கப்போவதாகவும் அதில் நடிகர் அமீர்கான் கதாநாயகனாக நடிக்க பேச்சு வார்த்தை நடைப்பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் அடுத்து இயக்கப்போகும் படங்களுக்கு மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு மற்றும் எதிர்பார்ப்பு இருக்கிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இயக்குனர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'பேபி ஜான்'.
- இது குறித்து படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இயக்குனர் ஏ. காளீஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'பேபி ஜான்'. தமிழில் வெளியான 'தெறி' திரைப்படத்தின் ரீமேக்கான இப்படத்தில் நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் கீர்த்தி சுரேஷ், நடிகை வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
கிரண் கவுஷிக் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். ஆக்ஷன் எண்டர்டெய்னராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சினி ஒன் ஸ்டுடியோஸ் மற்றும் இயக்குனர் அட்லியின் தயாரிப்பு நிறுவனமான ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் முராத் கெடானி, ஜோதி தேஷ்பாண்டே மற்றும் பிரியா அட்லீ ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டதை எட்டியுள்ளது.
தற்பொழுது படத்தின் புதிய அப்டேட்டாக படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. திரைப்படம் இந்தாண்டு கிறிஸ்துமஸ் டிசம்பர் 25 வெளியாகவுள்ளது. இது குறித்து படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் வருண் தவானை சுற்றி ஒரு கூட்டமே கத்தியுடன் சூழ்ந்துள்ளது. இவர் ஒற்றையாளாக முறைத்துக் கொண்டே நிற்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டர் படத்தின் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
அதே டிசம்பர் 25 அன்று அமீர்கான் மற்றும் ஜெனிலியா நடித்திருக்கும் சிதாரே சமீன் பர் படமும் அன்று வெளியாகவுள்ளதால், எந்தப்படம் பாக்ஸ் ஆபிஸ் கலெகஷனில் அதிகம் வசூலிக்கும் ஒரு போட்டி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- நடிகர் அமீர்கானின் மகன் ஜுனாயத் கான் கதாநாயகனாக நடித்துள்ள படம் மகராஜ்.
- இந்த திரைப்படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.
மும்பை:
பாலிவுட் நடிகர் அமீர்கானின் மகன் ஜுனாயத் கான். இவர் கதாநாயகனாக நடித்துள்ள மகராஜ் திரைப்படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.
ஜுனாயத் கான் நடித்துள்ள மகராஜ் திரைப்படம் இந்து மதத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்து மத குருக்களை அசிங்கப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டு இருப்பதாகக் கூறி வடமாநிலங்களில் இந்து அமைப்பினர் அந்தப் படத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மகராஜ் திரைப்படம் இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக உருவாகியுள்ளதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்தப் படத்துக்கு தடை கோரி வருகின்றனர்.
இதையடுத்து, #BoycottNetflix, #BanMaharaj என்ற ஹேஷ்டேகுகள் டிரெண்டாகி வருகின்றன.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படம் 1800-ம் ஆண்டு மும்பையில் நடந்த உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
- இப்படம் ஜூன் 14ஆம் தேதி நெட்பிலிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது.
அமீர்கானின் மகன் ஜுனைத் கான் 'மகராஜ்' என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். யாஷ் ராஜ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஜூன் 14ஆம் தேதி நெட்பிலிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது.
சித்தார்த் மல்ஹோத்ரா இயக்கியுள்ள இப்படம் 1800-ம் ஆண்டு மும்பையில் நடந்த உண்மை சம்பவங்களை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்திற்கு பஜ்ரங் தளம் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஜூன் 3 ஆம் தேதி படத்தின் தயாரிப்பாளர் யாஷ் ராஜ் மற்றும் ஓடிடி தளமான நெட்பிலிக்ஸ் ஆகியவற்றிற்கு பஜ்ரங் தளம் கடிதம் எழுதியுள்ளது.
அக்கடிதத்தில், தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் போஸ்டர்கள் இந்து மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும், எனவே படத்தை ரிலீஸுக்கு முன்பு எங்களுக்கு காட்ட வேண்டும் என்று பஜ்ரங் தளம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதே நேரத்தில், பஜ்ரங் தளத்தின் தலைவர் கவுதம் ரவ்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மும்பையில் உள்ள யாஷ் ராஜ் அலுவலகம் முன் பஜ்ரங் தள உறுப்பினர்களுடன் போராட்டம் நடத்திய வீடியோவை பகிர்ந்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இப்படத்தை 25 ஆண்டுகளுக்கு பின் தற்போது பார்க்கும் போது எனக்கு பிரமிப்பாக உள்ளது.
- இப்போது 'சர்பரோஸ்' 2 படம் பற்றி அறிவிப்பது சரியான பொருத்தமாக இருக்கும் .
பிரபல இந்தி நடிகர் அமீர்கான் நடிப்பில் 1999 -ல் வெளியான படம் 'சர்பரோஸ்'. இந்த படத்தை இயக்குனர் ஜான் மேத்யூ மாத்தன் இயக்கினார். இதில் கதாநாயகி சோனாலி பிந்த்ரே, நஸ்ருதீன் ஷா, முகேஷ் ரிஷி, பிரதீப் ராவத் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் அமீர்கான் நடித்திருந்தார். இந்த படம் வெளியாகி ஹிட்டானது. இந்த படம் தற்போது 25 ஆண்டுகளை கடந்துள்ளது.
இதனை கொண்டாடும் விதமாக மும்பையில் ஒரு தியேட்டரில் இப் படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இப்படத்தில் நடித்த நடிகர் அமீர்கான்,ஜான் மேத்யூ, மாத்தான், நசிருதீன்ஷா, சோனாலி பிந்த்ரே ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் இப்படம் குறித்து பலரும் தங்களது அனுபவங்களை பகிர்ந்தனர். அப்போது அமீர்கான் பேசியதாவது:-
இப்படத்தை 25 ஆண்டுகளுக்கு பின் தற்போது பார்க்கும் போது எனக்கு பிரமிப்பாக உள்ளது. இப்போது எனக்கு வயது அதிகமாகி விட்டதாக தெரியவில்லை.
இப்போது 'சர்பரோஸ்' 2 படம் பற்றி அறிவிப்பது சரியான பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் எடுக்கப்படும் என தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சுஹானி பட்நாகர், சிகிக்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
- சுஹானிக்கு டங்கல் படத்திற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் சுஹானி படிப்பில் கவனம் செலுத்த விரும்பியதால், சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தார்.
டங்கல் படத்தில் அமீர்கானின் இளைய மகளாக நடித்த சுஹானி பட்நாகர், தனது 19 வயதில் அகால மரணமடைந்துள்ளார்.டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சுஹானி பட்நாகர், சிகிக்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
சுஹானி பட்நாகர் பாலிவுட்டின் பிரபலமான குழந்தை நட்சத்திரம். அமீர் கானின் பிளாக்பஸ்டர் படமான 'டங்கல்' படத்தில் அறிமுகமான அவர் ஜூனியர் பபிதா போகத் வேடத்தில் நடித்தார். படத்தில் அவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. மேலும் பல தொலைக்காட்சி விளம்பரங்களிலும் அவர் நடித்துள்ளார்.
சுஹானிக்கு டங்கல் படத்திற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் சுஹானி படிப்பில் கவனம் செலுத்த விரும்பியதால், சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தார்.
இந்நிலையில் சில காலத்திற்கு முன்பு சுஹானிக்கு விபத்து ஏற்பட்டுள்ளது, அதன் காரணமாக அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சுஹானி சிகிச்சைக்காக எடுத்துக்கொண்ட மருந்துகளில் பக்கவிளைவுகள் இருந்ததால், அவரது உடலில் படிப்படியாக தண்ணீர் தேங்கியது.
இதனால் அவர் நீண்ட நாட்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்துள்ளார். அவரது மரணத்திற்கு பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
- நடிகர் விஷ்ணு விஷால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
- அமீர் கான் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோரை படகு மூலம் தீயணைப்புதுறையினர் மீட்டனர்.
மிச்சாங் புயல் எதிரொலியால், சென்னை மாநகரமே வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. சென்னை மடிப்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் தான் அதிக கனமழை பெய்துள்ளது. இதனால், வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்து மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
காரப்பாக்கத்தில் வசித்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இதேபோல், பாலிவுட் நடிகர் அமீர் கானும் வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ளதாக செய்தி வெளியானதை அடுத்து மீட்பு படையினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதைதொடர்ந்து, நடிகர்கள் அமீர் கான் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோரை படகு மூலம் தீயணைப்புதுறையினர் மீட்டனர்.
இந்நிலையில், நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் அமீர்கானை அஜித் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்துள்ள விஷ்ணு விஷால், "பொதுவான நண்பர் ஒருவரின் மூலம் எங்களின் நிலைமையை அறிந்து, எப்போதும் உதவும் குணம் கொண்ட நடிகர் அஜித் எங்களைப் பார்க்க வந்தார். மேலும் எங்களது போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்தார். லவ் யூ அஜித்" என பதிவிட்டுள்ளார்.
After gettting to know our situation through a common friend,
— VISHNU VISHAL - VV (@TheVishnuVishal) December 5, 2023
The ever helpful Ajith Sir came to check in on us and helped with travel arrangements for our villa community members…Love you Ajith Sir! https://t.co/GaAHgTOuAX pic.twitter.com/j8Tt02ynl2
- இயக்குனர் பார்த்திபன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.
- இப்படத்தின் பணிகளில் இவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள பார்த்திபன் பல படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது. இந்த படத்தில் பாடியதற்காக பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு தேசிய விருது கிடைத்தது. இதைத்தொடர்ந்து பார்த்திபன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தின் பணிகளில் இவர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.
இந்நிலையில், இயக்குனர் பார்த்திபன் நடிகர் அமீர்கானை புகழ்ந்து தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "இந்தி'ய திரையுலகில் அவருடைய படங்கள் மூலம், மிக உயர்வாக மதிக்கப்படும் சிறந்த நடிகர். ஒவ்வொரு முறையும் என்னை ஆச்சர்ய ஆனந்தத்தில் திளைக்க வைக்கும் மனிதர். நேற்றிரவு கமல் சார் பிறந்த நாளில் … நடப்பவை(பவங்)களை ஒரு ஒதுக்கு புறமாக நின்று ரசித்துக் கொண்டிருந்த என்னை கண்டு ஓடி வந்து இறுக அனைத்துக் கொண்டு நெற்றியில் என்னவென்று விசாரித்து, தன்னுடைய தாயாருக்கு உடல்நிலை சுகமில்லை என வருந்தி,அடுத்த படமென்ன?- தெரிந்துக் கொண்டு,பின்னர் திரும்பிச் செல்கையில் மறக்காமல் வந்து சொல்லிவிட்டு சென்றார்.
எங்கே சென்றார் ? இதயத்தின் நாற்புறமும் ஆணியடித்து அங்குமிங்கும் நகரா நாற்காலியிட்டு அமர்ந்துக் கொண்டார். இத்தனைக்கும் சிற்சில சந்திப்பே இதற்குமுன்… என் விடாமுயற்சிகளை பற்றி கேட்டறிந்து என்னை அவர் பாராட்டவும்,அவரின் நல்ல படங்களை நான் புகழவும் பழகினோம். அவரின் அற்புத நட்பு அலாதியானது. மணி சார்+கமல் சார்+ ரஹ்மான் சார்+ ரவி k சந்திரன் கூட்டணி மிரட்டியது 'thug life'-ல்!" என்று பதிவிட்டுள்ளார்.
- நடிகர் அமீர்கான் தற்காலிகமாக சினிமாவிற்கு ஓய்வு கொடுத்துள்ளார்.
- இவர் சென்னைக்கு குடியேற திட்டமிட்டுள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகரான அமீர்கான் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதற்காக தற்காலிகமாக சினிமாவுக்கு ஓய்வு கொடுத்துள்ளார். மேலும் இவர் சென்னைக்கு குடியேற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தாயாருடன் அமீர்கான்
அதாவது, கடந்த ஆண்டு அமீர்கானின் தாயார் ஜூனத் ஹூசைனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர் சிகிச்சை மேற்கொண்டு வீடு திரும்பினார். தற்போது அவருக்கு மீண்டும் சிகிச்சை தேவைப்படும் நிலையில், சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்திருக்கிறார்கள்.
அதனால் தாயாரை உடனிருந்து கவனிக்கும் வகையில், மருத்துவமனைக்கு அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, சில மாதங்கள் அங்கு தங்கியிருக்கவும் அமீர்கான் முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
- பிரதமர் மோடி 'மனதின் குரல்' நிகழ்ச்சி மூலம் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் உரை நிகழ்த்தி வருகிறார்.
- இந்நிகழ்ச்சியில் 100-வது பகுதி வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி ஒலிபரப்பு செய்யப்படவுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் வானொலி வாயிலாக ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் 'மனதின் குரல்' நிகழ்ச்சி மூலம் உரை நிகழ்த்தி வருகிறார். இதன் தமிழாக்கமும் ஒலிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் வெவ்வேறு தலைப்புகளில் பிரதமர் உரையாற்றுவது வழக்கம்.
நரேந்திர மோடி
இந்நிகழ்ச்சியில் 100-வது பகுதி வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி ஒலிபரப்பு செய்யப்படவுள்ளது. இதையொட்டி டெல்லியில் மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை சார்பில் நடைபெற்ற தேசிய மாநாட்டை துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் துவக்கி வைத்தார்.
இந்த மாநாட்டில் திரைத்துறை, விளையாட்டுத் துறை என இந்தியாவின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். இதில் நடிகர் அமீர்கான் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, தேசத்தின் தலைவர் மக்களுடன் உரையாடுவது, பிரச்சினைகளை பற்றி விவாதிப்பது. ஆலோசனைகளை வழங்குவது என்பது மிக முக்கியமானது. அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி 100-வது அத்தியாயத்தை நிறைவு செய்துள்ளதில் மகிழ்ச்சி என்று கூறினார்.