search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமேசான்"

    • கெவின் காஸ்ட்னருக்கு சொந்தமான 160 ஏக்கர் பரப்பளவில் உள்ள டன்பார் ராஞ்ச் -இல் வைத்து நடைபெறுகிறது.
    • he View, KTTV, Fox உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களில் தொகுப்பாளராக இருந்தார்

    உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் எலான் மஸ்க்குக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் 235 பில்லியன் டாலர் சொத்துடன் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உள்ளார்.60 வயதான ஜெஃப் பெசோஸ் தனது இரண்டாம் திருமணத்துக்குத் தயாராகி வருகிறார்.

    தனது நீண்ட நாள் காதலியான 54 வயதாகும் தொலைக்காட்சி பிரபலம் லாரன் சான்செஸ் உடன் அவரது திருமணம் நடக்க உள்ளது. இருவரும் மே 2023 இல் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

    இவர்கள் இருவருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி திருமணம் நடைபெற உள்ளது. அமெரிக்காவில் இவர்கள் விடுமுறைக்கு வழக்கமாக ஆஸ்பென் நகருக்கு அடிக்கடி சென்று வருவர்.

     

    இந்நிலையில் அந்த ஆஸ்பென் நகரில் வைத்தே தங்கள் திருமணத்தைப் பிரமாண்டமாக நடத்த உள்ளனர். திருமணமானது ஆஸ்பென் நகரில் நடிகர் கெவின் காஸ்ட்னருக்கு சொந்தமான 160 ஏக்கர் பரப்பளவில் உள்ள டன்பார் ராஞ்ச் -இல் வைத்து நடைபெறுகிறது.

    இந்த திருமண விழாவில் அமெரிக்க பிரபலங்கள் பலர் கலந்துகொள்கின்றனர். வரும் டிசம்பர் 28 [சனிக்கிழமை] இவர்களது திருமணம் நடைபெற இருக்கிறது.

    $600 மில்லியன் (₹5,000 கோடி) செலவில் ஆடம்பரமான திருமணத்தை பெசோஸ் ஏற்பாடு செய்துள்ளார் டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய பணக்காரர் முகேஷ் அம்பானி தனது மகனுக்கு இந்த ஆண்டு தொடக்கத்தில் ரூ.5000 கோடி செலவில் திருமணம் செய்து வைத்தார்.

     

    The View, KTTV, Fox உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களில் தொகுப்பாளராக பணியாற்றிய லாரன் சான்செஸ் உடன் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஜெஃப் பெசோஸ் டேட்டிங் செய்து வருகிறார். 

    ஜெஃப் பெசோஸ் தனது முதல் மனைவி மெக்கன்சி ஸ்காட் - ஐ கடந்த 2018 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். விவாகரத்தின்மூலம் ஜெஃப் பெசோஸ் வைத்திருந்த கணிசமான பங்குகளை பெற்று மெக்கன்சி ஸ்காட் பில்லியனர் ஆனார்.

    • நண்பர்களிடம் ஏதோ சொல்ல வந்த வம்சி திடீரென மயங்கி விழுந்தார்.
    • வம்சியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    நண்பரின் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய வம்சி என்ற வாலிபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

    ஆந்திர மாநிலம் கர்னூலின் பெனுமடா கிராமத்தில் நடைபெற்ற திருமணத்தில் கலந்து கொள்வதற்காக வம்சி என்ற வாலிபர் வந்தார். அப்போது நண்பர்களுடன் சேர்ந்து மணமக்களுக்கு பரிசை வழங்கிய வம்சி பதற்றமான நிலையில் இருந்தார். பின்னர் நண்பர்களிடம் ஏதோ சொல்ல வந்த வம்சி திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவரை மீட்ட நண்பர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு வம்சியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    உயிரிழந்த வாலிபர் வம்சி பெங்களூருவில் உள்ள அமேசான் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

    இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

    சமீப காலமாக உடற் பயிற்சி கூடங்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளில் மாரடைப்பால் வாலிபர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு வாழ்க்கை முறை, காற்று மாசுபாடு, மன அழுத்தம், அதிக உடற்பயிற்சி மற்றும் ஸ்டெராய்டுகள் ஆகியவை இளம் மாரடைப்புக்கு வழிவகுக்கும் காரணிகள் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 



    • பெங்களூரில் உள்ள உலக வர்த்தக மையத்தில் (World Trade Center) அமேசான் இந்தியா தலைமையகம் உள்ளது.
    • சத்வா டெக் பார்க் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திலிருந்து 15 நிமிட பயண தூரத்தில் உள்ளது.

    உலகின் மிகப்பெரிய இ காமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்தியாவில் மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கி வைத்திருக்கிறது. இந்தியாவின் சிலிகான் VALLEY என அழைக்கப்படும் கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள உலக வர்த்தக மையத்தில் (World Trade Center) வளாகத்தில் அமேசான் இந்தியா நிறுவனத்தின் தலைமையகம் இயங்கி வருகிறது.

    இந்நிலையில் வாடகை காசை மிச்சப்படுத்த தற்போது அமேசான் இந்தியா தலைமையகத்தை பெங்களூரு விமானம் நிலையம் அருகே புறநகரில் உள்ள சத்வா டெக் பார்க்கிற்கு மாற்ற உள்ளது. இதன்மூலம் வாடகை செலவை வெகுவாக குறைக்கலாம் என்று அமேசான் திட்டமிட்டுள்ளது.

     

    தற்போது உலக வர்த்தக மையத்தில் 18 மாடிகளில் சுமார் 13 மாடியை வாடகைக்கு எடுத்துக் சுமார் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமேசான் தலைமையகம் இயங்கிவருகிறது. இந்நிலையில் தற்போது மாற்றம் செய்யப்பட உள்ள சத்வா டெக் பார்க் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திலிருந்து 15 நிமிட பயண தூரத்தில் உள்ளது.

    இந்த டெக் பார்க்கில் சுமார் 11 லட்சம் சதுரடி பரப்பளவில் 7000 பேர் பணியாற்றும் வகையில் புதிய தலைமையகம் அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தற்போது உள்ள இடத்தின் வாடகை விகிதமான ஒரு சதுர அடிக்கு ரூ.250 என்று இருக்கும் நிலையில் அதில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவான தொகையே புதிய இடத்திற்கு செலுத்த வேண்டி இருக்கும். இந்த இடமாற்றம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

    • 54 வயதாகும் தொலைக்காட்சி பிரபலம் லாரன் சான்செஸ் உடன் அவரது திருமணம் நடக்க உள்ளது.
    • The View, KTTV, Fox உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் பணியாற்றியுள்ளார்.

    உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் எலான் மஸ்க்குக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் 235 பில்லியன் டாலர் சொத்துடன் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உள்ளார்.60 வயதான ஜெஃப் பெசோஸ் தனது இரண்டாம் திருமணத்துக்குத் தயாராகி வருகிறார். தனது நீண்ட நாள் காதலியான 54 வயதாகும் தொலைக்காட்சி பிரபலம் லாரன் சான்செஸ் உடன் அவரது திருமணம் நடக்க உள்ளது.

    இவர்கள் இருவருக்கும் அடுத்த மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி திருமணம் நடைபெற உள்ளதாக அமெரிக்க இதழான தி சன் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் இவர்கள் விடுமுறைக்கு வழக்கமாக ஆஸ்பென் நகருக்கு அடிக்கடி சென்று வருவர்.

    இந்நிலையில் அந்த ஆஸ்பென் நகரில் வைத்தே தங்கள் திருமணத்தைப் பிரமாண்டமாக நடந்த இவர்கள் திட்டமிட்டுள்ளார்களாம். இந்த திருமண விழாவில் அமெரிக்க பிரபலங்கள் பலர் கலந்துகொள்ள உள்ளதாகவும் தி சன் இதழ் தெரிவித்துள்ளது.

     

    The View, KTTV, Fox உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களில் தொகுப்பாளராக பணியாற்றிய லாரன் சான்செஸ் உடன் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஜெஃப் பெசோஸ் டேட்டிங் செய்து வருகிறார்.

    ஜெஃப் பெசோஸ் தனது முதல் மனைவி மெக்கன்சி ஸ்காட் - ஐ கடந்த 2018 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். விவாகரத்தின்மூலம் ஜெஃப் பெசோஸ் வைத்திருந்த கணிசமான பங்குகளை பெற்று மெக்கன்சி ஸ்காட் பில்லியனர் ஆனார்.

    • ராஜ் குமார் மீனா (23), சுபாஷ் குர்ஜார் (27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
    • கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து ரூ.11.45 லட்சம் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அமேசான் நிறுவனத்தில் பொருட்களை ஆர்டர் செய்து ரூ.1.29 கோடி மோசடி செய்த ராஜஸ்தானைச் சேர்ந்த இருவர் மங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கைது செய்யப்பட்ட ராஜ் குமார் மீனா (23), சுபாஷ் குர்ஜார் (27) ஆகியோர் மீது அசாம், ஒடிசா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தெலுங்கானா, உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    சுபாஷ் மற்றும் ராஜ் குமார் ஆகியோர் அமேசானில் அதிக மதிப்புள்ள கேமராக்கள், ஐபோன்கள் மற்றும் மடிக்கணினிகள் மற்றும் குறைந்த மதிப்புள்ள வேறு சில பொருட்களையும் போலியான அடையாளங்களைப் பயன்படுத்தி ஆர்டர் செய்வார்கள். டெலிவரி நேரத்தில், அவர்கள் டெலிவரி முகவர்களின் கவனத்தை திசை திரும்புவார்கள். பின்னர் அதிக மதிப்புடைய பொருட்களின் ஸ்டிக்கரை குறைவான மதிப்புடைய பொருட்களுக்கு ஒட்டுவார்கள். குறைவான மதிப்புடைய பொருட்களின் ஸ்டிக்கரை அதிக மதிப்புடைய பொருட்களுக்கு ஓட்டுவார்கள்

    ஸ்டிக்கர்களை மாற்றிய பிறகு அதிக மதிப்புமிக்க பொருளை குறைவான மதிப்புடைய ஸ்டிக்கரை பயன்படுத்தி வாங்கி விடுவார்கள். அதிக மதிப்புமிக்க பொருளின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட குறைவான மதிப்புடைய பொருளுக்கு தவறான OTP சொல்லி இறுதியில் ஆர்டரை ரத்து செய்து விடுவார்கள்.

    அமேசானின் டெலிவரி பார்ட்னரான மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் இவர்களின் தந்திரத்தை கண்டுபிடித்து அமேசான் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.

    இதனையடுத்து ராஜ் குமார், சுபாஷ் ஆகியோரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.11.45 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

    • சாம்சங் கேலக்ஸி M55s 5ஜி ஸ்மார்ட்போன் இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
    • கேலக்ஸி M55s 5ஜி ஸ்மார்ட்போன் கிரீன் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

    சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி M55s 5ஜி ஸ்மார்ட்போனிற்கு அமேசான் தளத்தில் விலை குறைப்பு வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் சாம்சங் கேலக்ஸி M55s ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    இந்திய சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் விலை அறிமுகத்தின் போது முறையே ரூ. 19 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 22 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது அமேசான் இந்தியா வலைதளத்தில் கேலக்ஸி M55s 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 256 ஜிபி மெமரி மாடலுக்கு ரூ. 2 ஆயிரம் மதிப்பிலான அமேசான் கூப்பன் வழங்கப்படுகிறது.


     

    இதே போன்று கேலக்ஸி M55s 5ஜி மாடலின் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடலுக்கு 31 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இவற்றை சேர்க்கும் போது, இந்த ஸ்மார்ட்போனின் விலை முறையே ரூ. 20 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 17 ஆயிரத்து 999 என மாறிவிடுகிறது.

    அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி M55s 5ஜி மாடலில் டூயல் டோன் பேக் பேனல், மெல்லிய டிசைன் கொண்டுள்ளது. இத்துடன் 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், 50MP பிரைமரி கேமராவுடன் மூன்று லென்ஸ் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கிறது.

    ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒன்யுஐ 6.1 கொண்டுள்ள கேலக்ஸி M55s 5ஜி ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 45 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

    • வேலையில் என் மீது இருந்த காழ்ப்புணர்ச்சியால் எனது மனைவியை மயக்க பல முயற்சிகளில் ஈடுபட்டார். அதில் அவர் வெற்றியும் பெற்றார்.
    • நான் உங்களுக்கு கூறுவதெல்லாம் அதுபோன்ற [பணிச்சூழல்] பாம்புப் புற்றுகளை விட்டு சுதாரித்து உடனே வெளியே வந்துவிடுங்கள்.

    ஏதன் ஈவென்ஸ் [Ethan Evans] தனது மண வாழ்வுக்கு வேலையிடத்தால் வந்த வினையை குறித்து மனம் திறந்துள்ளார். லிங்க்கிட்- இன் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், நான் தொடக்கத்தில் வேலை செய்து வந்த ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் சிஇஓ, வேலையில் என் மீது இருந்த காழ்ப்புணர்ச்சியால் எனது மனைவியை மயக்க பல முயற்சிகளில் ஈடுபட்டார். அதில் அவர் வெற்றியும் பெற்றார்.

    எனது மனைவியும் நானும் விவாகரத்து பெற்று பிரிய நேர்ந்தது. நான் எனது வேலையையும் விட்டுவிட்டு அந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறினேன். அந்த சிஇஓவின் செயல்கள் குறித்து நான் முன்னரே அறிந்திருந்தாலும் எனது பொருளாதார சூழல் காரணமாகவும், அவர் எப்படியும் அவரது முயற்சிகளில் ஜெயிக்க முடியாது என்ற நம்பிக்கையிலும், அங்கு தொடர்ந்து வேலை செய்து பெரிய தவறு செய்துவிட்டேன். அந்த தவறுக்கு நான் பெரிய விலை கொடுக்க நேர்ந்தது.

     

    நான் உங்களுக்கு கூறுவதெல்லாம் அதுபோன்ற [பணிச்சூழல்] பாம்புப் புற்றுகளை விட்டு சுதாரித்து உடனே வெளியே வந்துவிடுங்கள். இதுபோன்ற [ஸ்டார்ட் அப் சிஇஓ] பாம்புகளை எப்படிக் கண்டறிய வேண்டும் என்றால் அவர்கள் பின்புலம் குறிக்கும், அவர்கள் எப்படிப் பட்டவர்கள் என்பது குறித்து முன்னரே அறிந்துகொள்ளுங்கள் என்று கார்ப்பரேட் கலாச்சாரம் குறித்து ஊழியர்களுக்கு அட்வைஸ் வழங்கியுள்ளார். ஏதன் அமேசான் சிஇஓ ஜெப் பெசோசை பற்றி தான் கூறுகிறாரா என்று பலர் கேள்வியெழுப்பிய நிலையில் ஏதன் அமேசானில் பணிக்கு சேர்வதற்கு முன்னர் பணியாற்றிய நிறுவனம் குறித்து இங்கு கூறியுள்ளார் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ள்ளது. 

     

     

    • ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் 5G சுதந்திர தின விற்பனையின்போது சிறப்பு விலையில் கிடைக்கும்.
    • சியோமி 43X ப்ரோ டிவி 43 இன்ச் டிஸ்ப்ளே மாடல் ரூ.28,999க்கு விற்பனையாகிறது.

    சுதந்திர தினம் அன்று (ஆகஸ்ட் 15) ப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற பல ஆன்லைன் வலைதளங்கள் பெரிய விற்பனை நிகழ்வை நடத்தும். அதேபோல் சியோமி தனது அதிகாரப்பூர்வ Mi.com இணையதளத்தில் இதேபோன்ற விற்பனையை நடத்துவதாக அறிவித்துள்ளது.

    மேலும் இந்த தளத்தில் கிடைக்கும் சலுகைகள் மற்ற ஆன்லைன் தளங்களிலும் (அமேசான் போன்றவை) வழங்கப்படும். சுதந்திர தின விற்பனை இன்று (ஆகஸ்ட் 6) தொடங்கும் சியோமி என்று அறிவித்துள்ளது.

    சலுகை விவரங்கள்:

    ரெட்மி நோட் 13 ப்ரோ பிளஸ் 5G சுதந்திர தின விற்பனையின்போது சிறப்பு விலையில் கிடைக்கும். இதன் 8ஜிபி + 128ஜிபி மெமரி மாடல் ரூ.27,999 விற்பனையாகிறது.

    அதேசமயம் 12ஜிபி + 256ஜிபி மாடல் ரூ.29,999 விலையில் விற்பனை செய்யப்படும். 512ஜிபி வேரியண்ட் வாங்க விரும்புவோர் ரூ.31,999 செலவழிக்க வேண்டும்.

    உங்கள் பட்ஜெட் ரூ. 15,000க்கு குறைவாக இருந்தால், சியோமி அதன் பட்ஜெட் ரெட்மி 13 5G ஸ்மார்ட்போனுக்கு சூப்பர் சலுகை வழங்குகிறது. இதன் 6ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.12,999 என்றும் 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மாடல் விலை ரூ.14,499 என்றும் மாறி இருக்கிறது.

    கூகுள் டிவி மூலம் இயங்கும் சியோமி ஸ்மார்ட் டிவி எக்ஸ் சீரிஸ் சிறப்பு சலுகைகளுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. சியோமி 55X ஜிடிவி 55 இன்ச் டிஸ்ப்ளே மாடல் ரூ.34,999-க்கு விற்பனையாகிறது.

    சியோமி 43X ப்ரோ டிவி 43 இன்ச் டிஸ்ப்ளே மாடல் ரூ.28,999க்கு விற்பனையாகிறது. இந்த டிவிக்களில் 4K ரெசல்யூஷன், டால்பி விஷன், HDR10 உள்ளிட்ட அம்சங்கள் உள்ளன.

    அமேசானில் ரெட்மி நோட் 13 ப்ரோ, ரெட்மி 12 5ஜி, நோட்13 ப்ரோ+, சியோமி 14 மற்றும் பல அமேசான் சுதந்திர தின (Amazon Great Freedom Festival) விற்பனையின்போது தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.

    • அமேசன் நிறுவனம் இன்றும் முதல் நாளை வரை மிகப்பெரிய அளவிலான தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது.
    • அமேசான் 11,101 ரூபாய் தள்ளுபடி வழங்குகிறது.

    அமேசான் நிறுவனம் இன்றும் முதல் நாளை வரை மிகப்பெரிய அளவிலான தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது. அமேசான் "பிரைம் டே" என பெயரிட்டு தள்ளுபடியை அறிவித்துள்ளது. அமேசான் சந்தாதாரரர்கள் இந்த சலுகையை பெற முடியும்.

    ஐ-போன் 13 அதன் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் 59,900 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அமேசான் 11,101 ரூபாய் தள்ளுபடி வழங்குகிறது. இதனால் 48799 ரூபாய்க்கு அமேசானில் வாங்க முடியும். எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ கார்டுகள் வைத்திருப்பவர்கள் மேலும் 750 ரூபாய் வரை சலுகை பெறலாம். 128GB ஸ்டோரேஜ், ஏ15 பயோனிக் சிப் பிராசரர், 6.1 இன்ச் சூப்பர் ரெட்டினா XDR டிஸ்பிளே வசதி கொண்டதாகும்.

    • அமேசான் தனது 10வது பிரைம் டே நிகழ்வை ஜூலை 16 மற்றும் 17 தேதிகளில் நடத்த இருக்கிறது.
    • அமேசான் பிரைம் உறுப்பினர்கள் இன்னும் பிரைம் கேமிங் லீட் அப் தலைப்புகளை பெறலாம்.

    அமேசான் பல நாடுகளில் பிரைம் டே விற்பனையை நடத்த தயாராக உள்ளது. அதற்கு முன்னதாக, பிரைம் டே விற்பனையின்போது பிரைம் உறுப்பினர்களுக்கு Suicide Squad: Kill the Justice League, Chivalry 2 மற்றும் பல்வேறு பிரபல டைட்டில்களை கொண்ட கம்ப்யூட்டர் கேம்களை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளது.

    அமேசான் பிரைமில் கூடுதல் கட்டணமின்றி இந்த கேம்களை எவ்வாறு பெறலாம் என்பதை விரிவாக பார்க்கலாம்.

    அமேசான் தனது 10வது பிரைம் டே நிகழ்வை ஜூலை 16 மற்றும் 17 தேதிகளில் நடத்த இருக்கிறது.

    இந்த விற்பனையின்போது, Suicide Squad: Kill the Justice League, Chivalry 2, and Rise of the Tomb Raider உள்ளிட்ட மூன்று கேம்களை அமேசான் பிரைம் சந்தா வைத்திருப்போர் பெற்றுக் கொள்ளலாம்.

    அமேசான் பிரைம் உறுப்பினர்கள் இந்த கேம்களை ஜூலை 16 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 48 மணிநேரத்திற்கு இலவசமாக பெறலாம். இந்த இலவச கேம்கள் எபிக் கேம்ஸ் ஸ்டோர் (Epic Games Store) மூலம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    அமேசான் பிரைம் உறுப்பினர்கள் இன்னும் பிரைம் கேமிங் லீட் அப் தலைப்புகளை பெறலாம். இதில், Thieves of the Heart, The Invisible Hand, Forager, Heaven Dust 2, Soulstice, Wall World, Hitman Absolution, Call of Juarez: Bound in Blood, and Call of Juarez ஆகியவை தற்போது கிடைக்கின்றன.

    ஜூலை 11 முதல், பிரைம் உறுப்பினர்கள் Knights of the Old Republic II — The Sith Lords, Alex Kidd in Miracle World DX, Teenage Mutant Ninja Turtles: Shredder's Revenge, and Samurai Bringer ஆகிய கேம்களை பெறலாம்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சாப்ட்வேர் என்ஜினியர்களான பெங்களூருவை சேர்ந்த தம்பதி அமேசானில் எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலரை ஆர்டர் செய்துள்ளனர்.
    • பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    ஆன்லைன் ஷாப்பிங் செய்வோரிடம் பெரும் வரவேற்பை பெற்ற தளம் அமேசான். இருந்த இடத்தில் இருந்துகொண்டே வாங்க நினைக்கும் பொருளை ஆன்லைனில் ஆர்டர் செய்ய நினைக்கும் போது பெரும்பாலானவர்களுக்கு நினைவுக்கு வருது அமேசான் தான். அவ்வாறு ஆர்டர் செய்பவர்களுக்கு தவறுதலாக பொருட்களை மாற்றி அனுப்பும் நிகழ்வுகளும் பல நடந்துள்ளது.

    ஆனால், தாங்கள் ஆர்டர் செய்த பொருளுடன் கூடுதலாக வந்த ஜீவனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் பெங்களூருவை சேர்ந்த தம்பதியினர்.

    சாப்ட்வேர் என்ஜினியர்களான பெங்களூருவை சேர்ந்த தம்பதி அமேசானில் எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலரை ஆர்டர் செய்துள்ளனர். அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அமேசானில் இருந்து பார்சல் வந்தது. அவர்கள் ஆர்டர் செய்த கண்ட்ரோலருடன் உயிருடன் நாகப்பாம்பு இருந்தது. ஆர்டர் செய்யப்பட்ட பொருளுடன் பாம்பை நெளிந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து அத்தம்பதி எக்ஸ் தள பக்கத்தில், அமேசானில் இருந்து ஒரு எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலரை ஆர்டர் செய்தேன். அதனுடன் இலவசமாக பாம்பு கிடைத்தது என்று பதிவு செய்தனர். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இந்த பதிவை கண்ட அமேசான் நிறுவனம், அமேசான் ஆர்டரில் உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்தை அறிந்து வருந்துகிறோம். இதை சரிபார்க்க விரும்புகிறோம். தேவையான விவரங்களை தருமாறும், விரைவில் எங்கள் குழு உங்களை தொடர்பு கொள்ளும் என்று கூறியுள்ளது.

    • இந்த சீசனில் மொத்தம் 10 எபிசோடுகள் உள்ளது.
    • இது தொடர்பான அறிவிப்பு டீசரும் வெளியாகியுள்ளது.

    பாலிவுட் வெப் சீரியஸான மிர்சாபூர்' தொடரின் 3ஆவது சீசன் வரும் ஜூலை 5-ம் தேதி வெளியாகும் என அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனம் அறிவித்துள்ளது.

    இந்த சீசனில் மொத்தம் 10 எபிசோடுகள் உள்ளது. இது தொடர்பான அறிவிப்பு டீசரும் வெளியாகியுள்ளது.

    2008 ஆம் ஆண்டு கரன் அனுஷ்மான், குர்மீத் சிங் இயக்கத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியான பாலிவுட் வெப்சீரிஸ் 'மிர்சாபூர்' மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    இதில், பங்கஜ் திரிபாதி, அலி ஃபசல், ஸ்வேதா திரிபாதி ஷர்மா, ரசிகா துகல், விஜய் வர்மா, இஷா தல்வார், அஞ்சும் ஷர்மா, ராஜேஷ் தைலாங், ஷீபா சதா, மேக்னா மாலிக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    2020 ஆம் ஆண்டு வெளியான இந்த தொடரின் 2-வது சீசனும் மக்களிடையே வரவேற்பை பெற்றது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×