search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அமேசான் ஆர்டரில் உயிருடன் டெலிவரி செய்யப்பட்ட நாகப்பாம்பு - அதிர்ச்சி வீடியோ
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அமேசான் ஆர்டரில் உயிருடன் டெலிவரி செய்யப்பட்ட நாகப்பாம்பு - அதிர்ச்சி வீடியோ

    • சாப்ட்வேர் என்ஜினியர்களான பெங்களூருவை சேர்ந்த தம்பதி அமேசானில் எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலரை ஆர்டர் செய்துள்ளனர்.
    • பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    ஆன்லைன் ஷாப்பிங் செய்வோரிடம் பெரும் வரவேற்பை பெற்ற தளம் அமேசான். இருந்த இடத்தில் இருந்துகொண்டே வாங்க நினைக்கும் பொருளை ஆன்லைனில் ஆர்டர் செய்ய நினைக்கும் போது பெரும்பாலானவர்களுக்கு நினைவுக்கு வருது அமேசான் தான். அவ்வாறு ஆர்டர் செய்பவர்களுக்கு தவறுதலாக பொருட்களை மாற்றி அனுப்பும் நிகழ்வுகளும் பல நடந்துள்ளது.

    ஆனால், தாங்கள் ஆர்டர் செய்த பொருளுடன் கூடுதலாக வந்த ஜீவனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர் பெங்களூருவை சேர்ந்த தம்பதியினர்.

    சாப்ட்வேர் என்ஜினியர்களான பெங்களூருவை சேர்ந்த தம்பதி அமேசானில் எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலரை ஆர்டர் செய்துள்ளனர். அதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று அமேசானில் இருந்து பார்சல் வந்தது. அவர்கள் ஆர்டர் செய்த கண்ட்ரோலருடன் உயிருடன் நாகப்பாம்பு இருந்தது. ஆர்டர் செய்யப்பட்ட பொருளுடன் பாம்பை நெளிந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து அத்தம்பதி எக்ஸ் தள பக்கத்தில், அமேசானில் இருந்து ஒரு எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலரை ஆர்டர் செய்தேன். அதனுடன் இலவசமாக பாம்பு கிடைத்தது என்று பதிவு செய்தனர். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலானது.

    இந்த பதிவை கண்ட அமேசான் நிறுவனம், அமேசான் ஆர்டரில் உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்தை அறிந்து வருந்துகிறோம். இதை சரிபார்க்க விரும்புகிறோம். தேவையான விவரங்களை தருமாறும், விரைவில் எங்கள் குழு உங்களை தொடர்பு கொள்ளும் என்று கூறியுள்ளது.

    Next Story
    ×