search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆப்கானிஸ்தான்"

    • அதிகாலை 6.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு.

    ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.5 ஆக பதிவாகி உள்ளது. இது குறித்து நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், இந்திய நேரப்படி இன்று அதிகாலை 6.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் பூமியில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் உயிரிழப்பு மற்றும் சேதம் எதுவும் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருகின்றனர்.

    • அமைச்சக வளாகத்திற்குள்ளேயே தற்கொலை படைதாக்குதல்.
    • தலிபான் அதிகாரத்தை கைப்பற்றிய பின் கேபினட் மந்திரி கொல்லப்படுவது இதுவே முதல்முறை.

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில், அந்நாட்டின் தலிபான் அகதிகள் இலாகா மந்திரி மற்றும் இருவர் கொல்லப்பட்டனர்.

    தலிபான் ஆப்கானிஸ்தானில் கடந்த மூன்று வருடத்திற்கு முன் ஆட்சியை பிடித்தது. அதன்பின் தலிபான் வட்டாரத்தில் உள்ள தலைவர் மீது நடைபெற்ற மிகப்பெரிய தற்கொலைப்படை தாக்குதல் இதுவாகும்.

    அகதிகள் அமைச்சக வளாகத்திற்குள் நடைபெற்ற தாக்குதலில் மந்திரி கலில் ஹக்கானி கொல்லப்பட்டார். இவர் உள்துறை பொறுப்பு மந்திரி சிராஜுதீன் ஹக்கானி மாமனார் ஆவார். சிராஜுதீன் ஹக்கானி தலிபான் நெட்வொர்க்கில் அதிகாரமிக்க தலைவராக உள்ளார்.

    தலிபான் பதவி ஏற்ற பிறகு கேபினட்டில் உள்ள ஒரு தலைவர் கொல்லப்படுவது இதுதான் முதல்முறையாகும். குண்டு வெடிப்புக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பு ஏற்கவில்லை.

    • ஆப்கானிஸ்தானில் நர்சிங் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளை பெண்கள் பயில தாலிபான் அரசு தடை
    • கற்றலின் முக்கியத்துவத்தை குர்ஆன் வலியுறுத்துகிறது.

    ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதன்பின், நல்லொழுக்கத்தைப் பரப்புவதற்கும், தீமைகளைத் தடுப்பதற்கும் அமைச்சகம் ஒன்றை அமைத்தனர். அப்போது முதல் தலிபான்கள் பிறப்பித்த ஆணைகளை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.

    இவை அனைத்தும் பெண்களை சமமற்ற முறையில் நடத்தும் வகையில் அமைந்துள்ளன. பெண்கள் சிறுமிகளுக்கு ஆடை கட்டுப்பாடுகள், கல்வி கற்க, வேலைக்குச் செல்லத் தடை, பொது இடங்களுக்கு ஆண்களின் துணை இல்லாமல் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

    மேலும், அண்மையில் ஆப்கானிஸ்தானில் நர்சிங் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளை பெண்கள் பயில தாலிபான் அரசு தடை விதித்துள்ளது.

    இந்நிலையில் தாலிபான் அரசின் இந்த தடை உத்தரவிற்கு அந்நாட்டு கிரிக்கெட் வீரர் ரஷித் கான் வருத்தம் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "கற்றலின் முக்கியத்துவத்தை குர்ஆன் வலியுறுத்துகிறது. ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான கல்வி மற்றும் மருத்துவ நிறுவனங்கள் அண்மையில் மூடப்பட்டதை நான் ஆழ்ந்த வருத்தத்துடனும் ஏமாற்றத்துடனும் நினைத்துப் பார்க்கிறேன். இந்த முடிவு பெண்களின் எதிர்காலத்தை மட்டுமல்ல, நமது சமூகத்தின் கட்டமைப்பையும் ஆழமாக பாதித்துள்ளது.

    நமது அன்புக்குரிய தாயகமான ஆப்கானிஸ்தான் ஒரு முக்கியமான கட்டத்தில் நிற்கிறது. ஒவ்வொரு துறையிலும், குறிப்பாக மருத்துவத் துறையில் வல்லுநர்கள் நம் நாட்டுக்கு மிகவும் தேவை. பெண் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் கடுமையான பற்றாக்குறை பெண்களின் உடல்நலம் மற்றும் கண்ணியத்தை நேரடியாக பாதிக்கிறது.

    ஆதலால் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு நான் மனப்பூர்வமாக வேண்டுகோள் விடுக்கிறேன், இதனால் ஆப்கானிஸ்தான் பெண்கள் தங்கள் கல்வி உரிமையை மீட்டெடுக்கவும், நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கவும் முடியும். அனைவருக்கும் கல்வியை வழங்குவது ஒரு சமூகப் பொறுப்பு மட்டுமல்ல. அது நமது தார்மீகக் கடமை

    • டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் முஜீப் உர் ரஹ்மான் இடம் பிடித்துள்ளார்.
    • ஒருநாள் அணிக்கு ரஹ்மத் ஷா துணை கேப்டனாக நியமிக்கபட்டுள்ளார்.

    காபூல்:

    ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 9ம் தேதி தொடங்குகிறது. இதில் முதலில் டி20 போட்டிகள் நடைபெறுகின்றன. அதைத்தொடர்ந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகின்றன.

    இந்நிலையில், ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டி20 அணிக்கு ரஷித் கான் கேப்டனாகவும், ஒருநாள் அணிக்கு ஹஸ்மத்துல்லா ஷாகிதி கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருநாள் அணிக்கு ரஹ்மத் ஷா துணை கேப்டனாக நியமிக்கபட்டுள்ளார். டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் முஜீப் உர் ரஹ்மான் இடம் பிடித்துள்ளார்.

    ஆப்கானிஸ்தான் டி20 அணி விவரம்; ரஷித் கான் (கேப்டன்), ரஹ்மனுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), முகமது இஷாக் (விக்கெட் கீப்பர்), செடிகுல்லா அடல், ஹஸ்ரத்துல்லா ஜசாய், முகமது நபி, தர்வீஷ் ரசூலி, ஜுபைத் அக்பரி, குல்பாடின் நைப், கரீம் ஜனத், அஸ்மத்துல்லா ஓமர்சாய், நாங்யல் கரோட்டி, முஜீப் உர் ரஹ்மான், நூர் அகமது, பசல் ஹக் பரூக்கி, பரீத் அகமது, நவீன் உல் ஹக்.

    ஆப்கானிஸ்தான் ஒருநாள் அணி விவரம்; ஹஸ்மத்துல்லா ஷாகிதி (கேப்டன்), ரஹ்மத் ஷா (துணை கேப்டன்), ரஹ்மனுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இக்ராம் அலிகில் (விக்கெட் கீப்பர்), அப்துல் மாலிக், செடிகுல்லா அடில், தர்வீஷ் ரசூலி, அஸ்மத்துல்லா ஓமர்சாய், முகமது நபி, குல்பைதின் நைப், ரஷித் கான், நாங்யல் கரோட்டி, ஏ.எம்.கசன்பர், முஜீப் உர் ரஹ்மான், பசல் ஹக் பரூக்கி, பிலால் சமி, நவீத் சத்ரான், பரீத் அகமது மாலிக்.

    • பூமியில் சுமார் 192 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளது.
    • ஆப்கானிஸ்தானில் முதலில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    ஜம்மு காஷ்மீரில் 5.2 ரிக்டர் அளவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 10.43 மணியளவில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத்  தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

    பூமியில் சுமார் 192 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கமானது ஏற்பட்டுள்ளதாக அதன் அறிக்கை தெரிவிக்கின்றது. இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

    இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை. மேலும், பொருட்சேதமும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஆப்கானிஸ்தானில்  முதலில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும் அதன் காரணமாகவே ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டள்ளது. அந்நாட்டின் பல்வேறு பள்ளத்தாக்கு பகுதிகளில் இது உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    • முதலில் பேட் செய்த இலங்கை 133 ரன்கள் எடுத்தது.
    • ஆப்கானிஸ்தான் 18.1 ஓவரில் 134 ரன்கள் எடுத்து வென்றது.

    அல் அமேரத்:

    வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை 2024 (எமர்ஜிங் ஆசிய கோப்பை) டி20 கிரிக்கெட் தொடர் ஓமனில் நடைபெற்றது.

    இதில் பங்கேற்ற 8 அணிகளில் இருந்து குரூப் ஏ-வில் இருந்து இலங்கை ஏ, ஆப்கானிஸ்தான் ஏ அணியும், குரூப் பி-யில் இருந்து இந்தியா ஏ, பாகிஸ்தான் ஏ அணியும் அரையிறுதிக்கு முன்னேறின. வங்காளதேசம் ஏ, ஹாங்காங், யு.ஏ.இ., ஓமன் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.

    இந்த தொடரின் அரையிறுதி ஆட்டங்களில் பாகிஸ்தான் ஏ அணியை வீழ்த்தி இலங்கை ஏ அணியும், இந்தியா ஏ அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் ஏ அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

    இந்நிலையில், இலங்கை ஏ, ஆப்கானிஸ்தான் ஏ அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி நேற்று அல் அமேரத்தில் நடந்தது.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த இலங்கை 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 133 ரன்கள் எடுத்தது. சஹன் ஆராசிகே 64 ரன்கள் எடுத்தார்.

    அடுத்து, 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 18.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றதுடன், எமர்ஜிங் ஆசிய கோப்பையையும் வென்று அசத்தியது.

    • மகளிர் அமைச்சகம் அறநெறி அமைச்சகமாக மாற்றப்பட்டது.
    • பெண்கள் பொது இடங்களில் சத்தமாகப் பேசவும், பாடவும் தடை விதிக்கப்பட்டது.

    2021 ஆம் ஆண்டில் இருந்து ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் தாலிபான் ஆட்சியில் இஸ்லாம் மதத்தின் ஷரியத் சட்டத்தின் பெயரால் மக்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. பொது இடங்களில் நடமாடுவது, பண்டிகை கொண்டாட்டங்கள், ஆண்கள் சவரம் செய்வதுவரை அனைத்துக்கும் தனித்தனி விதிகள் உள்ளன.

    குறிப்பாக பெண்களுக்கு உடை சுதந்திரம், கல்வி, சமூக வாழ்க்கை என அனைத்தும் மறுக்கப்பட்ட அவலமான சூழலே அங்கு நிலவுகிறது. 2021 அதிகாரத்துக்கு வந்த பின்னர் தலைநகர் காபூலில் உள்ள மகளிர் அமைச்சகம் அறநெறி அமைச்சகமாக மாற்றப்பட்டது. இதன் மேற்பார்வையிலேயே மேற்கூறிய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த அறநெறி அமைச்சகம் தற்போது புதிய கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது.

    அதாவது, உயிர் கொண்டு அசையும் எந்த ஒன்றின் புகைப்படங்களையும் செய்தி ஊடகங்களில் வெளியிடக்கூடாது என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாலிபான் சட்டப்பிரிவு 17 இன் படி உயிருள்ளவற்றின் [living beings] புகைப்படஙகள் ஊடகங்களில் காட்டப்படுவது தடை செய்யப்படுகிறது.

     

    இந்த புதிய விதியை ஆப்கனிஸ்தானின் பல்வேறு இடங்களில் தாலிபான் கட்டுப்பாட்டு ஊடகங்கள் செயல்படுத்த தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மனிதர்களின் புகைப்படங்களை வெளியிடாமல் செய்தி ஊடகம் எவ்வாறு செயல்படும் என்ற கேள்வியும் எழுந்துள்ள நிலையில் இந்த புதிய விதியை தீவிரமாக கடைபிடிக்க செய்தியாளர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

    முன்னதாக சமீபத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின்படி பெண்கள் தங்களின் முகத்தை வெளியே காட்டவும், பொது இடங்களில் சத்தமாகப் பேசவும், பாடவும் தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • ஒருநாள் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.
    • தென் ஆப்பிரிக்கா அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

    ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான ஒருநாள் தொடர், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பி பார்க்க செய்தது. பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொண்டு விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.

    ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் அபாரமாக ஆடிய ஆப்கானிஸ்தான் அணி இரண்டிலும் வெற்றி பெற்று அசத்தியது. இதே வேகத்தில் மூன்றாவது போட்டியை எதிர்கொண்ட ஆப்கானிஸ்தான், அதில் மட்டும் தோல்வியை தழுவியது. இதனால், மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

    இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது ஆப்கானிஸ்தான் வீரர் ரகமத் ஷா அவுட் ஆன விதம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. போட்டியின் ஒன்பதாவது ஓவரை வீசிய நிகிடியின் பந்தை ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர்-பேட்டர் ரகமனுள்ளா குர்பாஸ் ஓங்கி அடித்தார்.

    எனினும், அந்த பந்து நிகிடி கையை நோக்கி சென்றது. அதனை பிடிக்க நிகிடி முயற்சிக்க, அது அவரது கையில் இருந்து நழுவி அருகே ரன் ஓட முயற்சித்த ரகமத் ஷாவின் தலையில் பட்டு, நேரடியாக ஸ்டம்ப்களை தாக்கியது. பந்து ஸ்டம்ப்களை அடிக்கும் போது அவர் கிரீஸை விட்டு வெளியே நின்றிருக்க அவர் அவுட் என தீர்ப்பு கொடுக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


    • முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 169 ரன்கள் எடுத்தது.
    • அந்த அணியின் குர்பாஸ் 89 ரன்னில் அவுட்டானார்.

    ஷார்ஜா:

    ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா இடையிலான 3-வது ஒருநாள் போட்டி சார்ஜாவில் நடந்தது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 169 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சிறப்பாக ஆடிய குர்பாஸ் 89 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் நிகிடி, பெலுக்வாயோ, நபா பீட்டர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 170 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. ஆரம்பம் முதல் நிதானமாக ஆடினர்.

    டோனி சோர்சி 26 ரன்னும், பவுமா 22 ரன்னும், ஹென்ரிக் 18 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து இறங்கிய மார்கிரம் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா 3 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்து வென்றது. மார்கிரம் 69 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஆனாலும், ஒருநாள் தொடரை ஆப்கானிஸ்தான் 2-1 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது குர்பாசுக்கு அளிக்கப்பட்டது.

    • முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 311 ரன்கள் குவித்தது.
    • அந்த அணியின் குர்பாஸ் சதமடித்து அசத்தினார்.

    ஷார்ஜா:

    ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி சார்ஜாவில் நடந்தது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 311 ரன்கள் குவித்தது. சிறப்பாக ஆடிய குர்பாஸ் 105 ரன்னும், ரஹ்மத் ஷா அரைசதம் அடித்து 50 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய அஸ்மத்துல்லா உமர்சாய் 86 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் நிதானமாக ஆடினர். ஆனாலும் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சில் சிக்கி விரைவில் விக்கெட்களை இழந்தனர்.

    பவுமா 38 ரன்னும், டோனி சோர்சி 31 ரன்னும், மார்கிரம் 21 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் விரைவில் வெளியேறினர்.

    இறுதியில், தென் ஆப்பிரிக்கா 134 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 177 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. அத்துடன் ஒருநாள் தொடரை 2-0 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

    ஆப்கானிஸ்தான் சார்பில் ரஷீத் கான் 5 விக்கெட்டும், கரோடி 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 22ம் தேதி நடைபெற உள்ளது.

    • டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா 106 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய ஆப்கானிஸ்தான் 107 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    ஷார்ஜா:

    தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஷார்ஜாவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் செய்ய முடிவெடுத்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 33.3 ஓவரில் 106 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் வியான் முல்டர் பொறுப்புடன் ஆடி அரைசதம் கடந்து 52 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விரைவில் வெளியேறினர். 4 வீரர்கள் டக் அவுட்டாகினர்.

    ஆப்கானிஸ்தான் சார்பில் ஃபரூக்கி 4 விக்கெட்டும், காசன்ஃபர் 3 விக்கெட்டும், ரஷித் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 107 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 26 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. குல்பதீன் நயீப் 34 ரன்னும், அஸ்மதுல்லா ஒமர்சாய் 25 ரன்னும் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.

    இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆப்கானிஸ்தான் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

    • தென் ஆப்பிரிக்கா அணியின் நான்கு வீரர்கள் டக் அவுட் ஆகினர்.
    • ஆப்கானிஸ்தான் தரப்பில் ஃபரூக்கி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ஷார்ஜாவில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது.

    அதன்படி பேட்டிங்கை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் துவக்க வீரர்களான ஹென்ட்ரிக்ஸ் மற்றும் டோனி டி சோர்சி முறையே 9 மற்றும் 11 ரன்களை எடுத்து அவுட் ஆகி வெளியேறினர். அடுத்து களமிறங்கிய கேப்டன் மார்க்ரம் 2 ரன்களில் ஏமாற்றினார்.

    இவருடன் களமிறங்கிய ஸ்டப்ஸ் ஐந்து பந்துகளை எதிர்கொண்ட நிலையில், ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆகி வெளியேறினார். இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய கைல் வெர்ரைன் (10) மற்றும் ஜேசன் ஸ்மித் (0) சொதப்பினர். மற்ற வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆன வியான் முல்டர் நிதானமாக ஆடி அரைசதம் கடந்தார்.

    இவரைத் தொடர்ந்து களமிறங்கியவர்களில் ஆன்டில் மற்றும் நிகிடி ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆக மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 33.3 ஓவர்களில் 106 ரன்களை மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.

    ஆப்கானிஸ்தான் சார்பில் சிறப்பாக பந்துவீசிய ஃபரூக்கி நான்கு விக்கெட்டுகளையும், காசன்ஃபர் மூன்று விக்கெட்டுகளையும், ரஷித் கான் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 

    ×