என் மலர்
நீங்கள் தேடியது "இந்தூர்"
- பிச்சைக்காரர்கள் குறித்து அரசுக்கு தகவல் தெரிவிப்பதற்காக தனி மொபைல் எண் வழங்கப்பட்டுள்ளது.
- 64 குழந்தைகள் பராமரிப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்தூர்:
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்ற அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்தூரில் பிச்சை எடுப்பதும், பிச்சை போடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் கொடுப்போருக்கு 1000 ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஜனவரி 2-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
பிச்சைக்காரர்கள் குறித்து அரசுக்கு தகவல் தெரிவிப்பதற்காக தனி மொபைல் எண் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துவருகின்றனர். பிச்சைக்காரர்களை அகற்றுவதற்கான இந்த திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும், மக்கள் தங்கள் பகுதிகளில் பிச்சை கேட்கும் நபர்களைப் பற்றிய தகவல்களை வழங்க முன்வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுபற்றி மாவட்ட கலெக்டர் ஆஷிஷ் சிங் கூறுகையில், "பிச்சைக்காரர்கள் பற்றி தகவல் கொடுப்பதற்காக வழங்கப்பட்ட எண்ணில் சுமார் 200 பேர் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். அதில், 12 பேர் கொடுத்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 பேருக்கு தலா 1000 ரூபாய் வெகுமதி வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
பிச்சை எடுப்பதற்கான தடையை மீறுவோர் மீது பாரதிய நியாய் சன்ஹிதா சட்டத்தின் 223-வது பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஒரு வருடம் வரை சிறை தண்டனையும், 5,000 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.
இந்தூரில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் அடையாளம் காணப்பட்டு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். 64 குழந்தைகள் பராமரிப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்தூர் உள்ளிட்ட 10 முக்கிய நகரங்களை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்றும் கனவுத் திட்டத்தை மத்திய சமூக நலன் மற்றும் அதிகாரமளித்தல் துறை தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
- இறுதியில் அவரது கழுத்தை அறுத்தார் என்று டிசிபி அபினய் விஸ்வகர்மா கூறினார்
- இருவருக்கும் இடையில் முன் விரோதம் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் குடிபோதையில் நடந்த சிறு தகராறு கொடூர கொலையில் முடிந்துள்ளது.
வினோத் ரத்தோர், 35, நேற்று [வெள்ளிக்கிழமை] மதியம் தெருவில் நடந்து கொண்டிருந்தபோது, பிரமோத் சாய் யாதவ், 29, அவரை பின்னால் இருந்து வந்து தரையில் தள்ளினார்.
வினோத் மீது பிரமோத் கத்தியால் தாக்கினார். வினோத் வலியால் துடித்தபோது, பிரமோத் தொடர்ந்து கத்தியால் குத்தினார், இறுதியில் அவரது கழுத்தை அறுத்தார். இதில் படுகாயம் அடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று டிசிபி அபினய் விஸ்வகர்மா கூறினார்
கொலைக்குப் பிறகு பிரமோத், குல்கர்னி தனது வீட்டிற்கு தப்பிச் சென்றார், அங்கு உள்ளூர்வாசிகள் அவரைப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், பிரமோத் குற்றத்தின் போது தானும் வினோத்தும் குடிபோதையில் இருந்ததாக தெரிவித்தார்.
சிறு வாக்குவாதம் ஏற்பட்டு, வினோத், பிரமோத்தை மடிக்கக்கூடிய கத்தியால் தாக்கியதில், அவரது விரலில் லேசான காயம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரமோத், கத்தியை பறித்து, வினோத்தை குத்தி கொலை செய்துள்ளார்.
In a chilling incident, a 24-year-old man was brutally stabbed to death by his neighbour in #Indore, #MadhyaPradesh on Friday afternoon. The victim, #VinodRathore, was brutally murdered in broad daylight as the attacker not only stabbed him 18 times but also slit his throat,… pic.twitter.com/NY1VtZ1XrU
— Hate Detector ? (@HateDetectors) December 27, 2024
இருவருக்கும் இடையில் முன் விரோதம் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட மடிப்பு கத்தியை பறிமுதல் செய்து பிரமோத் மீது பிஎன்எஸ் பிரிவு 103 இன் கீழ் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
- இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நகரம் இந்தூர்.
- பிச்சை கொடுப்பதன் மூலம் பாவத்தில் பங்குதாரர்களாக மாற வேண்டாம்
இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நகரம் இந்தூர். மத்திய பிரதேசத்தில் உள்ள இந்த நகரத்திலும் இந்தியாவில் உள்ள வேறெந்த நகரத்தையும் போலவே பிச்சைகாரர்கள் அதிகம் இருக்கிறார்கள்.
இந்த பிச்சைக்காரர்கள் நகரத்தின் தூய்மையைக் கெடுப்பதாகக் கருதிய மாவட்ட நிர்வாகம் அவர்களை ஒழித்துக்கட்ட புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது வரும் ஜனவரி 1ம் தேதி முதல், பிச்சைக்காரர்களுக்குப் பிச்சை போடுபவர்கள் மீது வழக்குப்பதிவு [எஃப்.ஐ.ஆர்] பதிவு செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்தூரில் பிச்சை எடுப்பதைத் தடை செய்து நிர்வாகம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிச்சை எடுப்பதற்கு எதிரான எங்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் இந்த மாத இறுதி வரை தொடரும். ஜனவரி 1 முதல் யாராவது பிச்சை போடுவது, கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும். மக்களுக்கு பிச்சை கொடுப்பதன் மூலம் பாவத்தில் பங்குதாரர்களாக மாற வேண்டாம் என்று இந்தூரில் வசிப்பவர்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்
பிச்சை எடுப்பதற்கு எதிரான பிரச்சார திட்ட அலுவலர் தினேஷ் மிஸ்ரா கூறுகையில், நாங்கள் இதுதொடர்பாக ஆராயும்போது சில பிச்சைக்காரர்கள் வீடு வைத்திருப்பதையும், மற்றவர்களின் குழந்தைகள் வங்கியில் வேலை செய்வதையும் அறிந்தோம்.
ஒரு முறை பிச்சைக்காரர் ஒருவர் ரூ. 29,000 வைத்திருந்ததைப் பார்த்தோம். மற்றொரு பிச்சைக்காரர் வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்குவதை அறிந்தோம்.
இங்கு பிச்சை எடுப்பதற்காக ராஜஸ்தானைச் சேர்ந்த குழந்தைகளுடன் ஒரு கும்பல் வந்தது. அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து குழந்தைகளை மீட்கப்பட்டனர் என்று தெரிவித்தார்.
- இந்தூரில் 'காதலிக்க தாடி இல்லாத ஆண்கள் வேண்டும்' என பதாகைகள் ஏந்தி இளம்பெண்கள் பேரணி
- தாடி வைத்த ஆண்கள் அழகா? அல்லது தாடி வைக்காத ஆண்கள் அழகா? என இணையத்தில் விவாதம்.
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் 'காதலிக்க தாடி இல்லாத ஆண்கள் வேண்டும்' என பதாகைகள் ஏந்தி இளம்பெண்கள் பேரணியாக சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில் பல்வேறு பதாகைகளை பெண்கள் ஏந்தி சென்றுள்ளனர். குறிப்பாக 'தாடியை நீக்கி காதலை காப்பாற்று' (Remove beard, save love) என்ற பதாகையையும் கிளீன் சேவ் செய்யவில்லையெனில் காதலிக்கமாட்டோம் (No Clean Shave, No Love) என்ற பதாகையையும் , தாடி வேண்டுமா காதலி வேண்டுமா முடிவு உங்கள் கையில் (Keep a beard or keep a girlfriend, the choice is yours) என்ற பதாகையையும் பெண்கள் ஏந்தி சென்றனர்.
இந்த வீடியோ வைரலானதையடுத்து, தாடி வைத்த ஆண்கள் அழகா? அல்லது தாடி வைக்காத ஆண்கள் அழகா? என இணையத்தில் நெட்டிசன்கள் காரசாரமாக விவாதம் நடத்தினர்.
இந்த பேரணி உண்மையான பேரணியா? இல்லை ரீல்ஸ்காக எடுக்கப்பட்ட வீடியோவா? என்ற விவரம் தெளிவாக தெரியவில்லை.
#WATCH | No Clean Shave, No Love: Indore Girls Take to the Streets with a Unique Condition for Dating Boys!#IndoreNews #viralvideo pic.twitter.com/yepTLKAZDL
— Free Press Madhya Pradesh (@FreePressMP) October 18, 2024
- இதற்கு முன்பு ஒரே நாளில் 9,26,000 மரக்கன்றுகளை நட்டு அசாம் மாநிலம் கின்னஸ் சாதனை புடைத்திருந்தது.
- மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கின்னஸ் புத்தகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ சான்றிதழை பெற்றுக்கொண்டார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 24 மணி நேரத்தில் 11 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கின்னஸ் புத்தகத்தில் இருந்து அதிகாரப்பூர்வ சான்றிதழை பெற்றுக்கொண்டார்.
இந்த சாதனை குறித்து மோகன் யாதவ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தூய்மையான நகரம் என்ற சாதனையை தொடர்ந்து ஒரே நாளில் அதிக மரக்கன்றுகள் நடப்பட்ட நகரம் என்ற சாதனையையும் படைத்த இந்தூரின் சகோதர சகோதரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்தூர் நகரம் ஒரே நாளில் 11 லட்சத்துக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டு உலக சாதனை படைத்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
இதற்கு முன்பு ஒரே நாளில் 9,26,000 மரக்கன்றுகளை நட்டு அசாம் மாநிலம் கின்னஸ் சாதனை புடைத்திருந்தது. அச்சாதனையை தற்போது இந்தூர் முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளது.
- தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 17 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
- இந்தூர் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க.வின் சங்கர் லால்வானி 12,26,751 வாக்குகள் பெற்றார்.
போபால்:
பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 290-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வருகிறது.
தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 17 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க.வின் சங்கர் லால்வானி அபார வெற்றி பெற்றார்.
இவர் 12,26,751 வாக்குகள் பெற்றார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட பகுஜன் சமாஜ் வேட்பாளர் 51,659 வாக்குகள் பெற்றுள்ளார். இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் 11,75,092 ஆகும்.
இந்தத் தொகுதியில் நோட்டா இரண்டாம் இடம் பிடித்துள்ளது. 2,18,674 வாக்குகளை நோட்டா பெற்றுள்ளது.
பாராளுமன்ற தேர்தலில் 10 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி இது என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் மும்முரமாக நடந்து வருகிறது.
- 12 மணி நிலவரப்படி குறைத்து 1 லட்சம் வாக்கு வித்தியாசம் இருந்தால் மட்டுமே தற்போதே வெற்றியை உறுதி செய்ய முடியும்.
இந்தியாவில் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் மும்முரமாக நடந்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு தொகுதிகளில் பா.ஜ.க.வின் என்.டி.ஏ. கூட்டணி முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி கடந்த தேர்தலில் பெற்றதை விட கூடுதல் தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.
இந்த நிலை எந்த நேரமும் மாறும் என்ற சூழலில், மதியம் 12 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளுள் 165 தொகுதிகளில் வாக்கு வித்தியாசம் 10,000 என்ற அளவிலேயே உள்ளது. எனவே தற்போதுள்ள நிலவரத்தை வைத்துக்கொண்டு வெற்றியை நிச்சயிக்க முடியாது. 12 மணி நிலவரப்படி குறைத்து 1 லட்சம் வாக்கு வித்தியாசம் இருந்தால் மட்டுமே தற்போதே வெற்றியை உறுதி செய்ய முடியும்.
இந்நிலையில் இந்தூர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடந்துக் கொண்டு இருக்கும் நிலையில். 1.35 லட்சத்திற்கு மேற்பட்டோர் நோட்டாவிற்கு வாக்களித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தூர் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளருக்கு 60 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.
தற்போதைய நிலவரப்படி இந்தூரில் பா.ஜ.க. வேட்பாளர் சுமார் 7 லட்சம் வாக்குகளை பெற்று முன்னணியில் உள்ளார். கடந்த 1989 ஆம் ஆண்டு முதல் பா.ஜ.க. கோட்டையாக கருதப்படும் இந்தூர் தொகுதியில் இந்த முறை சுமார் 1 லட்சத்து 35 ஆயிரம் பேர் நோட்டாவுக்கு வாக்களித்து இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
- பா.ஜனதா வேட்பாளர் சங்கர் லால் வாணி அசுர வேகத்தில் முன்னிலை பெற்றார்.
- மக்களும் நோட்டாவுக்கு வாக்களிக்குமாறு காங்கிரஸ் கோரிக்கை.
மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காண்டிபம் தனது வேட்புமனுவை திரும்பப் பெற்று பா.ஜ.க.வில் இணைந்தார்.
காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட 2 மாற்று வேட்பாளர்களின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டதால், அத்தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால், வாக்குப்பதிவின் போது காங்கிரஸ் தொண்டர்களும், மக்களும் நோட்டாவுக்கு வாக்களிக்குமாறு காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சி பிரசாரம் செய்தது.
இந்தூர் தொகுதியில் வாக்குப்பதிவு தொடக்கம் முதலே பா.ஜனதா வேட்பாளர் சங்கர் லால் வாணி அசுர வேகத்தில் முன்னிலை பெற்றார். அவர் ஒரு மணி நேரத்தில் ஒரு லட்சம் வாக்குகளை கடந்தார். 9.30 மணி நிலவரப்படி சங்கர் லால் வாணி 1 லட்சத்து 9 ஆயிரத்து 56 வாக்குகள் பெற்றார்.
அப்போது அவர் 93 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றார். நோட்டா 16 ஆயிரத்து 480 ஓட்டுகளுடன் 2-வது இடத்தில் இருந்தது. பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் 3 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பெற்று இருந்தார்.
இந்தூர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரை தவிர மற்ற அனைவரும் டெபாசிட் இழக்கிறார்கள்.
- 53 வயது நபர் ஒருவர் 57 வயது பெண்ணுடன் லிவ் இன் டுகதர் ரிலேஷன்ஷிப்பில் கடந்த 10 ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளார்.
- பெண் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் அவரது உடலை 3 நாட்களாக வீட்டிலேயே அந்த நபர் வைத்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், இறந்த தனது லிவ் இன் டுகதர் பாட்னர் உடலை புதைக்க இடம் கிடைக்காததால் சாலையில் விட்டுச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தூரில் 53 வயது நபர் ஒருவர் 57 வயது பெண்ணுடன் லிவ் இன் டுகதர் ரிலேஷன்ஷிப்பில் (திருமணம் சசெய்துகொள்ளாமல் சேர்நது வாழும் முறை) கடந்த 10 ஆண்டுகளாக வாழ்ந்து வந்துள்ளார்.
இதற்கிடையில் பெண் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் அவரது உடலை 3 நாட்களாக வீட்டிலேயே அந்த நபர் வைத்துள்ளார். அக்கம்பக்கத்தினர் வீட்டில் ஏதோ மோசமான வாடை வருவதாக அவரிடம் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பெண்ணின் உடலை சாக்கில் கட்டி சாந்தன் நகரில் உள்ள சாலையில் விட்டுச்சென்றுள்ளார்.
தகவலறிந்து வந்து உடலைக் கைப்பற்றிய போலீஸார் அந்த நபரைத் தேடி வந்தனர். ராஜ்மோஹல்லா பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் அலைந்துகொண்டிருந்த அவரிடம் விசாரித்ததில் இறுதிச் சடங்கு இல்லாததால் உடலை சாலையில் வீட்டுச் சென்றதாக போலீசிடம் தெரிவித்துள்ளார்.
அவர் புத்தி சுவாதீனம் இல்லாதவறாக பூங்காவாக அலைந்து கொண்டிருந்ததாக போலீஸார் தெறிவித்தனர். உயிரிழந்த பெண்ணின் உடலை உடற்கூறாய்வு செய்து பார்த்தபோது அவர் கல்லீரல் தொடர்பான நோயினால் உயிரிழந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து பெண்ணின் உடலுக்கு உரிய முறையில் இறுதிச்சடங்கு செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளது.
- சிறார்களை காப்பக ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் அடித்து கொடுமை படுத்துவதாக புகார்கள் எழுந்தன.
- 4 வயது குழந்தையை 2 நாள் உணவு கொடுக்காமல் குளியலறையில் வைத்து சித்திரவதை செய்துள்ளனர்.
மத்தியப்பிரதேசம் மாநிலம் இந்தூரில் தனியார் அறக்கட்டளை நடத்தும் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வந்தது. இந்த குழந்தைகள் காப்பகத்தை வாத்ஸல்யபுரம் ஜெயின் டிரஸ்ட் அமைப்பினர் நடத்தி வந்தனர். அங்கு தங்கி இருக்கும் சிறார்களை காப்பக ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகள் அடித்து கொடுமை படுத்துவதாக புகார்கள் எழுந்தது. அதனை தொடர்ந்து குழந்தைகள் நலக்குழுவினர் மற்றும் காவல் துறையினர் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த விசாரணை அதிகாரி, "இங்கு தங்கியுள்ள சிறுவர்களை நிர்வாகிகள் அடித்து துன்புறுத்தி இருக்கிறார்கள். சிறிய தவறு செய்தாலும் தலைகீழாக தொங்கவிடுதல், இரும்பு கம்பியால் சூடு போடுதல், கட்டி வைத்து அடித்தல், அடுப்பில் காய்ந்த மிளகாயை போட்டு நுகர்ந்து பார்க்க வைத்தல், உள்ளிட்ட பல கொடுமைகளை இங்குள்ள சிறுவர்கள் அனுபவித்து வந்துள்ளனர். 4 வயது குழந்தையை 2 நாள் உணவு கொடுக்காமல் குளியலறையில் வைத்து சித்திரவதை செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காப்பக ஊழியர்கள் 5 பேர் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்துள்ளோம்" எனக் கூறினார்.
இதுகுறித்து இந்தூர் கூடுதல்போலீஸ் கமிஷனர் அமரேந்திரசிங் கூறும்போது, "தற்போதுகாப்பகத்தை மூடி சீல் வைத்துள்ளோம். அங்கிருந்த குழந்தைகள் அரசு மருத்துவமனைகள் மற்றும் பாதுகாப்பான குழந்தைகள் காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். குழந்தைகள் நலக்குழுவினர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.
- நவி மும்பை மூன்றாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.
- 'சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்கள்' பிரிவில், மகாராஷ்டிரா முதலிடம்.
மத்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் தூய்மைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டுக்கான முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டது.
இதில், இந்தூர் மற்றும் சூரத் நாட்டின் தூய்மையான நகரங்களாகத் தேர்வு செய்யப்பட்டன. தொடர்ந்து, நவி மும்பை மூன்றாவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.
'ஸ்வச் சர்வேக்ஷன் விருதுகள் 2023' இல் 'சிறந்த செயல்திறன் கொண்ட மாநிலங்கள்' பிரிவில், மகாராஷ்டிரா முதலிடத்தைப் பிடித்தது. அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் பிடித்துள்ளது.
இதுதொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்தூர் தொடர்ந்து ஏழாவது முறையாக தூய்மையான நகர பட்டத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.