என் மலர்
நீங்கள் தேடியது "ஊக்கத்தொகை"
- குடும்ப அட்டை ஒன்றுக்கு 59 காசு ஊக்கத் தொகை வழங்கப்படும்.
- ஊக்கத்தொகை ரேசன் கடை ஊழியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
ரேஷன் கடை ஊழியர்கள் மற்றும் கட்டுநர்களுக்கு பொங்கல் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டை ஒன்றுக்கு 59 காசு ஊக்கத் தொகை வழங்கப்படும்.
ஊக்கத்தொகை ரேசன் கடை ஊழியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- முதலில் பியாரி திதி யோஜனா திட்டம் செயல்படுத்தப்படும்.
- தேர்தலில் வெற்றி பெற்று வாக்குறுதியை நிறைவேற்றும்.
புதுடெல்லி:
பியாரி திதி யோஜனா திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய கர்நாடக துணை முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான டி.கே.சிவகுமார், `தேர்தலில் வெற்றி பெற்று வாக்குறுதியை நிறைவேற்றும் என நம்பிக்கை தெரிவித்தார்.
டெல்லியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் முதலில் பியாரி திதி யோஜனா திட்டம் செயல்படுத்தப்படும்
கர்நாடகாவில் இந்த உத்தரவாத திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டதால் டெல்லியிலும் இந்த திட்டத்தை கொண்டு வருவதாக கர்நாடக துணை முதல்-மந்திரி சிவக்குமார் தெரிவித்தார்.
பெண்களுக்கு மாதம் ரூ.2,500 ஊக்கத் தொகை வழங்கும் 'பியாரி திதி யோஜனா' திட்டத்தை காங்கிரஸ் இன்று அறிவித்துள்ளது.
டெல்லியில் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
- 5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
- ஆதரவும் இல்லாத அவர்களுக்கு தமிழக அரசு தான் துணையாக இருக்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தீபஒளி திருநாளுக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அமைப்பு சாரா தொழிலாளர்களும், அவர்களுக்கும் கீழாக உள்ள தொழிலாளர்களும் தீப ஒளித் திருநாளைக் கொண்டாட கையில் பணமில்லாமல் தடுமாறுவது வருத்தமளிக்கிறது.
தீப ஒளிக்காக ஊக்கத்தொகை மற்றும் பரிசுத் தொகுப்பு வழங்க வேண்டும் என்று அமைப்பு சாரா தொழிலாளர்கள் விடுத்த வேண்டுகோள்கள் அரசின் செவிகளில் விழாதது ஏமாற்றமளிக்கிறது.
அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வாரத்தில் அதிகபட்சமாக 3 அல்லது 4 நாட்கள் மட்டும் தான் வேலை கிடைக்கிறது. அதைக் கொண்டு தான் அவர்கள் வாரம் முழுவதும் வாழ்க்கை நடத்த வேண்டும்.
அதற்கே அவர்களுக்கு வருமானம் போதாது எனும் நிலையில், அவர்களால் தீப ஒளிக்காக புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் இனிப்புகள் வாங்குவதென்பது சாத்தியமற்ற ஒன்று. எந்த ஆதரவும் இல்லாத அவர்களுக்கு தமிழக அரசு தான் துணையாக இருக்க வேண்டும்.
புதுவையில் தீப ஒளி திருநாளையொட்டி கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தலா 5000 ரூபாயும், அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு 1500 ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி ரங்கசாமி அறிவித்திருக்கிறார்.
அனைத்து செலவுகளுக்கும் மத்திய அரசை நம்பியிருக்கும் புதுவை அரசால் இதைச் செய்ய முடியும் போது தமிழக அரசால் ஏன் செய்ய முடியாது? என்ற வினா எழுகிறது. அந்த வினா மிகவும் நியாயமானது தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
அமைப்பு சாராத் தொழிலாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் தீப ஒளி திருநாளைக் கொண்டாடுவதை உறுதி செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும்.
அதை நிறைவேற்றும் வகையில், அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்கள் வாயிலாக அனைத்து வகையான அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் ரூ.5,000 வீதம் ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- சிறப்பு ஊக்கத்தொகையால் சுமார் 1.20 லட்சம் கரும்பு விவசாயிகள் பயன் அடைவார்கள்.
- 2023-24 அரவை பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவுசெய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க தமிழக அரசு ரூ.247 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம் மத்திய அரசு நிர்ணயித்துள்ள ரூ.2,919.75 யுடன் மாநில அரசின் ஊக்கத் தொகையான ரூ.215 சேர்த்து கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ.3,134.75 கிடைக்கும்.
இந்த சிறப்பு ஊக்கத்தொகையால் சுமார் 1.20 லட்சம் கரும்பு விவசாயிகள் பயன் அடைவார்கள்.
2023-24 அரவை பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவுசெய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை அளிக்கப்பட்டுள்ளது.
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
- புதிய குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் மாநில அரசின் ஊக்கத் தொகை 01.09.2024 முதல் நடைமுறைக்கு வரும்.
தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன் கருதி 2024-25 ஆம் ஆண்டு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் காரீப் கொள்முதல் பருவத்திற்கு சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105/-ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130/-ம் கூடுதல் ஊக்கத் தொகையாக தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் காரீப் 2024-25 நெல் கொள்முதல் பருவத்திற்கு ஆதார விலையுடன் ஊக்கத்தொகையும் சேர்த்து விவசாயிகளுக்கு வழங்குவது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (26.06.2024) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், கடந்த 2023-2024 காரீப் கொள்முதல் பருவத்தில் 25.06.2024 வரையில் 3,175 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 3,72,310 விவசாயிகளிடமிருந்து 29,91,954 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.6,442.80 கோடி விற்பனை தொகையாக வழங்கப்பட்டது ஆகிய விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், அதே அடிப்படையில், இந்த ஆண்டும் காரீப் கொள்முதல் 2024-2025 பருவத்தில் தேவையான அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.
இந்த ஆண்டு 12.06.2024 அன்று மேட்டூர் அணை திறக்கப்பட இயலாத சூழ்நிலையில், டெல்டா மாவட்ட விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ.78.67 கோடி மதிப்பீட்டில் குறுவைத் தொகுப்பு திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்திட உத்தரவிட்டார்.
இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் விவசாயிகளின் நலன் கருதி காரீப் 2024-2025 பருவத்திற்கான நெல் கொள்முதலினை 01.09.2024 முதல் மேற்கொள்ள மத்திய அரசை, இவ்வரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க மத்திய அரசு தமிழ்நாட்டில் காரீப்2024-2025 பருவத்திற்கான நெல் கொள்முதலினை 01.09.2024 முதல் மேற்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசு அண்மையில் காரீப் 2024-2025 பருவத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலையாக சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,300/-என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2.320/- என்றும் நிர்ணயித்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாட்டில் நெல் உற்பத்தியினைப் பெருக்கும் வகையிலும், விவசாயிகளின் வாழ்வை வளப்படுத்தி அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடு, 2024-2025 காரீப் கொள்முதல் பருவத்திற்கு (Kharif Marketing Season) சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105/-ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130/-ம் கூடுதல் ஊக்கத் தொகையாக தமிழ்நாடு அரசின் நிதியிலிருந்து வழங்கிடவும், அதன்படி விவசாயிகளிடமிருந்து சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2.405/- என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,450/- என்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தவிட்டுள்ளார்.
இந்த புதிய குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் மாநில அரசின் ஊக்கத் தொகை 01.09.2024 முதல் நடைமுறைக்கு வரும்.
அத்துடன், தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு, அடுத்துவரும் 2025-26 நிதியாண்டில், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500/- என்ற வீதத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு வழங்கிடவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- 91 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை பணிபுரிந்தவர்களுக்கு ரூ.85 வழங்க உத்தரவு.
- போக்குவரத்து கழகத்தில் ஆண்டின் கடைசி நாளில் ஊழியர் பணியில் இருந்திருக்க வேண்டும்.
அரசு போக்குவரத்து கழகங்களின் ஊழியர்களுக்கு 2023ம் ஆண்டிற்கான சாதனை ஊக்கத் தொகை வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதில், 200 நாட்கள் மற்றும் அதற்கு மேல் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.625 ஊக்கத்தொகை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, 151 நாள் முதல் 199 நாட்கள் வரை பணியாற்றிய ஊழியர்களுக்கு ரூ.195 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
91 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை பணிபுரிந்தவர்களுக்கு ரூ.85 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒழுங்கு நடவடிக்கை தொடரப்பட்டுள்ளவர்கள், சாதனை ஊக்கத்தொகை பெற தகுதியற்றவர்கள் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
மேலும், போக்குவரத்து கழகத்தில் ஆண்டின் கடைசி நாளில் ஊழியர் பணியில் இருந்திருக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
- ரூ.8 கோடிக்கான காசோலையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமகிருஷ்ணனிடம் வழங்கினார்.
- முழுநேர பயிற்சி பெறும் 212 மாண வர்களும், பகுதிநேர பயிற்சி பெறும் 80 மாணவர்களும், என மொத்தம் 292 மாணவர்கள் பயன்பெறுவர்.
சென்னை:
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 கோவில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவிற்காக அரசு மானியமாக ரூ.8 கோடிக்கான காசோலையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுசீந்திரம் கன்னியாகுமரி மாவட்ட கோவில்களின் அறங்காவலர் குழுத் தலைவர் ராமகிருஷ்ணனிடம் வழங்கினார்.
இதே போல் ஒருகால பூஜைத் திட்ட கோவில்களில் பணிபுரிந்து வரும் அர்ச்சகர்களின் மகன், மகள்களின் மேற்படிப்பிற்கான உயர் கல்வித் தொகையினை 400 மாணவர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக 8 மாணவர்களுக்கு அதற்கான வங்கி வரைவோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
கோவில்கள் சார்பில் நடத்தப்படும் பயிற்சிப் பள்ளிகளில் முழு நேரமாகவும், பகுதி நேரமாகவும் பயிலும் மாணவர்களுக்கான ஊக்கத் தொகையை முறையே ரூ.4 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரமாக உயர்த்தி 292 மாணவர்களுக்கு வழங்கிடும் அடையாளமாக 8 மாணவர்களுக்கு அதற்கான வங்கி வரைவோலைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதன்மூலம் முழுநேர பயிற்சி பெறும் 212 மாண வர்களும், பகுதிநேர பயிற்சி பெறும் 80 மாணவர்களும், என மொத்தம் 292 மாணவர்கள் பயன்பெறுவர்.
நிகழ்ச்சியில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன், கூடுதல் ஆணையர் திருமகள், ஹரிப்ரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
- கடந்த மாதம் மைசூருவில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் கிரகலட்சுமி திட்டத்தை ராகுல்காந்தி தொடங்கி வைத்தார்.
- காங்கிரஸ் ஆட்சி அமைய அருள்பாலித்ததுடன், உத்தரவாத திட்டங்களை அமல்படுத்தவும் சாமுண்டீஸ்வரி அம்மன் உறுதுணையாக இருந்துள்ளார்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி அமைந்துள்ளது. இந்த அரசு பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயண திட்டம், 200 யூனிட் இலவச மின்சார திட்டம், 10 கிலோ ரேஷன் அரிசி வழங்கும் திட்டம், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் கிரகலட்சுமி திட்டம், வேலையில்லாத பட்டதாரிகளுக்கு நிதி உதவி வழங்கும் திட்டம் என 5 திட்டங்களை அமல்படுத்துவதாக அறிவித்து, அமல்படுத்தியுள்ளது.
இதில் கடந்த மாதம் மைசூருவில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் கிரகலட்சுமி திட்டத்தை ராகுல்காந்தி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி மாநிலம் முழுவதும் 1 கோடியே 20 லட்சம் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்ட தொடக்க விழாவையொட்டி முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் சாமுண்டிமலைக்கு சென்று சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு தலா ரூ.2 ஆயிரம் காணிக்கையாக வழங்கியிருந்தனர்.
இந்த நிலையில் மைசூருவை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.சி. தினேஷ் கூலிகவுடா சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோருக்கு ஒரு கோரிக்கை கடிதம் எழுதி வைத்துள்ளார்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் ஆட்சி அமையவும், 5 உத்தரவாத திட்டங்களை செயல்படுத்தவும் வேண்டி நீங்கள் இருவரும் சாமுண்டீஸ்வரி அம்மனை தரிசனம் செய்தனர். அதன்படி மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைய அருள்பாலித்ததுடன், உத்தரவாத திட்டங்களை அமல்படுத்தவும் சாமுண்டீஸ்வரி அம்மன் உறுதுணையாக இருந்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்ட தொடக்க விழாவின் போதும் சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு நீங்கள் ரூ.2 ஆயிரம் வழங்கினீர்கள். எனவே கிரகலட்சுமி திட்டத்தின் கீழ் மாதந்தோறும் அரசு சார்பில் ரூ.2 ஆயிரம் ஊக்கத்தொகையை சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்த கோரிக்கை கடிதத்தை படித்து பார்த்தவுடன் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், உடனே இந்த கோரிக்கையை நிறைவேற்றும்படி கர்நாடக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை மந்திரி லட்சுமி ஹெப்பால்கருக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டுள்ளார்.
- பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிப்பு திட்டத்தில் ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை அளிக்கும் திட்டம் 2023-24-ம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது.
- இத்திட்டத்தின் பயனை ஒருமுறை மட்டுமே பயனாளி பெற முடியும்.
ராமநாதபுரம்
தமிழக அரசு 'வேளாண்மை துறையின் மூலம் பாரம்பரிய நெல் விதை வங்கி" பராமரிப்பு விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை அளிக்கும் திட்டம் 2023-24-ம் ஆண்டில் செயல்ப டுத்தப்பட உள்ளது.
மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிக்கும் விவசாயிகளுக்கு, தமிழக அரசு வேளாண்மைத் துறையின் மூலம் ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை அளிக்கும் திட்டம் இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. பாரம்பரிய நெல் விதை வங்கி திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் அக்ரிஸ்நெட் வலைதளம் அல்லது உழவன் செயலியில் விண்ணப்பிக்க வேண்டும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், குறைந்தபட்சம் 100 பாரம்பரிய நெல் ரகங்களை நெல் வங்கியில் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பராமரித்துவரும் பாரம்பரிய நெல் ரகங்களை மறு உற்பத்தி செய்து இனத் தூய்மையுடன் தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.
ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் மரபு சார் நெல் ரகங்களை உற்பத்தி செய்து பராமரிக்க வேண்டும். விதை வங்கியில் பராமரிக்கப்படும் பாரம்பரிய நெல் ரகங்கள் நல்ல முளைப்புத்திறனுடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். வயல்களில் உரிய அளவில் பாரம்பரிய முறையில் சாகுபடி செய்ய வேண்டும்.
மாவட்ட கலெக்டர் தலைமையிலான தேர்வுக் குழு மூலம் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு மாநில தேர்வுக் குழுவிற்கு பரிந்துரை செய்யப்படும். இத்திட்டத்தின் பயனை ஒருமுறை மட்டுமே பயனாளி பெற முடியும்.
கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பார்வையிடும் வகையில் முறையாக காட்சிப்படுத்த வேண்டும். பாரம்பரிய நெல் விதை வங்கி பராமரிக்கும் விவசாயிகள், ஊக்கத்தொகை பெறு வதற்காக அக்ரிஸ்நெட் வலைதளம் அல்லது உழவன் செயலியில் விண்ணப்பிக்க தேவையான விண்ணப்ப படிவங்களை தங்கள் வட்டாரத்திலுள்ள வேளாண்மை உதவி இயக்குநரை அணுகி பெற்றுக் கொள்ளலாம்
மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
- நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீா் கட்டணம், இதர வரியினங்களையும் செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
- 2023- 24 ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டுக்கான சொத்து வரியை வரும் அக்டோபா் 31 -ந் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
காங்கயம்:
காங்கயம் நகராட்சியில் 2023-24 ம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டுக்கான சொத்துவரியை அக்டோபா் 31 -ந் தேதிக்குள் செலுத்தி 5 சதவீதம் ஊக்கத்தொகை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காங்கயம் நகராட்சி ஆணையா் கு.கனிராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:- காங்கயம் நகராட்சியில் வசிப்பவா்கள் 2023- 24 ஆம் ஆண்டின் இரண்டாவது அரையாண்டுக்கான சொத்து வரியை வரும் அக்டோபா் 31 -ந் தேதிக்குள் செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் சொத்து வரியை செலுத்திகொள்ளலாம்.
இதேபோல நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீா் கட்டணம், இதர வரியினங்களையும் செலுத்தி நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
- இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியியை அக்.1 முதல் மார்ச் 31 வரையிலும் செலுத்த வேண்டும்.
- சொத்து வரியை பொதுமக்கள் எளிதாகச் செலுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் அரையாண்டு தொடக்கம், இறுதியில் குறுந்தகவல் மூலம் வலைதள இணைப்பு அனுப்பப்படுகிறது.
சென்னை:
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்கள் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்.1 முதல் செப்.30-ந் தேதி வரையிலும், இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியியை அக்.1 முதல் மார்ச் 31 வரையிலும் செலுத்த வேண்டும்.
இதில் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை ஏப்.30-ந் தேதிக்குள்ளும், இரண்டாம் அரையாண்டு சொத்து வரியை அக்.30-ந் தேதிக்குள்ளும் செலுத்துவோருக்கு மாநகராட்சி சார்பில் 5 சதவீதம் ஊக்கத் தொகை அதிகபட்சம் ரூ. 5 ஆயிரம் வரை வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டு முதல் நிதியாண்டில் ரூ. 769.62 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டு உள்ளது. இவற்றில் ரூ.321 கோடியை இணையதளம் மூலம் 4.77 லட்சம் சொத்து உரிமையாளர்கள் செலுத்தி உள்ளனர்.
சொத்து வரியை பொதுமக்கள் எளிதாகச் செலுத்தும் வகையில் மாநகராட்சி சார்பில் அரையாண்டு தொடக்கம், இறுதியில் குறுந்தகவல் மூலம் வலைதள இணைப்பு அனுப்பப்படுகிறது.
இதுபோல் www.chennai corporation.gov.in என்ற மாநகராட்சி இணையதளம், நம்ம சென்னை கைப்பேசி செயலி, சொத்துவரி ரசீதில் உள்ள கியூ ஆர் குறியீடு மூலம் சொத்து வரியை செலுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சேலம்:
தமிழ்நாடு உள்ளாட்சிகள் சட்டம் 1998 பிரிவு 84-ன் படி 2023-2024-ம் ஆண்டின் 2-ம் அரையாண்டிற்கான சொத்துவரியினை அக்டோபர் 31-ந் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்கள் 5 சதவீத ஊக்கத்தொகை அல்லது ரூ.5 ஆயிரம் வரை பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள் என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் சேலம் மாநகராட்சிப் பகுதியில் உள்ள சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியினை இல்லம் தேடி வரும் வரி வசூலிப்பாளர்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் மூலம் அமைந்துள்ள வரி வசூல் மையங்கள் ஆகியவற்றில் கடன் மற்றும் பற்று அட்டை, காசோலை மற்றும் வரைவோலை மூலமாகவும், டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக செலுத்தவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
எனவே சேலம் மாநகராட்சிப் பகுதிக்குட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்களது சொத்து வரியினை அக்டோபர் 31-ந் தேதிக்குள் செலுத்தி அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 5 சதவீத ஊக்கத்தொகை அல்லது ரூ. 5 ஆயிரம் வரை பெற்று பயன்பெறலாம் என மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.