என் மலர்
நீங்கள் தேடியது "காசி"
- பாட்னாவிலிருந்து நூறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது கயா.
- இந்துக்களுக்கும், பவுத்தர்களுக்கும் புனித தலமாகத் திகழ்கிறது.
கயா செல்லாமல் காசி யாத்திரை நிறைவு பெறாது என்பார்கள்.
புராண காலத்தில் கயாசுரன் என்பவன், பிரம்மனை நோக்கி கடுமையான தவம் புரிந்தான். அவன் முன்பாக தோன்றிய பிரம்மன், "உனக்கு என்ன வரம் வேண்டும்?" என்று கேட்டார். அதற்கு கயாசுரன், "தேவர்கள் அனைவரையும் வெல்லும் வரம் எனக்கு வேண்டும்" என்ற வரத்தைக் கேட்டு பெற்றான்.
இதையடுத்து தேவர்கள் அனைவரையும் வென்ற கயாசுரன் அவர்களை துன்புறுத்தினான். இதனால் தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் சென்று தஞ்சமடைந்தனர். இதையடுத்து கயாசுரனுடன் போரிட்ட சிவபெருமான், அவனை காசியில் வைத்து சூலத்தால் குத்தி, அவனது தோலை உரித்ததாக புராணத்தில் உள்ளது.
இன்னொரு புராணத்தின் படி, கயாசுரனால் துன்பப்பட்ட தேவர்கள், மகாவிஷ்ணுவிடம் சரணடைந்தனர். கயாசுரன் இருப்பிடம் சென்ற விஷ்ணு, "உனக்கு தேவையான வரத்தை தருகிறேன். தேவர்களை துன்புறுத்துவதை நிறுத்து" என்றார்.
உடனே கயாசுரன், "பாவங்களைப் போக்கும் அனைத்து தீர்த்தங்களையும் விட, நான் உயர்ந்த தீர்த்தமாக இருக்க வேண்டும். அதற்கு என் புனிதமான உடலை தொடுபவர்கள் அனைவரும் மோட்சத்திற்குச் செல்ல வேண்டும்" என்ற வரம் கேட்டான். மகாவிஷ்ணுவும் அந்த வரத்தை அருளினார்.
அதன்படி கயாசுரனின் உடல், புனிதமானதாக மாறியது. பாவம் செய்பவர்கள் அனைவரும், கயாசுரனின் உடலை தொட்டு மோட்சத்திற்குச் செல்லத் தொடங்கினர்.
இதைக் கண்ட எமதர்மன், "இது என்ன அநியாயமாய் இருக்கிறது. பாவம் செய்பவர்கள் அனைவருமே மோட்சத்துக்கு செல்வர் என்றால், நரக தண்டனை யார்தான் அனுபவிப்பது" எனக் கேட்டு விஷ்ணு பகவானிடம் முறையிட்டார்.
உடனே விஷ்ணு பகவான் பிரம்மனை அழைத்து "நீ கயாசுரனிடம் சென்று 'உன் உடல் புனிதமானது. ஆகவே அதைக் கொண்டு யாகம் செய்ய விரும்புகிறோம். எனவே யாகம் செய்ய உன் உடலைத் தர வேண்டும்' என்று கேள்" என்றார்.
பிரம்மனும் அப்படியே கயாசுரனிடம் கேட்க, அவனும் தன்னுடைய உடலைக் கொடுத்தான். அவனின் உடல் மீது தேவர்கள் புடை சூழ அமர்ந்து, பிரம்மன் வேள்விளைத் தொடங்கினார். வேள்வி முடியப்போகும் தருவாயில், கயாசுரனின் தலை அசைய ஆரம்பித்தது.
பிரம்மனின் உத்தரவுப்படி, கயாசுரனின் தலை மீது ஒரு கல்லை எடுத்து வைத்தார், எமதர்மன். அப்போதும் கயாசுரனின் தலை அசைவது நிற்கவில்லை. அனைவரும் மகாவிஷ்ணுவை வேண்டினர்.
அப்போது மகாவிஷ்ணு அங்கு தோன்றி, தன் கதாயுதத்தால் கயாசுரனின் தலை அசையாதபடி தடுத்து நிறுத்தினார். மேலும் கயாசுரனிடம் "உனக்கு என்ன வரம் வேண்டும்?" என்று கேட்டார்.
அதற்கு கயாசுரன், "நான் கேட்பது பழைய வரம்தான் என்றாலும், அதையே எனக்கு தந்தருள வேண்டும். இந்த இடம் என் பெயரால் வழங்கப்பட வேண்டும். இங்கு வந்து யார் ஒருவர் தன் முன்னோர்களுக்கு பிண்டம் வைத்து சிரார்த்தம் செய்தாலும், அவர்கள் செய்த பாவங்கள் விலகி, முக்தி கிடைக்க வேண்டும்" என்றான்.
விஷ்ணு பகவானும் மகிழ்ந்து "அப்படியே ஆகட்டும்" என வரம் கொடுத்ததாக சொல்வார்கள். இந்த புராண நிகழ்வு ளின் காரணமாகவே, இங்குள்ள பல்குனி நதியும், விஷ்ணு பாதமும், அட்சய வடமும் புனிதமானதாக கருதப்படுகிறது.
பாட்னாவிலிருந்து நூறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, கயா. ஒரு காலத்தில் வரலாற்று ரீதியாக புகழ்பெற்ற மகத பேரரசின் ஒரு பகுதியாக இருந்த இந்த நகரம், பல்குனி நதியின் ஓரத்தில் அமைந்துள்ளது. இந்துக்களுக்கும், பவுத்தர்களுக்கும் இது ஒரு புனித தலமாகத் திகழ்கிறது.
- கங்கை நதியை தரிசிக்கும் வகையில் சுற்றுலா ஏற்பாடு.
- 3 அடுக்கு ஏ.சி.பெட்டியில் ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லப்படும்.
தஞ்சாவூர்:
கும்பகோணத்தில் இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா நிறுவனம் (ஐ.ஆர். சி.டி.சி.) மற்றும் ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் சந்திப்பு கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்திற்கு ஐ.ஆர். சி.டி.சி. மேலாளர் முத்துக்குமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியன் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா நிறுவனத்தின் சுற்றுலா திட்டம் மூலம் கார்த்திகை தீபம் அன்று சிவபெருமான் மற்றும் கங்கை நதியை தரிசிக்கும் வகையில் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சுற்றுலாவிற்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 9-ந் தேதி ராமநாதபுரத்தில் இருந்து தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, விழுப்புரம், சென்னை வழியாக அயோத்திக்கு செல்லும் ஸ்ரத்தா சேது எக்ஸ்பிரஸ் (22613) ரெயிலில் தனியாக 3 அடுக்கு ஏ.சி.பெட்டியில் ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லப்படும்.
இந்த ரெயில் காசி, கயா, பிரக்யாராஜ் ஆகிய பகுதிகளில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் வகையில் இயக்கப்பட உள்ளது.
இந்த ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு 3 வேளை உணவு வழங்கப்படும். இந்த சுற்று லாவிற்கு முன்பதிவு செய்ய மற்றும் மேலும் விபரங்கள் தெரிந்து கொள்ள 82879 31977 மற்றும் 8287932070 எண்களை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சக்திக்கு மீறி செய்யும் தானம் விஷத்திற்கு சமம்.
- கடமைக்காக செய்யும் தீர்த்த யாத்திரையால் எந்த பலனும் கிடைக்காது.
காசி யாத்திரை பற்றி சொல்ல ஆரம்பிக்கும் பொழுது, முக்கியமாக தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள் உண்டு. காசி யாத்திரை என்பது, நேரடியாக காசிக்குச் செல்லும் வழக்கம் கொண்டது இல்லை.
ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கி, காசிக்கு சென்று மீண்டும் ராமேஸ்வரம் வந்து, இந்த யாத்திரையை பூர்த்தி செய்வார்கள். ஆகையால் காசி யாத்திரை பற்றி சொல்ல ஆரம்பிக்கும் பொழுது ராமேஸ்வரத்தை பற்றி சொல்ல வேண்டியது அவசியம்.
காசி செல்லும் முன் ராமேஸ்வரம் தொடங்கி, பிரயாகை மற்றும் கயாவும் சேர்ந்ததுதான் காசி யாத்திரை. இதற்கு 'காசி யாத்திரா க்ரமம்' என்ற விதியும் உண்டு.
ராமேஸ்வர யாத்திரையை பற்றி நன்கு முழுமையாக அறிந்து, ராமேஸ்வரம் சென்று பின்னர் காசி செல்வது நன்மை தரும்.
மேலும் இந்த யாத்திரையில் சொல்லப்பட்ட அனைத்தையும் கடைப்பிடிக்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் பாதி அளவாவது கடைப்பிடிப்பது நன்மை தரும்.
அவசர அவசரமாக யாத்திரை சென்று திரும்புவது சுற்றுலா சென்று திரும்புவது போல் அமைந்து விடும். இதில் எவ்வித பயனும் இல்லை.
கட்டுரைகளில் கோவில் வரலாறு பற்றி மட்டும் எழுதுவார்கள். ஆனால் நாம் அந்த கோவில்களில் உள்ள சம்பிரதாயங்களையும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் சென்று வரக்கூடிய இடங்களில் இருக்கக்கூடிய இடர்பாடுகளையும் புரிந்துகொள்ள வேண்டும்.
எல்லா இடங்களிலும் நன்மைகளும் உண்டு. தீமைகளும் உண்டு. ஒரு இடத்தில் அதிக கூட்டங்கள் கூடும் பொழுது, அங்கு சில பிரச்சனைகளும் உருவாகும். சில இடங்களில் அதிகார மையம் உருவாகும்.
சில இடங்களில் போலித் தன்மை உருவாகும். மந்திரங்களையும், சம்பிரதாயங்களையும் முழுமையாக அறியாத பொழுது, பக்தர்களுக்கு எது உண்மை? எது பொய்? என தெரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படுவதில் ஆச்சரியம் இல்லை.
காசி யாத்திரையை முழுமையாக செய்ய எண்ணுபவர்களுக்கு, இந்த கட்டுரை பலன் தர வேண்டும் என்பதால் தான், இங்கே சில விஷயங்களை விரிவாக எடுத்துக் கூறுகிறோம்.
ராமேஸ்வரம் யாத்திரையில் கவனிக்க வேண்டியவை:
ராமநாதபுரம் வந்து தேவிப்பட்டினம் அல்லது தர்ப்ப சயனம் சென்று, அங்கு தரிசனங்களை முடிக்க வேண்டும். பின்னர் ராமேஸ்வரத்தில் லட்சுமண தீர்த்தம் சென்று வபனம் (மொட்டை அடித்துக்கொள்தல்) செய்து கொள்ள வேண்டும்.
இங்கே முழுமையாக மொட்டை அடிக்காமல், உச்சியில் இரண்டே இரண்டு முடிகளை விட்டுவிட்டு மொட்டை அடித்துக்கொள்வது நல்லது. (மொட்டை அடித்துக்கொள்ளும்போது, மீசை, தாடியை எடுப்பதில் சிலருக்கு உடன்பாடு கிடையாது.
ஆனால் அந்தந்த தேசத்தில் உள்ள ஆச்சாரத்தை அனுஷ்டித்து நாம் சில விஷயங்களை செய்வது நல்லது. சில வட தேசங்களில் மீசையை எடுக்க மாட்டார்கள். அது அவர்கள் வழக்கம்).
மொட்டை அடித்து முடித்ததும், நீராடுவதற்கு சங்கல்பம் செய்ய வேண்டும். அதாவது அங்குள்ள புண்ணிய தீர்த்தத்தில் குளிப்பதற்கு முன் செய்ய வேண்டிய சங்கல்பம். அதன்பின் இரண்ய சிரார்த்தம், பிண்ட தானம் போன்றவை அவரவர் சக்திக்கு ஏற்றபடி செய்து, அங்குள்ள தீர்த்தங்களில் நீராட வேண்டும்.
அதைத் தொடர்ந்து ராமநாதரை அர்ச்சித்து வழிபட வேண்டும். இறைவனை வழிபட்டதும் தனுஷ்கோடி செல்ல வேண்டும். பொதுவாக எந்த நதி தீர்த்தம், குளம், சமுத்திரம் போன்ற இடங்களில் குளிப்பதாக இருந்தாலும், அதற்குரிய நமஸ்காரம், சங்கல்பம், தர்ப்பணம் போன்றவை செய்வது நல்லது.
வலது கையால் தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டு பின் முறையாக குளிக்க வேண்டும். அர்க்கியமும் விடவேண்டும். பின் மனம் உருகி பிரார்த்தனை செய்ய வேண்டும்.
ஒவ்வொரு தீர்த்தங்களும் ஒரு விசேஷ பலனை தருவதால், மொத்தம் 36 முறை நீராட வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இது ஒரே நேரத்தில் செய்ய முடியாவிட்டால், இரண்டு மூன்று நாட்களாக பிரித்துக் கொண்டு செய்வது விசேஷம் என்பது பெரியோர் கருத்து.
ராமேஸ்வரத்தில் தர்ப்பணம் செய்வதைத் தவிர, சுக்ரீவன், நளன், சீதா, லட்சுமணர், ராமச்சந்திர மூர்த்தி ஆகியோரை தியானம் செய்து எல்லோருக்கும் மூன்று முறை தர்ப்பணம் விட வேண்டும்.
கோடிக்கரையில் ஒரு சிரார்த்தமாவது செய்ய வேண்டும். அரிசி, எள்ளு இவைகளால் பிண்ட தானம் செய்ய வேண்டும். எதுவுமே இல்லாவிட்டால் இரண்யமாக (பணம்) தாம்பூலம் வைத்து கொடுத்து விடலாம்.
பின் ராமேஸ்வரம் வந்து கோடி தீர்த்தத்தில் குளித்து, அந்த தீர்த்தத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த யாத்திரை முடிக்கும் பொழுது நாம் உறவினர்களையும், பெரியோர்களையும் நமது இல்லத்தில் வரவழைத்து அன்னமிட்டு யாத்திரையை பூர்த்தி செய்து கொள்வது விசேஷம்.
வருட சிரார்த்தம் என்பது ஒவ்வொரு வருடமும் தாய் - தந்தையர் மரணம் அடைந்த, அதே மாதம் அதே திதி வருவதை குறிக்கும். இதை எக்காரணம் கொண்டும் நிறுத்தக்கூடாது.
விசேஷ சிரார்த்தம் என்பது நாம் தீர்த்த யாத்திரை செல்லும்போது அங்கு செய்வது. இது எப்பொழுது வேண்டுமானாலும், தீர்த்த யாத்திரை செல்லும் போதெல்லாம் செய்யலாம்.
ராமேஸ்வரம், காசி போன்ற இடங்களுக்கு எப்பொழுது செல்லலாம் என்று கேட்டால், வருடத்தின் 365 நாட்களும் சென்று நாம் செய்ய வேண்டிய கடமைகளை செய்யலாம்.
அதே நேரத்தில் அமாவாசை, மகா சங்கரனம், கிரகணம், மஹாளய பட்சம் போன்ற புண்ணிய காலங்கள் மிக விசேஷமானதாகும். இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது.
பல ஆன்மிக அன்பர்கள், 'எனது தாய் தந்தையாரின் சிரார்த்தத்தை வருடா வருடம் ராமேஸ்வரம் சென்று செய்கிறேன். காசி சென்று செய்கிறேன்' என கூறுவார்கள். இவ்வாறு செய்வது கூடாது.
தாய் தந்தையரின் சிரார்த்தத்தை (திதி) தனியாக செய்துவிட்டு, பின் ராமேஸ்வரத்திலும், காசியிலும் செய்ய வேண்டிய விசேஷ சிரார்த்தத்தை அங்கு செய்யலாம்.
ஏனென்றால் தீர்த்த யாத்திரையில் வழக்கமான சிராத்தத்தை செய்வதா? அல்லது அங்கு செய்ய வேண்டிய விஷேச சிரார்த்தத்தை செய்வதா? என்ற கேள்வி எழும்.
தீர்த்த யாத்திரை செல்லும் போது வழக்கமான சிரார்த்த திதி வந்தால், காசி - ராமேஸ்வரம் போன்ற எல்லைக்கு செல்வதற்கு முன்பாகவே, முன்னோர்களின் வருஷ சிரார்த்தத்தை செய்துவிட்டு, பின் ராமேஸ்வரம் மற்றும் காசி சென்று விசேஷ சிரார்த்தத்தை (திதி) செய்யலாம்.
- பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய தேசியக் கொடியை ஏந்தி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்பட்டு இந்தியாவுடன் சேர்க்கப்படும் என்றார் அசாம் முதல் மந்திரி.
புதுடெல்லி:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மின் கட்டண உயர்வு, வரி விதிப்பு உள்ளிட்டவற்றை எதிர்த்து அப்பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் ஒரு சிலர் இப்பகுதியை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் எனக்கூறி போஸ்டர் ஒட்டியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜார்க்கண்டில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அசாம் முதல் மந்திரி ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா பேசியதாவது:
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 300 இடங்களில் வெற்றி பெற்றபோது அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டது.
இந்த முறை பா.ஜ.க. 400 இடங்களைக் கைப்பற்றினால் மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமியிலும், வாரணாசியில் ஞானவாபி மசூதி இருக்கும் இடத்திலும் கோவில் கட்டப்படும்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்பட்டு பிரதமர் மோடி தலைமையில் இந்தியாவுடன் சேர்க்கப்படும்.
காங்கிரஸ் ஆட்சியில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தொடர்பாக பாராளுமன்றத்தில் எந்த விவாதமும் நடைபெறவில்லை. அது உண்மையில் நம்முடையது. தற்போது, அங்கு போராட்டம் நடந்துவருகிறது.
ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய தேசியக் கொடியை ஏந்தி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இடஒதுக்கீட்டிற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் பா.ஜ.க. அரசு செயல்பட்டு வருகிறது. எஸ்சி, எஸ்டி, ஓபிசி இட ஒதுக்கீடுகளை முடிவுக்கு கொண்டு வந்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் விரும்புகிறது என தெரிவித்தார்.
- 3 ஆண்டுகளாக துபாயில் இருந்து வந்த ராஜேஷ் நேற்று சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார்.
- ராஜேஷ் கைது செய்யப்பட்டதையடுத்து வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தங்கபாண்டியன். இவரது மகன் காசி (வயது 29). இவர் மீது கடந்த 2020-ம் ஆண்டு சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் பாலியல் வன்கொடுமை மற்றும் பண மோசடி புகார் அளித்தார்.
அதன் அடிப்படையில் குமரி மாவட்ட போலீசார் காசியை கைது செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ஏராளமான இளம்பெண்களை குறி வைத்து அவர்களோடு நெருக்கமாக இருந்த காட்சிகளை வைத்து காசி மிரட்டி பணம் பறித்தது அம்பலமானது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக 8 வழக்குகள் பதிவு செய்யப் பட்டது. இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு காசிக்கு உதவியதாக அவரது தந்தை தங்க பாண்டியனை கைது செய்தனர். அவரது நண்பர்கள் டைசன் ஜினோ, தினேஷ் கவுதம் ஆகியோரும் கைது செய்யப்பட்டு ஜாமீ னில் விடுதலை ஆனார்கள்.
இதையடுத்து காசி மீது தொடரப்பட்ட ஒரு பாலியல் வழக்கில் காசிக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதனால் காசி தொடர்ந்து ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். காசி மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதுவரை 7 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஒரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த வழக்கில் காசியுடன் அவரது நண்பர் நாகர்கோவில் ராமன்புதூரை சேர்ந்த ராஜேஷ் என்ற ராஜேஷ்சிங் (43) என்பவர் மீதும் பாலியல் துன்புறுத்தல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர் வெளிநாட்டில் இருந்து வந்தார்.
இதையடுத்து அவரை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இது தொடர்பாக விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. 3 ஆண்டுகளாக துபாயில் இருந்து வந்த ராஜேஷ் நேற்று சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார். சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவரை சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ராஜேஷை நாகர்கோவிலுக்கு அழைத்து வந்தனர். அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. 3 மணி நேரத்திற்கு மேலாக ராஜேஷிடம் விசாரணை மேற்கொண்ட போலீசார் அவரை ஜெயிலில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். இதையடுத்து அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
பின்னர் ராஜேஷ் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். ராஜேஷ் கைது செய்யப்பட்டதையடுத்து இந்த வழக்கிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். விரைவில் இந்த வழக்கிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.
- தங்க அன்னபூரணியை தரிசிக்கவே காசி யாத்திரை செல்கின்றனர்.
- அன்னபூரணியை வணங்கினால் வற்றாத செல்வங்களும், உணவும் கிடைக்கும்.
நாம் உண்ணும் உணவுகள் அனைத்தையும் விளைவிப்பதும், அதற்கு ஆதாரமாய் இருப்பதும் அன்னபூரணியே. இந்த அன்னபூரணியை தனத்திரயோதசி தொடங்கி தீபாவளி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் விரதமிருந்து பூஜை செய்து வணங்கலாம். நம்முடைய வீட்டில் அன்னபூரணி உருவச்சிலை வைத்து பூஜை செய்து வணங்கிட அனைத்து நலன்களையும் வளங்களையும் தருவாள்.
தீபாவளி நாளில் லட்சுமி குபேரபூஜை செய்வது போல நாம் அன்னபூரணியை விரதமிருந்து வணங்கினால் வற்றாத செல்வங்களும், உணவும் கிடைக்கும் என்பது ஐதீகம். காசியில் அன்னபூரணி அள்ள அள்ள குறையாத அட்சயபாத்திரத்தில் பால் அன்னம் தந்து உலக உயிர்களின் அன்னதோஷம் என்னும் வறுமை அண்டாதவாறு அருள்புரிகிறாள்.
தனதிரயோதசி தொடங்கி தீபாவளி, அமாவாசை நாட்களில் காசியில் தங்கமயமாய் காட்சி தரும் அன்னபூரணியை தரிசிக்க வாழ்நாள் முழுவதும் அள்ள அள்ள குறையாத அன்னத்தையும் செல்வத்தை வழங்கிடுவாள் இந்த நாட்களில் தங்க அன்னபூரணியை தரிசிக்கவே பெரும்பாலானோர் காசி யாத்திரை செல்கின்றனர்.
காசியில் தீபாவளியன்று அன்னக்கூடம் என்ற நிகழ்வில் பலவித உணவுகள், பலகாரங்கள் வைத்து பூஜை செய்து அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படும். மறுநாள் லட்டு தேரில் அன்னபூரணி ஊர்வலம் வருவாள். எண்ணற்ற லட்டுகளால் உருவான தேரில் உள்ள லட்டுக்களை பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுப்பார்கள்.
அன்னபூரணி அவதாரம் எப்படி நிகழ்ந்தது. அவர் காசிக்கு எப்படி வந்தார்? என்பதே ஒரு புராண கதையாக சொல்லப்படுகிறது. நான்முகன் என்று போற்றப்படும் பிரம்மனுக்கு முன்பு ஐந்து தலைகள் இருந்தனவாம். இதனால் கர்வம் அதிகமாக இருந்தது. பார்வதி, பரமசிவன், பிரம்மா ஆகிய மூவருக்கும் இடையேயான சிறு பிரச்சினையில் பிரம்மனின் ஒரு தலையை சிவனார் அறுத்து விட்டார்.
இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. பிச்சாடனார் சிவபெருமான் பிரம்மனின் கபாலம் சிவன் கையிலேயே ஒட்டி கொண்டது. இந்த தோஷம் நீங்க பிட்சாடனாராக சிவபெருமான் பல இடங்களில் பிச்சை பெற்றார். ஆயினும் சிவன் கையை விட்டு கபாலம் விழவில்லை. அந்த பாத்திரத்தில் எந்த பொருளும் தங்கவில்லை. அதேநேரம் பிரம்மதேவனை பார்த்து சிவனார் என நினைத்து வணங்கிய பார்வதி, தனக்குத்தானே தண்டனை கொடுத்துக் கொண்டு அன்னபூரணியாக அவதரித்து காசியில் தவம் செய்தாள்.
இந்த சமயத்தில்தான் பிட்சாடனாராக வந்த சிவபெருமான் அன்னபூரணியிடம் பிச்சை பெற்றார். அப்போது பிரம்மனின் கபாலம் சிவபெருமான் கையைவிட்டு விலகியது. சிவனின் பசியை தீர்க்க வந்த அன்னபூரணி உலக பசிப்பிணி தீர்க்க காசியிலேயே தங்கிவிட்டார் என்கிறது புராணக்கதை.
காசியில் நவரத்ன சிம்மாசனத்தில் சம்மணமிட்டு அமர்ந்திருக்கும் அன்னையின் ஒரு கரத்தில் அட்சய பாத்திரமும், மறு கரத்தில் தங்க கரண்டியுடன் கூடிய தங்கத்தில் ஜொலிக்கும் அன்னபூரணியை தீபாவளியின்போது மூன்று நாட்களுக்கு மட்டுமே தரிசிக்க முடியும். அன்னையிடம் பிச்சை கேட்கும் பிட்சாடனார் உருவமும் அருகில் ஆரடி உயரத்தில் உள்ளது. இந்த சிலை வெள்ளியால் செய்யப்பட்டது. நாமும் இந்த தீபாவளி திருநாளில் அன்னபூரணியை வழிபட்டு வற்றாத செல்வம் பெறுவோம்.
- மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு 20.11.2023 -க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
- விவரங்களுக்கு www.hrce.tn.gov.in என்ற துறையின் இணையதளத்தில் தெரிந்துக் கொண்டு பயன்பெறலாம்.
சென்னை:
அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
2022-2023-ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை அறிவிப்பில், "ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாதசுவாமி கோவிலுக்கு இவ்வாண்டில் 200 நபர்கள் ஆன்மிகப் பயணம் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான செலவினத் தொகை ரூ.50 லட்சத்தை அரசே ஏற்கும்" என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, 200 நபர்கள் அரசு நிதியில் காசிக்கு ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து, 2023-2024-ம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில் "ஆன்மிகப் பயணமாக ராமேஸ்வரம், ராமநாத சுவாமி கோவிலில் இருந்து காசி விஸ்வநாதசுவாமி கோவிலுக்கு கடந்த ஆண்டு 200 நபர்கள் அழைத்துச் செல்லப்பட்டதைப் போல, பக்தர்கள் ஆர்வத்தை கருத்தில் கொண்டு, இவ்வாண்டு 300 நபர்கள் அழைத்துச் செல்லப்படுவர். இதற்கான செலவினத் தொகை ரூ.75 லட்சத்தை அரசு ஏற்கும்" என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இந்த ஆன்மிகப் பயணத்திற்கு அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களில், மண்டலத்திற்கு 15 நபர்கள் வீதம் 300 நபர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர் இந்து மதத்தை சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும், 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். இதற்கான விண்ணப்ப படிவங்களை சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்திலிருந்து நேரில் பெற்று கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை உரிய இணைப்புகளுடன் மீள அதே மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு 20.11.2023 -க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
மண்டல இணை ஆணையர்கள் பரிந்துரைக்கும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஆன்மிகப் பயணத்திற்கு தேர்வு செய்யப்படுவர்.
மேலும் ஆன்மிக பயணம் குறித்த விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகம் அல்லது www.hrce.tn.gov.in என்ற துறையின் இணையதளத்தில் தெரிந்துக் கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கிழக்கு மேற்கு கோபுரங்கள் அடிமுதல் நுனிவரை கருங்கற்களால் கட்டப்பட்டவை.
- ராமேஸ்வரம் கோவில் கட்டிடக் கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
இத்திருக்கோவிலானது மிகவும் பழமை வாய்ந்தது.
இதன் கர்ப்ப கிரகம் இலங்கையை சேர்ந்தது.
பராக்கிரம பரகு என்ற மன்னனால் கி.பி.1173ல் கட்டியதாக கல்வெட்டின் மூலம் தெரிய வருகிறது.
ராமேஸ்வரம் கோவில் கட்டிடக் கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
இக்கோவிலின் கிழக்கு மேற்கு கோபுரங்கள் அடிமுதல் நுனிவரை கருங்கற்களால் கட்டப்பட்டவை.
இக்கோவிலில் உள்ள நந்தி (செங்கற்சுண்ணாம்பு) அறையால் அமைக்கப்பட்டது.
இதன் நீளம் 22 அடி, அகலம் 12 அடி உயரம் 17 அடி). இது அழகிய வடிவில் அமையப் பெற்று பார்ப்பதற்கு அழகாக அமையப்பெற்றுள்ளது.
இத்திருக்கோவிலில் உள்ள பிரகாரங்கள் அனைத்தும் மிகவும் நேர்த்தியாகவும், அழகாகவும் அமையப் பெற்றுள்ளது.
இத்திருக்கோவில் மூன்றாம் பிரகாரம் உலகத்திலேயே நீண்ட பிரகாரமாக கருதப்படுகிறது.
பக்தர்களுக்கு வசதி
பக்தர்கள் தங்குவதற்கு தேவஸ்தானத்தில் நவீன வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதிகள் கிடைக்கும்.
இவை தவிர தனியார் துறையில் தங்கும் விடுதிகளும் (லாட்ஜ்) ஏராளமாக உள்ளன.
இவைகளில் நவீன வசதியுடன் கூடிய அறைகள் குறைந்த வாடகையில் கிடைக்கும்.
- ஆருத்ரா தரிசனம் (10 நாட்கள்) (டிசம்பர், ஜனவரி)
- மகா கிருத்திகை (திருக்கார்த்திகை நாள் (பஞ்சமூர்த்திகள் ரத வீதியில் வலம் வருதல்)
இத்திருக்கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்கள்:
1. மகா சிவராத்திரி திருவிழா (பிப்ரவரி, மார்ச்).
2. வசந்த உத்ஸவம் (மே, ஜூன்)
3. ராமலிங்கம் பிரதிஷ்டை (மே, ஜூன்) ராவண சம்ஹாரம், விபீஷணர் பட்டாபிஷேகம், ராமலிங்க பிரதிஷ்டை.
4. திருக்கல்யாண திருவிழா (17 நாட்கள்) (ஜூன், ஆகஸ்ட்). தபசு நாள் பல்லக்கில் சயன சேவை திருக்கல்யாண நாள்.
5. நவராத்திரி விழா (10 நாட்கள்) (செப்டம்பர், அக்டோபர்)
6. கந்த சஷ்டி விழா (6 நாள்) (அக்டோபர், நவம்பர்)
7. ஆருத்ரா தரிசனம் (10 நாட்கள்) (டிசம்பர், ஜனவரி)
இவை தவிர மாத நாள், வார சிறப்பு விழாக்களும் உண்டு.
1. மாத விழா (ஒவ்வொரு கார்த்திகை)
2. பட்ச விழா : பிரதோஷம்
3. வார விழா (வெள்ளிக்கிழமை) அம்பாள் புறப்பாடு.
சிறப்பு விழாக்கள்
1. சங்ராந்தி (தை மாத முதல் நாள்) பஞ்ச மூர்த்திகள் ரதவீதியில் வலம் வருதல்.
2. சித்திரை மாத பிறப்பு (சித்திரை மாத முதல்நாள்) (பஞ்ச மூர்த்திகள் ரத வீதியில் வலம் வருதல்)
3. மகா கிருத்திகை (திருக்கார்த்திகை நாள் (பஞ்சமூர்த்திகள் ரத வீதியில் வலம் வருதல்)
4. தெப்போத்ஸவம் : தை மாத பவுர்ணமியில் பஞ்சமூர்த்திகள் வீதி வலம் வந்து லட்சுமண தீர்த்தத்தில் தெப்பத்திருவிழா நடைபெறும்.
5. வைகுண்ட ஏகாதசியன்றும் ஸ்ரீராம நவமியன்றும் ராமர் புறப்பாடு நடைபெறும்.
6. ஆடி அமாவாசை தை அமாவாசை நாளில் ஸ்ரீகோதண்டராமர் கருட வாகனத்தில் அக்கினி தீர்த்தத்தில் எழுந்தருளி தீர்த்தம் கொடுப்பார்.
- ஆலயத்தில் நடத்தப்படும் அபிஷேக, அர்ச்சனைகள் விபரங்கள்
- உற்சவ விஷேச அலங்காரங்கள் செய்ய, கோவில் முன்அனுமதி பெற வேண்டும்.
ராமேஸ்வரம் ஆலயத்தில் நடத்தப்படும் அபிஷேக, அர்ச்சனைகள் விபரங்கள்:
1. சகஸ்ரகலச அபிஷேகம்
2. சங்காபிஷேகம் (1008)
3. அஷ்டோத்திர கலச அபிஷேகம் (1008)
4. ருத்ராபிஷேகம்
5. உபயாபிஷேகம் (பஞ்சாமிர்தம்)
6. சங்காபிஷேகம் (108) நெய்வேத்தியத்துடன்
7. கெங்காபிஷேகம்
8. பால் அபிஷேகம்
9. ஸ்படிகலிங்க அபிஷேகம் (சுவாமி சன்னதி)
10. பன்னீர் அபிஷேகம் (பன்னீர் நீங்கலாக)
11. கோடி தீர்த்த அபிஷேகம்
12. விபூதி அபிஷேகம்
உற்சவங்கள்:
1. வெள்ளி ரத உத்ஸவம்
2. பஞ்ச மூர்த்தி உத்ஸவம்
3. ஸ்ரீஅம்பாளுக்கு அலங்காரம் செய்ய தங்கப் பல்லக்கில் மூன்றாம் பிரகாரம் சுற்றி வருதல்
4. தங்க ரத வீதி உத்ஸவம்
உற்சவங்கள் விஷேச அலங்காரங்கள் செய்ய விரும்புகிறவர்கள் கோவில் முன் அனுமதி பெற்று சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும்.
திருக்கோவிலாரின் சவுகரியத்தை அனுசரித்து இவைகள் நடத்தி வைக்கப்படும்.
- ஆனால் இந்த ஊரில் பாறைகள் தண்ணீரில் மிதக்கின்றன.
- வடமாநில தலங்களில் காணப்படும் மிதக்கும் பாறைகள் இங்கிருந்து கொண்டு செல்லப்பட்டவையே.
பாறைகள் தண்ணீரில் விழுந்தால் அல்லது போடப்பட்டால் அவைகள் மூழ்குவதுதான் இயல்பு.
ஆனால் இந்த ஊரில் பாறைகள் தண்ணீரில் மிதக்கின்றன.
ராவணனால் கவர்ந்து செல்லப்பட்ட சீதையை மீட்கும் பொருட்டு இலங்கை செல்ல ராமபிரான் பாறைகளை கடலில் தூக்கிப் போட்டு பாலம் அமைத்தார் என்று சொல்வார்கள்.
இலங்கைக்கும், ராமேஸ்ரத்திற்கும் இடையே உள்ள ஆதம் பாலம் அதாவது
தற்போது ராமர் பாலம் என்று கருதுவது ராமபிரான் அமைத்ததே என்ற கருத்து இப்போதும் உள்ளது.
அவ்வாறு ராமர் அமைத்ததாகக் கூறப்படும் பாலத்திற்கும், இங்கே தண்ணீரில் மிதக்கும் பாறைக்கும் நிறைய தொடர்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்.
தீவு நகரமான ராமேஸ்வரத்தில் உள்ள துளசி பாபா மடத்தில் இந்த மிதக்கும் பாறைகள் உள்ளன.
அந்த மடத்தில் ஒரு தொட்டிக்குள் தண்ணீர் நிரப்பி அதில் இரண்டு பாறைகளை மிதக்க விட்டிருக்கிறார்கள்.
இன்னும் சில பாறைகளை அங்கே வருவோர் கைகளால் தொட்டுப் பார்ப்பதற்காக அருகே வைத்திருக்கிறார்கள்.
இலங்கைக்கு செல்ல பாலம் கட்டிய போது ராமர் பயன்படுத்திய பாறைகள்தான் இவைகள் என அங்குள்ளவர்கள் விளக்கம் தருகிறார்கள்.
சிறிதளவு கல்லை தண்ணீருக்குள் போட்டாலே அது மூழ்கிவிடும்.
இவ்வளவு பெரிய பாறைகள் மட்டும் எப்படி மிதக்கின்றன என்று ஆச்சரியத்தில் வியக்கும் பக்தர்கள் இந்த பாறைகளை தொட்டுப் பார்த்து பிரமிக்கிறார்கள்.
மிதக்கும் பாறைகளை தூக்கிப் பார்க்க விரும்புபவர்களை மகிழ்ச்சிப்படுத்த தனியாக இன்னொரு சிறிய தொட்டியில் தண்ணீர் நிரப்பி அதிலும் இரு பாறைகளை மிதக்க விட்டிருக்கிறார்கள்.
விரும்புவோர் அவற்றை தூக்கிப் பார்த்து மகிழலாம்.
அந்தப் பாறை இந்த மடத்திற்கு எப்படி வந்தது என்று விசாரித்த போது "ராமபிரான் இலங்கைக்கு சீதையை மீட்கச் சென்ற போது குறுக்கிட்ட கடலை எப்படி கடப்பது என்று யோசித்தார்.
அப்போது ஒரு கல்லைத் தூக்கி கடலில் போட்டார்.
அவரைத் தொடர்ந்து லட்சுமணரும், ஆஞ்சனேயரும், வானரப்படைகளும் கற்களை தூக்கி போடவே அவைகள் யாவும் மூழ்காமல் மிதந்தன.
மிதந்த பாறைகள் வழியாக இலங்கை சென்று சீதையை மீட்டு வந்ததாக புராணம்.
ராமர் இலங்கை செல்ல கடலுக்குள் தூக்கிப் போட்ட பாறைகள் தான் இவைகள் என்றும்
தற்போது இந்த மடத்தில் உள்ள பாறைகள் தனுஷ்கோடியில் இருந்து எடுக்கப்பட்டவையே என்றும் தெரிவித்தனர்.
1964இல் ஏற்பட்ட புயலில் தனுஷ்கோடி சின்னா பின்னமானதற்குப் பிறகு அந்தப் பகுதிக்கு வந்த வடநாட்டு சாதுக்கள்
தனுஷ்கோடி கடலில் கரைப்பகுதியில் ஏராளமான பாறைகள் மிதந்து கொண்டிருந்ததை கண்டு ஆச்சரியப்பட்டனர்.
அந்த பாறைகளில் சுமார் இரண்டாயிரம் பாறைகளை அவர்கள் சேகரித்தனர்.
அவர்கள் எடுத்துச் சென்ற பாறைகளில் 60 பாறைகள் இந்த மடத்தில் வைக்கப்பட்டுள்ளன.
மீதமுள்ள பாறைகளை வடநாட்டிற்கு கொண்டு சென்றனர்.
இன்று பூரி ஜெகநாதர் கோவில், குஜராத் மாநிலத்தில் உள்ள துவாரக கிருஷ்ணர் கோவில் மற்றும் ரிஷிகேஷ்,
பத்ரிநாத், அலகாபாத், திரிவேணி சங்கமம் ஆகிய இடங்களில் காணப்படும் மிதக்கும் பாறைகள்
இங்கிருந்து கொண்டு செல்லப்பட்டவையே.
புதுச்சேரி அனுமார் கோவிலிலும் இந்த மிதக்கும் பாறைகளைக் காணலாம் என்றும் தெரிவித்தனர்.
ராமமேஸ்வரம் பஸ் நிலையத்தில் இருந்து ராமநாத சுவாமி கோவிலுக்குச் செல்லும் வழியில் மெயின் ரோட்டிலேயே இந்த துளசி பாபா மடம் அமைந்துள்ளது.
இங்கே மிதக்கும் பாறைகளைக் காணலாம்.
- பைரவர் பிரம்மஹத்தி தோஷத்தை தன் திருவடியால் அழுத்தி பாதாளத்தில் தள்ளினார்.
- பக்தர்களின் கொடிய பாவங்களைப் பாதாளத்துக்குள் தள்ளுபவராக அருள் செய்கிறார்.
ராமர் இங்கு சிவபூஜை செய்த போது அவரைப் பிடித்த பிரம்மஹத்தி தோஷம் விலகியது.
அந்த தோஷம் எங்கு செல்வதென தெரியாமல் திணறியது.
அதனால் வேறு யாருக்கும் பாதிப்பு உண்டாகாமல் இருக்க சிவபெருமான் பைரவரை அனுப்பினார்.
பைரவர் பிரம்மஹத்தி தோஷத்தை தன் திருவடியால் அழுத்தி பாதாளத்தில் தள்ளினார்.
பின்னர் இத்தலத்திலேயே அமர்ந்து இங்கு வரும் மனம் திருந்திய பக்தர்களின் கொடிய பாவங்களைப் பாதாளத்துக்குள் தள்ளுபவராக அருள் செய்கிறார்.
இவருக்கு பாதாள பைரவர் என்று பெயர். இவரது சன்னதி கோடி தீர்த்தம் அருகில் உள்ளது.