என் மலர்
நீங்கள் தேடியது "குவாரி"
- பலருக்கு காதுகளில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
- குவாரியை எந்தவித தாமதமும் இன்றி மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
கீழஉப்பிலிக்குண்டு நடந்த குவாரி வெடி விபத்தின் அதிர்வு அருகில் உள்ள கிராமங்களில் உணரப்பட்டது.வெடி விபத்து நடந்தபோது லேசான அதிர்வு இருந்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர். கீழஉப்பிலிக்குண்டு கிராமத்தில் பயங்கர சத்தம் கேட்டதால் என்ன நடந்தது? என பொதுமக்களால் உடனடியாக உணர முடியவில்லை. அந்த கிராமத்தில் மட்டும் பல வீடுகளின் சுவர்கள் சேதமடைந்தன.
மேலும் ஆவியூர் உள்ளிட்ட கிராமங்களில் நேற்று நடந்த வெடி விபத்தால் 40-க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்களில் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. மேலும் பலருக்கு காதுகளில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வெடி விபத்து ஏற்பட்டதில் இருந்து சில நிமிடம் காது கேட்கவில்லை என அவர்கள் தெரிவித்தனர்.
வெடி விபத்து நடந்த குவாரியில் தினமும் இரவு பகலாக வெடி சத்தம் கேட்டு கொண்டே இருக்கும் இதனால் நாங்கள் பல பாதிப்புகளை சந்தித்து வருகிறோம். எனவே இந்த குவாரியை எந்தவித தாமதமும் இன்றி மூட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
- டெம்போ பறிமுதல் செய்யப்பட்டது
- 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
கன்னியாகுமரி:
குலசேகரம் அருகே சுருளோடு பகுதியில் பாறைகள் அதிகம் உள்ளது. இந்த பகுதியில் குவாரி ஒன்று செயல்பட்டு வந்தது.
இதுபற்றி திருவட்டார் தாசில்தார் தினேஷ்சுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர் குவாரிக்கு சென்று ஆய்வு செய்தார். அப்போது குவாரி எந்தவித அரசு அனுமதி பெறாமல் இயங்கி வந்தது தெரியவந்தது.
மேலும் அந்த குவாரியை வேர்கிளம்பி காப்புவிளை பகுதியை சேர்ந்த சுபிஷ் (வயது 40) மற்றும் அவரது சகோதரர்கள் 2 பேர் சேர்ந்து நடத்தி வந்தது தெரிய வந்தது.
உரிய அனுமதி இல்லாமல் குவாரி நடத்தப்பட்டதால் அதனை தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். மேலும் அங்கு கல் ஏற்றுவதற்காக நிறுத்தப்பட்டிருந்த டெம்போவை அதிகாரிகள் பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தனர்.
மேலும் இது தொடர்பாக 3 பேர் மீது கொடுத்த புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- நிலத்தடி நீர் உப்பு நீராக மாறுவதாகவும், உப்பு நீரால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் மாவட்ட கலெக்டர் லலிதாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
- அரசு விதிமுறைகளை மீறி மணல் அள்ளுவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோயில் அருகே தலைச்சங்காடு ஊராட்சி ராஜேந்திரன் வாய்க்காலையொட்டி சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் புதிதாக மணல் குவாரி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு கடந்த இரண்டு மாதங்களாக அரசு விதிமுறைகளை மீறி சுமார் 15 அடி ஆழத்திற்கு மேல் மணலை அள்ளி தனியார் செங்கல் சூளைக்குக்கும் தனியாருக்கும் விற்பனைக்கும் அனுப்பப்படுவதாகவும், விதிமுறைகளை மீறி அதிக ஆழத்தில் மணலை அள்ளுவதால் சுற்றியுள்ள மேலப்பெரும்பள்ளம், தலைச்சங்காடு, குரங்குபுத்தூர், கருவி, பூந்தாழை உள்ளிட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் உப்பு நீராக மாறுவதாகவும், உப்பு நீரால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும் மாவட்ட கலெக்டர் லலிதாவிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்காததால் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று மணல் குவாரியை முற்றுகையிட்டு, அங்கிருந்து மணல் ஏற்றிவந்த லாரியை வழிமறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். போராட்டத்தின்போது அரசு விதிமுறைகளை மீறி மணல் அள்ளுவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். நிலத்தடிநீர் உப்பு நீராவதை தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் மாவட்ட துணை செயலாளர் இமயம் சங்கர், கிளைச் செயலாளர் வீரகுமார், பொறுப்பாளர் விஜயபாலன், திமுக கிளை செயலாளர் பாலபாரதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த செம்பனார்கோயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் மேற்படி இடத்திற்கு சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் பேரில் அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு விலகி சென்றனர். மீண்டும் மணல் எடுத்ததால் ஆக்கூர் முக்கூட்டு வழயாக வந்த லாரிகளை மறித்து போராட்டம் நடைபெற்றது. மணல் குவாரிகளை வலியுறுத்தப்பட்டது.
- கல்-மண் குவாரி அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- குவாரிகளால் ஏற்படும் தூசி காரணமாக விவசாய பணிகள் பாதிக்கப்படும்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடியை அடுத்துள்ள தூம்பக்குளம் பகுதியில் புதிதாக கல்-மண் குவாரி அமைக்க அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. கல்குவாரி அமைய உள்ள இடத்தை சுற்றிழும் 400 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் உள்ளன. மேலும் அருகில் உள்ள முனியாண்டிபுரம் கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தூம்பக்குளத்தில் செயல்படும் அரசு உயர்நிலைப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் கல்-மண் குவாரி அமைத்தால் பொதுமக்கள் கடும் அவதி அடைவார்கள். வெடி வைத்து கற்களை உடைக்கும்போது அங்கு வசிக்கும் விவசாய குடும்பங்களுக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் பாதிப்பு ஏற்படும். குவாரிகளால் ஏற்படும் தூசி காரணமாக விவசாய பணிகள் பாதிக்கப்படும். எனவே இப்பகுதியில் குவாரிகள் அமைக்க கூடாது என பாசன விவசாய சங்கத்தினர் மற்றும் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.