என் மலர்
நீங்கள் தேடியது "சடங்கு"
- அவர்களது உடலில் உள்ள தோலில் தீக்காயங்கள் ஏற்படுத்தப்படும்
- மயக்கம், தலைச்சுற்றல், உதடுகள் மற்றும் முகம் வீங்கியிருக்கும்.
தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் பாரம்பரிய காம்போ [Kambo] மத சடங்கில் பங்கேற்ற 33 வயது நடிகை மார்செலா [Marcela Alcázar Rodríguez] தவளை விஷம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். உடலை தூய்மைப்படுத்துவதாக நம்பப்படும் இந்த சடங்கில் பங்கேற்ற அவர் கடுமையான வயிற்றுப்போக்கால் துடிதுடித்து இறந்துள்ளார்.
காம்போ சடங்கு
இந்த சடங்கில் பங்கேற்பவர்கள் ஒரு லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிக்க வேண்டும். அதன்பின் அவர்களது உடலில் உள்ள தோலில் சிறிய தீக்காயங்கள் ஏற்படுத்தப்படும். அதைத்தொடர்ந்து அந்த காயங்களின் மேல் குறிப்பிட்ட தவளை சளி தடவப்படும். இந்த சளி விஷத்தன்மை கொண்டதாக இருக்கும். இந்த சடங்கு நோய்களை அகற்றி உடலை தூய்மை செய்வதாக காம்போ வழக்கத்தின் நம்பிக்கை ஆகும்.
ஆனால் விஷத்தைக் கொண்டிருக்கும் சளி, இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். வாந்தியைத் தூண்டும் இது சில சமயங்களில் வயிற்றுப்போக்கையும் ஏற்படுத்துகிறது. மற்ற அறிகுறிகளாக மயக்கம், தலைச்சுற்றல், உதடுகள் மற்றும் முகம் வீங்கியிருக்கும். பொதுவாக, அறிகுறிகள் கிட்டத்தட்ட அரை மணி நேரம் நீடிக்கும். இருப்பினும், இரத்த ஓட்டத்தில் விஷத்தின் தாக்கம் அதிகரிப்பது வலிப்பு மற்றும் மரணத்தை ஏற்படுத்தும்.
மார்செலாவுக்கு என்ன ஆனது?
சடங்கு தொடங்கிய உடனேயே மார்செலாவுக்கு அசௌகர்யமும் அதைத் தொடர்ந்து கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது . இந்த அறிகுறிகள் பெரும்பாலும் தூய்மை படுத்தும் செயல்பாட்டின்போது உடலின் எதிர்ப்பு சக்தியால் ஏற்படுகிறது என்று கருதப்படுகின்றன.
மெக்சிகோவின் துராங்கோ Durango பகுதியில் உள்ள ஒரு அறையில் வைத்து இந்த சடங்கை செய்த சாமியார் [shaman] மார்செலாவை வயிற்றுப் போக்கை தாங்கிக்கொள்ளும்படி கூறியுள்ளார். ஆனால் அவரது நிலை கவலைக்கிடமான நிலையில் அங்கிருந்து சாமியார் தப்பியோடினார்.
தோழி ஒருவர் அவருக்கு உதவ வந்தபோதிலும் மார்செலா தவளை விஷத்தால் ஏற்பட்ட வயிற்றுப்போக்கு காரணமாக உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அந்த சாமியாரை போலீசார் தேடி வருகின்றனர். துராங்கோ பகுதியை சேர்ந்த மார்செலா அப்பகுதியில் படமாக்கப்பட்ட பல்வேறு படங்களிலும், சீரீஸ்களிலும் நடித்துள்ளார். மார்செலா மறைவுக்கு துராங்கோ பிலிம் கில்ட் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
- பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில் இந்து முறைப்படி தவளைகளுக்கு விமர்சையாக ஆட்டம்பாட்டம் கொண்டாட்டத்துடன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
- புரோகிதர் தேவ மொழியான சமஸ்கிருத மந்திரங்களை உச்சரிக்க தவளைகளுக்கு திருமணம் நடந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அனைத்து மதங்களிலும் வித்தியாசமான வகையில் பல்வேறு சடங்குகளும் கொண்டாட்டங்களும் நிகழ்வது வழக்கும். அந்த வகையில் இந்து மதத்தைப் பின் பற்றும் மக்கள் முக்கியமாக கிராமங்களில் உள்ள மக்கள் தவளைக்கும் தவளைக்கும் கல்யாணம் செய்து வைத்தால் மழை வரும் என்று நம்புகின்றனர்.
இது சுத்த மூடநம்பிக்கை என்ற விவாதம் ஒரு புறம் இருந்தாலும் இன்றளவும் சில இடங்களில் இந்த சடங்கு நடந்துகொண்டுதான் இருக்கிறது. தமிழகத்தில் இந்த சடங்கு வழக்கொழிந்தாலும், வட மாநில கிராமங்கள் இந்த சடங்கை கைவிடுவதாக இல்லை.
அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் இந்து முறைப்படி தவளைகளுக்கு விமர்சையாக ஆட்டம்பாட்டம் கொண்டாட்டத்துடன் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
மணமகன் மணமகளை அலங்கரிப்பது போல் சிவப்புப் பட்டாடை உடுத்தி அலங்கரிக்கப்பட்டு மங்கள வாத்தியம் முழங்க ஊரார் சூழ புரோகிதர் தேவ மொழியான சமஸ்கிருத மந்திரங்களை உச்சரிக்க தவளைகளுக்கு திருமணம் நடந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
A wedding like no other ? Locals in Varanasi, UP arranged a "wedding" between a male and a female frog, in hopes of appeasing the rain gods and getting respite from the heat. We can't be sure if it works, but it makes for a whimsical tale for sure ?️☀️ pic.twitter.com/GKDOipKp8a
— Khabar Lahariya (@KhabarLahariya) June 13, 2024இதற்கிடையே தாய்லாந்தில் மழை வேண்டி, சிறுவர்களின் விருப்பமான கார்ட்டூன் கதாபாத்திரமான டோரேமானின் பொம்மையை கூட்டுக்குள் வைத்து ஊர்வலமாக எடுத்துச்சென்று விழா நடத்துவது குறிப்பிடத்தக்கது.
- கிராம மக்கள் அனைவரும் சிறுமிக்கு சந்தன நலங்கு மற்றும் குங்குமம் வைத்து, பன்னீர் தெளித்து வாழ்த்தினர்.
- சீர்வரிசை பொருட்களை பெற்றுக்கொண்ட ரத்தினம் குடும்பத்தினர் கிராம மக்களுக்கு நன்றி தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
செய்யாறு:
செங்கல்பட்டு மாவட்டம், உத்திரமேரூர் அருகே உள்ள மதுராந்தகம் கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினம். இவர் 'ராசாத்தி சர்க்கஸ்' என்ற பெயரில் கிராமம், கிராமமாக சென்று கடந்த 40 ஆண்டுகளாக சர்க்கஸ் செய்து பிழைப்பு நடத்தி வருகிறார்.
இவருடன் மனைவி சுலோச்சனா, மகன், 2 மகள்கள் மற்றும் உறவினர்கள் என 10 பேர் சர்க்கஸ் தொழிலை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
ரத்தினம் குழுவினர் கடந்த 23-ந் தேதி திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அருகே உள்ள மோரணம் கிராமத்தில் சர்க்கஸ் நிகழ்ச்சியை நடத்த வந்தனர்.
பின்னர், அங்குள்ள பஜனை கோவில் தெருவில் டெண்ட் அமைத்து கடந்த 4 நாட்களாக மாலை நேரத்தில் சர்க்கஸ் சாகசங்கள் செய்து வந்தனர்.
இந்நிலையில், ரத்தினத்தின் இளைய மகள் ராசாத்தி (வயது 15) என்பவர் நேற்று முன்தினம் பூப்பெய்தினார்.
இந்த தகவலறிந்த அப்பகுதி மக்கள் பூப்பெய்திய சிறுமி ராசாத்திக்கு கிராம மக்கள் சார்பில் மஞ்சள் நீராட்டு நடத்துவது என முடிவு செய்தனர்.
சிறுமிக்கு புதிய சேலை, மாலை, கண்ணாடி, வளையல்கள், பொட்டு வகைகள், மை, பவுடர், பழங்கள், அரிசி, மளிகை பொருட்கள் என 50 வகையான சீர்வரிசை பொருட்களை வாங்கினர்.
தொடர்ந்து, நேற்று மாலை கிராமத்தை சேர்ந்த பெரியவர்கள், பெண்கள், இளைஞர்கள் மேளவாத்தியங்களுடன் ஊர்வலமாக சென்று, சர்க்கஸ் கூடாரத்தில் அமர்ந்திருந்த சிறுமி ராசாத்திக்கு சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.
மேலும், சிறுமியை மஞ்சள் நீராட்டி நாற்காலியில் அமர வைத்து அவரது மாமா ராம்ராஜை மாலை அணிவித்து வாழ்த்த செய்தனர். தொடர்ந்து, கிராம மக்கள் அனைவரும் சிறுமிக்கு சந்தன நலங்கு மற்றும் குங்குமம் வைத்து, பன்னீர் தெளித்து வாழ்த்தினர்.
இதைகண்ட சிறுமி ராசாத்தி, தந்தை ரத்தினம், தாயார் சுலோச்சனா மற்றும் உறவினர்கள் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.
அவர்கள் எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
சீர்வரிசை பொருட்களை பெற்றுக்கொண்ட ரத்தினம் குடும்பத்தினர் கிராம மக்களுக்கு நன்றி தெரிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த சம்வம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.